Monday, December 31, 2007

வேரித்தாஸ் தமிழ்பணி நேயர் சந்திப்பு - 2008

நேயர் மன்றத் தலைவர்கள் சந்திப்பு கூட்டம் வரும் 5 ஜனவரி 2008 காலை 10 மணியளவில் சென்னை சாந்தோம் கலைத்தொடர்பு நிலையத்தில் திரு. டென்னிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. சர்வதேச வானொலிகளைக் கேட்கும் அனைத்து நேயர் மன்றத் தலைவர்களும் இதில் கலந்து கொள்ள வேண்டி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வழித்தட வரைபடம்: http://wikimapia.org/#lat=13.038927&lon=
80.266113&z=17&l=0&m=s&v=2

சென்னையில் நடைபெற்ற பைப்ஸ் கேம்ப்

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பைப்ஸ் கேம்-பில் (Pipes Camp) வண்ணை ராஜாவுடன் நான். நடுவில் பாலாஜி. நன்றி: சீனிவாசன் http://coolsrini.blogspot.com/2007/12/my-visit-to-pipescamp.html

Friday, December 28, 2007

பழமையான கிராம்போன்கள்

சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் 200 ஆண்டுகள் பழமையான புத்தகங்கள் (1804 ஆண்டு முதல் பதிப்பிக்கப்பட்டவை) பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு தற்பொழுது பழமையான கிராம்போன்கள் மற்றும் பழையத் திரைப்படப் பாடல் புத்தகங்கள் பொதுமக்கள் பார்வைக்காக வரும் 4 ஜனவரி 2008 வரை வைக்கப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரியில் இரண்டு புதிய பண்பலை வானொலிகள்

கடந்த வாரத்தில் பாண்டிச்சேரியில் இரண்டு புதிய பண்பலை வானொலிகள் தொடங்கப்பட்டுள்ளது. ரிலயன்ஸ் குழுமத்தின் பிக் எப்.எம் தனது 41-ஆவது நிலையத்தை இங்கு தொடங்கியுள்ளது. அதே போன்று தினத் தந்தி குழுமத்தின் ஹலோ எப்.எம்-மும் தனது ஆறாவது நிலையத்தை இங்கு தொடங்கியுள்ளது. தற்சமயம் பாண்டிச்சேரியில் சூரியன் உட்பட மூன்று தனியார் பண்பலை வானொலிகள் செயல்பட்டு வருகின்றன. - தகவல்: சர்வதேச வானொலி மாத இதழ்.

Thursday, December 20, 2007

பிபிசி உலக சேவைக்கு வயது 75

பிபிசியின் உலக சேவை, சிறப்பு நிகழ்சிகளுடன் 19-12-2007 அன்று தனது 75 ஆவது பிறந்த நாளை கொண்டாடியது.
இதே நாளில் 1932 ஆம் ஆண்டில் உலக சேவையானது எம்பையர் சர்வீஸ் என்று அப்போது அழைக்கப்பட்ட பெயரில் லண்டனில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்துக்கும் தனது முதல் ஒலிபரப்பை செய்தது.
தற்போது உலக சேவை 33 மொழிகளில் ஒலிபரப்பை மேற்கொண்டு வருகிறது.
இச்சேவையை வாராந்திரம் 18 கோடி மக்கள் கேட்கின்றனர்.
இதனையொட்டி கல்வியாளர்கள் மற்றும் இதழியல் நோக்கர்களின் கருத்துக்களை கீழ்கண்ட தொடுப்புப் பக்கத்தில். http://www.bbc.co.uk/tamil/highlights/story/
2007/12/071214_75thanniversary.shtml
நன்றி: பிபிசி தமிழோசை

Monday, December 17, 2007

பவள விழா ஆண்டில் பிபிசி உலக சேவை

பிபிசி உலக சேவை வானொலி இவ்வாண்டு 75ஆம் அகவை காண்கிறது. உலக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள் பற்றி பிபிசி உலக சேவையில் வெளியான ஒலிக் கீற்றுக்கள் அடங்கிய சிறப்புத் தொடர்.

தொடர் அறிமுகம்
இங்கிலாந்து மன்னர் எட்வர்ட்டின் ஒலிக்கீற்று

Wednesday, December 05, 2007

ஒலிம்பிக் போட்டிக்கான சிறப்பு இணைய தளம்


சீன வானொலி பொது அறிவுப் போட்டி கேள்விகள்


2008-பெய்ஜிங் ஒலிம்பிக் எனும் பொது அறிவுப் போட்டி
கவனத்திற்கு: விடைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், முந்தைய கட்டுரையை வாசித்து பார்க்கலாம்.


1.பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் இலக்கு என்ன?
A. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை தனிச்சிறப்புடைய உயர் தர ஒலிம்பிக்காக நடத்துவது. B. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டியை இணக்கமான, சிறப்பான ஒலிம்பிக்காக நடத்துவது. 2.பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி எப்போது துவங்கும், எப்போது முடிவடையும்?
A. 2008ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 8ம் நாள் முதல், 2008ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 24ம் நாள் வரை. B. 2008ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15ம் நாள் முதல், 2008ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 30ம் நாள் வரை.

3.பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முழக்கம் என்ன?
A. பசுமை ஒலிம்பிக், பண்பாட்டு ஒலிம்பிக், அறிவியல் தொழில் நுட்ப ஒலிம்பிக் B. ஒரே உலகம், ஒரே கனவு

4.பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 5 Fuwa பொம்மைகளின் பெயர்கள் என்ன?
A. நான்நான், துங்துங், ஜுஜு, பெய்பெய், ஜிங்ஜிங் B. பெய்பெய், ஜிங்ஜிங், ஹுவான்ஹுவான், யிங்யிங், நீநீ

5.பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு எத்தனை விளையாட்டு அரங்குகளும் திடல்களும் தேவைப்படுகின்றன?
A. 37 விளையாட்டு அரங்குகள் மற்றும் திடல்கள். B. 40 விளையாட்டு அரங்குகள் மற்றும் திடல்கள்.

6.துவக்க விழாவும் நிறைவு விழாவும் நடைபெறும் தேசிய விளையாட்டு அரங்கின் மறு பெயர் என்ன?
A. பறவைக் கூடு B. நீர்க்கன சதுரம்

7.பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வேறு 6 நகரங்களின் பெயர்கள் என்ன?
A. சென் யாங், சுங்ஜிங், குய்யாங், சிங்தௌ, சியு சோ, ஹாங்காங் B. தியேன் ஜின், சின் குவான் தௌ, ஷாங்காய், சென் யாங், சிங்தௌ, ஹாங்காங்

8.ஹாங்காங்கில் எந்த விளையாட்டுப் போட்டி நடத்தப்படும்?
A. குதிரை ஏற்றம் B. குத்துச் சண்டை


விளையாட்டு விதிகள்:
போட்டியில் மொத்தம் 8 வினாக்கள் உள்ளன. ஒவ்வொரு வினாவுக்கு ஒரு விடையே சரியானது. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து சொடுக்கவும்கட்டுரைகளின் தலைப்புகள்:





குறிப்பு:பரிசு அனுப்ப வேண்டிய பெயர், தொடர்பு முகவரி ஆகிய விபரங்களைத் தெளிவாகக் குறிப்பிடுங்கள்.

பாண்டிச்சேரியில் சூரியன் எப்.எம் "எஸ் எப்.எம்" ஆனது

பாண்டிச்சேரியில் "எஸ் எப்.எம்" தனது ஒலிபரப்பினை கடந்த 04 டிசம்பர் 2007 அன்று 93.5 மெ.ஹெ-சில் தொடங்கியது. தற்சமயம் சூரியன் குழுமம் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய ஐந்து இடங்களில் செயல்பட்டு வருகிறது. பாண்டிச்சேரியில் தொடங்கப்பட்ட முதல் தனியார் வானொலி என்ற பெருமையை இது தட்டிச்செல்கிறது.

Sun TV Network's FM station 93.5 SFM is all set to launch in Pondicherry on 4 December through its subsidiary Kal Radio. The programmes in the FM station will cater to audience of all age groups. With the launch in Pondicherry, SFM will be operational in 14 stations. It is already available in Chennai, Coimbatore, Tirunelveli, Visakhapatnam, Bangalore, Hyderabad, Jaipur, Bhubaneshwar, Tirupati, Madurai, Tuticorin, Lucknow and Bhopal. It will roll out 31 more stations to take the total number of station to 45 across India.

2008-பெய்ஜிங் ஒலிம்பிக் எனும் பொது அறிவுப் போட்டி

போட்டி பற்றி

29வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி 2008ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது ஒலிம்பிக் எழுச்சியைப் பிரச்சாரம் செய்து, உள்நாட்டு வெளிநாட்டு நேயர்களை 2008 ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் பங்கேற்கச் செய்யும் வகையில், 2007ம் ஆண்டு நவம்பர் முதலாம் நாள் தொடக்கம், சீன வானொலி நிலையம் பெய்ஜிங் ஒலிம்பிக் எனும் பொது அறிவுப் போட்டியை நடத்துகின்றது. இந்தப் போட்டி 6 திங்கள் காலம் நீடிக்கும். இது பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் பெரும் ஆதரவை பெற்றுள்ளது.


விளையாட்டில் ஈடுபட்டு அதிக பரிசுகள் பெறலாம்.ஒரு வேளை நீங்கள் கூட சிறப்புப் பரிசு பெறும் நபராக மாறலாம்.




விளையாட்டின் விதிகள்


இவ்விளையாட்டில் Fu Wa பொம்மை புதிர்கள், இணைய வினாவிடை, என் மனதில் 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் ஆகிய 3 பகுதிகள் உள்ளன.புதிர்கள் பகுதியை நிறைவேற்றியப் பின் தான், இணைய வினாவிடைப் போட்டியில் கலந்து கொள்ள முடியும். 8 வினாக்களுக்கு சரியான விடைகள் அளித்து, ஒலிம்பிக் பற்றிய கருத்துக்களை எழுதிய நண்பர்களுக்கு முதல் பரிசு பெறும் வாய்ப்புண்டு. போட்டிக்களுக்கு முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசுப் பெற்றவர்களிடையில் சிறப்புப் பரிசு பெறுவோர் தேர்ந்தெடுக்கப்படுவர்.போட்டிக் காலம் :2007ம் ஆண்டு நவம்பர் திங்கள் முதல் நாள் – 2008ம் ஆண்டு மே திங்கள் முதல் நாள்பரிசுகள்:சிறப்புப் பரிசு பெறுவோர் அழைப்பின் பேரில் 2008ம் ஆண்டு ஜுன் திங்களில் பெய்ஜிங்கில் சிறப்புப் பயணம் மேற்கொள்ளலாம். ஒலிம்பிக் விளையாட்டு அரங்குகள், திடல்கள் ஆகியவற்றைச் சுற்றிப்பார்த்து, புகழ்பெற்ற சீன விளையாட்டு வீரர்களைச் சந்தித்து மகிழலாம். இதர பரிசுகள் பெறுவோர்களுக்குச் சீன வானொலி நிலையத்தின் நினைவுப் பொருட்கள் வழங்கப்படும். தங்களின் விவரமான தொடர்பு தகவல்களை குறிப்பிடுங்கள்.பரிசுப் பெறுவோரின் பெயர் பட்டியல் சீன வானொலி நிலையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.சிறப்பு விளக்கம் : பரிசுகளைத் தீர்மானிக்கும் உரிமை சீன வானொலிக்குரியது


நடத்தும் தரப்பு: சீன வானொலி நிலையம்

ஆதரவு தரப்பு : 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக்

குழுபொறுப்பு : CRI ONLINE

Thursday, November 29, 2007

இலங்கை நேயர்கள் கவனத்திற்கு: பிபிசி தமிழோசை

இலங்கை நேயர்கள் கவனத்திற்கு

நேயர்களே, நேற்றைய (28/12/2007) பிபிசி தமிழோசை ஒலிபரப்பில் இலங்கை நேயர்களுக்கு நேரிட்ட சில பிரச்சினைகள் குறித்து விளக்க விரும்புகிறோம்.
நேற்று நவம்பர் 27 ஆம் திகதி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண்பலை வலையமைப்பு மூலமாக இலங்கை நேயர்கள் கேட்ட எமது நிகழ்ச்சி, எமது முழுமையான நிகழ்ச்சி அல்ல.
இலங்கை நேயர்கள் கேட்ட அந்த நிகழ்ச்சி, காலதாமதமாக மறு ஒலிபரப்பு செய்யப்பட்டது, அது மட்டுமல்லாமல், எங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படாமலும், எமது அனுமதியைப் பெறாமலும், நிகழ்ச்சியின் சில பகுதிகள் வெட்டப்பட்டன. அந்த நிகழ்ச்சி எங்களால் வெட்டப்படவில்லை என்பதை நேயர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
சிற்றலை ஒலிபரப்பு மூலமாகவும், இணைய தளம் மூலமாகவும் கேட்கும் நேயர்கள் முழுமையாக இந்த நிகழ்ச்சியை கேட்டிருப்பார்கள்.

