Thursday, April 29, 2010

வீரசிங்கம் சுந்தரலிங்கம்: இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்

வீரசிங்கம் சுந்தரலிங்கம்


வீரசிங்கம் சுந்தரலிங்கம் (இ. அக்டோபர் 29, 2001) இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவர். சந்திரனில் இறங்கிய அப்பல்லோவிண்வெளி யாத்திரை பற்றிய நேர்முகவர்ணனை செய்தவர் என்பதினால் 'அப்பலோ' சுந்தா என்று அழைக்கப்பட்டவர். ஒளிப்படக் கலையிலும் தேர்ச்சி மிக்கவர்.

இலங்கைப் பாராளுமன்றத்தில் சமகால மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். புலம்பெயர்ந்து, அமெரிக்காவிலும், இந்தியாவிலும்,அவுஸ்திரேலியாவிலும் வாழ்ந்தவர்.

வானொலியில்

இலங்கை வானொலியில் செய்திகள், நேர்முக வ்ர்ணனை என்பனவற்றோடு பஞ்சபாணம், விவேகச்சக்கரம் முதலான போட்டி நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கியிருக்கிறார். பிபிசியின் தமிழோசை நிகழ்ச்சியில் சுந்தா சுந்தரலிங்கம் என்ற பெயரில் அறிவிப்பாளராக இருந்தவர்.


எழுதிய நூல்

படைப்பு இலக்கியத் துறையில் இவர் தீவிரமாக ஈடுபடாத போதிலும் தனது வானொலி அனுபவங்களை மார்ச் 1999 இல் மன ஓசை என்னும் பெயரில் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

  • மன ஓசை, மார்ச் 1999, சென்னை

[தொகு]இறுதி நாட்கள்

தனது இறுதிக் காலங்களில் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே வானலைகளில் தமது குரலைப் பதிவு செய்தவர். இவரது மனைவிபராசக்தி சுந்தரலிங்கம் ஒரு இலக்கிய விமரிசகர்.


வெளி இணைப்புகள்

Thursday, April 22, 2010

எஸ்.பி.மயில்வாகனன்: தமிழ் வர்த்தக சேவையின் பிதாமகர்


அமரர் எஸ்.பி மயில்வாகனனின் குரலைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.


இலங்கை வானொலியின் தமிழ் வர்த்தக சேவை ஒலி பரப்பில் தமது கம்பீரமான குரலால் உலகெங்குமுள்ள கோடிக் கணக்கான தமிழர்களையெல்லாம் ஈர்த்தவர் அறிவிப்பாளர் அமரர் எஸ்.பி.மயில்வாகனன் அவர்கள்.

1954 இல் இலங்கை வானொலியில் பணியாற்றத் துவங்கிய இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை வானொலியில் ஆற்றிய பணிகளும்...நிகழ்த்திய சாதனைகளும் இன்றுவரை எவராலும் நெருங்க முடியாதவை.

இலங்கையில் மட்டுமன்றி தென்னிந்தியாவில் பட்டி தொட்டியெங்கும் இவர் புகழ்... பிரபல சினிமாக் கதாநாயகர்களுக்கு இணையாகப் பரவியது.

இவரை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும் என்று அந்தக் காலத்திலே லட்சக்கணக்கான நேயர்கள் துடித்திருக்கிறார்கள்.

பிரபல இசையமைப்பாளர்கள்,பாடகர்கள், பாடகிகள் மட்டுமன்றி அந்தக் காலத்தின் முன்னணிக் கதா நாயகர்கள் பலரும் எஸ்.பி.மயில்வாகனனின் தீவிர ரசிகர்களாக இருந்தார்கள் என்பதை பழைய பத்திரிகைச் செய்திகளின் மூலம் அறிந்து வியக்க முடிகிறது.

1950 களிலும்...1960 களிலும் இவரது அறிவிப்பினால் அடையாளம் காட்டப்பட்டு புகழ் பெற்ற பாடல்கள் அதிகம்.பாடகர்கள்,இசையமைப்பாளர்கள் அதிகம்.

