Monday, December 31, 2007

வேரித்தாஸ் தமிழ்பணி நேயர் சந்திப்பு - 2008

நேயர் மன்றத் தலைவர்கள் சந்திப்பு கூட்டம் வரும் 5 ஜனவரி 2008 காலை 10 மணியளவில் சென்னை சாந்தோம் கலைத்தொடர்பு நிலையத்தில் திரு. டென்னிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. சர்வதேச வானொலிகளைக் கேட்கும் அனைத்து நேயர் மன்றத் தலைவர்களும் இதில் கலந்து கொள்ள வேண்டி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வழித்தட வரைபடம்: http://wikimapia.org/#lat=13.038927&lon=
80.266113&z=17&l=0&m=s&v=2

சென்னையில் நடைபெற்ற பைப்ஸ் கேம்ப்

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பைப்ஸ் கேம்-பில் (Pipes Camp) வண்ணை ராஜாவுடன் நான். நடுவில் பாலாஜி. நன்றி: சீனிவாசன் http://coolsrini.blogspot.com/2007/12/my-visit-to-pipescamp.html

Friday, December 28, 2007

பழமையான கிராம்போன்கள்

சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் 200 ஆண்டுகள் பழமையான புத்தகங்கள் (1804 ஆண்டு முதல் பதிப்பிக்கப்பட்டவை) பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு தற்பொழுது பழமையான கிராம்போன்கள் மற்றும் பழையத் திரைப்படப் பாடல் புத்தகங்கள் பொதுமக்கள் பார்வைக்காக வரும் 4 ஜனவரி 2008 வரை வைக்கப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரியில் இரண்டு புதிய பண்பலை வானொலிகள்

கடந்த வாரத்தில் பாண்டிச்சேரியில் இரண்டு புதிய பண்பலை வானொலிகள் தொடங்கப்பட்டுள்ளது. ரிலயன்ஸ் குழுமத்தின் பிக் எப்.எம் தனது 41-ஆவது நிலையத்தை இங்கு தொடங்கியுள்ளது. அதே போன்று தினத் தந்தி குழுமத்தின் ஹலோ எப்.எம்-மும் தனது ஆறாவது நிலையத்தை இங்கு தொடங்கியுள்ளது. தற்சமயம் பாண்டிச்சேரியில் சூரியன் உட்பட மூன்று தனியார் பண்பலை வானொலிகள் செயல்பட்டு வருகின்றன. - தகவல்: சர்வதேச வானொலி மாத இதழ்.

Thursday, December 20, 2007

பிபிசி உலக சேவைக்கு வயது 75

பிபிசியின் உலக சேவை, சிறப்பு நிகழ்சிகளுடன் 19-12-2007 அன்று தனது 75 ஆவது பிறந்த நாளை கொண்டாடியது.
இதே நாளில் 1932 ஆம் ஆண்டில் உலக சேவையானது எம்பையர் சர்வீஸ் என்று அப்போது அழைக்கப்பட்ட பெயரில் லண்டனில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்துக்கும் தனது முதல் ஒலிபரப்பை செய்தது.
தற்போது உலக சேவை 33 மொழிகளில் ஒலிபரப்பை மேற்கொண்டு வருகிறது.
இச்சேவையை வாராந்திரம் 18 கோடி மக்கள் கேட்கின்றனர்.
இதனையொட்டி கல்வியாளர்கள் மற்றும் இதழியல் நோக்கர்களின் கருத்துக்களை கீழ்கண்ட தொடுப்புப் பக்கத்தில். http://www.bbc.co.uk/tamil/highlights/story/
2007/12/071214_75thanniversary.shtml
நன்றி: பிபிசி தமிழோசை

Monday, December 17, 2007

பவள விழா ஆண்டில் பிபிசி உலக சேவை

பிபிசி உலக சேவை வானொலி இவ்வாண்டு 75ஆம் அகவை காண்கிறது. உலக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள் பற்றி பிபிசி உலக சேவையில் வெளியான ஒலிக் கீற்றுக்கள் அடங்கிய சிறப்புத் தொடர்.

தொடர் அறிமுகம்
இங்கிலாந்து மன்னர் எட்வர்ட்டின் ஒலிக்கீற்று

Wednesday, December 05, 2007

ஒலிம்பிக் போட்டிக்கான சிறப்பு இணைய தளம்


சீன வானொலி பொது அறிவுப் போட்டி கேள்விகள்


2008-பெய்ஜிங் ஒலிம்பிக் எனும் பொது அறிவுப் போட்டி
கவனத்திற்கு: விடைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், முந்தைய கட்டுரையை வாசித்து பார்க்கலாம்.


1.பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் இலக்கு என்ன?
A. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை தனிச்சிறப்புடைய உயர் தர ஒலிம்பிக்காக நடத்துவது. B. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டியை இணக்கமான, சிறப்பான ஒலிம்பிக்காக நடத்துவது. 2.பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி எப்போது துவங்கும், எப்போது முடிவடையும்?
A. 2008ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 8ம் நாள் முதல், 2008ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 24ம் நாள் வரை. B. 2008ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15ம் நாள் முதல், 2008ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 30ம் நாள் வரை.

