Monday, December 26, 2016

விகடனில் ஹாம் வானொலி

புயல், பூகம்பம், சுனாமி...  பேரிடர்களில் கைகொடுக்கும் ஹாம் ரேடியோ! - என்ற தலைப்பிலான பேட்டி விகடனில்  வெளிவந்துள்ளது.




Friday, December 16, 2016

ரேடியோ தைவான் இண்டர்நேசனலின் நேயர் சந்திப்பு



சென்னை அம்பாசிடர் பல்லவாவில் 3 டிசம்பர் 2016, ரேடியோ தைவான் இண்டர்நேசனலின் நேயர் சந்திப்பு வெகு சிறப்பாக நடைபெற்றது. அதில் தமிழகம் மற்றும் ஆந்திரா நேயர்கள் பலர் கலந்துகொண்டனர். தைவான் வானொலியில் இருந்து சிறப்பு விருந்தினராக ஆங்கிலப் பிரிவின் கார்ல்சன் வோங் மற்றும் பவுலா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

Thursday, December 15, 2016

ஹாம் ரேடியோ அல்லது அமெச்சூர் ரேடியோ என்பது என்ன?

செல்லிடைப்பேசிகள், தொலைபேசிகள், இணையம் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் செயலிழந்து போகும் நிலைகளில் தகவல் தொடர்புக்கு பெரிதும் உதவுவது ‘ஹாம் ரேடியோ’ அல்லது ‘அமெச்சூர் ரேடியோ’ எனப்படுகிறது.

பொதுவாக பொழுதுபோக்குக்காக சர்வதேச அளவிலான உரிமம் பெற்ற, சமூகத்தின் பல்வேறுதரப்பட்ட நபர்களால் ஒருங்கிணைந்த குழு இது எனலாம். இவர்கள் வெறும் கம்பியில்லா தொழில்நுட்பம் தெரிந்த நுகர்வோர் மட்டுமல்ல. மிகச் சிறந்த படைப்பாளிகள். 

நமது நாட்டின் முன்னாள் பிரதமர் காலஞ்சென்ற ராஜீவ் காந்திகூட ஒரு ஹாம் ஆபரேட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெச்சூர் ரேடியோ ஆபரேட்டர்களால் தெருவுக்கு தெரு தகவல் தொடர்பை பறிமாறிக் கொள்ள முடியும். கண்டங்களைத் தாண்டி செய்திகளை பகிர்ந்து கொள்ள இயலும். அவ்வளவு ஏன்? விண்வெளி வீர்ர்களோடுகூட இவர்கள் தொடர்பு கொள்ள முடியும்.

இயற்கை பேரிடர்களின் போது, மின்சாரம் துண்டிக்கப்பட்டு தகவல் தொடர்பு சாதனங்கள் முற்றிலும் செயலிழந்த நிலையில் ஒரு சாதாரண மின்கலம், ரேடியோ சாதனம், சில கம்பிகள் இவை மட்டும் இருந்தால் போதும்.. உலகின் எல்லா மூலைகளுக்கும் தகவல் அனுப்பலாம்; தகவல் பெறலாம்.

இத்தகைய மிக முக்கிய பொறுப்பு கொண்ட ஹாம் இளைஞர் VU3YFD T.S.பிரசாத் திருப்பூரைச் சேர்ந்தவர். சுறுசுறுப்புக்கு பெயர் பெற்றவர். விழிகள் சார்பாக அவரைச் சந்தித்து உரையாடி வழங்கும் பதிவு இது. 
https://www.youtube.com/watch?v=tb0NsVJTxcM

அமெச்சூர் வானொலிகளுக்குக் குறைந்த அளவு மின்சாரம்!


உலகை எச்சரிக்க இதோ புது ரேடியோ சேவை


இந்த உலகில் மாற்ற முடியாத ஒன்றே ஒன்று இயற்கை சீற்றங்கள் தான், இதை எந்த சக்தியாலும் நிச்சயம் தடுத்து நிறுத்த முடியாது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு முறையும் இயற்கைச் சீற்றம் நமக்கு ஒரு பாடத்தினை கற்றுக்கொடுக்கிறது. அவ்வப்போது கடலோர மாவட்டங்களில் ஏற்படும் புயல் மற்றும் கடல் சீற்றங்களின்போது மட்டுமே நாம் ஆபத்துகால மேலாண்மை குறித்துச் சிந்திக்கிறோம். அந்த வரிசையில் இப்பொழுது இணைந்திருப்பது "இமாலய சுனாமி'.

பருவமழை முன்கூட்டியே தொடங்கிவிட்டதுதான் காரணம் என சொல்லப்பட்டாலும் அந்தப் பகுதிகளில் நிகழ்ந்துள்ள சேதத்தைப் பார்க்கும்போது நமக்கே ஒருவித பயம் தொற்றிக்கொள்கிறது. மிகப்பெரிய காட்டாற்றின் அருகிலேயே பெரிய பெரிய கட்டடங்களைக் கட்டி வைத்துள்ளனர். கங்கையின் முழு வேகத்தினை ஹரித்வார் சென்றால் பார்க்கலாம். அப்படியான அசுர வேகத்தில் பெருவெள்ளம் வரும்பொழுது தடுப்பது என்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலில் உணவுக்கும் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும். அதன்பின் தொலைத்தொடர்பு சாதனங்கள் செயலற்றுப் போகும்.

இப்படியான சமயங்களில் மீட்புப் பணிகளே ஸ்தம்பித்துவிடும். இதனால் அந்தப் பகுதிகள் நாட்டின் வேறு பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படும். நாம் என்னதான் தொழில்நுட்பங்களில் முன்னேறி இருந்தாலும் அவை அனைத்தும் ஒன்றைச் சார்ந்தே இருக்கின்றன. உதாரணமாக கம்ப்யூட்டர் இணைய வசதி இல்லாமல் ஒன்றும் செய்ய இயலாது. கைப்பேசிக்கு "சிக்னல்' தேவை. வெள்ள பாதிப்பு ஏற்படும்போது "டவர்களும்' அடித்துசெல்லப்படுவது இயற்கையே. ஆக, கைப்பேசிகளும் இயங்காது. தொலைபேசி நிலையங்களுக்கும் இதே கதிதான். தொலைக்காட்சிகளையும் மின்சாரம் இன்றி பார்க்க முடியாது. வானொலியை "பேட்டரி' கொண்டு கேட்கலாம். ஆனால் அதுவும் நீண்ட நேரத்துக்கு உழைக்காது. ஆக அனைத்து தகவல் தொழில்நுட்ப சாதனங்களும் செயலற்றுப் போகும் போதெல்லாம் ஆபத்துக்கு கைகொடுப்பவனாக வந்து சேர்வது "அமெச்சூர் வானொலி' எனப்படுகின்ற "ஹாம்' வானொலிதான்.

அமெச்சூர் வானொலி மட்டும் எப்படி இந்தச் சமயத்தில் செயல்படும் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுவதுதான். இதற்கும் மின்சாரம் தேவைதானே? அமெச்சூர் வானொலிகளுக்குக் குறைந்த அளவு மின்சாரம் இருந்தால் போதுமானது. இதனைக் கொண்டு நாட்டின் மற்ற பகுதிகளை எளிதாகத் தொடர்பு கொள்ளலாம். குறிப்பாக மின்சாரமே கிடைக்காவிட்டாலும் இந்த "ஹாம்' வானொலியை சூரிய சக்தி கொண்டும் இயக்க முடியும்.

அந்தமான் தீவுகளில் சுனாமி வந்தபோது "ஹாம்' வானொலி உபயோகிப்பாளர்களின் பணி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மின்சாரமே இல்லாதபோது அங்கு அவர்கள் சூரிய சக்தியினைப் பயன்படுத்தி பல்வேறு உயிர்களைக் காப்பாற்றினார்கள். "ஹாம்' வானொலியானது சிற்றலைவரிசை மற்றும் மிக உயர் அதிர்வெண்ணில் ஒலிபரப்பப்படுவதால் அதிக தொலைவிற்குச் செல்கிறது. இதனால் எளிதாக உலகம் முழுவதும் தொடர்பு கொள்ள முடிகிறது. ரிபீட்டர்களின் துணைகொண்டு மிக உயர் அதிர்வெண்ணில் இந்தியா முழுவதும் ஒலிபரப்ப முடியும். "ஹாம்' வானொலியாளர்கள் உத்தரகண்டிலும் அரிய சேவைகளைப் புரிந்துள்ளனர். "ஹாம்' வானொலியை அனைவரும் பயன்படுத்த முடியாது.

இதற்கு இந்தியாவில் தடை உள்ளது. மாறாக இதற்கென மத்திய அரசு வைக்கும் தேர்வினை எழுதுபவர்களுக்கு முறையான உரிமத்தினை வழங்குகிறார்கள். இந்தத் தேர்வினை எழுத விரும்புபவர்களுக்கு முக்கிய ஊர்களில் "ஹாம் கிளப்'புகள் உள்ளன. இந்தியாவில் புகழ்பெற்ற கிளப்பானது ஹைதராபாதில் உள்ளது. "நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அமெச்சூர் ரேடியோ' என்ற அந்த நிறுவனமானது இந்தியா முழுவதும் "ஹாம்' தேர்வு எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கு பாடதிட்டத்தினை வழங்கி தேர்விற்கு தயார்செய்கிறது. இப்பொழுது உத்தரகண்ட் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அமைப்பே தேவையான உதவிகளைச் செய்து வருகிறது.

இந்தியாவில் இதுவரை 20,000 பேர் மட்டுமே "ஹாம்' வானொலி உரிமம் பெற்றுள்ளனர். முதல் "ஹாம்' வானொலி உரிமம் 1921-இல் வழங்கப்பட்டது. 1930 வரை இந்தியாவில் 30 "ஹாம்' உரிமங்களே வழங்கப்பட்டன. 1984 வரை "ஹாம்' வானொலிப் பெட்டிகளை வெளிநாடுகளில் இருந்து தருவிப்பதில் சிக்கல் இருந்தது. காரணம், அந்த வானொலிப் பெட்டியின் விலையை விட சுங்க வரி அதிகமாக கட்டவேண்டி இருந்தது. . மத்திய அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் வயர்லெஸ் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புப் பிரிவின் கீழ், இந்தியாவில் உள்ளவர்களுக்கு "ஹாம்' வானொலி உரிமம் வழங்கப்படுகிறது. இந்த அமைப்பே அதற்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. மேலும் இந்திய வான் வெளியில் அலைவரிசைகளை நெறிப்படுத்தி பயன்படுத்துவதற்கும் உரிமத்தினை வழங்கிவருகிறார்கள். "ஹாம்' வானொலி உரிமம் பெற, 12 வயது நிரம்பிய அனைவரும் தேர்வினை எழுதலாம். "ஹாம்' தேர்வினை எழுதி தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தனித்துவமான அடையாளக் குறியீடு வழங்கப்படுகிறது.

இதனை ஆங்கிலத்தில் "கால்-சைன்' என்று கூறுகிறார்கள். ஹாம் வானொலிக்கான தகுதித் தேர்வில் அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல் கோட்பாடுகள் மட்டுமல்லாமல் "மோர்ஸ்' குறியீடுகள் பற்றியும் அறிந்திருத்தல் அவசியமாகிறது. இரண்டு வகையான தேர்வுகள் நடத்தப்படுகிறது. முதல் வகைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அனைத்து அலைவரிசைகளையும் பயன்படுத்தலாம். இரண்டாவது வகைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் குறிப்பிட்ட சக்தியில், குறிப்பிட்ட அலைவரிசைகளில் மட்டுமே ஒலிபரப்ப அனுமதிக்கப்படுவர். இந்தியாவின் சார்பாக சர்வதேச அளவில் நடக்கும் கூட்டங்களுக்கும், இந்தியாவில் "ஹாம்' வானொலியின் பங்கினை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் ஓர் அமைப்பாக இந்திய அமெச்சூர் வானொலி சொசைட்டி உள்ளது. "ஹாம்' வானொலியில் இணைந்து நாமும் நாட்டிற்குச் சேவையாற்றலாமே!