நன்றி: பிபிசி தமிழோசை
Source: http://www.bbc.co.uk/tamil/news/story/
2004/05/040528_tamil_currentaffairs.shtml

Thursday, November 15, 2007

கோவையில் ரேடியோ சிட்டி


கோவையில் ரேடியோ சிட்டி தனது ஒலிபரப்பினை கடந்த 13 நவம்பர் 2007 அன்று 91.1 மெ.ஹெ-சில் தொடங்கியது.
ரேடியோ சிட்டியின் இயக்குனர் அபுர்வ புரோகிட் இது பற்றி கூறுகையில், " கோவையின் மொழியில் அனைத்து நிகழ்ச்சிகளும் தயாரிக்கப்பட்டு நேயர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த உள்ளது".
காலையில் "நம்ம சிட்டி, என்ரென்ரும் புண்ணகை ஆகிய நிகழ்ச்சிகள் நேயர்கள் மத்தியில் புகழ்பெறும் என நம்புகிறோம்" என்றார்.

Saturday, November 03, 2007

ஹாலோ எப்.எம் சோதனை ஒலிபரப்பு

கோவையில் ஹாலோ எப்.எம்-மின் சோதனை ஒலிபரப்பினை கடந்த நவம்பர் 1-ல் இருந்து கோவைப் பகுதி மக்கள் கேட்கத் துவங்கியுள்ளனர். முறையான ஒலிபரப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.

கோவையில் ரேடியோ மிர்ச்சி


கோவையில் ரேடியோ மிர்ச்சி தனது சோதனை ஒலிபரப்பினை கடந்த நவம்பர் 1, 2007 அன்று 98.3 மெ.ஹெ-சில் தொடங்கியது.
கோவை ரேடியோ மிர்ச்சியின் இயக்குனர் வினை பிரசாத் இது பற்றி கூறுகையில், " கோவை மொழியில் அனைத்து நிகழ்ச்சிகளும் தயாரிக்கப்பட்டு நேயர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த உள்ளது".
காலையில் "பில்டர் காபி, ஹாலோ மதுரை, லேடிஸ் காலனி, ஹோலி உடான்ஸ் அகியவையும் மதியம் ஜூட், கடல கடல ஆகிய நிகழ்ச்சிகள் நேயர்கள் மத்தியில் புகழ்பெறும் என நம்புகிறோம்" என்றார்.

Friday, October 19, 2007

பிபிசியில் ஆட்குறைப்பு

எமது லண்டன் பிபிசியில், ''குறைந்தளவிலான ஆனால், தனித்துவமிக்க சிறப்பான நிகழ்ச்சிகளைத் தயாரித்ததல்'' என்ற ஆறு ஆண்டுகாலத் தீவிரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனம், தனது ஊழியர்களில் 2500 பேரை ஆட்குறைப்புச் செய்யவுள்ளதாக உறுதி செய்துள்ளது.
ஆயினும் தமிழ் சேவை உள்ளடங்கலான பிபிசியின் உலக சேவைக்கு இந்த ஆட்குறைப்பினால், உடனடியான நேரடிப் பாதிப்பு எதுவும் கிடையாது.
அதேவேளை, புதிய ஆட்கள் பணிக்குச் சேர்க்கப்படவுள்ளதாலும், யதார்த்தமான விரயங்களைத் தவிர்ப்பதன் மூலமும் உண்மையான ஆட்குறைப்பின் அளவு குறைவாகவே இருக்கும் என்றும் பிபிசி தெரிவித்துள்ளது.
இங்கு பிரிட்டன் எங்கிலும் தொலைக்காட்சி உரிம வரி செலுத்தும் பாவனையாளர்கள், தாம் விரும்பும் நிகழ்ச்சிகளை, தாம் விரும்பும் நேரத்தில் பார்த்துக் கேட்க வழி செய்யும் நோக்கில், இணையத்திலும், மற்றும் ஏனைய டிஜிட்டல் தொழில்நுட்பங்களிலும், புதிய முதலீடுகளையும் பிபிசி செய்யவுள்ளது.
இந்தத் திட்டத்தை பிபிசி மறு ஆய்வு செய்யாவிட்டால், வேலைநிறுத்தங்கள் தவிர்க்க முடியாதவையாகிவிடும் என்று தொழிற்சங்க அதிகாரிகள் கூறுகிறார்கள்.
உலகின் அனைத்து ஊடகங்களின் மீதும் தாக்கம் செலுத்தவல்ல, டிஜிட்டல் புரட்சியை உள்வாங்கிக்கொள்ளும் வகையில், பிபிசியும் தன்னை சிறிதாக்கிக் கொண்டாலும், இவற்றுக்கு தம்மை பொருந்தும் வகையில் மாற்றிக்கொள்ளவுள்ளது என்று இந்தத் திட்டத்தை அறிவித்த போது பிபிசியின் பணிப்பாளர் நாயகம் மார்க் தாம்ஸன் தெரிவித்துள்ளார்.
ஆகவே குறைந்த அளவு நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படும், ஆனால், உரிமக் கட்டணம் செலுத்துவோர் அவற்றில் அவர்கள், விரும்பியவற்றை, விரும்பிய பொழுது பார்த்துக் கேட்க ஏதுவாக அவை இருக்கும்.
பிபிசியின் கட்டிடங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும். மேற்கு லண்டனில் உள்ள டெலிவிஷன் செண்டர், இந்தக் காலகட்ட இறுதியில் விற்பனை செய்யப்படும்.
பணியாளர் எண்ணிக்கையும் குறைக்கப்படும்.
2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டாலும், யதார்த்தத்தில் அந்த எண்ணிக்கை 1800 மாத்திரமே, ஏனென்றால், நீக்கப்படும் பல ஊழியர்கள், டிஜிட்டல் தொழில்நுட்ப பணிகளுக்கான மீண்டும் உள்வாங்கப்படுவார்கள் என்றும் மார்க் தாம்சன் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையத்தளங்களுக்கான செய்திப் பீடங்கள் ஒன்றாக இணைக்கப்படுவதால், செய்திப் பிரிவில் பணியாற்றும், 400 ஆட்கள் குறைக்கப்படுவார்கள்.
ஆனால், புதிய, இணையத்தளத்தை அடிப்படையாகக் கொண்ட செய்திச் சேவைக்காகவும், விளையாட்டுச் சேவைக்காகவும், 300 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் முதலீடு செய்யப்படும்.

//////////

Monday, October 15, 2007

திருநெல்வேலி ஹலோ எப்.எம்-மின் முகவரி


கடந்த 13 அக்டோபர் 2007 அன்று திருநெல்வேலியில் ஹலோ எப்.எம் 106.4 அலைவரிசையில் தொடங்கப்பட்டது. இந்த நிலையத்தின் பொறுப்பாளராக திரு. மணி சேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேயர்கள் அஞ்சலில் தொடர்பு கொள்ள முகவரி:
ஹலோ எப்.எம்,மாலை முரசு பில்டிங்,

33, மதுரை ரோடு,

திருநெல்வேலி - 627 001
பேச: 99946 68223

தூத்துக்குடியில் ஹலோ எப்.எம் தொடங்கப்பட்டது


கடந்த 15 அக்டோபர் 2007 அன்று தூத்துக்குடியில் ஹலோ எப்.எம் 106.4 அலைவரிசையில் தொடங்கப்பட்டது. இந்த நிலையத்தின் பொறுப்பாளராக திரு. காந்தி கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரைத் தொடர்பு கொள்ள அலைபேசி எண்: 99427 07284.

நேயர்கள் அஞ்சலில் தொடர்பு கொள்ள முகவரி:

ஹலோ எப்.எம்,287,

பாளையங்கோட்டை ரோடு,

தூத்துக்குடி - 628 001.
பேச: 98849 43333

Friday, October 05, 2007

மதுரையில் ரேடியோ மிர்ச்சி

மதுரையில் ரேடியோ மிர்ச்சி தனது ஒலிபரப்பினை கடந்த 29 செப்டம்பர் 2007 அன்று 98.3 மெ.ஹெ-சில் தொடங்கியது.


மதுரை ரேடியோ மிர்ச்சியின் இயக்குனர் கிருஸ்ண குமார் இது பற்றி கூறுகையில், " மதுரையின் மொழியில் அனைத்து நிகழ்ச்சிகளும் தயாரிக்கப்பட்டு நேயர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த உள்ளது".


காலையில் "பில்டர் காபி, ஹாலோ மதுரை, லேடிஸ் காலனி, ஹோலி உடான்ஸ் அகியவையும் மதியம் ஜூட், கடல கடல ஆகிய நிகழ்ச்சிகள் நேயர்கள் மத்தியில் புகழ்பெறும் என நம்புகிறோம்" என்றார்.

தர்மபுரியில் அகில இந்திய வானொலி நிலையம் தொடங்கப்பட்டது.

தர்மபுரியில் கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி அகில இந்திய வானொலி நிலையம் தொடங்கப்பட்டது. தற்சமயம் சென்னை நிலையத்தின் நிகழ்ச்சிகளை அஞ்சல் செய்து வருகிறது. பண்பலை 102.5 மெ.ஹெட்சில் தனது ஒலிபரப்பினை தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை செய்து வருகிறது.

விரைவில் 10 கிலொவாட் சக்தியில் 100.2 மெ.ஹெர்ட்சில் ஸ்டீரியோ முறையிலான ஒலிபரப்பினை தொடங்க உள்ளது.அறுபது கி.மீ சுற்றளவில் தற்பொழுது இதன் நிகழ்ச்சிகளைக் கேட்கலாம்.

தர்மபுரிக்கு அருகில் உள்ள அதியமான்கோட்டையில் 1999-ல் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 1999-ல் பணி நிறைவடைந்தது. 2002 அக்டோபர் 2-ல் தனது முதல் சோதனை ஒலிபரப்பினைச் செய்தது.

Monday, September 24, 2007

பிபிசி தமிழோசையில் தமிழ் சினிமா

தமிழ்த் திரையுலகின் வரலாறு குறித்த நெடுந்தொடரை பிபிசி தமிழோசை வானொலி ஒலிபரப்பவுள்ளது.30 பகுதிகளாக இந்தத் தொடர் வெளியாகும். நெஞ்சம் மறப்பதில்லை என்ற பெயரில் ஒலிபரப்பாக உள்ள இந்தத் தொடர் தமிழ் சினிமா, திரை நடத்திரங்கள், திரைப்படவியல் வரலாற்று ஆய்வாளர்கள், கலைஞர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் குறித்த சுவையான பக்கங்களை திரும்பிப் பார்க்கவுள்ளது.வரும் 23ம் தேதி முதல் இதனை பிபிசி தமிழோசை வானொலியிலும், பிபிசி தமிழ் இணையத் தளத்திலும் (http://www.bbctamil.com/) கேட்கலாம்.முன்னாள் தமிழோசை செய்தியாளரும் பிரபல ஒளி-ஒலி ஊடக நிருபருமான சம்பத் குமார் இது குறித்து கூறுகையில்,வரும் அக்டோபர் மாதம் தமிழ் திரையுலகம் தனது 75 ஆண்டை கொண்டாட உள்ளது. இத்தனை ஆண்டுகளிலும் பல்வேறு திறமையாளர்களை அது அடையாளம் காட்டியுள்ளது. அவர்கள் மூலம் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளது.இந்த நெடிய வரலாற்றில் தமிழ் திரையுலகை வளர்த்த, நிலை நிறுத்திய பழம்பெரும் இயக்குநர்கள், பிரபல தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள், திறமை வாய்ந்த இசையமைப்பாளர்கள், பாடகர்கள், நகைச்சுவை நடிகர்கள் என திரைத்துறை ஜாம்பவான்களை இந்தத் தொடர் நினைவுகூறும்.இவர்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும் தமிழர்களுக்கு தெரிவிக்கவே இந்த நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்ச்சியை வடிவமைத்துள்ளோம் என்றார்.பிபிசி தமிழோசையின் தலைவர் திருமலை மணிவண்ணன் கூறுகையில், தமிழ் திரையுலக இசை குறித்து 2004-05ம் ஆண்டில் பிபிசி வானொலி ஒளிபரப்பிய தொடர் பெறும் வெற்றி பெற்றது. அதன் மூலம் மாபெரும் தமிழ்த் திரையுலகம் குறித்த தகவல்களுக்கு மக்களிடையே உள்ள ஆர்வத்தை புரிந்து கொள்ள முடிந்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்த புதிய தொடரை ஆரம்பிக்கவுள்ளோம்.இந்த இனிய தொடரை கேட்டு மகிழ நேயர்களை அன்புடன் அழைக்கிறேன் என்றார்.