மயில்வாகனனின் புகைப் படத்தை ஒவ்வொரு இசையமைப்பாளனும்..பாடகனும்...தமது இல்லத்தில் வைத்து மரியாதை செய்ய வேண்டும் என ...அந்தக் காலத்தின் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் மனம் திறந்து கூறியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

எஸ். பி. மயில்வாகனம், ( பி: யாழ்ப்பாணம்) இலங்கை வானொலியின் தமிழ் வர்த்தக சேவையின் பிதாமகர் என்று கருதப்படுபவர். உலக ரீதியாக பலராலும் அறியப்பட்ட தமிழ் வானொலி அறிவிப்பாளர் ஆவார். தென்னிந்தியாவில் பொதுமக்கள் மத்தியிலும், சினிமா கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் மத்தியிலும் மிகுந்த செல்வாக்கு உடையவராக விளங்கியவர். இவரது மனைவியாரான செந்தில்மணி மயில்வாகனம் வானொலியில் அறிவிப்பாளராகவும், செய்தி வாசிப்பவராகவும் இருந்தவர். நகைச்சுவை நடிகர் தங்கவேல் நடிதத திரைப்படமொன்றில் இவரைப்பற்றி குறிப்பிடுவதாக காட்சி ஒன்று உண்டு.


Thursday, April 15, 2010

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்


இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சின்னம்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இது ஜனவரி 5 1967 அன்று இலங்கை வானொலி கூட்டுத்தாபனமாக மாற்றம் பெற்ற போது உருவாக்கப்பட்டதாகும். இலங்கையின் அப்போதைய பிரதமரான டட்லி சேனாநாயக்கமற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ரணசிங்க பிரேமதாசாவும் வைபரீதியாக அங்குரார்பணம் செய்து வைத்தனர்.


வானொலி சேவைகள்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் உள் நாட்டு ஒலிபரப்புக்காக ஆறு தொடர்ச்சியான அதிர்வெண் மட்டிசைக்கப்பட்ட (எஃப்.எம்.) சேவைகளை நடத்தி வருகின்றது. அவையாவன;

  1. சிங்கள சுதேச சேவை
  2. தமிழ் தேசிய சேவை
  3. ஆங்கில சேவை
  4. சிட்டி எஃப்.எம்.
  5. வெளந்த சேவய (சிங்கள வர்த்தக சேவை)
  6. தென்றல் (தமிழ் வர்த்தக சேவை) என்பனவாகும்.

இதில் முதல் மூன்று சேவைகளும் பொதுவான சிங்கள் தமிழ் ஆங்கில நேயர்களுக்காக ஒலிபரப்பட்டாலும் நான்காவது சேவை வாலிபர்களுக்கன விசேட சேவையாகும். கடைசி இரண்டு சேவைகளும் தற்கால நிகழ்வுகளுடன் வர்தக நோக்கங்களுக்காகவும் ஒலிபரப்பப் படுகின்றது. இவ்வாறு சேவைகளுக்கு மேலதிகமாக விளையாடுச் சேவை முக்கிய விளையாட்டு நிகழ்வுகளின் போது மாத்திரம் நாடு முழுவது ஒலிபரப்ப படுகிறது. இவற்றுக்கு மேலதிகமாக, பிரதேச நிகழ்வுகளுக்கு முக்கியதுவம் கொடுத்து இ.ஒ.கூ. நான்கு பிரதேச ஒலிபரப்புகளையும் நடத்தி வருகின்றது.