மத்திய அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் வயர்லெஸ் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புப் பிரிவின் கீழ், இந்தியாவில் உள்ளவர்களுக்கு "ஹாம்' வானொலி உரிமம் வழங்கப்படுகிறது. இந்த அமைப்பே அதற்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. மேலும் இந்திய வான் வெளியில் அலைவரிசைகளை நெறிப்படுத்தி பயன்படுத்துவதற்கும் உரிமத்தினை வழங்கிவருகிறார்கள். எது எப்படியோ நாட்டிற்க்கு நன்மை நடந்தால் சரிதான் என்கிறீர்களா.

Written By: Keerthi for http://tamil.gizbot.com/

ஏன் வர்தா புயலின் போது ஹாம் வானொலி வேண்டும்?


ஏன் ஊடகங்கள் வெள்ளத்தில் அமைதியானது? கேள்விக்கான பதில் இதோ


வயதான தாயை நினைத்து ஏங்கும் மகள். கர்ப்பமாக உள்ள மனைவியை நினைத்து வருத்தப்படும் கணவன். வேலைக்கு சென்ற தாயை தொடர்பு கொள்ள முடியாமல் கையறு நிலையில் உள்ள குழந்தைகள் என எல்லோரும் அகதிகளாக தொடர்பற்று தனித்துவிடப்பட்டோம். இப்போது சரி. தொலைபேசி, செல்பேசி, இணையம் எல்லாம் நமக்கு கை கொடுக்கிறது. ஆனால் வெள்ளம் ஏற்பட்ட முதல் ஐந்து நாட்கள் நம் கையின் ஆறாவது விரலாக இருந்த செல்பேசி அதற்குள்ளே இருந்த இணையம், டார்ச் லைட், எஃப்.எம், என எல்லாவுமாய் இருந்தது நம்மை கைவிட்டது. அப்போது மட்டும் செய்திகளை தெரிந்துக் கொள்ள நமது தாத்தா, பாட்டி பயன்படுத்திய வானொலி பெட்டி, தொடர்பு கொள்ள ஹாம் ரேடியோ இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?

“சாதாரண மக்கள் மட்டும் இல்லாமல் ஊடகத்தில் பணிபுரிபவர்களிடமே ஹாம் ரேடியோ இல்லை. ஹாம் ரேடியோ இருந்திருந்தால் மக்களுக்கு சொல்கிறோமோ இல்லையோ பிரச்சனைகள அரசுக்காவது உடனடியாக தெரிவித்திருக்கலாம். அரசே இந்த வெள்ளத்தில் செயலற்று போனதற்கு காரணம் தொடர்புகள் அறுந்து போனதுதான்.”, என சென்னை பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறை பேராசிரியரும் வானொலி மற்றும் ஹாம் ரேடியோ ஆராய்ச்சியாளருமான டாக்டர்.தங்க ஜெய்சக்திவேல் கூறுகிறார்.

ஏன் முக்கியம் ஹாம் ரேடியோ?

மொபைல் கம்யூனிகேஷனை எப்பவும் நம்ப முடியாது. மின்சார பிரச்சனைகள் இருக்கும். சென்னையில் இருக்கின்ற 4,500 டவர்களில் 4,000 டவர்கள் நீரில் மூழ்கிவிட்டன. அப்புறம் எப்படி செல்லில் தொடர்பு கொண்டு பேச முடியும்? இதை எல்லோரும் பயன்படுத்த முடியும். அவசரமான காலங்களில் முக்கியமாக சுனாமி ஏற்பட்ட நேரத்தில் அகில இந்திய வானொலிக்கு தொடர்பு கொள்ள உதவியதே ஹாம் ரேடியோக்கள் தான்.

“சென்னையில் 50 பேர் ஹாம் ரேடியோ பயன்படுத்துகிறார்கள். நாங்கள் அவர்களையெல்லாம் ஒன்றிணைத்து எங்கெல்லாம் தொடர்பில்லாமல் உதவி தேவைப்பட்டதோ அங்கெல்லாம் அவர்கள் நன்றாக செயல்பட்டார்கள்”, என்று இந்த வெள்ளத்தில் ஹாம் ரேடியோ எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்துகிறார், பேராசிரியர்.

வானொலி கேள்விபட்டிருக்கிறோம். அது என்ன ஹாம் வானொலி? போலீஸ்லாம் கையில வச்சிக்கிட்டு “ஓவர், ஓவர்”னு சொல்லுவாங்களே அதுவா? அது வாக்கி டாக்கியாச்சே? என்கிறீர்களா! இல்லை ஹாம் வானொலி என்பது வேறு. பூவரசம் பீப்பி படத்தை பார்த்திருக்கிறீர்களா? அதில் அந்த நான்கு குழந்தைகளும் ஒரு பெரிய விசயத்தை ஹாம் ரேடியோ மூலம்தான் சாதிப்பார்கள்.

வாக்கி டாக்கி என்பது 500 மீட்டர் முதல் 1 கி.மீ வரை உள்ள சுற்றளவில் தனது சக்தியை பொருத்து மற்றவர்களை தொடர்பு கொள்ள உதவும் சாதனம். ஆனால், ஹாம் ரேடியோ என்பது 10 கி.மீ வரை செயல்படக்கூடியது. போலீசார் வைத்திருப்பதன் பெயர் வாக்கி டாக்கி அல்ல. வயர்லஸ் வானொலி. இந்த வயர்லஸ் வானொலி போன்றதுதான் ஹாம் ரேடியோ.

ஹாம் ரேடியோவை வாங்க உடனேயே புறப்படுறீங்களா? கொஞ்சம் இருங்கள். அதை எப்படி வாங்குவது என்பதையும் பேரா.ஜெய்சக்திவேல் கூறுகிறார்.

“எல்லோரும் ஹாம் ரேடியோவை வாங்கி உபயோகிக்கலாம். ஆனால், அதற்கு உரிமம் வாங்க வேண்டும். ஹாம் ரேடியோ மற்றும் அதற்கான லைசென்ஸையும் பெறுவதற்கு மத்திய அரசின் தகவல் தொடர்பு துறை நடத்தும் தேர்வில் கலந்து கொண்டு தேர்வாக வேண்டும். இதற்கான பயிற்சி மையங்கள் சென்னையில் இலவசமாக நடத்தப்படுகின்றன. ஆனால், ஆட்கள் குறைவாகத்தான் வருகிறார்கள். இப்பொழுது கூட கோபாலபுரம், பள்ளிக்கரணை ஆகிய இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. முடிந்த அளவுக்கு இதனை ஊடகவியலாளர்களும் அது சார்ந்து படிக்கும் தொடர்பியல் மாணவர்களும் வைத்துக்கொள்ளுதல் அவசியம்.”

வானொலி இந்த வெள்ளக்காலத்தில் எப்படி செயல்பட்டது?

நம்முடைய அகில இந்திய வானொலி வெள்ள காலத்தில் நன்றாக செயல்பட்டது. தங்களது உடைமைகளை இழந்தவர்கள், அதை கொடுக்க வேண்டும் என நினைப்பவர்களை ஒன்றைணைத்து ஒரு பாலமாக வானொலி செயல்பட்டது. இப்பொழுது நீங்கள் வானொலி மார்க்கெட்டுக்கு சென்று வானொலி வாங்க வேண்டும் என்றால் கூட வானொலி பெட்டியே இல்லை. ஏனென்றால், நாம்தான் வானொலி பெட்டியே வாங்காமல் உற்பத்தியாளர்களை ஓட ஓட விரட்டி விட்டோமே.

இனி என்ன செய்வது? உடனடியாக ஹாம் ரேடியோ பெறுவதற்கான முயற்சிகளை எடுங்கள். தாத்தா, பாட்டி உபயோகித்த வானொலியை தூசு தட்டுங்கள்.

எழுதியவர் - இப்போது டாட் காமிற்காக  நந்தினி வெள்ளைச்சாமி
நன்றி - http://ippodhu.com/

உலக அளவில் பெரிதும் பயன்படும் மக்கள் தொடர்பு ஊடகம் ஹாம்!


அமெச்சூர் ரேடியோ - ஹாம்

இணையம், இணைய உரையாடல் , வலைப்பதிவு, செல் பேசி, குறுஞ்செய்தி என்று இன்று ஒருவர் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் , கதைக்கவும் பல ஊடக வசதிகள் இன்று வந்து விட்டது இதனால் பல பழைய தொலைதொடர்பு ஊடங்கள் , அதன் பொழுது போக்கு அம்சங்கள் பற்றி அதிகம் தெரியாமல் போய்விட்டது.

அப்படிப்பட்ட ஒரு பழைய ஆனால் இன்றும் உலக அளவில் பெரிதும் பயன்படும் மக்கள் தொடர்பு ஊடகம் தான் ஹாம் எனப்படும் தொழில்முறை அல்லாத வானொலி பயன்பாட்டாளர்கள்(ameture radiography) .100 ஆண்டு காலப்பாரம்பரியம் கொண்டது இந்த ஹாம் வானொலி. இந்தியாவிலும் வெகு சொற்ப அளவில் ஹாம்கள் இருக்கிறார்கள். ஹாம் என்பது ஜாம் என்பதில் இருந்துவந்ததாக சொல்கிறார்கள் காரணம் அக்காலத்தில் இவர்கள் வானொலீ அலைவரிசையை அதிகம் ஆக்ரமித்தார்களாம்!

ஹாம் (ham):

வழக்கமாக கம்பி இல்லா தந்தி /வானொலி இவற்றை ராணுவம், தீ அணைப்பு , காவல் துறை, மருத்துவ ஊர்திகள், ஆகியவை பயன்படுத்தும் மேலும் குறைந்த அலை நீளம், பண்பலை போன்றவற்றில் அகில இந்திய வானொலி, சூரியன் எப்.எம் போன்ற வணிக வானொலிகள் ஒலிப்பரப்பும். இவை போக இருக்கும் அலைவரிசையில்(1.8 mhz to 275 ghz)26 பேண்ட்கள் ஒதுக்கி அமெச்சூர் ரேடியோவிற்கு இடம் தந்துள்ளார்கள் அவர்கள் தான் ஹாம் எனப்படுவார்கள்.

இதனைப்பயன்படுத்த மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு துறையிடம் இருந்து ஒரு தனியார் அமெச்சூர் வானொலி இயக்குனர் என்பதற்கான தேர்வுகள் எழுதி அனுமதி வாங்க வேண்டும். அப்போது தான் இயக்க முடியும். அந்த தேர்வுகள் எழுத ஒருவர் இந்தியராகவும், 18 வயது ஆனவராகவும் இருந்தால் போதும் கல்வி அறிவு இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் கல்விஅறிவு இல்லை எனில் தேர்வில் தேற முடியாது.

தேர்வில்,

*அடிப்படை மின்னனுவியல் ,
*மோர்ஸ் கோட் எனப்படும் தந்தி சுருக்க குறியீடுகள் அனுப்புதல் பெறுதல்

ஆகியவற்றில் தேர்வெழுத வேண்டும்.தேர்வுக்கு கட்டணம் உண்டு. சென்னையில் இதற்கான மத்திய அரசு அலுவலகம் பெருங்குடியில் உள்ளது, அமெச்சூர் ரேடியோ சங்கம் அடையாரில் உள்ளது.

தேர்ச்சி பெற்றுஅனுமதி சீட்டுக்கிடைத்ததும் நாமே சொந்தமாக உபகரணங்களை வாங்கி ஒரு கம்பி இல்லா வானொலி நிலையம் ஆரம்பித்து இயக்கலாம், அதன் மூலம் பக்கத்து ஊர், நாடு என நம் விருப்பம் போல பேசி மகிழலாம். பேசுவதற்கு போய் தேர்வு,அது இதுவென இத்தனை கஷ்டப்படனுமா என யாஹூ, கூகிள் சாட் லாம் வந்த பிறகு தோன்றும் ஆனாலும் இது ஒரு வித்தியாசமான பொழுது போக்கு.

