Wednesday, October 21, 2015

சென்னை வானொலி நிலையத்தின் முதல் நிலைய இயக்குநர்


விக்டர் பரஞ்சோதி [நன்றி: Hindu]

சென்னை வானொலி நிலையம் 16-6-1938-இல் தொடங்கப்பட்டது.  முதல் நிலைய இயக்குநராகப் பணி புரிந்தவர் விக்டர் பரஞ்சோதி. இவர் லண்டன் பி.பி.சி-யில் பயிற்சி பெற்றவர். ‘கல்கி’ இவரையும் எழுத்துலகிற்கு இழுத்துவிட்டார்! 1938- விகடன் தீபாவளி மலரில் ‘மாலி’யின் சித்திரங்களுடன் விக்டர் பரஞ்சோதி எழுதிய அபூர்வமான கட்டுரை படிக்க இங்கே சொடுக்கவும்

நன்றி: பசுபதி பதிவுகள், வழிகாட்டி: திரு. உமா காந்தன்

Tuesday, October 13, 2015

இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள் நுாலின் வெளியீட்டு விழாவும்

ஒலிபரப்பாளரும் எழுத்தாளருமான திரு. தம்பி ஐயா தேவதாஸ் எழுதிய இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள் என்ற நுாலின் வெளியீட்டு விழாவும் மூத்த ஒலிபரப்பாளர்களுக்கா கௌரவிப்பு நிகழ்வும் கடந்த 11-10-2015 ஞாயிறு பிற்பகல் 4.30 மனியளவில் வெள்ளவத்தை ரூத்ரா மாவத்தையில் அமைந்துள்ள தமிழ் சங்க மன்டபத்தில் இனிதே நடைபெற்றது.
பேராதனை பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் திரு. S. தில்லைநாதன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்சங்கத் தலைவரான திரு.S.கதிர்காமநாதன் வாழ்த்துரை வழங்க பேராதனை பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் V.மகேஸ்வரன் அவர்கள் நுாலின் ஆய்வுரையை நிகழ்த்த வானொலி வித்தகர் V.A.திருஞானசுந்தரம் [ஓய்வு நிலை பிரதிப் பணிப்பாளர் நாயகம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்] அவர்கள் நுாலாசிரியர் மீதான ஒருபார்வை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினர்.

நுாலின் முதற் பிரதியை புரவலா் திரு. ஹாசிம் உமர் அவர்களும் சிறப்புப் பிரதியை திரு. கருனை ஆனந்தம் [நாவலர் நற்பணிமன்றத் தலைவர்] மற்றும் சட்டதரனியான திருமதி. ஜெயந்தி விநோதன் அவர்களும் பெற்று நிகழ்வை கௌரவப்படுத்தினா்.

தொடா்ந்த நிகழ்வில் இலங்கை ஒலிபரப்புக்கூட்டத்தாபனத்தின் சுமார் பதினொரு மூத்த அறிவிப்பாளர்கள் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக தேசிய உரையாடல் அமைச்சரான கௌரவ மனோ கணேசன் அவர்கள் அழைக்கப்பட்டிருந்த போதிலும் சில தவிர்க்க முடியாத காரணங்களினால் அவரால் நிகழ்விற்க சமூகமளிக்க முடியவில்லை எனினும் அவர் சார்பாக அவரின் துணைவியார் நிகழ்வில் கலந்து கொன்டிருந்தார். அத்துடன் மேல் மாகான சபை உறுப்பினரான திரு. சன் குகவரதன் அவர்களும் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தார்.

வரவேற்புரையை வழங்கி நிகழ்சிகளையும் தமது மதுரக் குரலினால் தொகுத்து வழங்கியிருந்தார் இலங்கை வானொலியின் சிரேஷ்ட அறிவிப்பாளரான செல்வி. . நாகபபூசனி மற்றும் சட்டதரனி
செல்வி. எழில் மொழி ராஜகுலேந்திரா ஆகியோர்.
இந் நுாலாசிரியரும் எனது நண்பருமாகிய திரு. தம்பிஐயா தேவதாஸ் அவர்களின் அன்பான அழைப்பின் காரணமாக திருகோணமலையிலிருந்து இந்நிகழ்விற்கு சென்றிருந்த வேளை அது வரையில் எனது சிறு வயதிலிருந்தே குரல்களை மட்டுமே கேட்டிருந்த எனது மரியாதைக்குரிய இலங்கை வானொலியின் இனிய அறிவிப்பாளா்களையும், கலைஞர்களையும் ஒன்று சேர்ந்து சந்தித்தும், அவர்களில் சிலரிடம் உரையாட சந்தர்ப்பம் கிடைத்ததன் விளைவிலும் ஏற்பட்ட தலைகால் புரியாத மகிழ்ச்சியில் எனது ஒளிப்பதிவு கருவியில் பதிவான காட்சிகளையே இங்கு தரவேற்றம் செய்திருக்கின்றேன்.