வெளிநாட்டு நேயர்களுக்காக இ.ஒ.கூ. அலைவீச்சு மட்டிசைக்கப்பட்ட (ஏ.எம்.) சேவைகளை மத்திய மற்றும் சிற்றலை வரிசைகளில் ந்டத்தி வருகின்றது. இவை தெற்காசியா, மத்திய கிழக்கு நாடுகள், தென்-மேற்கு ஆசிய பிரதேசங்களுக்கு ஆங்கிலம், சிங்களம், ஹிந்தி போன்ற மொழிகளில் ஒலிபரப்புகிறது. தென்னிந்தியாவுக்கு ஒலிபரப்புவதற்கான தனிப்பட்ட சேவைகளும் காணப்படுகிறது.

[தொகு]தமிழ் ஒலிபரப்பாளர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

http://ta.wikipedia.org/wiki/இலங்கை_ஒலிபரப்புக்_கூட்டுத்தாபனம்

Sunday, April 11, 2010

இலங்கையின் வெற்றி வானொலி

வெற்றி வானொலியில் என் இறுதி நிமிடங்கள்.....



2008ஆம் ஆண்டு ஆரம்பித்த என் வானொலிப் பயணத்துக்கு இவ்வளவு சீக்கிரம் ஒரு முடிவு வரும் என நினைக்கவில்லை. சீக்கிரம் கிடைப்பதெல்லாம் சீக்கிரமே கைவிட்டுப்போகும் என்பது இதைத்தானோ? வானொலி என்றால் இதுதான் என கற்க ஆரம்பித்து இருக்கும் இந்த நேரத்திலேயே என் விடைபெறல். வெற்றிக் குடும்பம் , எங்கள் நேயர்கள் என பல சுவர்களால் நான் தாங்கப்பட்டு ஒரு அறிவிப்பாளராக ஓரளவு ஏற்றுக்கொள்ளப்பட்டேன்.

என்னையும் ஏற்றுக்கொண்ட நேய நெஞ்சங்களுக்கும் எனக்கு பல விடயங்களை கற்பித்து அனுபவ பாடம் தந்த வெற்றிக்குடும்பத்துக்கும் என் நன்றிகள். இன்றிரவு ஒன்பது மணி செய்தி அறிக்கையை தொடர்ந்து என் பிரியாவிடையாக காற்றின் சிறகுகளில் சந்திக்கின்றேன். இன்றிரவு 9 மணி செய்தி அறிக்கையே என் குரலில் வரும் இறுதி செய்தி அறிக்கை. உளமார வாழ்த்திய உள்ளங்களுக்கு ப்ரியமானவனின் நன்றிகள். இன்னும் நிறைய நன்றிகள் நினைவுகள் சொல்ல இருக்கு. இரவு நிகழ்ச்சியை முடித்து விட்டு சொல்கின்றேன். பிரியப்போகின்றேன் என இவாளவு நாள் வலிக்கவில்லை. இன்று இந்த நொடி வலிக்கிறது.
Posted on Tuesday, March 09, 2010 by SShathiesh
Source: http://sshathiesh.blogspot.com

Thursday, April 01, 2010

இலங்கை வானொலி

இலங்கை வானொலி


இலங்கை வானொலி இலங்கையின் முன்னணி ஒலிபரப்பு நிலையமும் ஆசியாவின் முதல் வானொலி நிலையமுமாகும். இங்கிலாந்தில்பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டு மூன்றாண்டுகள் மட்டுமே கடந்த பின்னர் இலங்கையில் ஒலிபரப்பை ஆரம்பித்தது. 1922 இல், தந்தித் திணைக்களத்தால் இலங்கையில் சோதனை முறையில் ஒலிபரப்பு தொடங்கப் பட்டது.


ஆரம்பம்

1921 ஆம் ஆண்டு தந்தி அலுவலகத்துக்குத் தலைமைப் பொறியாளராக பதவியேற்று இலங்கை வந்த எட்வேர்ட் ஹாப்பர் (Edward Harper) என்பவரே இலங்கையில் ஒலிபரப்புச் சேவையைத் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றவராகும். ஆப்பர் முதலாவது சோதனை அடிப்படையிலான ஒலிபரப்பினை இலங்கை தந்திக் கழகத்தினையும் கொழும்பிலிருந்த பிரித்தானிய மற்றும் இலங்கை வானொலி நேயர்களின் துணை கொண்டு உருவாக்கினார். இன்று எட்வேர்ட் ஹாப்பர் இலங்கை ஒலிபரப்புத் துறையின் தந்தை எனப் பலராலும் போற்றப்படுகிறார்.