ஹாம் ரேடியோவில் இரண்டு விதமாக பேசுவார்கள், சாதாரணமாக பேசுவது போல பேசுது (radiophony), மற்றது மோர்ஸ் கோட் கொண்டு பேசுவது. மோர்ஸ் கோடில் எளிதாக இருப்பதற்காக Q code என்ற ஒன்றையும் சேர்த்து பேசுவார்கள். இதன் மூலம் பல வார்த்தைகளை சுருக்கி சொல்லலாம். இது ஒரு வழி தொடர்பு முறை ஒருவர் பேசியதும் தான் அடுத்தவர் பேச முடியும் எனவே பேசியதும் "ஓவர்" என்று சொல்லி பேசுவதை முடிக்க வேண்டும். பல எதிர்பாராத இயற்கை இடர்ப்பாடுகளின் போது தகவல் தொடர்பு சாதனங்கள் சேதம் அடைந்து விடும் அப்போது ஹாம் ரேடியோக்களை தகவல் தொடர்புக்கு அரசு பயன்படுத்திக்கொள்ளும்.

இது அல்லாமல் சிட்டிசன் பேண்ட் என்ற வானொலியும் உண்டு அதற்கு என ஒரு குறிப்பிட்ட எல்லையில் பயன்படுத்த வேண்டும் , அதற்கு தேர்வெல்லாம் எழுத வேண்டாம் ஆனால் வருடத்திற்கு ஒரு கட்டணம் செலுத்த வேண்டும். அவற்றை தான் கால் டாக்சி போன்ற சேவைகள் பயன்படுத்துகின்றன.

மோர்ஸ் கோட்:

இதனைக்கண்டு பிடித்து நடைமுறைக்கு கொண்டு வந்தவர் சாமுவேல் மோர்ஸ் என்பவர். அவர் பெயராலேயே அழைக்கப்படுக்கிறது.மோர்ஸ் கோட் என்பது புள்ளிகளும் , சிறு கோடுகளும் அடுத்து அடுத்து போட்டு எழுதுவது. ஒரு புள்ளியை "டிட் "(DIT)என்றும் கோட்டை "டாஹ்"(DASH) உச்சரிக்கும் போது சொல்ல வேண்டும். கீழே மோர்ஸ் கோட் கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் கூட பழகலாம்! பழகி பாருங்க புடிச்சா ஹாம் தேர்வு எழுதுங்க இல்லைனா சும்மா தெரிஞ்சு வைத்துக்கொள்ளுங்கள்!

Letter Morse
A di-dah
B dah-di-di-dit
C dah-di-dah-dit
D dah-di-dit
E dit
F di-di-dah-dit
G dah-dah-dit
H di-di-di-dit
I di-dit
J di-dah-dah-dah
K dah-di-dah
L di-dah-di-dit
M dah-dah


N dah-dit
O dah-dah-dah
P di-dah-dah-dit
Q dah-dah-di-dah
R di-dah-dit
S di-di-dit
T dah
U di-di-dah
V di-di-di-dah
W di-dah-dah
X dah-di-di-dah
Y dah-di-dah-dah
Z dah-dah-di-dit


சில Q code கள்:

QRA What is the name of your station? The name of my station is ___.
QRB How far are you from my station? I am ____ km from you station
QRD Where are you bound and where are you coming from? I am bound ___ from ___.


சொல்வதற்கு இதில் நிறைய இருக்கிறது , அனைத்தையும் இங்கு சொல்வது சாத்தியம் இல்லை.இதற்கு என சில புத்தகங்கள் கிடைக்கின்றன , ராஜேஷ் வர்மா என்பவர் எழுதிய "a hand book of ameture radio" என் ற புத்தகம் எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கும். ஹிக்கின் பாதம்ஸ்,  ஸ்டார்  மார்க் போன்ற கடைகளில் கிடைக்கலாம்! வாங்கி படித்து பாருங்கள்.

சில இணையதள முகவரிகள்:

1)http://www.ac6v.com/

2)http://www.hello-radio.org/whatis.html#five

நன்றி - http://vovalpaarvai.blogspot.in/

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தொழில்நுட்பத்தில் ரேடியோ


நவீன தொழில்நுட்பத்தில் ‘ஹாம் ரேடியோ’!


இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தொழில்நுட்பத்தில் ரேடியோ, டிவி, டெலிபோன், செல்போன் என்று பல்வேறு பரிணாம வளர்ச்சிகள் இருந்தாலும், இவை அனைத்திலும் தனித்துவம் பெற்ற ஒரு விஞ்ஞான படைப்பு உண்டென்றால் அது நிச்சயம் ஹாம் ரேடியோவாகத்தான் இருக்கும். ஹாம் ரேடியோவைப் பற்றிய ஒரு சமீபத்திய நிகழ்வை சொன்னால் சட்டென உங்கள் நினைவுக்கு வரும்.

2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி அதிகாலை இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமி அலை, வழியில் இருந்த அந்தமான் தீவை அடியோடு நாசம் செய்தது. செல்போன், ரேடியோ சேவை, சேட்டிலைட் தகவல் தொடர்பு எல்லாம் பணால் ஆனது. அந்த நேரத்தில் கை கொடுத்தது ஹாம் ரேடியோ மட்டும்தான். ஆம், அந்தமானில் ஒரே ஒரு நபர் பயன்படுத்திக் கொண்டிருந்த ஹாம் ரேடியோவின் உதவியதால்தான் அங்கு சுனாமி தாக்கியதும், அதைத் தொடர்ந்து இந்தியாவின் ஆந்திரா, தமிழகம், கேரளா மாநிலங்களை சுனாமி அலைகள் அடுத்தடுத்து புரட்டிப் போட்டதும் தெரியவந்தது. அன்று ஹாம் ரேடியோ என்ற ஒரு சேவை இருந்திருக்காவிட்டால், அந்தமானில் நிகழ்ந்தது பலருக்கும் மிகமிக தாமதமாகவே தெரியவந்திருக்கும்.

ஹாம் ரேடியோ என்பதற்கு பெரிய அர்த்தம் எதுவும் இல்லை. ஒலியை அளவிடும் ஹெர்ட்ஸ், நிலவில் கால் வைத்த ஆம்ஸ்ட்ராங் மற்றும் ரேடியோவைக் கண்டுபிடித்த மார்கோனி ஆகிய மூன்று பெயர்களின் முதல் எழுத்தை சுட்டு, ஹாம் ரேடியோ என்று குறிப்பிடப்படுகிறது. இன்றைக்கும் இந்த ஹாம் ரேடியோவின் தலைமையகம் வாஷிங்டனில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் இந்த ஹாம் ரேடியோவுக்கும் நிறைய உறுப்பினர்கள் உள்ளனர். சச்சின், முன்னாள் பிரதமர் ராஜீவ், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி ஆகியோர் ஹாம் ரேடியோ விஐபிகளில் குறிப்பிடத்தகுந்த சிலர். இந்த ரேடியோ உதவியால் உலகம் முழுவதும் உள்ள ஹாம் ரேடியோ உறுப்பினர்களுடன் எந்தவித கட்டணமும் இல்லாமல் எளிதில் பேசிக் கொள்ளமுடியும்.

பேஸ்புக், வாட்ஸ் அப் என்று இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் இருந்தாலும், உலகம் முழுவதும் உள்ள இந்த ஹாம் ரேடியோ உறுப்பினர்கள், தங்கள் பகுதிகளின் புதிய கண்டு பிடிப்புகள், நூதன சம்பவங்கள் என்று பல விஷயங்களை பகிர்ந்து கொள்வதால், இன்றைக்கும் இந்த ஹாம் ரேடியோ பயன்பாடு சுறுசுறுப்பாகத்தான் உள்ளது. ஆனாலும், ஹாம் ரேடியோவைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாமல், அதன் கடுமையான விதிமுறைகள் கேட் போட்டு விடுகின்றன.

தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் ஹாம் ரேடியோ பயிற்சி வகுப்புகள் வாரம்தோறும் நடத்தப்படுகிறது. இந்தியாவில் அமெச்சூர் ரேடியோ சங்கத்தினரால் ஹாம் ரேடியோ உறுப்பினர்கள் ஆவதற்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் இருந்து ஹாம் ரேடியோ தேர்வுக்கு இரண்டு விதமான தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைவரும் இந்த ஹாம் ரேடியோவில் உறுப்பினர் ஆகலாம். ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் திறன் இருந்தால் போதும், எளிதாக ஹாம் ரேடியோ உறுப்பினர் ஆகலாம். நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தகுந்தார் போல், இப்போதைய ஹாம் ரேடியோ தொழில்நுட்பம் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டு, இயக்கப்படுகிறது. ஆனால் இன்டர்நெட் தொழில்நுட்பம் இருந்தால் மட்டுமே இந்த டிஜிட்டல் தொழில் நுட்பம் வெற்றிகரமாக செயல்படும். மற்றபடி, டிஜிட்டல் இல்லாமல் சாதாரணமாகவும் இயங்க முடியும்.

இதுகுறித்து மானாமதுரையைச் சேர்ந்த ஹாம் ரேடியோ எக்ஸ்பர்ட் துரைராஜ் கூறும்போது, “நான் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி. 1975ம் ஆண்டு முதல் ஹாம் ரேடியோ உறுப்பினராக உள்ளேன். இந்த ரேடியோவைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், இது ஆபத்து காலங்களில் காத்து ரட்சிக்கும் ஒரு ரட்சகன் என்றே சொல்ல வேண்டும். உலகில் பல பகுதிகளில் பேரழிவுகள் ஏற்படும்போதெல்லாம் ஹாம் ரேடியோ மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு, மிகப் பெரிய அளவில் மீட்பு பணிகள் நடைபெற்றுள்ளன. இதை இப்போது கொஞ்சம் அப்டேட் செய்துள்ளோம். ஒலியை டிஜிட்டல் முறையில் மாற்றியுள்ளோம். இந்தத் தொழில்நுட்பத்தில் நாம் பேசுவது தெளிவாக இருக்கும். செல்போனில் ஆண்ட்ராய்டு தொழில்நுட்ப வசதி இருந்தால், இதை கம்ப்யூட்டருடன் இணைத்து எக்கோ லிங்க் எனப்படும் சாப்ட்வேர் மூலம் ஆண்டெனா இல்லாமலே பேச முடியும்.

மதுரை மற்றும் மானாமதுரையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, மதுரையில் வைத்து பயிற்சி கொடுத்து, அவர்களை ஹாம் ரேடியோவின் உறுப்பினராக்குகிறேன். இதில் உறுப்பினர் ஆவதற்கு வயர்லெஸ் பிளானிங் கோட் என்ற அமைப்பு மூலமாக தேர்வு நடத்தப்பட்டு, தேசிய மற்றும் மாநில அரசுகள் மூலம் உரிமம் வழங்கப்படுகிறது.

ஹாம் ரேடியோவைப்பற்றி இளைய தலைமுறையினர் பலருக்கும் தெரியவில்லை. ஹாம் ரேடியோ மூலம் தன்னலமற்ற சேவைகள் செய்யலாம். இப்போதைய சந்தையில் 7ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை ஹாம் ரேடியோ கிடைக்கிறது. சாதாரண ஹாம் ரேடியோ மூலம் பேசும்போது இரைச்சல் சத்தம் அதிகமாக இருக்கும், டிஜிட்டல் தொழில்நட்பத்தில் சப்தம் மிகவும் தெளிவாக இருக்கும். தொழில் நுட்ப கல்லூரிகளில் கூட ஹாம் ரேடியோ பற்றி கற்றுக் கொடுப்பது இல்லை. இது மிகவும் வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயம். ஹாம் ரேடியாவைப் பற்றி கற்றுக் கொள்வதும், அதை கற்றுக் கொடுப்பதும் பெருமைக்குரிய விஷயம். அடுத்தத் தலைமுறையினரும் கற்றுக் கொள்ள வேண்டிய அரிய கலை இதுவாகும்” என்றார்.