எவ்வாறாயினும் தனி ஒருவராக இவ்வளவு தகவல்களையும் திரட்டி இந் நுாலை வெளியிட்டுள்ள இவரின் இந்த முயற்சி உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விடயமே.
.
அது தவிர நான் ஒரு பத்திரிகையாளனோ சிறந்த படப்பிடிப்பாளரோ அல்ல. ஆயினும் என்னால் முடிந்தவரை இச் செய்திகளை தொகுத்து எழுதி காட்சிகளையும் இணைத்துள்ளேன்.
நன்றி: திரு. அருணன் மீனாட்சி சுந்தரம், திரு. உமா காந்தன்
https://www.facebook.com/arunan.meenachchisundaram

Monday, October 12, 2015

மனோரமாவும் வானொலியும்!

1960-களில் ‘காப்பு கட்டிச் சத்திரம்’ எனும் வானொலி நாடகத்தில், தனது அநாயாசமான குரல் பங்களிப்பில் ஏராளமான ரசிகர்களைப் பிரம்மிக்க வைத்தார்.

மேலும் படிக்க:
http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF/article7752625.ece

பாகிஸ்தான் வானொலி ஒரே சமயத்தில் பனிரெண்டு வெவ்வேறு சிற்றலைவரிசைகளில் ஒலிபரப்ப உள்ளது


வெளிநாட்டுத் தமிழ் வானொலிகளின் வரலாற்றில் முதன் முறையாக ஒரே சமயத்தில் பனிரெண்டு வெவ்வேறு சிற்றலைவரிசைகளில் ஒலிபரப்பும் முதல் தமிழ் வானொலியாக பாகிஸ்தான் வானொலி அமைந்துள்ளது. கடந்த வாரம் HFCC வெளியிட்ட அலைவரிசை அட்டவணையில் இது இடம் பெற்றுள்ளது. இதில் ஏதோ தவறு இருப்பதாக நோக்கர்கள் கருதுகிறார்கள். அப்படி தவறு ஏதும் இல்லையெனில், வானொலி ஒலிபரப்பில் சாதனையாக கருதப்பட வாய்ப்புள்ளது. இதற்கு முன் ஒரே சமயத்தில் நான்கு சிற்றலை வரிசையில் சீன வானொலி ஒலிபரப்பியதே சாதனையாகக் கருதப்பட்டது. வரும் அக்டோபர் 25, 2015 முதல் 9390, 9610, 9705, 9795, 9800, 11805, 11820, 11865, 15185, 15290, 15540 மற்றும் 17600 ஆகிய அலைஎண்களில் இந்திய நேரம் மாலை 0630 - 0700 (1300-1330 UTC) வரை ஒலிபரப்ப உள்ளது பாகிஸ்தான் வானொலி. அகில இந்திய வானொலியின் திரைக்கடல் ஆடிவரும் தமிழ் நாதம் ஆறு வெவ்வேறு அலைவரிசைகளில் ஒலிபரப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரங்களுக்கு
http://www.hfcc.org/data/schedbyfmo.php?seas=B15&fmor=PBC
பாகிஸ்தான் வானொலியின் இணையதளம்
http://www.radio.gov.pk/externalservice

Sunday, October 11, 2015

சிற்றலை ஒலிபரப்புகளை SDR வானொலிப் பெட்டிகளில் கேட்க...

சிற்றலை வானொலிகளை இணைய வழி SDR வானொலிப் பெட்டிகளில் கேட்க ஒரு சில டிப்ஸ்.

"Shortwave Reception via Web-SDR", as far as HF utility
radio stations are concerned, is available at
www.klingenfuss.org/websdr.pdf 

Sent from Yahoo Mail on Android

சிங்கப்பூர் வானொலி நாடக நூல்கள்

சிங்கப்பூர்த் தமிழர்களின் வாழ்க்கை - வானொலி நாடக நூல்கள்

http://seithi.mediacorp.sg/mobilet/singapore/11-oct-p-krishna-book-r/2184912.html

Sent from Yahoo Mail on Android

வரும் அரையாண்டுக்கான புதிய சிற்றலை வரிசை பட்டியலை HFCC வெளியிட்டது.

வரும் அரையாண்டுக்கான புதிய சிற்றலை வரிசை பட்டியலை HFCC வெளியிட்டது.

The HFCC B-15 schedules have been posted at http://www.hfcc.org/data/b15

Sent from Yahoo Mail on Android

நெட்டலைக்கு (Long wave) இன்னும் வாழ்வு உண்டு

நெட்டலைக்கு (Long wave) இன்னும் வாழ்வு உண்டு: சிறப்பு கட்டுரை.

http://www.radioworld.com/article/longwave-broadcasting-retains-listeners-/277274

Sent from Yahoo Mail on Android