Monday, September 17, 2007

ரேடியோ சிலோன் சுந்தா ....


ரேடியோ சிலோன் சுந்தா ....


தனி மனித வாழ்வில் எங்கே ஒரு சம்பவம் நிகழ்ந்தாலும் அங்கே என் பாடல் ஒன்று ஒலிக்கும் என்றார் கவியரசர் கண்ணதாசன்.அதேபோல ....ஈழத்து ரசிகர்களைப் பொறுத்தவரை......அவர்களின் வாழ்க்கையோடு ஒன்றிக் கலந்து அவர்கள் உணர்வுகளையும் கனவுகளையும் சிநேகமாய் வருடிக் கொடுத்ததில் இலங்கை வானொலி வகித்த பங்களிப்பை வெறும் வார்த்தைகளால் மட்டும் விளக்கி விட முடியுமா?இலங்கை வானொலியை ஆய்ந்து .... அறிந்து ....உணர்ந்து .... தெளிந்து .... ரசித்த சுகமான அந்த நினைவலைகளை மறுபடியும் மறுபடியும் அசை மீட்கத் தெரிந்த இலங்கை ரசிகர்களுக்கு மட்டுமே அந்த அருமை பெருமையின் ஆழம் புரியும்.அத்தகைய சிலோன் ரேடியோவில் கணீரென்ற குரலாலும், அழகுத் தமிழ் உச்சரிப்பாலும், நடிகராகவும், அறிவிப்பாளராகவும் நேயர்களை வசப்படுத்தி.... வானொலியின் வரலாற்றுப் பக்கங்களில் தனி முத்திரையைப் பதித்தவர்.... ப, ரேடியோ சிலோன் சுந்தா என அழைக்கப்படும் ஒலிபரப்பாளர் திரு. வீ. சுந்தரலிங்கம் அவர்கள் .இவரது செம்மையான உச்சரிப்பில் உலாவந்த செய்தி வாசிப்பையும், நேர்த்தி மிக்க நேர்முக வர்ணனைகளையும், கீர்த்திமிக்க இசைத் தொகுப்பு நிகழ்ச்சிகளையும், பாய்ந்து வரும் சிங்கம் என பலன் தருவது டியுறோல் போன்ற பளபளப்பான விளம்பரங்களையும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா என்ன?இன்னும் ... இன்னும் .... எத்தனை நினைவலைகள் ?....நேயர்களை சிந்திக்க வைத்த பஞ்சபாணம், விவேகச் சக்கரம் போன்ற நிகழ்ச்சிகளிலும் நம்மோடு சிநேகமாக உறவாடிய அந்த சிங்காரக் குரல் .... அரை நூற்றாண்டுக்கு மேலாக வசந்தத் தமிழ் வாசனையை வான் அலைகளில் பரப்பியது.இலங்கை ரசிகர்களை மட்டுமல்ல தென்னிந்திய வானொலி ரசிகர்களையும் வசீகரித்த திரு. சுந்தா அவர்கள் எழுதிய 'மன ஓசை' என்ற நூலில் இருந்து ஒரு பகுதியை ரசிகன் வாசகர்களுக்காக இங்கே தொகுத்துத் தருகின்றோம்.வானொலியில் நேர்முக வர்ணனைகள் எங்கள் காலத்தில் மிகவும் பிரபலமானதொரு நிகழ்ச்சி.தொலைக்காட்சி வராத காலம். முழுக்க முழுக்க மக்கள் வானொலி வர்ணனைகளையே கேட்டுக் கொண்டிருப்பார்கள்.ஒவ்வொரு கணமும் விழிப்பு, விழிப்பு, விழிப்பு, விரைந்து நுண்மதியுடன் செயற்படும் ஆற்றல், சுய பொறுப்புணர்வு-இவையே நல்ல ஒரு ஒலிபரப்பாளனாவதற்கு இன்றியமையாத அடிப்படைகள் என்பதனையே இந்த அனுபவங்கள் எல்லாம் எமக்கு உணர்த்தி நின்றன.இந்த அனுபவக் களத்திடை வானொலி வர்ணனைகளின் போதும் சில வேளைகளில் பிழைகள் வந்து சேரும். இவற்றை உடனுக்குடன் ஈடுசெய்ய முடியாமலிருக்கும் விளைவாக நிகழ்ச்சி முடிய பத்திரிகைகளின் கிண்டல் கேலிகளைச் சந்திக்க நேரிடும். இவற்றையெல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான்.நான் வானொலியில் இணைவதற்கு முன்னால் கூட இவ்வாறே வர்ணனைகள் தொடர்பான கஷ்டங்களைப் பார்த்திருக்கிறேன்.இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ். சேனநாயக்காவின் இறுதி ஊர்வல வர்ணனை நடந்து கொண்டிருந்தது.காட்சியை வர்ணித்த அறிவிப்பாளர் உணர்ச்சி மேலிட ஒப்புமை தேடி மிதிலைக் காட்சி போல என்று விளாசி விட்டார். இறுதி ஊர்வலத்தை மிதிலைக் காட்சியுடன் ஒப்பிடுவதா?மறுநாள் காலை பத்திரிகையில் விமர்சனங்கள்....இதுபோலவே பிரிட்டிஷ் மகாராணியார் இலங்கை விஜயத்தின் போதான வர்ணனையிலும் சுவார°யமான சங்கதிகள்.ஆபரணங்கள் ஏதும் அணியாமல் எளிமையான வெள்ளையுடுப்பில் வருகிறார் என்று சொல்ல நினைத்த வர்ணனையாளர், வாய் தடுமாறி ஆடை ஆபரணங்கள் இல்லாமல் மகாராணியார் அழகாக வருகின்றார் என்று வர்ணித்துவிட்டார்.எப்படி இருக்கும்? பத்திரிகைகள் சும்மா விடுமா?ஒருவிதத்தில் பத்திரிகை கண்டனங்கள் அவசியமும் கூட. அவை எமது எச்சரிக்கை உணர்வினுக்கு துணை செய்தன.இத்தனை அனுபவ விழிப்புடனும் வர்ணனைகளிலே அதீத உணர்ச்சிக்குள்ளாகி விமர்சனங்களை எதிர்கொண்ட அனுபவம் ஒன்று எனக்கும் நேர்ந்ததை இங்கு குறிப்பிட வேண்டும்.மறைந்த பிரதமர் டி.எஸ். சேனநாயக்காவின் உருவச் சிலை திறப்பு விழா வைபவம் பாராளுமன்ற வளாகத்தில் நடந்து கொண்டிருந்தது.டி.எஸ். சேனநாயக்கா அவர்களின் புதல்வர் டட்லி சேனநாயக்கா தந்தையின் சிலைக்கு மாலை அணிவிப்பதாக ஏற்பாடு.இந்த நிகழ்ச்சியை பார்த்த வேளை வர்ணனையாளராக இருந்த என் மனதில் எனது தந்தையார் பற்றிய நினைவுகள் விஸ்வரூப தரிசனமாகியிருக்க வேண்டும்.மகன் தந்தைக்கு ஆற்றும் இந்த மலர் ஆராதனைப் பற்றி குறிப்பிடும் போது மிகை உணர்ச்சியுடன் அதிகமாகவே கதைத்து விட்டேன்.நிகழ்ச்சி முடிந்து திரும்பி நிலையத்துக்கு வந்தபோது எனது சகா ஒருவர் உனது நடிப்பு நன்றாக இருந்தது என்று கேலி செய்தார்.என்னுடைய அன்றைய மனநிலையை அவர் அறிய நியாயமில்லை. அந்த வகையில் அவர் கேலி செய்தது சரிதான். என்னைப் பொறுத்தவரை , இது ஒரு நல்ல பாடமாக இருந்தது.அதாவது வர்ணனைகள் செய்யும்போது சொந்த உணர்ச்சிகளுக்கு இடம் தரக்கூடாது. நிகழ்வுகளை தெளிவாக - அழகாக , கேட்கும் நேயர்களின் அகத்திரைக்குக் கொண்டுவந்து விடுவதே எமது முக்கிய கடமையாகும்.இந்த அனுபவ பாடங்கள்தான் பின்னால் ஒரு நல்ல வர்ணனையாளனாக நான் பாராட்டுப் பெற வழிவகுத்தன.என் ஒலிபரப்பு அனுபவக் களத்திடை மகிழ்ச்சியும் புகழும் தேடித்தந்த அப்போலோ வர்ணனை பற்றிய நினைவுகள் என்றும் இனிமையானவை.அப்பொழுது நான் இலங்கை வானொலியிருந்து இலங்கை பாராளுமன்ற சமகால மொழிபெயர்ப்பாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தேன்.அன்றைய இலங்கை வானொலி இயக்குனர் நாயகம்(டைரக்டர் ஜெனரல்) நெவில் ஜயவீர அவர்களிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது.சந்திர மண்டலத்துக்கு மனிதன் பயணிக்கப் போகின்றான்.வாய்ஸ் ஓப் அமெரிக்கா என்ற அமெரிக்க வானொலி நிலையம் தொடர்ச்சியாக (மூன்று, நான்கு நாட்கள்)வர்ணனை செய்ய உள்ளது. வாய்ஸ் ஓப் அமெரிக்கா ஒலிபரப்பை இயர்போன் மூலம் காதில் வாங்கியபடி உடனடியாக தமிழிலும் சிங்களத்திலும் தாமுடியுமா என்று அவர் கேட்டார்.என்னோடு பாராளுமன்றத்தில் இருந்த சிங்கள அறிவிப்பாளர் அல்பிரட்டும் கூட இருந்தார்.பெரியதொரு சவாலாக இது எமக்கு இருந்தது.இரண்டு பேருமே நிச்சயம் முடியும் என்று உறுதி கூறினோம்.அவர் உடனேயே ஏற்பாடு பண்ணி எங்களை கொழும்பிலே உள்ள அமெரிக்கன் தூதரகத்திற்கு அனுப்பி வைத்தார்.ஏற்கனவே இத்திட்டம் போல ஜெமினி என்றொரு விண்வெளிக் கலத்தை வானுக்கு அனுப்பிப் பரீட்சித்துப் பார்த்துக் கொண்டிருந்த காலம் அது. அதற்குரிய படங்களையெல்லாம் அவர்கள் திரைப்படங்களாக வைத்திருந்தார்கள். அவர்களே ஏற்பாடு பண்ணி எங்கள் இருவருக்குமாக அவற்றைத் திரையிட வைத்தார்கள்.திரையிடும் போதுதான் உண்மையாகவே இது எப்படி நடக்கப் போகிறது. எப்படி அவர்கள் பேசப் போகின்றார்கள், என்ன என்ன விடயம் எல்லாம் தேவை என்பது எங்களுக்கு ஓரளவு தெரிய ஆரம்பித்தது. பொறுப்பு மிக அதிகம் என்பதும் புரிய ஆரம்பித்தது. ஆங்கிலத்திலே பேசுவதை தமிழிலோ சிங்களத்திலோ மொழி பெயர்ப்பது ஒன்று.ஆனால் மறு பக்கத்திலோ அமெரிக்கன் ஆங்கிலம் என்று சொல்லப்படுகின்ற அமெரிக்கர்கள் பேசுகின்ற முறையும் ஆங்கிலத்தையே அவர்கள் பேசினாலும் அதை உச்சரிக்கும் முறையும் இந்த மாதிரியான வான்வெளிப் பிரயாணத்திற்கான சேவையிலே இருக்கின்ற அந்தத் திட்டத்திலே வேலை செய்கின்றவர்கள் பேசுகின்ற சொற்பிரயோகங்களும் பிரயோகித்த சொற்களும் வேறுவிதமாக இருந்தன. இதனைப் படங்களைப் பார்த்த பின்தான் நாம் அறிந்தோம்.சாதாரணமாக பாராளுமன்றத்திலே பேசுகின்ற ஒரு உரையினைத் தமிழிலோ சிங்களத்திலோ கொடுப்பது போன்றதல்ல இது என்று எங்களுக்குத் தெரியும்.அமெரிக்கர்களின் இந்தப் பேசும் முறை, இவர்கள் பேசும் மொழி அவர்களுடைய ஆங்கில உச்சரிப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக இவ் வான்வெளிக் களங்களிலே என்ன மாதிரியான சொற்களை எல்லாம் பிரயோகிக்கின்றார்கள் என்ன மாதிரியெல்லாம் அது இருக்கும் என்பதெல்லாம் எங்களுக்கு புதிதாக இருந்தது.ஆனால் எங்களுக்கு அமெரிக்கன் தூதரகம் மிகவும் உதவியாக ஒத்தாசையாக இருந்து அந்தப் படங்களை எங்கள் வசதிப்படி எங்களுக்கு எப்போது தேவையோ அப்போதெல்லாம் போட்டுக் காட்டினார்கள். ஒருவகையில் எங்களுக்குப் பயிற்சியளித்தார்கள் என்றே சொல்லவேண்டும்.இத்தனை உதவிகளையும் ஒத்தாசை செய்த அவர்கள் இந்நிகழ்ச்சி தரமாக அமைய வேண்டும் மக்களுக்குத் தெளிவாக இவை புரிய வேண்டும் என்பதற்காக எங்களுக்கு உதவியாக மேலும் நான்கு பேரை ஆயத்தம் செய்தார்கள்.பேராசிரியர் குலரத்தினம் , இவர் புவியியல் பேராசிரியராக சர்வகலா சாலையிலே இருந்தவர்.பேராசிரியர் ஏ.டபிள்யூ. மயில்வாகனம், இவர் பௌதிகவியல் பேராசிரியராக இருந்தவர். ஆனந்த சிவம் என்று ஒரு இளைஞர், அவர் ஒரு விஞ்ஞானி .திரு. கோபால பிள்ளை மகாதேவா என்ற ஒரு விஞ்ஞானிஇப்படியாக ....நான்கு பேரை அவர்கள் ஆயத்தம் செய்திருந்தார்கள். எங்களுக்கும் சற்று ஓய்வு கொடுப்பதற்காக இப்படியான ஏற்பாட்டை அவர்கள் செய்திருந்தார்கள்.இதே போல சிங்களத்திலும் அல்பிரட் பெரேராவுக்கும் இதே மாதிரியான ஏற்பாட்டைச் செய்து கொடுத்திருந்தார்கள்.எங்கள் ஒலிபரப்பு எத்தகைய வெற்றியைப் பெற்றது ? என்பதற்கு சான்றாக சில விஷயங்களைச் சொல்ல நினைக்கின்றேன்.சந்திர மண்டலப் பிரயாணம் தொடர்பான இந்த ஒலிபரப்பை ஆல் இந்தியா ரேடியோ எங்களைப் போல வர்ணனையாகத் தரவில்லை என்பதாலும், தமிழிலே அது தொடர்பான எந்த நிகழ்ச்சியும் இருக்கவில்லை என்பதாலும் எமது நிகழ்ச்சிக்கு தென்னிந்திய நேயர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.முன்பின் தெரியாதவர்கள் கூட ..... கிட்டதட்ட லட்சம் பேர் என்று சொல்லலாம் ..... அவ்வளவு கடிதங்கள் வந்தன.ஒரு நாள் நான் இலங்கை வானொலி நிலையத்திற்குப் போயிருந்தபோது திரு. நெவில் ஜெயவீர என்னை அழைத்தார்.அவர் மெல்லியதொரு புன்முறுவலுடன் தனது உதவியாளரைக் கூப்பிட்டு அந்தச் சாவியை எடுத்துவரச் சொன்னார். என்னையும் கூட்டிக்கொண்டு அவருடைய காரியாலயத்திற்குப் பக்கத்திலே இருந்த ஒரு சிறிய அறைக்கு அழைத்துச் சென்று அதைத் திறக்கச் சொன்னார். ஒரு சிறிய அறை அது.கதவைத் திறந்ததும் அதற்குள் ஆயிரக்கணக்கான கடிதங்கள் அப்படியே குவிந்து வீழ்ந்தன.என்னைக் கட்டித்தழுவி இவைதான் உமக்கும் எங்களுக்கும் கிடைத்த பரிசு என்றார் பெருமையாக.அன்றைய அமெரிக்க ஜனாதிபதி இலங்கை வானொலியின் இந்தச் சேவையைப் பாராட்டி அல்பிரட் பெரேராவுக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் தமது கைப்பட கடிதங்கள் எழுதியிருந்தார். கூடவே அமெரிக்க வரலாறு தொடர்பான ஆங்கில நூல் ஒன்றும் ஜனாதிபதியின் கையெழுத்துடன் அன்பளிப்பாக இணைக்கப்பட்டிருந்தது.இதற்குப் பின்னர் எனது நண்பர்கள் கூட என்னை அப்போலோ சுந்தா என அழைக்கத் துவங்கினர். எனது வாழ்க்கையிலே எனக்குக் கிடைத்த பெரும் பாராட்டாக இதை நான் கருதுகிறேன். Thanks to யாழ் சுதாகர்