உங்கள் மனதில் ஒரு முறை 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனாமி ஏற்படுத்திய பாதிப்புகளை ரீவைன்ட் செய்து பாருங்கள்... ஹாம் ரேடியோ செய்த சேவையும், அதைக் கற்றுக் கொள்ள வேண்டிய ஆர்வமும் தன்னாலேயே ஏற்பட்டுவிடும்...

நன்றி- ஜன்னல் சார்பாக சாய் ஷிவானி

'ஹாம் ரேடியோ' வாங்குவது எப்படி?


ஊடகவியலாளர்கள், அரசு அதிகாரிகள், பொறியாளர்கள் என, மக்களோடு தொடர்பில் இருக்கும் ஒவ்வொருவரும், ஒரு 'ஹாம் ரேடியோ' உரிமம் வைத்திருக்க வேண்டும் என்கிறார், சென்னை பல்கலை இதழியல் துறை பேராசிரியர் தங்க.ஜெய்சக்திவேல், 37. இதுகுறித்து அவர் கூறியதாவது: 'ஹெல்ப் ஆல் மேன்கைண்டு' என்பதன் சுருக்கம் தான், 'ஹாம்'. போலீசார் பயன்படுத்தும் 'வாக்கி டாக்கி' போன்றவையும் 'ஹாம் ரேடியோ'க்கள் தான். இதில், ஒரு நேரத்தில், ஒருவர் பேச, உபயோகத்தில் உள்ள அனைவரும் கேட்க முடியும். இதன் ஒலிபரப்பு, துார, எல்லைகளைக் கடந்தது. இதற்காக, பேசும் கருவி, ஆன்டனா உள்ளிட்ட கருவிகளை வாங்கிக் கொள்ள வேண்டும். உலகில் உள்ள அனைத்து 'ஹாம் ரேடியோ' உபயோகிப்பாளர்களையும் இணைத்து, தொடர்பு கொள்ளும் வசதி இருப்பதால், இக்கருவியை வாங்கவும், பயன்படுத்தவும் சில கட்டுப்பாடுகளை, அரசு விதித்திருக்கிறது. அதற்கான தேர்வெழுதி வெல்வோர், கருவியை வாங்கவும், அவர்களுக்கான, அடையாள எண், உரிமத்தை பெறவும் முடியும். தேர்வு குறித்த விளக்கங்களை, மூத்த அமெச்சூர் வானொலி பயனாளர்கள் இலவசமாக வழங்குகின்றனர்.

பயன்கள் :வானொலியைப் போலவே, அனைத்து இடங்களுக்கும், இதை எளிதாக எடுத்து செல்ல முடியும். இதனை இயக்க, குறைந்த அளவு மின்சாரம் போதும். அதிக நாட்கள் பயனளிக்கும். எத்தனை மணி நேரம் பேசினாலும், கட்டணம் கிடையாது. ஒருமுறை கருவிகளை வாங்கும் செலவு மட்டும் தான். பூகம்பம், மண்சரிவு, புயல், வெள்ளம், தீ, சுனாமி போன்ற பேரிடர் காலங்களில், அனைவரையும் தொடர்பு கொள்ள சிறந்த சாதனம் இது தான். சர்வதேச அளவில், உடனடியான உதவிகளை பெறவும், அளிக்கவும் இது உதவும். கடந்த காலங்களில், குஜராத் பூகம்பம், சுனாமி உள்ளிட்ட பேரிடர் காலங்களில், அமெச்சூர் வானொலி உபயோகிப்பாளர்கள், தகவல் தொடர்பிலும், மீட்பு பணியிலும் பெரும்பங்காற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.


உரிமம் பெறும் நடைமுறை :இந்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் ஒலிபரப்பு துறையின் கீழ் இயங்கும், 'ஒயர்லெஸ் மானிட்டரிங் ஸ்டேஷன்', 'ஹாம் ரேடியோ' பயன்பாட்டாளருக்கான உரிமம் வழங்கும் தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வை எழுத, ஒரே நேரத்தில் 30க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருக்க வேண்டும். இணையத்தில், ஆங்கிலத்தில் நடக்கும் இந்த தேர்வை எழுத, 'மோர்ஸ் கோடு' எனப்படும், ஒலிபரப்பு அனுப்புதல் மற்றும் பெறுதல் முறைகள், தொடர்பு வழிமுறைகள், அடிப்படை மின்னணுவியல் துறை சார்ந்த அறிவு இருக்க வேண்டும். ஒரு நிமிடத்திற்கு, 8 மோர்ஸ் வார்த்தைகளை பதியும் திறமை உள்ளவர்கள், பொது உரிமம் பெற முடியும். இத்தேர்வு, கிரேடு 1 மற்றும் கிரேடு 2 ஆகிய நிலைகளில் உள்ளது. தனது நிலைக்கேற்ப, ஒலிபரப்பு துாரமும், தரமும் இருக்கும். ஒவ்வொரு கிரேடு தேர்வுக்கும், ௧௦௦ ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். 
தேர்வில் வெற்றி பெற்ற பின், 'கால் சைன்ஸ்' எனப்படும், உரிம எண் வழங்கப்படும். அந்த எண்ணைக் கொண்டே, உரிமம் பெற்றவரின் இருப்பிடம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், மற்றவர்கள் தெரிந்துகொள்ள முடியும். டபிள்யூ.பி.சி., எனப்படும், 'தி ஒயர்லெஸ் பிளானிங் அண்டு கம்யூனிகேஷன்ஸ்' என்ற இணையத்தின் வழியாக, 'ஹாம் ரேடியோ' பயன்பாட்டுக்கான தகவல்கள் விண்ணப்பங்கள், புத்தகங்களை பெறலாம்.
தற்காலத்தில், இணையத்தோடு ஹாமை இணைக்கும் மென்பொருட்களும் உள்ளன. அலைபேசிகளோடு இணைக்கும் செயலிகளும் உள்ளன.
நன்றி-தினமலர்

Thursday, December 01, 2016

சென்னையில் தைவான் வானொலி நேயர் சந்திப்பு


2008 RTI Listeners meet in Chennai

தைவான் வானொலியின் ஆங்கிலப் பிரிவானது  தென்னிந்தியாவில் உள்ள தைவான் வானொலி நேயர்களை ஒன்றிணைக்கும் வைகையில் வரும் சனிக்கிழமை 3 டிசம்பர் 2016 அன்று எழும்பூரில் உள்ள ஹோட்டல் அம்பசிட்டர் பல்லவாவில் காலை 10.30 மணிக்கு நேயர்களைச் சந்திக்க உள்ளது. அனைவரையும் ஆர்டிக் சர்வதேச வானொலி நேயர்கள் மன்றம் அன்புடன்  அழைக்கிறது.

Tuesday, November 29, 2016

இலங்கை வானொலியின் 'வானொலி அக்கா‘


ஒரு சகாப்தம் மீளாத் துயிலில் ஆழ்ந்துவிட்டது.....

எங்கள் தாய்வீடாகிய இலங்கை வானொலியில் 'வானொலி மாமா' என அழைக்கப்பட்டவர்கள் பலருண்டு. ஆனால் ஒரே ஒரு 'வானொலி அக்கா' மட்டுமே இருந்திருக்கிறார். அவரும் இன்று மறைந்துவிட்டார் என்ற இழப்புச் செய்தி அவுஸ்திரேலியாவிலிருந்து வந்து நம் நெஞ்சங்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டது.

நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை......கவி பாரதி, 'புதுமைப்பெண்ணை' வர்ணித்த இந்த வரிகளை நினைக்குந்தோறும், எமது மனக்கண்ணில் தோன்றும் உருவத்தின் பெயர்தான்-"பொன்மணி குலசிங்கம்"
1960 ம் ஆண்டு 'சிறுவர் மலர்' நிகழ்ச்சிக்குப் போனபோது அந்நிகழ்ச்சியின் 'நிலையத் தயாரிப்பாளராக' அவரை சந்தித்த நாள்முதல் தமிழ் சேவையின் பணிப்பாளராக அவர் வந்தபின்னும்..... ஏன் கடைசியாக அவுஸ்திரேலியாவில், நடைதளர்ந்த நிலையில் ( ஆனால் கம்பீரம் சற்றும் குறையாத நிலையில்) சந்தித்தபோதும், அந்த அன்னையை 'அக்கா' என்றுதான் உரிமையோடும் பாசத்தோடும் அழைத்திருக்கிறேன்.


அம்மா என்று அழைக்காமல் அக்கா என்று அழைத்தது ஏன்?
60 பதுகளில், மழலைகளுக்காக அவர் 'ஓடிவிளையாடு பாப்பா' நிகழ்ச்சியை நடத்தியபோதும் - அவர் 'வானொலி அக்கா' பின், மகளிருக்காக 'மாதர் பகுதி' நிகழ்ச்சியை நடத்தியபோதும்- அவர் 'வானொலி அக்கா'தான்.


வானொலி வரலாற்றில் தமிழ் சேவையின் பணிப்பாளராக அவர் பணியாற்றிய காலம் - ஒருபொற்காலம்.
ஒலிபரப்பு உதவியாளர்களாக தமிழ் இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பினைப் பெறவும் பின்னாளில் அவர்கள் மிகச் சிறந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களாகப் பரிணமிக்கவும் வித்திட்டவர்.


வானொலி நிலயத்திற்கென, தமிழ் மெல்லிசை வாத்திய இசைக்கலைஞர் குழுவினரை முதன்முதலில் உருவாக்கியவர். வடக்கைச் சேர்ந்த இசைக்கலைஞருக்கென யாழ்ப்பாணத்திலேயே ஒரு ஒலிப்பதிவுக் கலையகத்தை நிர்மாணித்தவர். யாழ் பகுதியிலே ஒரு ஒலிபரப்பி நிலையம் (transmitter) அமைப்பதற்கும் காரணியானவர்.


6 மணியோடு நிறைவுபெற்ற தமிழ் வர்த்தக ஒலிபரப்பினை இரவு 10 மணிவரைக்கும் விரிவு படுத்தியவர்.
தென்னிந்தியாவுக்கென தனியாக ஒரு வர்த்தக ஒலிபரப்புச் சேவையை ஆரம்பித்து பெரும் வருமானத்தை ஈட்ட வழிவகுத்தவர். மத்தியகிழக்கு நாடுகளுக்காவும் தனியாக நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப வழிவகுத்தவர்.


ரூபவாஹினி ஆரம்பிக்கப்பட்டபோது உத்தியோகபூர்வமாக நடனமேதை 'சித்ரசேன' அவர்களது நாட்டிய நாடகம் ஒளிப்பதிவு செய்யப்பட்டாலும், அதற்கு முதல் நாளே 'Know your culture' என்ற பெயரில் 'பரதநாட்டியம்' பற்றிய ஒரு விவரணச் சித்திரத்தை முதன்முதலாக தயாரித்துச் சாதனை செய்தவர்(அந்நிகழ்ச்சிக்கு உதவித் தயாரிப்பாளர் என்ற பெருமையினையும் எனக்கு ஏற்படுத்தித் தந்தவர்) எம்போன்றவர்களை ஊக்குவித்து கொழும்பிலும் யாழ்மண்ணிலும் நாடக விழாக்களை நடத்திச் சாதனை புரிந்தவர்.


திறமை உள்ளவர்கள் யாராயிருப்பினும் தட்டிக்கொடுத்து ஊக்குவித்த அந்த அன்னையைப்பற்றிய நினைவுகள் அடுக்கக்காய் வந்து நெஞ்சில் அலைமோதுகின்றன. இனக்கலவரத்தின் பின்னரும் கூட, இரண்டாம் தரக் குடிமக்கள், போன்ற தாழ்வு மனப்பான்மை இன்றி, வானொலி நிலையத்தில் நாம் தலைநிமிர்ந்து நடக்கும் தைரியம், அவர் தமிழ் சேவையின் பணிப்பாளராக பணியாற்றிய காலம்வரை தொடர்ந்தது என்பதை, எமது சமகாலத்தில் பணியாற்றிய அனைவருமே இப்போது நன்றியோடு நினைவு கூர்வர் என நம்புகிறேன்.


