Sunday, January 31, 2010

எமக்கு வந்தவை


 அமெரிக்கா: ரேடியோ பிரீ யூரோப் – அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள ரேடியோ பிரீ யூரோப் கட்டித்தினை மையப்படுத்திய வண்ண அட்டை.
 இங்கிலாந்து: பி.பி.சி உலக சேவை – 28 பக்கங்கள் கொண்ட “வோல்ட் அஜென்டா” செப்டம்பர் 2009 இதழ்.
 வத்திகான்: வத்திகன் வானொலி – அக்டோபர் மாத இதழ், தமிழ் மாத இதழ்.
 இந்தியா: அகில இந்திய வானொலி – உள்நாட்டு, வெளிநாட்டு அலைவரிசை விபரம்.
 செக் குடியரசு: ரேடியோ பிராஹா - புகைவண்டிகளை மையப்படுத்திய வண்ண அட்டை.
 ஜெர்மனி: வாய்ஸ் ஆப் ஜெர்மனி - பெரிய கால்பந்து, பி09 அலைவரிசை பட்டியல்.
 அமெரிக்கா: ரேடியோ பிரீ ஆசியா – வானொலியின் முன்னோடி நிகோலா டெஸ்லா அவர்களின் நினைவாக வண்ண அட்டை.
 சீனா: சீன வானொலி (தமிழ் பிரிவு) - புதிய சீனத் தமிழ் ஒலி இதழ், புதிய வண்ண அட்டை.

Friday, January 22, 2010

வெரித்தாஸ் தமிழ் பணியின் நேயர் சந்திப்பு - 2010

வெரித்தாஸ் தமிழ் பணியின் நேயர் சந்திப்பு கடந்த 17 ஜனவரி 2010 அன்று தஞ்சையில் வெகு சிறப்பாக நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட நேயர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். சிறப்பு விருந்தினராக இயக்குனர் சேரன் மிகவும் தாமதமாக வந்து கலந்து கொண்டது நேயர்கள் மத்தியில் ஒரு விதமான சலசலப்பினை ஏற்படுத்தியது. பொங்கல் விடுமுறை என்பதால் நேயர்கள் பயணம் செய்து வருவதிலும் சிரமப்பட்டனர். போட்டியில் வென்ற நேயர்களுக்கு பரிசுகளை வழங்கி நேயர்களை சிறப்பித்தனர்.

Sunday, January 17, 2010

வளரும் நாடுகளில் சமுதாய வானொலி


வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில் உள்ள சமுதாய வானொலிகளின் சேவை எவ்வாறு உள்ளது? மின்னக்கல் இ. செல்வராஜ்,

சமுதாய வானொலிகள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் அந்த அந்த பகுதிகளில் உள்ள மக்களுக்காக செயல்பட்டு வருபவை ஆகும். வளர்ந்த நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற ஒலிபரப்பு சேவை தொடங்கிவிட்டது. ஆனால் இந்தியா போன்ற வளர்ந்த நாடுகளில் தற்பொழுது தான் இந்த சேவைகளைச் செய்ய அரசு அனுமதி அளித்து வருகிறது.

ஆனால் வளரும் நாடுகளான பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் ஒரு சில ஆப்பிரிக்க நாடுகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற சமுதாய வானொலிகள் தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால் இந்தியாவில் முதலில் வளாக சமுதாய வானொலியை தொடங்கவே அரசு அனுமதி அளித்தது. சமீபத்தில் தான் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
தமிழத்தில் முதல் வளாக சமுதாய வானொலி அண்ணா எப்.எம், இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வருகிறது. அதே போன்று முதல் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் தொடங்கப்பட்ட வானொலி களஞ்சியம் அமைப்பினால் நாகபட்டினத்திற்கு அருகில் செயல்பட்டு வருகிறது.

வரும் காலத்தில் ஒவ்வொரு தாலுக்காவுக்கும் ஒரு சமுதாய வானொலி வரவுள்ளது. குறிப்பாக ராசிபுரத்தில் ஒரு வானொலி என்றும் நாமக்கல்லில் ஒரு வானொலி என பல வானொலிகள் வர வாய்ப்புள்ளது.

Sunday, January 10, 2010

வாய்ஸ் ஆப் ரஷ்யா, ரேடியோ பிரீ ஆசியா


 வெனிசுலாவின் அதிபர் புதிதாக 29 வானொலிகளைத் தொடங்க அனுமதித்துள்ளார்.  நிகரகுவா நாட்டில் உள்ள வானொலிகள் பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்திக்கொள்ள தீர்மானித்துள்ளது.  அமெரிக்காவின் மிகப் பெரிய பொதுத்துறை வானொலியான WNYC தற்பொழுது பாரம்பரிய இசைக்கு என ஒரு தனியான 24 மணி நேர வானொலியை WQXR என்ற பெயரில் தொடங்கியுள்ளது.  ரஷ்யாவின் தகவல் தொடர்பு அமைச்சகம் டிஜிட்டல் முறையில் வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலி-ஒளிபரப்ப அனுமதி வழங்கியுள்ளது.  தற்பொழுது ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஐபாடில் பண்பலை ஒலிபரப்புகள் மட்டுமல்லாமல் ஒரு சில செயற்கைக்கோள் வானொலிகளையும் கேட்க வழிவகை செய்துள்ள இந்ந தொழில்நுட்பத்திற்கு பெயர் “லைவ் பாஸ்”  வாய்ஸ் ஆப் ரஷ்யா தற்பொழுது 1000 வருட பழமையான இசையை மையப்படுத்தி நிகழ்ச்சி ஒன்றைத் தொடங்கியுள்ளது.  ரேடியோ பிரீ ஆசியா தற்பொழுது 13வது வண்ண அட்டையை தனது நேயர்களுக்கு அனுப்பி வருகிறது. தொகுப்பு: மின்னக்கல் இ. செல்வராஜ்

Sunday, January 03, 2010

வாய்ஸ் ஆப் வியட்னாம்,டென்மார்க் வானொலி,


வாய்ஸ் ஆப் வியட்னாம் புதிதாக கிழக்கு கடல் ஒலிபரப்பினைத் தொடங்கியுள்ளது.  நார்வே கலாச்சார ஆண்டினை ஒட்டி வானொலித் தொடர்பான தபால் தலையை வெளியிட்டுள்ளது.  நைஜீரியாவின் தேசிய ஒலிபரப்பு கமிஷன் புதிதாக வானொலிகளை அமைக்க உள்ளது.  ஸ்விட்சர்லாந்தில் இருந்து செயல்பட்டு வரும் வி.எல்.எப் டைம் வானொலி 2011ல் தனது ஒலிபரப்பினை நிறுத்த உள்ளது.  நேபாள் அரசு புதிதாக பண்பலை வானொலிகளை அமைக்க அனுமதி வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது.  டென்மார்க் வானொலி ஆங்கிலத்தில் செய்தி அறிக்கையை தனது இணையதளத்தினில் தொடங்கியுள்ளது. www.dr.dk  பீபா வானொலி தற்பொழுது தனது 50வது ஆண்டு விழாவினைக் கொண்டாடி வருகிறது. www.feba.org.uk/newsbriefs/febas-50th-anniversary  ரேடியோ பிரான்ஸ் இன்டர்நேசனல் ஊழியர்களின் வேலை நிறுத்தம் கடந்த 12 மார்ச் 2009 முதல் தொடர்கிறது.  வெனிசுலாவின் அதிபர் புதிதாக 29 வானொலிகளைத் தொடங்க அனுமதித்துள்ளார்.