Friday, September 14, 2007

சீன வானொலி பற்றி பல்லவி


தமிழகத்தின் முன்னனி நாளிதழான "த ஹிந்து" புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியைப் படிக்க நமது "டிஎக்ஸர்ஸ் கைடின்" தொடுப்பிணை சொடுக்கவும்

Tuesday, August 28, 2007

தமிழில் ஒலிபரப்பாகி வரும் இணைய வானொலி


தமிழில் ஒலிபரப்பாகி வரும் மற்றும் ஒரு இணைய வானொலி
மேலதிக விபரங்களுக்கு சொடுக்கவும்.


Monday, August 13, 2007

ஒலியின் இணைய சஞ்சிகை அறிமுகம்!

சிங்கப்பூர் ஒலி 96.8 -ன் சிறப்பு நிகழ்ச்சிகள், சலுகைகள், போட்டியங்கள் போன்ற பல விஷயங்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள இப்பொழுதேப் பதிந்துக் கொள்ளுங்கள்
http://www.oli.sg/newsletter.htm

பிபிசி தமிழோசையில் ரேடியோ ஒன்

பிபிசி தமிழோசையின் இணைய தளத்திலேயே தற்பொழுது சென்னைப் பண்பலை வானொலியான ரேடியோ ஒன்-னில் ஒலிபரப்பாகிவரும் 'பிபிசி மினிட்டினைக்' கேட்களாம். மேலதிக விபரங்களுக்கு சொடுக்கவும் http://www.bbctamil.com/

Monday, August 06, 2007

பதிவர் பட்டறை - ஒரு சில கருத்துக்கள்

அருமையான வாய்ப்பு,
அரசு செய்ய வேண்டியதை
தனி மனிதர்கள் சாதித்து உள்ளீர்கள்.
வாழ்துக்கள்.

பணம் கொடுத்து கற்க வேண்டியதை,
இலவசமாக வழங்கியுள்ள குழுவிற்கு,
சர்வதேச வானொலி வலைப்பூ
தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத்
தெரிவித்துக் கொள்கிறது.

நியூசிலாந்து வானொலி மன்றத்தின் முகவரி மாற்றம்

நியூசிலாந்து வானொலி மன்றம் NEW ZEALAND DX Times எனும் மாத இதழை வெளியிட்டுவருகிறது. இது சமீபத்தில் தனது முகவரியை மாற்றம் செய்துள்ளது.

New Zealand Radio DX League
PO Box 39-596
Howick
Manukau 2145
NEW ZEALAND

தகவல்: Mark Nicholls, Chief Editor

Thursday, July 19, 2007

சீன வானொலி வைத்த ராட்சத பாண்டாவின் ஊரான ஸ்ச்சுவான் மாநிலம் என்னும் பொது அறிவுப்போட்டிக்கான பரிசு பெறுவோரின் பெயர்கள்

முதல் பரிசு பெற்ற நேயர்களின் பெயர்கள்

1. நந்தியாலம் சி துளசிதரன் 071037
2. நந்தியாலம் T. தணிகாசலம் 071039
3.புதுக்கோட்டை ஜி வரதராஜன் 056196
4. தார்வழி பி முத்து 065119
5 திருவைகாவூர் T. M. முருகானந்தம் 077202
6. ஆரணி ஜெ அண்ணாமலை 071322
7. ஆரணி ஜெ.ஏ.ஆர் தினேஷ் 074464
8. பெரம்பலூர் சு. கலைவாணன் ராதிகா 077197
9. முனுகப்பட்டு பி கண்ணன்சேகர் 050334
10. இராணிப்பேட்டை கெ பவித்ரா
11. வெண்ணந்தூர் பி இராஜா 077275
12 மனமேடு எம் தேவராஜா 066770
13. பாண்டிசேரி சுதா
14 மஹாராஜபுரம் ஜெ சாரதா 069215
15 காஜான்மலை ஜி பி ஜனனிஸ்ரீ 077204
16 துரையூர் தி.குறிஞ்சிக் குமரன் 077402
17. பேளுக்குறிச்சி கே. செந்தில் 051908
18. இராசிபுரம் எஸ்.அன்பழகன் 080002
19. இராசிபுரம் K.குணசேகரன் 077014
20. சேந்தமங்கலம் எஸ் ரேகா 078456
21. சேந்தமங்கலம் எஸ் எம். இரவிச்சந்திரன் 051908
22. பெருந்துறை பல்லவி கே பரமசிவன் 050062
23. திருச்சி அண்ணா நகர் ஸ்ரீமதி
24. பாலூர் கே. அழகேசன் 076456
25. பாத்திகாரன்பட்டி சேஷ மீனாட்சி சுந்தரன் 080041
26. சென்னை-56 பி.எஸ் ஆனந்தி ஸ்ரீதர் 072289
27.ஆரணி பொன் தங்கவேலன் 075527
28. எஸ் கே. பாப்பபாளையம் பி.தி.சுரேஷ்குமார் 076035
29. உன்னியூர் ஆர்.நல்லுசாமி 076020
30. பேளுக்குறிச்சி முருகவேலன் 077162

இரண்டாவது பரிசு பெற்றவர்களின் பெயர்கள்

1. நந்தியாலம் கே. பிச்சையம்மாள் 073042
2. நந்தியாலம் லோகம்மாள் 071043
3. நந்தியாலம் வ. காமாட்சி 071042
4. நந்தியாலம் கலையரசி 078752
5. வேலூர் த சுந்தரகொடி 075526
6. நந்தியாலம் தணிகாசலம் 077407
7. நந்தியாலம் ஷர்மிளா தேவி 078750
8. பகராயூர் பி.ஏ. நாச்சிமுத்து
9. தார்வழி எம் நடராஜன் 072777
10. திருவைகாவூர் எம் சின்னம்மாள்
11. கும்பகோணம் எஸ் சாந்தி
12. தர்மபுரி எஸ் பாரதி 059179
13. முனுகப்பட்டு G சாமுண்டீஸ்வரி 078221
14. ஆரணி சிந்தாமணி 077962
15. ஆரணி உமா பாலு 074656
16. ஆரணி பாலசரஸவதி 073065
17. மணக்கால் இரா அன்பழகன் 077478
18. பேளுக்குறிச்சி இல பிரபா புதிய நேயர்
19. இராணிப்பேட்டை வ. கோமதி
20. இராணிப்பேட்டை எம் குமாரசாமி 075312
21. திமிரி தி.பி.முரளி 075281
22. இராமபாளையம் எஸ் செல்வி 071075
23. நாமக்கல் கா அருண் 076869
24. மின்னக்கல் இ செல்வராஜ் 076725
25 துறையூர் S.M. சரவணன் 076514
26 துறையூர் ஜி. ரமேஷ் 074417
27 மஹாராஜபுலம் ஜெ சுகந்தா 069216
28 காஜாமலை ஜி பிரபாகரன் 077050
29 காஜாமலை ஆர்.பி.ஸ்ரீதேவி 079962
30 காஜாமலை எஸ்.கோவிந்தராஜன் 079960
31 மன்னச்சநல்லூர் எம். சுமதி 080244
32 திருச்சி-1 த.கலைச்செல்வன்
33 மணமேடு தி.கலைச்செல்வி 068072
34. திருச்சி-8 ஆர் விஜயகுமார்
35. மதுரை-20 என் இராமசாமி 075653
36. மதுரை-20 ஆர் அமுதாராணி 076720
37. பேளுக்குறிச்சி சி அஸ்வின் 076823
38. இராசிபுரம் எல் குமார் 079486
39. இராசிபுரம் ஏ நமச்சிவாயம் 076626
40. இராசிபுரம் எஸ் திலகவதி 079990
41. பேளுக்குறிச்சி கே. சரவணாதேவி 051909
42. சேந்தமங்கலம் எஸ் நந்தகுமார் 077412
43. சேந்தமங்கலம் எஸ் ஆர் கற்பகம் 077944
44. சேந்தமங்கலம் எஸ் ஆர் ராஜ மாணிக்கம் 076625
45. இராசிபுரம் ரா செங்கோட்டு வேலவன் 080024
46. ஈரோடு ஓ. சி. ராமசாமி புதிய நேயர்
47. திருச்சி 17 சௌமியா
48. பாத்திகாரன் பட்டி எஸ்.எஸ்.ராஜன் 076760
49. பாத்திகாரன்பட்டி பா. காலவன் 080045
50. பாத்திகாரன் பட்டி P.S.ராமமூர்த்தி 076748
51. பாத்திகாரன் பட்டி கே விஜயலட்சுமி 078234
52. திருவண்ணாமலை P.S.சுகுணாபாய் 076759
53. பாத்திகாரன்பட்டி சி வெங்கட ராமன் 080059
54. பாத்திகாரன்பட்டி B.E.பத்மாவதி 073181
55. பாத்திகாரன்பட்டி எஸ் அட்சயா ராணி
56. பாலூர் சுந்தர்கிரி 076750
57. ராகம் பழனியப்பன் க 077027
58. பேளுக்குறிச்சி ராஜேஸ் குமார் 077149
59. பேளுக்குறிச்சி எஸ் பழனி வேல் 076086
60. உன்னியூர் ஆர் சுப்ரமணி 080165
61. கண்டமங்கலம் A.முஜீபுர்ராஹ்மான் 077251
62. விழுப்புரம் V.U. கல்பனா 077566