'பிறப்பவர் எல்லோரும் என்றோ ஓர்நாள் இறப்பது நியதி' என்ற உண்மையை உணர்ந்து உள்ளத்தைத் தேற்றி, அந்த அன்னையின் ஆன்மா நற்பேறு அடையப் பிரார்த்தனை செய்வோம். குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

(நன்றி / திரு.பி.ஹெச். அப்துல் ஹமீது)

Tuesday, September 27, 2016

புதிய இலங்கை ஓலிபரப்புக்கூட்டுத்தாபனம் ஒலிப்பதிவுக்கூடம்

இலங்கை ஓலிபரப்புக்கூட்டுத்தாபனம்
"2017ஆண்டின் முற்பகுதியில் முற்றிலுமாக நவீனமாகிவிடும். புதிய கலையகம், ஒலிப்பதிவுக்கூடம் எனச் சகல பிரிவுகளும் நவீனமயமாகிவிடும். இதற்கு 283 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது" என்கிறார்.....
ஏரானந்த ஹெட்டியாராச்சி!
பணிப்பாளர் நாயகம்
இலங்கை ஓலிபரப்புக்கூட்டுத்தாபனம்.
சிங்கிங் ஸ்ரார், யூத் ரெலன்ற்ஸ் போட்டிகள் ஒலிபரப்புக்கூட்டுத்தானத்தின் திருப்பம்
தனித்துவத்தைப் பாதுகாத்து நவீன வர்த்தகமய சமூகத்தில் மாற்றத்தைக் கண்டுவருகிறது இலங்கை தாய் வானொலி.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் காலத்திற்குக் காலம் அறிவிப்பாளர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள் எனப் பல்துறை சார்ந்தோரை உருவாக்கி வருகிறது. இங்குப் பயின்றோர்கள், பட்டை தீட்டப்பட்டவர்கள்தான் பின்னர் வெளிநாடுகளுக்கும் வேறு நிறுவனங்களுக்கும் சென்று கோலோச்சிக்ெகாண்டிருக்கிறார்கள். ஓர் அறிவிப்பாளரோ பாடகரோ ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அங்கீகரிக்கப்பட்டால், அவர் உலகில் எங்குச் சென்றாலும் அங்கீகரிக்கப்படுவார். அவரின் திறமைகளுக்கான உரிய மரியாதையும் கௌரவமும் அவருக்குக் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்குச் சென்றால், அவரது திறமையையும் ஆளுமையையும் பரீட்சித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. இது தமிழ் உலகறிந்த உண்மை. இந்தக் கருத்தியலுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், கூட்டுத்தாபனம் தற்போது புதிய பரிணாமத்தில் பயணித்துக்ெகாண்டிருக்கிறது என்கிறார் அதன் பணிப்பாளர் நாயகம் ஏரானந்த ஹெட்டியாராச்சி.
ஏரானந்த ஹெட்டியாராச்சி!
பணிப்பாளர் நாயகம்
இலங்கை ஓலிபரப்புக்கூட்டுத்தாபனம்
கூட்டுத்தாபனத்தில் ஓர் அறிவிப்பாளராக இணைந்து கொண்டவர். பல்வேறு துறைகளிலும் தம்மைப் புடம்போட்டுக்கொண்டு, பதவிகளை வகித்து, இன்று கூட்டுத்தாபனத்தில் உயர் பதவியில் மிளிர்கிறார். தமிழ் ஒலிபரப்புத்துறையில் புதிய வரலாற்றைப் பதிவுசெய்ய வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு என்கிறார். அந்தப் பயணத்தில் தென்றல் எப்எம் நடத்தும் சிங்கிங் ஸ்ரார், சிட்டி எப்எம் நடத்தும் யூத் ரெலன்ற்ஸ் போன்ற போட்டிகள் புதிய திருப்பம் என்கிறார் ஏரானந்த.
"தென்றல் சிங்கிங் ஸ்ரார் போட்டி நிகழ்ச்சியை இரண்டாவது தடவையாக நடத்துகின்றோம். இலங்கை முழுவதிலும் உள்ள பாடும் திறமையுள்ள தமிழ் இளைஞர், யுவதிகளின் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களை இறுதியில் மெல்லிசைப் பாடகர்களாக அறிமுகம் செய்வதே இதன் நோக்கமாகும். இந்தப் போட்டி நேரலை ஒலிபரப்பு நிகழ்ச்சியாகவே நடத்தப்படுகிறது. இலங்கையில் நேரடி ஒலிபரப்பாக நடத்தப்படும் ஒரே நிகழ்ச்சி இதுவாகும்.
இது தென்றல் சேவையில் பிரதி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் முற்பகல் 1130 முதல் 1230 வரை ஒரு மணித்தியால நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. போட்டியாளர்கள் இசையமைப்பாளர்களுடன் நேரடியாகப் பாடல்களைப் பாட வேண்டும். பதிவு செய்து ஒலிபரப்புவதோ, பாடல் மெட்டைப் பதிவுசெய்து ட்ரக்குக்குப் பாடுவதோ கிடையாது. அவ்வாறுதான் ஆரம்பகாலத்தில் போட்டிகள் நடத்தப்பட்டிருக்கின்றன.
நாட்டின் வடக்கு கிழக்கு, மேற்கு என நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் போட்டியாளர்கள் இதில் பங்குபற்றுகிறார்கள். ஆயிரக்கணக்கான போட்டியாளர்களில் இருந்து ஐம்பது பேரைத் தெரிவுசெய்து அவர்களுக்கிடையில் சிறந்த பாடகர்களைத் தெரிவுசெய்து நாட்டுக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றோம். கடந்த முறை சிறந்த பாடகர்களைத் தெரிவு செய்து அவர்களை மெல்லிசைத்துறையில் பிரகாசிக்கச் செய்திருக்கின்றோம். கடந்த போட்டியில் பெற்றுக்கொண்ட அனுபவத்தையும் இம்முறை செயற்படுத்துகின்றோம். சிறந்த பாடகர் என்றால் அவருக்கு நேரலையாகப் பாடல்களைப் பாடும் திறன் இருக்க வேண்டும்.
மூன்று சுற்றுகளாக நடத்தப்படும் இந்தப் போட்டியில், முதலாவது சுற்றில் போட்டியாளர்கள் விரும்பிய பாடலைப் பாடுவதற்கு அனுமதிக்கப்படும். இரண்டாவது சுற்றில் மூன்று பாடல்களை நாம் தெரிவுசெய்துகொடுத்து அதில் ஒன்றைப் பாடச்சொல்வோம். இறுதிச் சுற்றின்போது, ஏற்கனவே இரண்டு சுற்றுகளில் பாடிய தாம் விரும்பிய பாடலைப் பாடுவதற்கு இடமளிப்போம். நடுவர் குழாமே வெற்றியாளரைத் தெரிவு செய்யும். குறுந்தகவல் முறையில் நாம் போட்டியாளரைத் தெரிவுசெய்வதில்லை. ஆனால், நேயர்கள் தாம் விரும்பும் பாடகரை குறுந்தகவலில் பெயரிடுவதற்கு இடமளிக்கப்படும்.
எனினும் வெற்றியாளரை நடுவர்கள்தான் தெரிவுசெய்வார்கள். நடுவர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் எந்தவித தொடர்பும் இருக்காது. அவர்களைச் சந்திப்பதற்கோ, பார்ப்பதற்கோ வாய்ப்பிருக்காது. போட்டியாளர்களின் குரல் மட்டுமே நடுவர்களுக்குக் கேட்கும். மூன்று சுற்றுகளும் அவ்வாறுதான் நடத்தப்படும். நாங்கள் மில்லியன் கணக்கில் பணப்பரிசு கொடுக்காவிட்டாலும், பாடகருக்கான திறமைத் தரச்சான்றுப் பத்திரத்தைக் கொடுக்கின்றோம். இலட்சம் இலட்சமாய் கொடுத்தாலும் தகுதியின்றித் தரச்சான்றுப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது.
எனவே, பாடக, பாடகிகளுக்குத் தமது எதிர்காலத்திற்கு இந்தச் சான்றிதழ் மிக மிக முக்கியமானது. உண்மையான திறமைசாலிகளை இனங்காணவே நாம் இந்தப் போட்டியினை நடத்துகின்றோம்"என்கிறார் பணிப்பாளர் நாயகம் ஏரானந்த ஹெட்டியாராச்சி.
"கூட்டுத்தாபனத்தின் ஆனந்த சமரக்கோன் கலையகத்தில் நடைபெறும் போட்டியைக் கண்டுகளிக்க பல நேயர்கள் தொலைபேசியில் விருப்பம் தெரிவிப்பதாகத் தமிழ்ச் சேவைப் பணிப்பாளர் ஆர். கணபதிப்பிள்ளை கூறுகிறார். இதனை நான் வரவேற்கின்றேன். அத்துடன் போட்டியாளர்கள் மீது விருப்பமுள்ள யாரும் நேரில் வந்து அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனப் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்" என்கிறார் அவர்.
இந்நிலையில், சிங்களத்தில் ஒலிபரப்பாகும் சிட்டி எப்எம் சேவையில் கடந்த ஜூலை முதலாந்திகதி முதல் யூத் ரெலன்ற்ஸ் என்ற போட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் முப்பது வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள் பங்குபற்றுகிறார்கள். போட்டிக்கான பாடலை எழுதி, அவர்களே இசையமைத்துப் பாடவேண்டும். இதற்கு மூவர் பங்குகொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கிறது. இதுபற்றிஅவர் விளக்கும்போது,
"யூத் ரெலன்ற்ஸ் போட்டியைப் பொறுத்தவரை, போட்டியாளர்களின் பாடல்கள் தயாரிக்கப்பட்டு ஒரு மணித்தியாலயத்திற்கு ஒரு தடவை ஒலிபரப்பப்படும். இரண்டாம் சுற்றும் அவ்வாறு நடத்தப்பட்டு இறுதிச் சுற்றில் மிகச் சிறந்த பாடல்கள் வெளிக் கொணரப்படும். இளைஞர் யுவதிகளின் திறமைகளை வெளிக்கொணர வேண்டியது தேசிய வானொலியின் பொறுப்பாகும். எமது முன்மாதிரியை வேறு அலைவரிசைகளும் பின்பற்றக்கூடும். எல்லோருக்கும் முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்பதே எமது நோக்கம்"
"இந்தப் போட்டிகளை நடத்துவதற்கான கால எல்லையை நிர்ணயித்திருக்கிறீர்களா?"
"நிச்சயமாக. கால எல்லை உண்டு. ஆறு மாதங்கள் வரை இந்தப் போட்டிகள் நடத்தப்படும். தென்றல் சிங்கிங் ஸ்ரார் ஒரு மாதம் ஒலிபரப்பாகிவிட்டது. இன்னும் ஆறு மாதங்கள் ஒலிபரப்பாகும்"
"கடந்த முறை நடத்தப்பட்ட போட்டியில் எத்தனைப் பாடகர்களை உருவாக்கியிருக்கிறீர்கள்?"