கொழும்பின் முதலாவது வானொலிச் சோதனையின் போது, மத்திய தந்தி அலுவலகத்தின் மிகச்சிறிய அறையொன்றிலிருந்து தந்தித் திணைக்களப் பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்ட ஒலிபரப்பியைப் பயன்படுத்தி கிராமபோன் இசை ஒலிபரப்பப்பட்டது. இந்த ஒலிபரப்பி போரில் கைப்பற்றப்பட்ட ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றிலிருந்து பெறப்பட்ட வானொலிக் கருவியிலிருந்து உருவாக்கப் பட்டதாகச் சொல்லப்படுகிறது.

சோதனை வெற்றியடையவே, மூன்று ஆண்டுகளின் பின்னர் முறையான ஒலிபரப்புச் சேவை இலங்கையில் இடம்பெறத் தொடங்கியது. இது கொழும்பு வானொலி என அறியப்பட்டது. இது 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி கொழும்பு வெலிக்கடை பகுதியில் ஒரு கிலோவாற்று வலுக்கொண்ட பரப்பியை கொண்டு மத்திய அலை அலைவரிசையில் தன் ஒலிபரப்பை ஆரம்பித்தது.

இரண்டாம் உலக போரின் போது கொழும்புச் சேவை வானொலி நிலையம் நேச நாட்டு படைகளால் பொறுப்பேற்கப்பட்டு தென் கிழக்காசியாவில் இருந்த நேச படைகளுக்க்கு செய்திகள் ஒலிப்பரப்பட்டது. போரின் முடிவில், மீண்டும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இலங்கை அரசின் தனித்த திணைக்களம் ஒன்றின் கீழ் வந்த கொழும்பு வானொலியின் பெயர் 1949 ஆம் ஆண்டு

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்


1967ம் ஆண்டு ஒலிபரப்பு திணைக்களமாக இருந்துவந்த இந்நிலையம், மேலதிக அதிகாரங்களையும் நெகிழ்வுப்போக்கையும் கொண்ட கூட்டுத்தாபனமாக மாற்றம் கண்டது. 1966 இல் இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 37ம் இலக்க கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் இந்த மாற்றம் நிகழ்ந்தது. இன்றுவரை இந்நிறுவனம், கூட்டுத்தாபனமாகவே இருந்துவருகிறது.

1972 மே 22 ஆம் நாள் இலங்கை, குடியரசாக மாற்றம் பெற்றதை தொடர்ந்து இந்நிறுவனம் இன்றுவரை கொண்டிருக்கும் பெயரான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்ற பெயரைப் பெற்றது. இன்று இந்நிறுவனம் இலங்கை அரசின் ஊடக, தகவல் அமைச்சின் கீழ் இயங்குகிறது.


புகழ்பெற்ற ஒலிபரப்பாளர்கள்

இலங்கை வானொலி தெற்காசியாவிலேயே பல சிறப்பான ஒலிபரப்பு வல்லுனர்களை உருவாக்கியுள்ளது எனலாம். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்: லிவி விஜேமான, வேணன் கொரெயா, பேர்ள் ஒண்டாட்ஜி, டிம் ஹோர்ஷிங்டன், கிறெக் ரொஸ்கோவ்ஸ்கி, ஜிம்மி பாருச்சா, மில் சன்சோனி, கிளோட் செல்வரட்னம், அமீன் சயானி, எஸ். பி. மயில்வாகனம், தேவிஸ் குருகே, விஜயா கொரெயா இன்னும்


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து http://ta.wikipedia.org/wiki/இலங்கை_வானொலி