மூன்றாவது பரிசு பெற்றவர்களின் பெயர்கள்

1. நந்தியாலம் துளசிதரன் 071031
2. நந்தியாலம் த நந்தினி 077318
3. நந்தியாலம் கே பத்மாவதி 073158
4. நந்தியாலம் மணிகண்டன் புதிய நேயர்
5. நந்தியாலம் எஸ் வெங்கடேசன் புதிய நேயர்
6. நந்தியாலம் சரளாதேவி 078150
7. நந்தியாலம் சபிதா 073038
8. நந்தியாலம் பானுபிரியா புதிய நேயர்
9. நந்தியாலம் லஷ்மி புதிய நேயர்
10. தார்வழி T.K.P. ஐஸ்வர்யா 075289
11. தார்வழி T.K.P.ருக்மணி 075290
12. தார்வழி பி ரேணு 066999
13. கீரமங்கலம் எஸ் செல்வராசு
14. திருவைகாவூர் T.M. சிவரஞ்சனி
15. தர்மபுரி ஆர் செல்வம் 070488
16. ஆரணி ஜி சுஷ்மிதா 075037
17. ஆரணி ஜெ.ஏ. சந்திரன் 071868
18. ஆரணி சி ஆண்டாள் 073087
19. நாட்டார்மங்கலம் ஏ மாதுராஜ் 076176
20. ஆரணி ஜெ சௌமியன் 074897
21. ஆரணி வி.ஆர்.ஜெ. அஞ்சனா 075548
22. ஆரணி ஜி கலையரசி 075442
23. ஆரணி ஆர் சத்தியபாமா 071870
24. ஆரணி இந்திரஜித் 076755
25. மணக்கால் ஏ உமா 077622
26. இராணிப்பேட்டை கே ரேவதி
27. இராணிப்பேட்டை கே பானுப்பிரியா 075409
28. திமிரி தி.பி.சுப்பிரமணி 075287
29. இராமபாளையம் எஸ் அபிராமி
30. திமிரி வி. ராமதாஸ்
31. இராணிப்பேட்டை த. வசுமதி
32. மதுரை ஐராவதநல்லூர் எஸ் பாண்டியராஜன் 077398
33. மீனாட்சிபாளையம் விஜயலஷ்மி 078020
34. வெண்ணந்தூர் S.சுப்பிரமணியம் 079043
35. வெண்ணந்தூர் பி.குமுதா 080035
36. வெண்ணந்தூர் S.குமரவேல் 078495
37 எஸ் பாப்பாரப்பட்டி த. செந்தில் குமார் புதிய நேயர்
38 காஜாமலை சி.ஜி.மரகதம் 079961
39 மஹாராஜபுரம் ஆர் சோபனா 080305
40 அய்யபா நகர் ப.அன்பழகன் 078748
41 ஈரோடு எஸ் சுதரசன் 079243
42 திருச்சி த.யோகேஷ் ராஜா 077394
43 மணமேடு எம்.விஜயா 073510
44 திருவானைக் கோவில் ஜி.சக்ரபாணி
45 திருச்சி-8 த.ரமேஷ்
46. மதுரை-20 ஆர் கே. பஞ்சாபகேசன் 076052
47. சேந்தமங்கலம் அசோக் குமார் 077574
48 இராசிபுரம் ஏ சாந்தி 080026
49. பேளுக்குறிச்சி கே ககைம் 065549
50. பேளுக்குறிச்சி எம் சந்திர சேகரன் 076822
58. பேளுக்குறிச்சி பி அர்ச்சுனன் 065545
59. பேளுக்குறிச்சி எஸ்.என். நடராஜன் 076168
60. சேந்தமங்கலம் வேங்கடம் 076050
61. சேந்தமங்கலம் ஆர் பெருமாள் 078147
62. பொய்யாமணி சு.ராதாகிருஷ்ணன் 077998
63. பெரிய கண்டைபுரம் எஸ் பூபதி 078071
64. இலங்கை மன்முனை உ.மு.றிப்ஹான் 079236
65. இராசிபுரம் எஸ். ஸ்ரீஆண்டாள் 079991
66. சேந்தமங்கலம் என். நந்திணி 077950
67. உன்னியூர் எஸ் ராஜு 076026
68. பேளுக்குறிச்சி முருகவேலன் 077162
67. திருச்சி 17 ஹரி சங்கர்
68. சேலூர் P.குழந்தைவேல் 076789
69. பாத்திகாரன்பட்டி தமிழ் செல்வன் 080049
70. பாத்திகாரன்பட்டி இராசா கிராமன் 080046
71. பாத்திகாரன்பட்டி தி. எஸ் இலட்சுமி புதிய நேயர்
72. பாத்திகாரன்பட்டி ஜி விஜி 076425
73. ராசிபுரம் S சுப்பு மணிகண்டன் 077917
74. திமிரி ஏ. யோகேஷ் 078233
75. பாத்திகாரன்பட்டி சி பானுமதி
76. சென்னை-56 சைனா தீபிகா
77. பாத்திகாரன்பட்டி பாசமலர்
78. பாத்திகாரன்பட்டி ஹரிஹரன்
79. பேளுக்குறிச்சி ஆர் பிச்சையம்மாள் 076021
80. பேளுக்குறிச்சி எஸ் ராஜு 076026
81. பேளுக்குறிச்சி ஆர் எஸ் குமரவேல் 077163
82. பேளுக்குறிச்சி ஆர் சந்திர சேகர் 077139
83. இராசிபுரம் எஸ்.வடிவேல் 080001
84. தென்பொன்முடி தெ நா மணிகண்டன் 077423
85. காத்தான்குடி எம். சி. எம். ரிப்கான் 078214
86. காத்தான்குடி-6 எம்.எம். பயாஸ் 079251
87. காத்தான்குடி-5 மு. மு. மபாஸ் 077682
88. கல்முனை எம். ஏ.எம்.முஸ்லாத் 079125
89. அமெரிக்கா ஆல்பர்ட் பிஃர்னாண்டோ 077519
90. காங்கேயம் பி.ந‌ந்த‌குமார் 080037
91. வளவனூர் உமாகாயத்ரி 078039

நன்றி : திருமதி. கலையரசி,
திரு. கிளீட்டஸ்
சீன வானொலி நிலையம்.

Wednesday, July 04, 2007

என் பாலகுமார் பெய்சிங் மாநகரில் சுற்றுபயணம் செய்கிறார்

ராட்சத பாண்டாவின் ஊரான ஸ்ச்சுவான் என்னும் பொது அறிவு போட்டியில் இந்திய நேயர் என் பால குமார் சிறப்புப் பரிசு பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பரிசு பெறுவதற்காக அவர் ஜுலை 3ம் நாள் அதிகாலை சிங்கப்பூர் வழியாக பெய்சிங் வந்தடைந்தார். தமிழ்ப் பிரிவின் தலைவர் தி. கலையரசி விமான நிலையத்தில் அவரை வரவேற்றார்.

பரிசு வழங்கும் நடவடிக்கைக்குப் பொறுப்பான பணியாளர் லி லியின் வழிகாட்டலில் அவர் "தொழிலாளர் ஹோட்டலில்"தங்கியிருக்கிறார்.


காலை உணவு உட்கொண்ட பின் தமிழ்ப் பிரிவின் பணியாளர் மதியழகனின் உதவியோடு என் பாலகுமார் பெய்சிங் மாநகரில் சுற்றுபயணம் செய்கிறார்.

/////////////

Friday, June 29, 2007

BIG FM coming soon to Puducherry

Channel’s RJ hunt on June 30

Likely to be operational from July
No age limit for participants
Full-time and part-timers can apply

Its official … BIG 92.7 FM is coming to Puducherry. Though the date has not been finalised as yet, they will be probably hit the airwaves sometime in July. The station is organising an RJ hunt in Puducherry on June 30 at the Reliance Communications, the WebWorld, at 172, Kamarajar Salai from 10.30 am onwards. One of BIG 92.7 FM’s RJs from Chennai will also be present at the test.
According to a release from BIG 92.7 FM, anybody aspiring to become a radio jockey can come to the place on Saturday. There is no age limit as such, but their voice must be good with clear diction. They must also have good command of spoken Tamil and must be able to connect well with the audience.
A good sense of humour would also be needed.
They are looking for full-time as well as part-timers. Full time RJs will be handling entire programmes on their own and the part-timers, if they are college students they can go to outside assignments.
On Saturday, a voice test would be conducted along with a small aptitude test as to why they like to be an RJ and so on. There would be no written test.
There would be further screening in Chennai after which the selected RJs would be sent for training.
The BIG 92.7 FM network now has 22 operating stations all over the country including in Delhi, Hyderabad, Chennai, Jammu, Srinagar and Aligarh. For more details contact M. Raja Marthandan, corporate communications at phone no: 98415 70091.


////////////////




stories/2007062950650200.htm

Friday, June 22, 2007

புதிய டிஜிட்டல் வானொலி பெட்டி


தலைநகரில் கிடக்கும் புதிய டிஜிட்டல் வானொலி பெட்டி

SONY ICF-SW7600GR
WORLD BAND RADIO
Price: Rs. 12,950.00
FEATURES:- AM(LW/MW/SW)/FM Stereo Reception 10 Key Direct Access Tuning Short Wave Guide Book PLL Quartz Frequency Synthesized Tuning Hold Button Compact Antenna Synchronous Detection Circuitry Auto Scan Tuning/Memory Scan SSB Reception 1KHz Step Tuning 100 Station Memory Presets World Time Clock/Dual Clock
SPECIFICATIONS:- AM (LW/MW/SW)/FM STEREO provides accurate reception with stereo FM capability over a wide range of frequencies from LW and MW(AM) to SW and FM 10 KEY DIRECT ACCESS TUNING lets you capture distant stations directly, with the ease of using a pocket calculator LCD Display provides digital frequency read-out of the selected station Hold Button prevents accidental changes to preset station settings PLL QUARTZ FREQUENCY SYNTHESIZED TUNING is an extremely accurate method of tuning, with optimum stability that reduces drift to a minimum SYNCHRONOUS DETECTION CIRCUITRY reduces fading and annoying "beat" frequency interference from adjacent stations, as well as distortion due to fading in AM reception SSB (Single Side Band) RECEPTION for fine tuning and optimum multi- mode reception with reduced interference on the narrow AM band, for better overall sound 100 STATION MEMORY PRESETS lets you quickly and easily tune into up to 100 stations that you select to be saved in memory AUTO SCAN TUNING/MEMORY SCAN provides professional-type microprocessor-controlled tuning functions to scan -- one at a time -- all 100 memory presets and let you listen for a few seconds before deciding whether to remain on a particular station or let scanning continue 1KHZ STEP TUNING allows fast, precise station reception by tuning at 1kHz intervals DUAL STANDBY FUNCTION lets you set the alarm for two different wake- up times or wake you to two different radio stations WORLD TIME CLOCK/DUAL CLOCK allows you to display the current time at various locations around the globe as well the time where you live Earphone Jack for private listening enjoyment and improved sound clarity in noisy environments DC-In Jack lets you use an optional AC Adaptor to operate the radio Powered By 4 "AA" Batteries for on the go listening anywhere in the world Antennas include built-in ferrite bar antenna for AM and LW, telescoping antenna for FM and SW Signal Circuitry: LW/MW/SW/FM Superheterodyne Frequency Range: FM: 87.6-108MHz, LW/MW/SW: 150-29,999kHz Antenna system: LW/AM: Built-in Ferrite Bar Antenna, SW/FM: Telescoping Antenna Inputs: DC-In (6V) Outputs: Stereo earphone jack, External antenna, Record-out, Tape remote Speaker: 3" (77mm) Power requirements: "AA" x 4 batteries, not incl., AC 120V, 60Hz Weight: 1 lb 5 3/4 oz (615g) w/batteries Dimensions(WxHxD): 7 1/2" x 4 3/4" x 1 1/4", (191 x 118 x 32mm)
/////////////
SONY-ICF-SW7600GR-with-FREE-SHIPPING_
W0QQitemZ110139601897
QQihZ001QQcategoryZ15051QQss
PageNameZWDVWQQrdZ1QQcmdZViewItem