"இறுதிப்போட்டியில் பத்துப்பேரைத் தெரிவுசெய்து அவர்களை மெல்லிசைப்பாடகர்களாக அறிமுகப்படுத்தியிருக்கிறோம். அவர்கள் இந்தத் துறையில் முன்னேறிச்செல்ல வேண்டியது அவர்களின் திறமையிலும் முயற்சியிலும் தங்கியிருக்கிறது. முதலிடத்திற்கு வந்த சித்தாரா முன்னணியில் இருக்கிறார். அவர் தமிழ், சிங்கள நிகழ்ச்சியில் பங்குபற்றி வருகிறார். முன்னைய போட்டியில் வெற்றி பெற்றவர்களை இந்த இரண்டாவது போட்டியில் கௌரவ விருந்தினர்களாக அழைத்து, அவர்களை, இலங்கைப் பாடல்களைப் பாடுமாறு கேட்டிருக்கிறோம். இன்று வீ. முத்தழகை எடுத்துக்கொண்டால், அவர் எந்த மேடையிலும் இலங்கைப் பாடல்களைத்தான் பாடுவார். எமது இசைக்களஞ்சியத்தில் எவ்வளவோ நம் நாட்டுப் பாடல்கள் இருக்கின்றன. எல்லா அலைவரிசைகளும் தென்னிந்திய திரைப்படப் பாடல்களையல்லவா ஒலிபரப்புகின்றன. அப்படியாயின் எமது திறமைகள் எங்கே? அண்மையில் நாம் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தபோது பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்தோம். அவர்கள் மிக அருமையான பாடல்களை இயற்றி இசையமைத்து வழங்கினார்கள். ஆகவே, எமது படைப்புகளை வெளிக்கொண்டு வருவதற்கான காலம் தற்போது வந்துள்ளது. இந்தப்போட்டியில் தென்னிந்திய பாடல்களைப் பாடியபோதிலும் அடுத்த தென்றல் சிங்கிங் ஸ்ரார் நிகழ்ச்சி முற்றிலும் நமது இளைய சமுதாயத்தின் சுய முயற்சியில் உருவான பாடல்களைப் பாடும் போட்டியாக மாற்றியமைப்போம். எமது இறுதி இலக்கானது நமக்கே உரிய, நமது முயற்சியில் உருவான பாடல்களைக் கொண்டு வருவதாகும்."
"இந்தப் போட்டியை நடத்துவதில் இதுவரை நீங்கள் சவால்களைச் சந்தித்திருக்கிறீர்களா?"
"சவால்களை எதிர்கொண்டு வெற்றியடைக்கூடிய குழுவினர் எம்மிடம் இருக்கிறார்கள். தமிழ்ப் பாடல்களுக்கு இசையமைப்பதில் சிங்களக் கலைஞர்கள் சம்பந்தப்படுகிறார்கள். ஆகவே, இசைக்கு மொழி கிடையாது. அதனால், பாடல்களைச் சிதைக்காமல் பாடக்கூடிய வாய்ப்பு தமிழ்ப் பாடகர்களுக்குக் கிடைத்தது. இதுதான் முக்கிய சவால். இரண்டாவது சவால், நல்ல விடயங்களுக்கு அனுசரணை வழங்குவதில் தனவந்தர்கள் முன்வருவதில் நிலவும் குறைபாடு. அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் இவ்வாறான முயற்சிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்"
"ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலிருந்து உருவாகிய பலர், காலப்போக்கில் அதிலிருந்து விலகி அந்நியப்பட்ட நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். அவர்களைத்தக்க வைத்துக்ெகாள்வதில் நிலவுகின்ற தடைகள் யாவை, இதற்கு உண்மையான காரணம் என்னவாக இருக்கலாம் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?"
"பல்கலைக்கழகங்களில் பயில்கின்ற மாணவர்கள் அங்குப் பட்டம் பெறுகிறார்கள். இறுதியில் அவர்கள் அனைவரும் அங்கேயே பணிபுரிவதில்லையே! அவர்களுக்கு வேறு வேறு இடங்கள் இருக்கின்றன. ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் அநேகருக்கு ஒரு பல்கலைக்கழகம். இங்குப் பயின்று தேறி, எந்த இடத்திற்குச் சென்றும் தம் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு அவர்களுக்கு உண்டு. அதேநேரம், நாம் உருவாக்கியதன் பின்னர், இன்றைய வாணிப சமூகத்தில் சிறந்த திறமைக்குச் சந்தர்ப்பம் இருக்கின்றது. எங்கு உருவானாலும், தமக்குக் கூடுதல் வரவேற்பு உள்ள இடத்திற்குச் செல்வதற்குத்தான் யாரும் விரும்புவார்கள். ஆகவே, அவர்கள் செல்வது நியாயமற்றது என நான் நினைக்கவில்லை. நாம் அரச நிறுவனம். ஒரு கலைஞருக்குக் கொடுப்பனவொன்றை வழங்குவதென்றால் அதற்குச் சட்ட திட்டங்கள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் எமக்குச் செல்ல முடியாது. படைப்பின் மூலம் திருப்தியடைவோரும் இருக்கிறார்கள், பணத்தின் மூலம் திருப்தியடைவோரும் இருக்கிறார்கள். ஆதலால், அவர்கள் எங்கோ ஓர் இடத்தில் தங்கிவிடுகிறார்கள். அவ்வாறு எங்கிருந்தாலும் நல்ல திறமைசாலிகளாக மிளிரும் வகையில் நாம் உருவாக்குகிறோம். இதில் கட்டுப்பாடுகளை விதிக்கும் நோக்கம் எமக்கில்லை. அதே வேளை, இங்கு உருவானவர்களுள் நாம் அழைத்தவுடன் நன்றியுடன் வருபவர்களும் இருக்கிறார்கள். எமக்கு இரண்டாம் இடம் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். அது ஒவ்வொருவரின் பண்பாட்டைப் பொறுத்ததுதானே! எவ்வாறிருப்பினும் வரையறையை நிர்ணயிப்பது சரியானது அல்ல. அவர்களை எங்குச் சந்தித்தாலும் நான் மகிழ்ச்சியடைவேன். தேசிய நிறுவனமொன்றின் பொறுப்பு பலனை எதிர்பாராமல் சரியானதைச் செய்வது. அவர்கள் எங்காவது வேர்விட்டு வளரட்டும்"
"தற்கால வர்த்தகமயமான சமூகத்தில் ஒலிபரப்புத் துறையில் நிலவும் போட்டித்தன்மைக்கு எவ்வாறு முகங்கொடுக்கிறீர்கள். போட்டியை எதிர்கொண்டு முன்செல்வதற்குத் திட்டங்கள் எதனையும் வைத்திருக்கிறீர்களா?"
"இன்று அரச ஊடகத்திற்கு இருக்கின்ற முக்கிய சவால் இதுதான். வர்த்தகமய சவாலை வெற்றிகொள்வதா, அல்லது நாட்டின் நன்மைக்கான எமது நல்ல நோக்கத்தை அடைவதா? இதில் இரண்டு சவாலையும் வெற்றிகொள்ள வேண்டியது கூட்டுத்தானபத்தின் கடமையாகும். மிகக் கடுமையான சவால் என்றுகூட இதனைச் சொல்வேன். மக்களை நல்லனவற்றை ரசிக்கச் செய்து மக்களை நல்லவற்றின்பால் ஈர்த்துக்கொள்வதின் மூலம்தான் இதனை வெற்றிகொள்ள முடியும். அதனை இப்போது செய்து வருகிறோம். நல்லவற்றைப் புறந்தள்ளிவிட்டு வர்த்தகமயமானால் நாட்டின் நிலை என்னவாகும்?"
"என்றாலும், ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இந்த வர்த்தகமயமான போட்டியின்காரணமாக அதன் பாரம்பரிய கட்டுக்கோப்பிலிருந்து விலகி, தன்னை மாற்றிக்கொண்டுவிட்டதாகச் சிலர் கருதுகிறார்கள். நீங்கள் இதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?"
"இல்லை. நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். யாரையாவது ஆதாரபூர்வமாக நிரூபிக்கச் சொல்லுங்கள். மாற்றங்கள் பல நிகழ்ந்துள்ளன. தொழில்நுட்ப ரீதியிலான மாற்றம் காலத்திற்குத் தேவையானது. முன்பு, நான் கொழும்பிலிருந்து பேசுகிறேன் என்று ஆரம்பித்த இலங்கை வானொலியில் இன்று அப்படியா பேசுகிறோம்! காலத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளத்தானே வேண்டும். அப்போதைய அறிவிப்பாளர்களின் பாணி வேறு தற்கால அறிவிப்பாளர்களின் பாணி வேறு, அதேநேரம் எமது தனித்துவத்தைப் பேணிக்கொள்ளவும் வேண்டும். எமது மொழிப்பிரயோகம், சொற்களின் அர்த்தங்கள் மாறக்கூடாது, சிதையக்கூடாது. பி.எச்.அப்துல் ஹமீத் அவர்களும் காலத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டு அறிவிப்புச் செய்கிறார் அல்லவா! நானும் ஓர் அறிவிப்பாளன். நான் 1983 ஆம் ஆண்டு அறிவிப்பாளனாகச் சேர்ந்து அறிவிப்புச் செய்ததைப்போன்று இன்று செய்ய முடியுமா? தொழில்நுட்பரீதியாக நாம் மாறியிருக்கிறோம். சமூகத்தில் நேயர்களின் ரசனை மாறியிருக்கிறது. இவற்றையெல்லாம் உள்வாங்கிக்கொண்டு நாம் மாறியிருக்கிறோம். ஆனால், நாம் இந்த மாற்றத்தின் மூலம் தமிழையும் ஆங்கிலத்தையும் கலக்கவில்லை. சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் கலக்கவில்லை. ரெங்கிழிஷ் சிங்கிளிஷ் எம்மிடம் கிடையாது. செய்தி வாசிப்பில் நாம் எமது தனித்துவத்தை விட்டுக்கொடுக்கவில்லை. நான் பாடசாலையில் கல்வி கற்ற காலத்தில் எனது சிங்களப்பாட ஆசிரியை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன செய்தி அறிக்கையைச் செவிமடுக்கச் சொல்வார். ஏன்? மொழியைக் கற்றுக்கொள்ள. தமிழ் மொழியும் அவ்வாறுதான். குரல்கள் மாறியிருக்கலாம். எமது அடிப்படை மாறவில்லை. எம்மை அழித்துக்கொள்ளாமல், தனித்துவத்தைப் பாதுகாத்துக்கொண்டு சவால்களை எதிர்கொண்டு வருகிறோம்! அதுமட்டுமல்ல, கூட்டுத்தாபனம் 2017ஆண்டின் முற்பகுதியில் முற்றிலுமாக நவீனமாகிவிடும். புதிய கலையகம், ஒலிப்பதிவுக்கூடம் எனச் சகல பிரிவுகளும் நவீனமயமாகிவிடும். இதற்கு 283 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது" என்கிறார் நம்பிக்கை கலந்த மகிழ்ச்சியுடன்!
Via 
Sahadevan Vijayakumar, Published on 06 July 2016 Written by SLBC admin