Wednesday, June 20, 2007

உலகின் தலைசிறந்த ரோபோட்டிக்ஸ் விருதைப் பெற்றார் தமிழகப் பெண்மணி

உலக அளவில் ரோபோட்டிக்ஸ் எனப்படும் இயந்திர மனிதனை வடிவமைக்கும் தொழிற்நுட்பத் துறையின் மிக உயர்ந்த விருதான எங்கல்பர்கர் விருது முதல் முறையாக ஒரு பெண்மணிக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழத்தை சேர்ந்தவரும் தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருபவருமான டாக்டர் பாலா கிருஷ்ணமூர்த்திக்கு அவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 25 வருடங்களாக இயந்திர மனிதனை உருவாக்குவதற்கு தேவையான பல வகையான மென்பொருள் மொழிகளை அவர் உருவாக்கியுள்ளார். 1980 களின் தொடக்கம் 1990 ஆம் ஆண்டுகளின் மைய காலம் வரை மருத்துவ துறையில் உதவக் கூடிய வகையில் தன்னிறைவுடன் செயல்படக் கூடிய வகையில் இயந்திர மனிதனின் வடிவமைப்பில் அவர் முக்கிய பங்காற்றியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
தான் வடிவைமைத்துள்ள இந்த இயந்திர மனிதன் மருத்துவமனைகளில் பெரிதும் உதவியாக இருக்கும் என டாக்டர் பாலா கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார். இந்த ரோபோவின் விலை தற்போது 70,000 அமெரிக்க டாலர்கள் அளவில் இருந்தாலும், வணிக ரீதியில் தயாராகும் போது அதன் விலை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
/////////////
Source: http://www.bbc.co.uk/tamil/news/story
/2004/05/040528_tamil_currentaffairs.shtml

Tuesday, May 22, 2007

அன்புடன் ஒலி 96.8

ஒலியில் நடக்கும் அண்மைய நிகழ்ச்சிகள் பற்றி தெரிய வேண்டுமா?இவ்வாரம் ஒலியில் வலம் வரும் நிகழ்ச்சிகள் பற்றி அறிய விருப்பமா?உங்களை போன்ற நேயர்கள் ஒலியை பற்றி என்ன நினைக்கிறார்கள் என கேட்க ஆவலா?ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு அன்புடன் ஒலி நிகழ்ச்சியை கேட்க மறவாதீர்கள்!இந்த நிகழ்ச்சியில் உங்கள் கருத்துக்களும் இடம் பெறலாம்.உங்கள் எண்ணங்களை கடிதம், மின்மடல், தொலைபிரதி வழியாக அனுப்பி வைக்கலாம்.அவற்றை வானொலியில் வாசிக்கவும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.பிரதியை வைத்துக்கொண்டு, கடிதத்தை இந்த முகவரிக்கு அனுப்புங்கள்:

தயாரிப்பாளர்

அன்புடன் ஒலி 96.8

Farrer Road

அஞ்சல் பெட்டி எண் 968

சிங்கப்பூர் 912899

எங்கள் தொலைபிரதி எண் 62565968

சாதனை படைத்துள்ளது பிபிசி

நூறு நாடுகளில் நடத்தப்பட்ட சந்தை தொடர்பான ஆய்வு ஒன்றின்படி பிபிசி செய்திச் சேவையின் சர்வதேச நேயர்களின் அளவு சாதனை மட்டத்தை எட்டியுள்ளது.
பிபிசி நிறுவனத்தின் உலக வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பிரிட்டனுக்கு வெளியே உள்ள நேயர்களுக்கான செய்தி இணையம் ஆகியவற்றை பார்ப்பவர்கள் மற்றும் கேட்பவர்களின் எண்ணிக்கை, கடந்த வருடம் வாரத்துக்கு 21 கோடியாக இருந்து தற்போது வாரத்துக்கு 23.3 கோடியாக அதிகரித்துள்ளது.
பிபிசி உலகசேவை வானொலி கடந்த வருடத்தில் இருந்ததை விட 20 லட்சம் நேயர்களால் அதிகரித்து, 18.3 கோடியை எட்டியுள்ளது.
/////////////

2004/05/040528_tamil_newsbulletin.shtml

Friday, May 18, 2007

நேயர் மன்றம் தொடர்பான கள ஆய்வு பணி

கிளீ......... நேயர்களே ஒரு தகவல் மன்ற தலைவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

கலை........ 2007ம் ஆண்டுக்கான நேயர் மன்ற கள ஆய்வு அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது. மொத்தம் 490 கள ஆய்வு படிவங்களை அனைத்தின்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்ற தலைவர் எஸ் செல்வம் அவர்களுக்கு அனுப்பியுள்ளோம். மாவட்ட மன்ற தலைவர்களோ கிளை மன்ற தலைவர்களோ அனைவரும் தமது மன்ற உறுப்பினர்களின் நிலைமை தொழில் பின்னணி போன்ற தகவல் தெளிவாகவும் நுணுக்கமாகவும் படிவங்களில் பிரப்ப வேண்டும்.

கிளீ.........இது மட்டுமல்ல ஏற்கனவேயுள்ள நேயர் மன்றங்களின் தலைவர்களும் புதிதாக நிறுவப்பட்ட மன்ற தலைவர்களும் நிறுவ போகின்ற பிரதேசத்தின் மன்ற பொறுப்பாளர்களும் நடப்பு கள ஆய்வு பணியில் பங்கு ஆற்ற வேண்டும். ஆகவே இந்த நிகழ்ச்சியை கேட்ட பின் எஸ் செல்வம் அவர்களுடன் தொடர்பு கொண்டு விண்ணப்பம் செய்ய வேண்டும்.

கலை........அவருடன் தொடர்பு கொள்ள வல்ல செல்லிட பேசி எண் 9842038770. இந்த எண்ணை பயன்படுத்தி முயற்சி செய்யுங்கள்.

கிளி.......அவர்களுடன் தொடர்பு கொள்ளும் முகவரி பின் வருமாறு

S.SELVAM
381,BHARATHIYAR STREET
ASHOK NAGAR
LAWSPET,PONDICHERRY 605008
INDIA 印度

கலை.......கீழே இருக்கின்ற நேயர் மன்றம் தொடர்பான கள ஆய்வு படிவம்.

வெளிநாட்டில் சீன வானொலி நிலையத்தின்
நேயர் மன்றம் தொடர்பான கள ஆய்வு
முதலாவது பகுதி:

1. நேயர் மன்றத்தின் பெயர்
எந்த நாட்டின் எந்த பிரதேசத்தை சேர்ந்தது

2. மன்றம் நிறுவப்பட்ட நாள், திங்கள், ஆண்டு

3. மன்றத்தின் தலைவரின் பின்னணி(பெயர், பால், தொழில், வயது, கல்வி தகுதி, தொடர்பு முறை)

4. மன்றத்தின் நோக்கம்

5. மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை

6. உறுப்பினர்களில் ஆண்-பெண் விகிதம்

7. உறுப்பினர்களின் கல்வித் தகுதி

8. உறுப்பினர்களின் வயது விபரம்

(20 வயதிற்கு கீழ், 20-40 வயது, 40-60 வயது, 60 வயதிற்கு மேல்)

9.மன்றத்தின் நிலைமை விளக்கம்

10. மன்றத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டம்

(ஆண்டுக்கு எத்தனை புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது)

11. கூட்டம் அல்லது நடவடிக்கை நடத்தும் நிரந்தர இடம் உண்டா இல்லையா?

12. சீன வானொலியின் நிகழ்ச்சிகளை கேட்க உறுப்பினர்களை அடிக்கடி அணிதிரட்டுவதா?

சீனா மற்றும் சீன வானொலி நிலையத்துடன் சம்பந்தமான நடவடிக்கை மேற்கொள்வதா?

13. மற்ற சர்வதேச வானொலி நிலையங்களின் நிகழ்ச்சிகளை கேட்க உறுப்பினர்களை அடிக்கடி அணிதிரட்டுவதா?

அத்துடன் இந்த நிலையங்களுடன் தொடர்பும் கொள்வதா?

14. மிகவும் விரும்பும் 3 சர்வதேச வானொலி நிலையங்களை குறிப்பிடுக

15. சீன வானொலி நிகழ்ச்சிகளில் மிகவும் விரும்பும் 3 நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுக

16. தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி கேட்பதா?

இரண்டாவது பகுதி:

17.மன்ற உறுப்பினர்கள் சீனா பற்றி எந்த அளவில் அறிந்து கொண்டுள்ளனர்?

A. மிகவும் B. சாதாரணம்
C. குறைவு D. தெரியவில்லை

18. மன்ற உறுப்பினர்கள் தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி மூலம் சீனப் பண்பாட்டை அறிந்து கொள்ள விட்டால் எந்த வடிவத்தில் செயல்படுவது நல்லது?

A. நேரடி கற்பித்தல்
B. வானொலி மூலம் கற்பித்தல்
C. இணையத்தின் மூலம் கற்பித்தல்
D. தொலை காட்சி மூலம் கற்பித்தல்

19. உங்கள் நாட்டு மக்கள் சீனாவின் எந்த செய்தி ஊடகங்களின் நிகழ்ச்சிகளை கேட்கலாம் அல்லது பார்க்கலாம்?

A. தொலைக் காட்சி B. வானொலி
C. செய்தியேடுகள் D. இணையம்

20. நீங்கள் உள்நாட்டிலிருந்து சீனாவின் எந்தெந்த இணைய தளங்களை அடிக்கடி பயன்படுத்துகிறீர்கள்?

A. Sina.com.cn B. yahoo.com
C. sohu.com D. baidu.com
E. Chinabroadcast.cn F. மற்றவை

21. உங்கள் நாட்டு மக்கள் பொதுவாக வானொலி மூலம் எந்த வடிவத்திலான சீனாவின் நிகழ்ச்சிகளை செவிமடுக்க விரும்புகின்றனர்?

A. பொழுது போக்கு நிகழ்ச்சிகள்
B. செய்திகள்
C. பண்பாட்டு நிகழ்ச்சிகள்
D. சீன மொழி கற்பித்தல்
E. மற்றவை

22. உங்கள் நாட்டு மக்கள் சீன மொழியில் எத்தகைய சீன தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்க்க விரும்புகின்றனர்?

A. தொலைகாட்சி நாடகம்
B. திரைப்படம்
C. பொழுத்து போக்கு நிகழ்ச்சிகள்
D. குதூகல கூட்டம்
E. சமூக செய்தி விளக்க திரைப்படம்

23. உங்கள் நாட்டில் சீன மொழி கற்பிக்கும் வகுப்பு உண்டா?

A. மிக அதிகம் B. அதிகம்
C. குறைவு D. மிக குறைவு

24. உங்கள் நாட்டில் சீன மொழி கற்பித்தல் எந்த வடிவத்தில் நடத்தப்படுகின்றது?

A. வீட்டு ஆசிரியர் B. தனியார் பள்ளி
C. பள்ளி பயிற்சி வகுப்பு
D. பள்ளியில் சீன மொழி கற்பித்தல் வகுப்பு

25. வெளிநாட்டில் சீன மொழி கற்பிக்கும் மையத்தை நிறுவுவதில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும்? மூன்று பிரச்சினைகளை குறிப்பிடுக

26. உங்கள் நாட்டுக்கும் சீனாவுக்குமிடையில் வர்த்தகத் தொடர்பு எப்படி?

A. மிக அதிகம்
B. அதிகம்
C. சாதாரணம்
D. குறைவு
E. இல்லை

மூன்றாவது பகுதி

27. எதற்காக நீங்கள் சீன மொழி கற்றுக் கொள்கின்றீர்கள்?

28. சீன மொழி புத்தகம் பெறும் விருப்பம் உங்களுக்கு உண்டா?

29. படிப்பின் மூலம் சீன மொழி தேர்வில் கலந்து கொள்ளும் விருப்பம் உங்களுக்கு உண்டா?

30. உங்கள் மன்றத்திற்கு மொழி கற்பித்தல், கல்வி, மற்றும் பண்பாட்டு பரிமாற்ற அனுபவம் உண்டா?

A. உண்டு B. இல்லை

31. உங்கள் நாட்டில் சீன மொழி கற்பித்தல் வளர்ச்சி பற்றி மன்ற உறுப்பினர்கள் அறிந்து கொண்டுள்ளார்களா?

A. அறிந்து கொள்ளுதல் B. குறைவு
C. இல்லை

உங்கள் மன்ற உறுப்பினர்களுக்குச் சீன மொழி கற்று சீனப் பண்பாட்டை அறிந்து கொள்ளும் ஆர்வம் உண்டா?

A. உண்டு B. இல்லை

32. சீன வானொலி நிலையம் கம்பியூஸியஸ் வகுப்பு நடத்துவது பற்றி மன்ற உறுப்பினர்களுக்குத் தெரியுமா?

A. தெரியும் B. சாதாரணம்
C. தெரியாது

சுயவிருப்பத்துடன் சீன வானொலி நிலையத்துடன் ஒத்துழைத்து வகுப்பு நடத்த மன்றம் விரும்புகின்றதா?

A. விருப்பம் B. விரும்பவில்லை

33. சீன வானொலி நிலையம் சீன அரசின் சீன மொழி பரவல் குழு ஆகியவற்றின் வழிகாட்டலின் கீழ் கற்பிக்கும் வரையறைகளுக்கு இணங்க கம்பியூஸியஸ் வகுப்புடன் தொடர்பற்ற நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது. இதை ஏற்க விருப்பமா?

A. விருப்பம் B. இல்லை

34. மன்றத்திற்கு வலிமையான பொருளாதார ஆற்றலும் நிர்வாக ஆற்றலும் உண்டா?கம்பியூஸியஸ் வகுப்பு நடத்துவதற்கு வீடு மனை மற்றும் நிதி முதலீட்டையும் ஆட்களையும் வழங்க முடியுமா?

A. முடியும் B. முடியாது

குறிப்பு:
மன்றத்தின் பின்னணி பற்றி விபரமாக எழுதிடுக.
மன்றக் கூட்டம் தொடர்பான 2, 3 நிழற்படங்களை அனுப்புக.
வந்து சேர வேண்டிய இறுதி நாள் ஜுலை 10ம் நாள்

sarvadesavanoi


பிபிசி தமிழோசையில் விடைபெற்றார் அன்பரசன்

தமிழோசையில் கடந்த ஆறு ஆண்டு காலத்துக்கும் மேலாக நம்மோடு பணியாற்றி உங்களுக்கு நல்ல தரமான செய்திகளை தருவதில் ஊக்கமுடன் பணியாற்றிய நமது அன்பரசன் இன்றுடன் தமிழோசையிலிருந்து விலகுகிறார்.

அன்பரசன் பிபிசியிலிருந்து விலகவில்லை, பிபிசியின் ஆங்கிலப்பிரிவுக்கு மாற்றலாகியே செல்கிறார்.
நம்மோடு பணியாற்றிய கடந்த ஆறு ஆண்டுகளில், அன்பரசன், அன்றாட தயாரிப்புப் பணிகளை திறம்பட செய்ததோடு மட்டுமல்லாமல், பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளையும் தயாரித்துதந்துள்ளார் என்பதை நேயர்களாகிய நீங்கள் அறிவீர்கள். 2003ல் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள், மற்றும் தென்னாப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியினரின் எதிர்காலம் குறித்த பெட்டகம் , 2004 சுனாமியில் அந்தமான் தீவுகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு, 2005ல் நடந்த இலங்கை ஜனாதிபதி தேர்தல்கள், பின்னர் 2006ல் ஜெனீவாவில் நடந்த இலங்கை சமாதானப் பேச்சுவார்த்தைகள் போன்ற முக்கிய நிகழ்வுகளில் அன்பரசன் தமிழோசைக்காக தயாரித்து தந்த செய்திகள் குறிப்பிடத்தக்கவை.

தமிழோசையிலிருந்து பிரிந்து செல்லும் அன்பரசனுக்கு நமது வாழ்த்துக்கள்.
040528_tamil_currentaffairs.shtml

Tuesday, May 08, 2007

DTH-Radio in Tamil (AIR Chennai)

Time (IST hrs.) Programme
0600-0635 Vadya Vrinda, Classical Tamil Devotional
0635-0645 Thodu Vanam Infor variety
0645-0715 Regional News in Tamil, Magazine Programme
0715-0745 News in Tamil, Magazine programme contd.
0745-0815 Songs from Silver Screen
0815-0945 Ungal Viruppam, Classical Music
0945-1000 Phone in Listeners Choice
1000-1130 Idhu Ungal Choice, Women's Magazine Programme
1130-1300 Vadya Isai-Instrumental Music, Radio on Demand-Film Songs
1300-1345 Instrumental Music, Women's Magazine Programme, Film Songs
1345-1400 Regional News from Trichi, Instrumental Music
1400-1600 Humour Programme, Classical Music
1600-1700 Instrumental Music, Radio On Demand-Film Songs
1700-1900 Melodies Mix, Chat shows with film celebrities
1900-1930 Film Songs, News in Tamil, Instrumental Music
1930-2000 Endrum Iniyavai, Seidhi Kadambam
2000-2100 Kadambam Thematic Film Songs, Listeners Request film songs
2100-2200 Vannakal Anjiyam, Pudhuvaravu
2200-0000 Film Songs of Yesteryears, Radio on Demand - Film Songs
0000-0100 Classical Music/Sound Track Musical Discourse
0100-0220 Evergreen Melodies, Light Classical Music,
0220-0300 Mellisai-Light Music, Instrumental Music
0300-0400 Karnatic Music
0400-0600 Lingering Melodies, Nagaswaram, Non Film Devotional

Technical Information:

I. Receive System Comprises:
. 60-90 cm dish + LNB Converter.
. Set-top Box(STB)- Its output to be connected to TV set.

II. Set Top Box tuning information:
. Satellite-"NSS-6"(95°E).
. Down-link frequency ( GHz)-12.534(H) / 12.647(V) /12.729(V) / 10977(H) / 12688(H)
. Symbol rate-27.5MSPS.

Source: http://www.allindiaradio.gov.in/DTH-Radio/tamil.htm

சர்வதேச வானொலி - JANUARY 2007


Wednesday, April 18, 2007

ஒலிக்கும் மின்னஞ்சல்

'யோகியின் சரிதம்' எனும் புத்தகம் எழுதிய பரஹம்ச யோகானந்தர், விவேகாநந்தர் வாழ்வில் நடந்ததாக ஒரு நிகழ்ச்சியைக் குறிக்கிறார். விவேகாநந்தர் சரித்திரப்புகழ் பெற்ற தனது அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு கப்பல் வழியாக இந்தியா திரும்பும் வழியில் சூயஸ் கால்வாயை நெருங்கும் போது ஏசு நாதர் நிகழ்த்திய குன்றுப் பிரசங்கத்தைக் கேட்டதாக எழுதுகிறார். அதாவது, நமது ஒலி அலைகள் என்றென்றும் காற்றில் மிதந்து கொண்டு இருக்குமாம். 'நெஞ்சம் மட்டும் மறப்பதில்லை போலும், காதும் மறப்பதில்லை!' என்பது பாடம் :-)ஆனால் சாதாரண வாழ்வில் நாம் பேசிய பேச்சுக்கள் பதிவு செய்யப்படாவிடில் மீண்டும் கேட்கமுடியாத வண்ணமே இருக்கின்றன.

பேசிப்பதிவு பெற்ற பேச்சுக்களும் காலத்தை வென்று நிற்கும் எனும் உத்திரவாதமில்லை! பாரதிதாசன், வா.ரா போன்றவர்கள் நிகழ்த்திய வானொலிப் பேச்சுக்கள் பின்னால் வந்த நிறுவாகத்தால் அழிக்கப்பட்டு விட்டதாக 'மணிக்கொடி' சிட்டி சுந்தரராஜன் எழுதுகிறார். அண்ணா நிகழ்த்திய வானொலி உரைகள், அவர் இறந்த போது கலைஞர் நிகழ்த்திய கவிதாஞ்சலி இவைகளை மீண்டும் ஒருமுறை கேட்க வேண்டுமென்ற ஆசை யாருக்குத்தான் வாராது? இது பொது வாழ்வு ஏக்கங்கள். ஆனால், தனிப்பட்ட வாழ்வில் நாம் இழந்துவிட்ட உறவுகளின் குரலை நம்மோடு வைத்துக் கொள்ளக்கூடாதா என்ற ஏக்கம் எவ்வளவு இயல்பானது, ஆறுதல் தருவது. இது இன்று இணையத்தின் மூலம் சாத்தியமாகிறது.

உண்மையில் இணையமெனும் தொழில் நுட்பம் வந்த பிறகு மின்வெளி என்ற சூட்சும உலகம் மானுடத்திற்கு கிடைத்திருக்கிறது. இந்த வெளியில் காலம், இடம், தேசம் போன்றவை பொருள் இழந்து விட்டன. இலத்திரன் வேகத்தில் நடக்கும் செயல்களில் காலம் என்பது அடிபட்டுப் போகிறது. இடம், தேசம் போன்றவை இருப்பதாகவே நாம் உணர்வதில்லை. இணையம் தரும் விர்ச்சுவல் உலகில் கணினித் தொடர்புள்ள எவரும், எப்போது அருகிலேயே இருக்கிறார்கள்.

இப்படிப் பட்ட ஆசாதரணமான தொழில்நுட்பம் இப்போது மின்னஞ்சல் போல் 'ஒலி அஞ்சல்' எனும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மின்னஞ்சலில் நாம் காணும் அத்தனை வசதிகளும் இருப்பதுடன் நமது பேச்சைப் பதிவு செய்து அனுப்பவும் முடிகிறது. யாகூ மெசென்சர், கூகுள் சாட், ஸ்கைபி போன்றவை தராத வசதிகளா? என்று கேட்கலாம். உண்மைதான், அவை ஒலி, காட்சி நிகழ்கின்ற அதே தருணத்தில் அவைகளை நமக்களிக்கும் வசதிகளை இலவசமாகத் தருகின்றன. ஆயினும் பேசி முடித்தவுடன், எல்லாம் ஏசுவின் குன்றுப் பிரசங்கமாகிவிடும்! மீட்க முடியாது. [இதெற்கென தனியான செயலிகள் கொண்டு பதிவு செய்தால் ஒழிய]. மேலும் யகூ சொல்கின்ற ஒலி அஞ்சல் (Voice Mail) என்பது வெறும் ஒலிப்பதிவு மட்டுமே.

வீட்டிலுள்ள தொலைபேசி/ஒலிப்பதிவான் (answering machine) போன்றே செயல்படுகிறது. ஒலிப்பதிவு செய்த பின் அனுப்புவதை தவிர பிற வசதிகள் கிடையாது. அனுப்பிய நகல் கூட நமக்குக் கிடைக்காது! ஆனால், ஒலி அஞ்சல் என்பது அப்படியல்ல. அது கடிதம் எழுதுவது போன்றது. ஒருவருக்கு கடிதம் எழுத வேண்டுமென்ற உணர்வு வந்தவுடன் கையில் பேனாவை வைத்துக் கொண்டு எழுதுவது போல், இதில் கணினியில் நம் பேச்சைக் கடிதம் போல் பாவித்துப் பேசி அனுப்ப வேண்டியது. கணினி 'ஆன் லைன்' என்று வரும் போது நமது பேச்சு குறிப்பிட்ட நபருக்கு அனுப்பப்படும்.