Sunday, September 18, 2016

வளரும் ஒலிபரப்புக்கலை - நூல் வெளியீடு


சென்னைப் பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் அகில இந்திய வானொலியின் மேனாள் இயக்குநர்கள் திரு.கோ.செல்வம் மற்றும் திரு.விஜய திருவேங்கடம் அவர்கள் தொகுத்த 'வளரும் ஒலிபரப்புக்கலை' நூல் வெளியீடு வரும் வியாழன் 22 செப் 2016 காலை 11.00 நடக்கவுள்ளது.

Saturday, August 20, 2016

கொழும்பில் ஆசிய ஒலிபரப்பு ஒன்றியத்தின் ”வானொலி நாடக செயலமர்வு 2016”

ஆசிய ஒலிபரப்பு ஒன்றியத்தின் ”வானொலி நாடக செயலமர்வு 2016” எனும் தலைப்பிலான செயலமர்வொன்று கொழும்பில் இன்று நடைபெற்றது.
MBC ஊடக வலையமைப்பினால் இந்த செயலமர்விற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இன்றைய செயலமர்வில் கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த செயலமர்வு எதிர்வரும் 29 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
ஒலி வடிவிலான நாடகக் கலையின் படைப்புகள், நடைமுறை ரீதியிலான செயல் நுணுக்கங்கள், அவை குறித்த பகுப்பாய்வுகள், ஒத்துழைப்புகள் மற்றும் அறிவுரைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் தொடர்பில் மூன்று நாட்கள் இடம்பெறும் இந்த செயலமர்வில் தெளிவுபடுத்தப்படவுள்ளது.
வானொலி நாடகக் கலைகளைத் தத்தமது வானொலி நிலையங்களில் மேலும் திறம்பட முன்னெடுப்பதற்காக ஆசிய ஒலிபரப்பு ஒன்றிய உறுப்பினர்களுக்குப் பயிற்சிகளை வழங்குவதே இந்த செயலமர்வின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது.
Source: Newsfirst.lk

Saturday, August 13, 2016

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முழு நேர வானொலி

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முழு நேர வானொலி பண்பலை அலைவரிசை விரைவில் தொடங்கப்பட உள்ளது.
சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் தற்போது பண்பலை அலைவரிசையில் பாடல்களைக் கேட்டு வருகின்றனர். அதனால் பல முன்னணி நிறுவனங்கள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் பண்பலை வானொலி மூலம் சேவையை அளித்து வருகிறது.
அதன் வரிசையில் தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானமும் சேர உள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு கல்வி சேவைக்காக தேவஸ்தானம் ஓரியண்டல் கல்வி நிறுவனம் என்ற பெயரில் ஒரு பண்பலை அலைவரிசையை தொடங்க உரிமம் பெற்றது.
2007-ஆம் ஆண்டு 50 வாட் ஒலிபரப்பு திறன் கொண்ட (ச்ழ்ங்வ்ன்ங்ய்ஸ்ரீஹ்) பண்பலையை தொடங்கியது. அதன் மூலம் திருப்பதி நகரைச் சுற்றி 10 கி.மீ. சுற்றளவுக்கு பண்பலை சேவை தொடங்கப்பட்டது. இந்த பண்பலை அலைவரிசை மூலம் தற்போது 10 மணிநேரம் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பட்டு வருகிறது.
இதை மேலும் விரிவுபடுத்த தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்து வரும் 20-ஆம் தேதி முதல் 250 வாட் ஒலிபரப்புத் திறன் கொண்ட முழுநேர பண்பலை அலைவரிசையை தொடங்க ப்பட உள்ளது. இதற்காக புதிய குழு ஒன்றை தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது.
Source: Dinamani

Saturday, August 06, 2016

ரெயில்களில் வானொலி சேவை

ரெயில்களில் வானொலி சேவை தொடங்க ரெயில்வே முடிவு செய்துள்ளது. இதில் பாடல்கள், இசை மட்டுமல்லாமல் நகைச்சுவை, ஜோதிடம் உள்ளிட்ட அம்சங்களும், ரெயில்வே சம்பந்தப்பட்ட தகவல்களும் இடம்பெறும். விபத்து, இயற்கை சீற்றங்கள் குறித்த முக்கிய தகவல்களும் இதன் மூலமாக பயணிகளுக்கு தெரிவிக்கப்படும்.

முதல்கட்டமாக ஆயிரம் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் வானொலி சேவை தொடங்கப்படும். பின்னர் படிப்படியாக மற்ற ரெயில்களுக்கும் விரிவுபடுத்தப்பட இருப்பதாகவும், இறுதி கட்டப்பணிகள் தற்போது நடந்து வருவதாகவும் ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரெயில் வானொலி சேவையில், கல்வி குறித்த நிகழ்ச்சிகளும், பயணிகள் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சிகளும் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

Source: Daily Thanthi

Saturday, July 30, 2016

வானொலி இயக்குநருக்கு பாராட்டு

தேசிய விருது பெற்ற நாகர்கோவில் அகில இந்திய வானொலி நிலைய இயக்குநர் கீழப்பாவூர் ஆ. சண்முகையாவுக்கு விவசாயிகள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நாகர்கோவில் அகில இந்திய வானொலி நிலையம் வர்த்தகம், நேயர் எண்ணிக்கையில் பல மடங்கு அதிகரித்து அண்மையில் தேசிய விருது பெற்றது. மேலும், வானொலியில் விவசாயிகளுக்கு பயன்படும்படியாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. இதையொட்டி, குமரி மாவட்ட விவசாயிகள் சார்பில், விருது பெற்ற வானொலி நிலையத்தின் இயக்குநர் கீழப்பாவூர் ஆ. சண்முகையாவுக்கு நாகர்கோவிலில் பாராட்டு விழா நடைபெற்றது.
நாஞ்சில் நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட வேளாண் உற்பத்திக் குழு உறுப்பினர் செண்பகசேகரன் வரவேற்றார்.
இதில் பொன்.காமராஜ் சுவாமிகள், சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன், அகமதுகான், வின்ஸ் ஆன்றோ, வேளாண் இணை இயக்குநர் சந்திரசேனன்நாயர், விடுதலைப் போராளி கொடிக்கால் ஷேக் அப்துல்லா, புலவர் செல்லப்பா, வரலாற்று ஆய்வாளர் டாக்டர் பத்மநாபன், தியாகி முத்துகருப்பன், பழனி சுவாமிகள், உழவர் பெருமன்றத் தலைவர் மீனாட்சி சுந்தரம், டாக்டர் மனகாவலப் பெருமாள் உள்ளிட்ட ஏராளமானோர் பேசினர். சண்முகையா ஏற்புரையாற்றினார். உழவர் மன்றச் செயலர் ஹென்றி நன்றி கூறினார்.
Source: Dinamani

Friday, July 15, 2016

முதல் 10 வானொலி நிலையங்களில் ஒலி 96.8

சிங்கப்பூரில் நேயர்கள் அதிகம் கேட்கும் முதல் பத்து வானொலி நிலையங்களின் பட்டியலில், மீடியாகார்ப்  வானொலி நிலையங்கள், 8 இடங்களைப் பிடித்துள்ளன.
ஒலி 96.8-உம் அந்தப் பட்டியலில் வந்துள்ளது. மீடியாகார்ப்  வானொலி, இந்த ஆண்டு அதன் 80ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கும் சென்ற மாதத்துக்கும் இடையே, Nielsen நிறுவனம் வானொலி தொடர்பான கருத்தாய்வை நடத்தியது.
ஒவ்வொரு வாரமும் அதிகம் கேட்கப்படும் வானொலி நிலையங்களில் பெரும்பாலானவை மீடியாகார்ப்  நிறுவனத்துடையவை என்பது அதன்வழி தெரிகிறது.
ஒலி 96.8-உம் Warna 94 புள்ளி இரண்டும் முதல் பத்து இடங்களில் இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார் மலாய், தமிழ் சமூகப் பிரிவின் தலைவர் டாக்டர் சித்ரா ராஜாராம்.
அதிகம் கேட்கப்பட்ட வானொலி நிலையங்களின் பட்டியலிலும் அந்த இரு நிலையங்களும் முன்னணி வகித்தன.
நேயர்களின் கருத்துக்களைத் தொடர்ந்து திரட்டி வருவதாகவும் அவர் சொன்னார்.
ஒலி 96 புள்ளி எட்டின் நேயர்கள், வாரந்தோறும் சராசரியாக 16 மணி நேரத்துக்கும் மேல் வானொலியைக் கேட்பதாகக் கருத்தாய்வு முடிவுகள் காட்டின.
அதிகம் விரும்பிக் கேட்கப்பட்ட பட்டியலின் முதல் மூன்று இடங்களைச் சீன வானொலி நிலையங்கள் பிடித்தன.
தொடர்ந்து மூன்றாவது முறையாக LOVE 97.2 முதல் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்தது. 19 புள்ளி 4 விழுக்காட்டினர் அதனைக் கேட்பதாகக் கூறியிருந்தனர்.
இரண்டாம் நிலையில், பதினெட்டரை விழுக்காட்டுடன் YES 933-உம், 17 புள்ளி மூன்று விழுக்காட்டுடன் மூன்றாவதாக CAPITAL 95.8-உம் வந்திருந்தன.
GOLD 905, 987 போன்ற மற்ற மீடியாகார்ப் வானொலி நிலையங்களும் பட்டியலில் இடம்பிடித்திருந்தன.

கல்வெட்டு உடைக்கப்பட்டதை கண்டித்து வானொலி திடலில் பல்வேறு அமைப்புகள் உண்ணாவிரதம்

வானொலி திடல் கல்வெட்டு உடைக்கப்பட்டதை கண்டித்து வானொலி திடலில் பல்வேறு அமைப்புகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். 

வானொலி திடல் 

புதுவை முதலியார்பேட்டையில் பழமை வாய்ந்த வானொலித்திடல் உள்ளது. இந்த திடலை கடந்த 1950-ம் ஆண்டு ராகவ செட்டியார் என்பவர் பொதுமக்கள் பயனடையும் வகையில் வானொலி பூங்காவாக செயல்பட அனுமதித்தார். இதற்கிடையே கடந்த 10 ஆண்டுகளாக இந்த பூங்காவை சிலர் ஆக்கிரமித்து இருந்தனர். மேலும் அந்த இடத்தை தனியார் ஒருவர் விலைக்கு வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் அந்த பகுதியை சேர்ந்த சிலர் வானொலி பூங்கா மீட்புக்குழு என்ற ஒரு குழுவை தொடங்கினர். இந்த குழுவிற்கு தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி தலைவராக உள்ளார். இவர்கள் வானொலி திடலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 

உண்ணாவிரத போராட்டம் 

இந்த நிலையில் வானொலி திடலை மீட்டு தரக்கோரி அழகிரி தலைமையில் பலர் கவர்னரை நேற்று முன்தினம் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அவர் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் படி தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு யாரா அடையாளம் தெரியாத நபர்கள் வானொலி திடலில் கடந்த 1950-ம் ஆண்டு அமைக்கப்பட்ட கல்வெட்டை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். மேலும் அந்த இடத்தில் ஒரு பகுதியை ஆக்கிரமித்து சுற்றுச்சுவரும் கட்டப்பட்டு இருந்தது. 

இது பற்றிய தகவல் அறிந்த உடன் வானொலி திடல் மீட்பு குழு தலைவர் அழகிரி அங்கு விரைந்து சென்றார். அவர் வானொலி திடலில் கல்வெட்டை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வானொலி திடல் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தினை தொடங்கினார். அவருக்கு ஆதரவாக மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாறன், மனித உரிமைகள் பாதுகாப்பு இயக்க தலைவர் முருகானந்தம், வீரமணி, இன்பசேகரன் உள்பட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 

சமாதான பேச்சுவார்த்தை 

இது பற்றிய தகவல் அறிந்த உடன் முதலியார்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தினை கைவிடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே நள்ளிரவு 11.30 மணியளவில் உண்ணாவிரதம் இருந்தவர்களிடம், தெற்கு போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தார். அதையேற்று உண்ணாவிரதத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.
Source: http://www.dailythanthi.com/

வங்கதேச மக்களுக்காக பெங்காலி மொழியில் சிறப்பு வானொலி: 6 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடங்குகிறது இந்தியா

கடந்த 1971-ல் வங்கதேச விடு தலைப் போரின்போது பெங்காலி மொழிக்கான சிறப்பு வானொலியை இந்தியா தொடங்கி யது. கொல்கத்தாவில் இருந்து செயல்பட்ட இந்த வானொலியில் இந்திய செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகள் பெங்காலி மொழியில் ஒலிபரப்பப்பட்டன. இந்தியா விடுதலை அடையும் முன் நம் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த வங்கதேசத்திலும் (கிழக்கு வங்காளம்) பெங்காலி மொழி பேசப்படுகிறது. இதனால் அகில இந்திய வானொலி நிலையத்தின் சிறப்பு வானொலிக்கு வங்கதேச மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. என்றாலும் கருவிகள் பழுதடைந்ததன் காரணமாக கடந்த 2010-ல் இதன் ஒலிபரப்பு நின்றது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு வங்கதேசம் சென்றபோது, இது குறித்து அவரது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதைய டுத்து பழுதான கருவிகளுக்கு பதிலாக அதிக சக்திவாய்ந்த நவீன கருவிகளுடன் சிறப்பு வானொலி நிலையம் மீண்டும் செயல்படத் தயாராகி வருகிறது.
இது குறித்து 'தி இந்து'விடம் அகில இந்திய வானொலி நிலையத்தின் டெல்லி அதிகாரிகள் கூறும்போது, "ஆகாஷ்வாணி மைத்ரீ என்ற புதிய பெயரில் இந்த வானொலி செயல்பட உள்ளது. இதன் தொடக்க விழா கொல்கத்தாவில் ஜூன் 28-ம் தேதி நடைபெற உள்ளது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்க உள்ளனர். ஒலிபரப்பு தற்போது 16 மணி நேரமாக அதிகரிக்கப்படுகிறது. தொடர்ந்து வங்கதேச மக்களுக்காக பண்பலை (எப்.எம்) ஒலிபரப்பு தொடங்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தனர்.
இதுபோல் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்காக செயல் படும் வானொலி நிலையம் இந்தியாவில்தான் முதன் முதலில் தொடங்கப்பட்டதாக கருதப்படு கிறது. பெங்காலி மட்டுமின்றி, அண்டை நாடுகளிலும் பேசப்படும் இந்திய மொழிகளான தமிழ், இந்தி, உருது, நேபாளி போன்ற வற்றிலும் வானொலி ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
தமிழ் மொழியில் செயல்பட்டு வரும் தெற்காசிய வானொலி யானது டெல்லி, தூத்துக்குடி, சென்னை ஆகிய இடங்களில் இருந்து ஒலிபரப்பாகிறது. மேலும் பல இந்திய மொழிகளிலும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காக வானொலி அலைவரிசைகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.