இப்படிச் செய்வதில் பல அனுகூலங்களுண்டு.

1. நமது குரல், நமக்கு வேண்டப்பட்டவர் குரல் எப்போதும் நமக்கு அருகிலேயே இருக்கும். ஒரே குடும்பத்தில் இருக்கும் போது இதன் அவசியம் புரியாது, ஆனால் வெளிநாட்டில் வசிக்கும் போது ஒலி அஞ்சலுக்கு 'emotional appeal' அதிகம்.

2. எப்போதும், எல்லோருடனும் பேச முடியாது. காலம், தேசம் போன்றவை குறுக்கிடலாம். அதனால், பேச வேண்டுமென்று தோன்றும் போது பேசி, பின்னால் அனுப்பி வைக்க முடியும். மேலும், சில உணர்வுகளை நேரில் பார்க்கும் போதோ, பேசும் போதோ கூடச் சொல்ல முடிவதில்லை ('சொல்லத்தான் நினைக்கிறேன்...') அவைகளை நாம் சொல்ல நினைக்கும் பாவத்தில் பேசி ஒலிப்பதிவாக அனுப்பி வைக்க முடியும்.

3. எவ்வளவுதான் எழுதினாலும், பேச்சுக்கு இருக்கும் சக்தி எழுத்திற்குக் கிடையாது. பிறந்தவுடன், ஏன் பிறக்கும் முன்னமே, கேட்கும் ஒலிதான் நம் உணர்வில் ஒட்டி நிற்கிறது. எழுத்து என்பது பின்னால் கற்றதே. எனவே எழுத்தறிவில்லாதவர் கூட இந்த தொழில்நுட்பத்தை திறமையாகப் பயன்படுத்தலாம். உதாரணமாக, இந்த தொழில்நுட்பத்தை மிக நூதன முறையில் திருநெல்வேலி மாவட்ட அதிகாரி டாக்டர். ராதாகிருஷ்ணன் பயன்படுத்திய விதம் நினைவு கொள்ளத்தக்கது. அதாவது, எழுதப்படிக்கத் தெரியாத கிராமவாசிகள் கூட ஒலிப்பதிவின் மூலம் தங்கள் குறைகளை மாவட்ட அதிகாரிக்கு அனுப்பி வைக்கலாம் எனும் ஒரு சம்பிரதாயத்தை அவர் அமுல் படுத்தியுள்ளார்.

4. நமது இலக்கியங்கள் எல்லாம் பேச்சை அடிப்படையாகக் கொண்டவையே. தமிழ் மொழி இசையுடன் இயைந்து போவது. செவ்விலக்கிலக்கியங்கள் இந்த சூட்சுமங்களைப் புரிந்து கொண்டிருப்பதாலேயே காலம் கடந்து நிற்கின்றன. இப்படிப்பட்ட தமிழ் இலக்கியச் செல்வங்களை ஒலி வடிவிலும் நாம் காக்க முடியும். உதாரணமாக, ஒரு நல்ல உரையைப் பேச்சுப் பதிவாக்கி முதுசொம் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கலாம்! அங்கு அது நிரந்தரப்படுத்தப்படும்.

பிற அனுகூலங்களைப் பேசுமுன், இந்த ஒலி அஞ்சல் முறையை எப்படி நாம் பெறுவது என்று விளக்கிவிடுகிறேன். ஒலி நறுக்கு (VoiceSnap) எனும் சென்னை/அமெரிக்க நிறுவனம் இந்த வசதியை இலவசமாக வழங்குகிறது. இவர்களது வலைத்தளமான http://www.voicesnap.com சென்று உங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளுங்கள். பதிவு செய்யும் போது வேலை செய்யும் ஒரு மின்னஞ்சல் முகவரியைத் தரவேண்டும். அங்கு உங்கள் கடவுச் சொல் அனுப்பி வைக்கப்படும்.

நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் முகவரியே உங்கள் ஒலி அஞ்சல் முகவரியாகவும் அவர்கள் வழங்கும் செயலியில் பயன்படும். எனவே, பதிவு செய்த பின் அவர்கள் இலவசமாக வழங்கும் செயலியை (மென்பொருளை) இறக்கம் செய்து, உங்கள் கணினியில் நிருவி விடுங்கள். அந்தச் செயலியை நீங்கள் இயக்கியவுடன் அது உங்கள் ஒலி அஞ்சல் முகவரி, கடவுச் சொல் இவைகளைக் கேட்கும். அவைகளை அளித்து உட்சென்றால் நீங்கள் ஒலிப்பதிவு செய்து மகிழலாம். ஆனால், இது ஆங்கிலத்தில் இயங்குவதால் அடிப்படை ஆங்கில அறிவு தேவை. சில எளிய வகையில் இதை ஆங்கிலம் அறியாதோரும் பழகும் வகை செய்ய முடியும். இதுவொன்றும் கம்ப சூத்திரமல்ல. பதிவு செய்யும் போது உங்கள் தாய்மொழி எதுவென்று மறக்காமல் குறிப்பிடுங்கள். அதன் மூலமே ஒலி நறுக்கு (VoiceSnap) வழங்கும் சில பிற வசதிகளை அனுபவிக்க முடியும்.

உதாரணமாக, ஒலி நறுக்கு (VoiceSnap) நிறுவனம், குமுதம் பத்திரிக்கையுடன் சேர்ந்து சினிமா நடிகைகளுடன் நீங்கள் உரையாடும் வாய்ப்பைத் தருகிறது. உங்கள் கேள்விகளுக்கு நடிக, நடிகையர் பதிலளிகின்றனர். மேலும் கனடாவிலிருந்து வெளிவரும் ஒலிFM எனும் வானொலி ஒலிஅஞ்சல் முறையைப் யன்படுத்தி நேயர் விருப்பத்தைப் பதிவு செய்து ஒலியாக்குகிறது.நாங்கள் செயல்படுத்தும் முதுசொம் காப்பகம் ஒலி நறுக்கு (VoiceSnap) தரும் வசதிகளைப் பயன் படுத்தி தமிழை எப்படி மேலும் வளம் பெறச்செய்யலாமென யோசித்து வருகிறது.

நிறையத் தமிழர்கள் இவ்வசதியைப் பயன் படுத்தும் போது,

1. தமிழில் செயல்படும் ஒரு ஒலியாடற்குழுவை உருவாக்கலாம். இப்போதுள்ள மடலாடற்குழுக்கள் (eMail forums) போலவே இது செயல்படும், ஆனால் அவரவர் குரலில். இதற்கென 'தமிழ்குயில்' எனும் ஒரு அமைப்பை உருவாக்கி வருகிறோம். இதுவே தமிழின் முதல் ஒலியாடற்குழுவாக அமையும்.

2. ஒலி அஞ்சல் மூலமாக தமிழ் கொண்டிருக்கும் அளப்பரிய முதுசொம் (முந்தைய சொத்து, பாரம்பரியச் சொத்து) என்னவென்று தமிழ்கூறும் நல்லுகம் (tamil diaspora) அறியச் செய்யலாம். உதாரணமாக, ஒலி அஞ்சல் மூலமாக 'திருலோக சீதாராம்' எனும் தமிழ்க் கவிஞன் பற்றி ஸ்ரீரங்கம் V.மோகனரங்கன் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவை முதுசொம் காப்பகம் புதிதாகத் துவங்கியுள்ள 'முதுசொம்' எனும் வலைப்பதிவில் இட்டிருக்கிறது.'மாகவிஞன் திருலோகம்' எனும் பேச்சு'இருள் முயக்கு' எனும் அவரது கவிதை கேட்கக் கிடைக்கிறது.

3. தமிழின் உண்மையான வளம், அதன் உயிர் 'பேச்சு வழக்கில்' இருக்கிறது. இந்தப் பேச்சு வழக்கு தன்னுள் காலம் கடந்த தமிழ் கலைச் சொற்களை வைத்திருக்கிறது. இன்றைய தலைமுறையின் அறியாமை இந்தப் பேச்சு வழக்குகளை அறியாமல் இருப்பதே. எனவே 'தமிழ் வட்டார வழக்குகள்' 'வீட்டுப் பேச்சு' இவைகளை ஒலி அஞ்சல் மூலமாக பதிவு செய்து பாதுகாக்க வேண்டுமென்ற ஆவலிலுள்ளோம். இது அதிகப்படியாக தமிழர்கள் இத்திட்டத்தில் பங்கேற்பதின் மூலமே செயற்படும். வட்டாரத் தமிழ் அகராதிகளை ஒலிவடிவில் தயாரிக்க முடியும்.

4. வெளிநாட்டில் வாழும் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதென்பது பெரிய சவால். போதிய பாடத்திட்டம் இல்லாமை, போதிய நல் ஆசிரியர்கள் இல்லாமை இவை பெறும் தடைகள். இவைகளை ஒலி அஞ்சல் மூலமாக நிவர்த்திக்க முடியும். ஒரு 'தொலைத்தூரக் கல்வி' முறையாக ஒலி அஞ்சலைப் பயன் படுத்த முடியும். 'தமிழ் குயில்' அமைப்பிம் மூலமாக ஆர்வமுள்ள தமிழ் ஆசிரியர்கள் தமிழ் பாடம் சொல்லித் தரலாம்.

5. ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்கள், தாங்கள் பெற்ற ஞானத்தை என்றும் அழியாத வண்ணம் முதுசொம் காப்பகத்தில் ஒலி அஞ்சல் மூலமாக இடலாம். உதாரணமாக, தமிழ் வைத்தியமுறைகள் பற்றி முனைவர்.இரா.வாசுதேவன் அவர்கள் வழங்கியுள்ள உரைகள் இப்படி சேமிக்கப்பட்டுள்ளன. இது போன்ற உரைகளை மற்றோரும் அனுப்பி வைத்தால் சேகரித்து எல்லோரும் பயன்பெறும் வகையில் செய்ய முடியும். உதாரணமாக, சங்கத் தமிழ் பற்றி லண்டனில் வாழும் திரு.நடராஜன் அவர்கள் ஆற்றிய உரைகள் முதுசொம் காப்பகத்தில் உள்ளன

6. முன்பள்ளிச் சிறார்களுக்கு (கிண்டர்கார்டன்) தமிழ் பெண்கள் எளிய தமிழ் பாட்டுக்கள் (ரைம்ஸ்) சொல்லித் தரலாம்.

7. சமையற் குறிப்புகள் வழங்கலாம்.

8. ஒரு தமிழ் இலக்கிய படைப்பாளி தனது ஆக்கத்தை தன் குரலிலேயே பதிவு செய்து நிரந்தரப் படுத்தலாம். உதாரணமாக, பாரதி இனிமையாக தனது பாடல்களைப் பாடுவார் என்று கேள்விப் பட்டிருக்கிறோம், அவர் இப்போது இருந்திருந்தால் அவர் குரலிலேயே ஒலிப்பதிவாக்கியிருக்கலாம். எழுத்தாளர் ஜெயகாந்தன் பாரதியின் பாடல்களைத் திறமையுடன் சொல்லத் தக்கவர் என்று நண்பர்கள் சொல்லக் கேள்வி. அவரது பாரதி பக்தியை இப்படி ஒலிப்பதிவாக்கி நிரந்தரப்படுத்தலாம்.இப்படி எத்தனையோ வகையில் தமிழ் ஒலி அஞ்சல் நமக்கு பயன்பட உள்ளது. இது பரவலாகும் போது தமிழ் வளம் பெரும் என்பது உறுதி.

முதற்பதிவு: திசைகள் மின்னிதழ்

பி.பி.சி பணிபுரிந்த திரு.சந்தானம் சுவாமிநாதன் பேட்டி

திரு.சந்தானம் சுவாமிநாதன் மதுரையைச் சேர்ந்தவர். தமிழகத்தில் தினமணி முதலிய பத்திரிக்கைகளில் பணியாற்றிய பின் பிரித்தானிய ஒலிபரப்பு ஸ்தாபனத்தில் (பி.பி.சி) பணிபுரிய லண்டன் சென்றவர், தற்போது அப்பணிகளை முடித்துக் கொண்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிற்றுவிக்கிறார். நல்ல தமிழ்ப் புலமையும், ஆராய்ச்சித் திறனும் கொண்ட சுவாமிநாதனை பேட்டி கண்டு பல அரிய கட்டுரைகளை இங்கு அளிக்கிறார் சுபாஷினி கனகசுந்தரம். கேட்டு மகிழுங்கள்

Tuesday, March 13, 2007

சர்வதேச வானொலி - பிப்ரவரி 2007






இதழை படிக்க இங்கே சொடுக்கவும்