Saturday, June 25, 2016

சிறையில் கைதிகளே நடத்தும் எப்.எம். ரேடியோ

மராட்டிய மாநிலத்தில் உள்ள தானே சிறையில் கைதிகளே நடத்தும் எப்.எம். ரேடியோ இன்னும் 15 நாட்களில் தொடங்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த வானொலி சேவையை சிறை கைதிகள் மட்டுமின்றி தானே மற்றும் மும்பை நகர மக்களும் கேட்டு ரசிக்க முடியும் என சிறை சூப்பிரண்ட் ஹிராலால் ஜாதவ் தெரிவித்துள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை வைத்து இந்த ஒலிபரப்பை தொடங்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Wednesday, June 15, 2016

ஆகாஷ்வாணி: இந்திய வானின் அசரீரி!

லையனல் பீல்டன் சென்னை வானொலி நிலையத்துக்கு வந்தபோது எடுத்தபடம். அருகில் அன்றைய நிலைய இயக்குநர் விக்டர் பரஞ்சோதி| படம். ‘தி இந்து' ஆவணக்காப்பகம்

‘ஆகாஷ்வாணி! செய்திகள் வாசிப்பது…’ என்று கனத்த மெளனத்தை உடைத்துக்கொண்டு ஒலிக்கும் குரலுடன் தொடங்கும் வானொலிச் செய்திகளைக் கேட்டு வளர்ந்தவர்களுக்கு, ஒலியுலகின் பொற்காலமான ‘அகில இந்திய வானொலி’யின் நாட்கள் என்றென்றும் நினைவில் இருக்கும். இன்றைக்கு, 418 நிலையங்களைக் கொண்டு உலகின் மிக முக்கிய ஊடகமாக செயல்பட்டுவருகிறது அகில இந்திய வானொலி. உலகின் மிகப் பெரிய பல்வேறு மொழி ஒலிபரப்புகளைக் கொண்ட ஒரே வானொலி எனும் தனித்த பெருமையும் உண்டு.

இந்தியாவில் வானொலி சேவை 1923-லேயே தொடங்கப்பட்டது. எனினும், ‘அகில இந்திய வானொலி’ என்ற பெயர் வைக்கப்பட்டது 1936 ஜூன் 8-ல்தான். அந்தப் பெயரை வைத்தவர் அகில இந்திய வானொலியின் முதல் இயக்குநரான லையனல் பீல்டன். அதன்படி, அகில இந்திய வானொலி தொடங்கப்பட்டதன் 80-ம் ஆண்டு இது. அதற்கு முன்னர் ‘இந்தியன் ஸ்டேட் ப்ராட்காஸ்டிங் சர்வீஸ்’ என்றே அது அழைக்கப்பட்டது. அகில இந்திய வானொலியின் லச்சினையை உருவாக்கியதும் லையனல் பீல்டன்தான். அப்போதைய வைஸ்ராய் கொடுத்த 2,50,000 ரூபாயை வைத்துக்கொண்டு, தனது முழு உழைப்பையும் பயன்படுத்தி, அகில இந்திய வானொலியை வளர்த்தெடுத்தவர் அவர். Read More

Thursday, June 09, 2016

Friday, June 03, 2016

புதிய பொழிவுடன் வெரித்தாஸ் வானொலி


வெரித்தாஸ் வானொலி தற்பொழுது புதிய பொழிவுடன் இணையத்தில் தனது
சேவைையை செய்து வருிகறது. மேலதிக விபரங்களை கேட்க

https://soundcloud.com/veritastamil/watsapp-promo

https://soundcloud.com/veritastamil/rva-facebook-live-streaming

https://soundcloud.com/veritastamil/listener-pattaabi-talks-about-rva

https://soundcloud.com/veritastamil/jothilakshmai

மொபைல் வானொலி உள்ளடக்கம்

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் கணித்தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பில் "மின் உள்ளடக்க உருவாக்கப் பயிலரங்கம்" 2/6/ 16 அன்று தொடங்கியது, சூன் 8, 2016 வரை இப்பயிலரங்கம் நடைபெறும். முதல் நாள் மொபைல் வானொலி உள்ளடக்கம் குறித்து பேரா. த.ஜெய்சக்திவேல், வலைப்பூ பதிவு குறித்து பேரா. ஜெ. பாலசுப்ரமணியன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். (உதவி: பேரா. தமிழ்பரிதி)


Wednesday, June 01, 2016

வானொலிகளைச் சேகரிக்கும் ஆட்டோ ஓட்டுநர்

தமிழகத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு வித்தியாசமான சிந்தனை.

சின்ன வயதிலிருந்தே பழங்கால வானொலிகளைச் சேகரிப்பதில் அவருக்கு அலாதி ஆனந்தம். 

பொக்கிஷமாகக் கருதும் வானொலிகளை மற்றவருக்கும் காட்டுவதில் அவருக்குக் கூடுதல் இன்பம்.  

அபூதாஹிர். கோவை வாசி. பொறியாளராக வேண்டுமென்பது இலட்சியம். 

வறுமை அந்த வாய்ப்பைத் தர மறுத்தது. 

கையில் கிடைக்கும் சொற்பத் தொகையைச் சேர்த்து வானொலிகள் வாங்கத் தொடங்கினார். 

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொன்மையான 300 வானொலிகள் இன்று அபூதாஹிரின் வசம்.

ஆனால் இவர் இன்னமும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார். 

வாழ்வில் வலிகள் பல இருந்தாலும் வானொலி தரும் இன்பம் எல்லையற்றது என்கிறார் அபூதாஹிர்.

முறையான படிப்பு இல்லை. 

ஆனால் பழுதான வானொலிகளைச் சீராக்குவதில் இவருக்குப் பழுத்த அனுபவம். 

தேடிவருவோருக்குக் அதைக் கற்றும் கொடுக்கிறார் அபூதாஹிர். 

ஏராளமான தொகை கொடுத்து வானொலிகளை வாங்கப் பலர் முன்வந்தாலும் அவற்றை விற்க மனமில்லை அபூதாஹிருக்கு. 

பழைமை என்றும் இனிமை. 

இளைய தலைமுறையினருக்கு அதை உணர்த்துவதே தமது இலக்கு என்கிறார் வானொலிப் பிரியர்.  

நன்றி: http://seithi.mediacorp.sg/mobilet/india/29may-india-radio-muesuem/2826546.html#


Wednesday, May 18, 2016

இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள்



ஆசியா கண்டத்திலேயே முதலாவது வானொலி ஒலிபரப்பு நிலையம் இலங்கை கொழும்புவில் 'கொழும்பு வானொலி' என்ற பெயரில் நிறுவப்பட்டு 1925, டிசம்பர் 25-ல் ஒலிபரப்பு தொடங்கியது. அப்போது இலங்கை ஆங்கிலேயர்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்ததால் ஆங்கிலத்திலேயே ஒலிபரப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் இடையிடையே தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளிலும் சில நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாயின.

வானொலி ஒலிபரப்புகள் கேட்பவர்களை வந்தடைய மூல காரணமாக விளங்குபவர்கள் வானொலி அறிவிப்பாளர்கள். அறிவிப்பாளர் என்பதை விட ஒலிபரப்பாளர் என்ற சொல் இவர்க ளின் பணியை முழுமையாக எடுத்துக் கூறும்.

'இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள்' என்ற நூல் இலங்கை வானொலியின் பல ஒலிபரப்பாளர்கள் பற்றிய விவரங்களைத் தாங்கி வெளிவந்துள்ளது. இலங்கை வானொலியும் உலகம் போற்றும் பல ஒலிபரப்பாளர்களை உருவாக்கியிருக்கிறது.

ஆங்கிலத்தில் ஜிம்மி பரூச்சா, டிம் ஹாசிங்டன் போன்ற பலரையும் ஹிந்தியில் அமீர் சயானி போன்ற பலரையும் உருவாக்கிய இலங்கை வானொலி, தமிழிலும் பல ஒலிபரப்பாளர்களை உருவாக்கியிருக்கிறது.

தமிழில் முதல் ஒலிபரப்பாளராக இருந்தவர் சோ. நடராசன் என்பவர். இவர் பிரபல யாழ்ப்பாணத்துப் புலவர் சோமசுந்தரனாரின் மகன். தமிழ், சம்ஸ்கிருதம், சிங்களம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்த நடராசன் சம்ஸ்கிருதம், சிங்கள மொழி நூல்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்த அறிஞர்.

இன்னொரு பிரபல ஒலிபரப்பாளர் சோ. சிவபாதசுந்தரம். இவரைப் பற்றி தமிழகத்தில் பலரும் அறிவார்கள். 'ஒலிபரப்புக் கலை' என்ற நூலை எழுதியவர். அந்த நூலுக்கு அறிமுகவுரை எழுதிய இராஜாஜி அந்த நூலுக்கு 'ரேடியோ வாத்தியார்' என்றே பெயர் வைத்திருக்கலாம் என எழுதியுள்ளார். அந்த அளவுக்கு ஒலிபரப்பாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பல விஷயங்கள் அந்த நூலில் எழுதப்பட்டுள்ளன.

இவர்களோடு, தமிழக வானொலி நேயர்கள் நன்கறிந்த மயில்வாகனன், சற்சொரூபவதி நாதன், இராஜேஸ்வரி சண்முகம், புவனலோஜினி, அப்துல் ஹமீத், கே.எஸ். ராஜா என்று மொத்தம் 50 ஒலிபரப்பாளர்கள் பற்றிய கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

கூடவே, ஒலிபரப்பாளர்களின் படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன், நூலாசிரியர், தனது சேகரிப்பில் இருந்த சில அரிய புகைப்படங்களையும் இந்த நூலில் வெளியிட்டுள்ளார். வேறெங்கும் பார்க்க முடியாத படங்கள் அவை.

இந்த நூலை எழுதிய தம்பிஐயா தேவதாஸும் ஒரு ஒலிபரப்பாளரே. ஒலிபரப்பாளர்களைப் பற்றி அவர் தந்திருக்கும் விவரங்களைப் படிக்கும்போதே இலங்கை வானொலி என்ற நிறுவனத்தின் வரலாறு, அந்த மண்ணின் கலாச்சாரம் போன்றவற்றையும் அறிந்துகொள்ள முடிகிறது.

- எஸ்.எஸ். உமா காந்தன்

இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள் 
தம்பிஐயா தேவதாஸ் 
விலை: ரூ. 150 
வெளியீடு: வித்யா தீபம் பதிப்பகம், கொழும்பு / 13 தமிழகத்தில் 
புத்தகம் பெற: ardicdxclub@yahoo.co.in

நன்றி: தி இந்து, நூல் வெளி, 17-5-2016