3.பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முழக்கம் என்ன?
A. பசுமை ஒலிம்பிக், பண்பாட்டு ஒலிம்பிக், அறிவியல் தொழில் நுட்ப ஒலிம்பிக் B. ஒரே உலகம், ஒரே கனவு

4.பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 5 Fuwa பொம்மைகளின் பெயர்கள் என்ன?
A. நான்நான், துங்துங், ஜுஜு, பெய்பெய், ஜிங்ஜிங் B. பெய்பெய், ஜிங்ஜிங், ஹுவான்ஹுவான், யிங்யிங், நீநீ

5.பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு எத்தனை விளையாட்டு அரங்குகளும் திடல்களும் தேவைப்படுகின்றன?
A. 37 விளையாட்டு அரங்குகள் மற்றும் திடல்கள். B. 40 விளையாட்டு அரங்குகள் மற்றும் திடல்கள்.

6.துவக்க விழாவும் நிறைவு விழாவும் நடைபெறும் தேசிய விளையாட்டு அரங்கின் மறு பெயர் என்ன?
A. பறவைக் கூடு B. நீர்க்கன சதுரம்

7.பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வேறு 6 நகரங்களின் பெயர்கள் என்ன?
A. சென் யாங், சுங்ஜிங், குய்யாங், சிங்தௌ, சியு சோ, ஹாங்காங் B. தியேன் ஜின், சின் குவான் தௌ, ஷாங்காய், சென் யாங், சிங்தௌ, ஹாங்காங்

8.ஹாங்காங்கில் எந்த விளையாட்டுப் போட்டி நடத்தப்படும்?
A. குதிரை ஏற்றம் B. குத்துச் சண்டை


விளையாட்டு விதிகள்:
போட்டியில் மொத்தம் 8 வினாக்கள் உள்ளன. ஒவ்வொரு வினாவுக்கு ஒரு விடையே சரியானது. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து சொடுக்கவும்கட்டுரைகளின் தலைப்புகள்:





குறிப்பு:பரிசு அனுப்ப வேண்டிய பெயர், தொடர்பு முகவரி ஆகிய விபரங்களைத் தெளிவாகக் குறிப்பிடுங்கள்.

பாண்டிச்சேரியில் சூரியன் எப்.எம் "எஸ் எப்.எம்" ஆனது

பாண்டிச்சேரியில் "எஸ் எப்.எம்" தனது ஒலிபரப்பினை கடந்த 04 டிசம்பர் 2007 அன்று 93.5 மெ.ஹெ-சில் தொடங்கியது. தற்சமயம் சூரியன் குழுமம் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய ஐந்து இடங்களில் செயல்பட்டு வருகிறது. பாண்டிச்சேரியில் தொடங்கப்பட்ட முதல் தனியார் வானொலி என்ற பெருமையை இது தட்டிச்செல்கிறது.

Sun TV Network's FM station 93.5 SFM is all set to launch in Pondicherry on 4 December through its subsidiary Kal Radio. The programmes in the FM station will cater to audience of all age groups. With the launch in Pondicherry, SFM will be operational in 14 stations. It is already available in Chennai, Coimbatore, Tirunelveli, Visakhapatnam, Bangalore, Hyderabad, Jaipur, Bhubaneshwar, Tirupati, Madurai, Tuticorin, Lucknow and Bhopal. It will roll out 31 more stations to take the total number of station to 45 across India.

2008-பெய்ஜிங் ஒலிம்பிக் எனும் பொது அறிவுப் போட்டி

போட்டி பற்றி

29வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி 2008ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது ஒலிம்பிக் எழுச்சியைப் பிரச்சாரம் செய்து, உள்நாட்டு வெளிநாட்டு நேயர்களை 2008 ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் பங்கேற்கச் செய்யும் வகையில், 2007ம் ஆண்டு நவம்பர் முதலாம் நாள் தொடக்கம், சீன வானொலி நிலையம் பெய்ஜிங் ஒலிம்பிக் எனும் பொது அறிவுப் போட்டியை நடத்துகின்றது. இந்தப் போட்டி 6 திங்கள் காலம் நீடிக்கும். இது பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் பெரும் ஆதரவை பெற்றுள்ளது.


விளையாட்டில் ஈடுபட்டு அதிக பரிசுகள் பெறலாம்.ஒரு வேளை நீங்கள் கூட சிறப்புப் பரிசு பெறும் நபராக மாறலாம்.




விளையாட்டின் விதிகள்


இவ்விளையாட்டில் Fu Wa பொம்மை புதிர்கள், இணைய வினாவிடை, என் மனதில் 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் ஆகிய 3 பகுதிகள் உள்ளன.புதிர்கள் பகுதியை நிறைவேற்றியப் பின் தான், இணைய வினாவிடைப் போட்டியில் கலந்து கொள்ள முடியும். 8 வினாக்களுக்கு சரியான விடைகள் அளித்து, ஒலிம்பிக் பற்றிய கருத்துக்களை எழுதிய நண்பர்களுக்கு முதல் பரிசு பெறும் வாய்ப்புண்டு. போட்டிக்களுக்கு முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசுப் பெற்றவர்களிடையில் சிறப்புப் பரிசு பெறுவோர் தேர்ந்தெடுக்கப்படுவர்.போட்டிக் காலம் :2007ம் ஆண்டு நவம்பர் திங்கள் முதல் நாள் – 2008ம் ஆண்டு மே திங்கள் முதல் நாள்பரிசுகள்:சிறப்புப் பரிசு பெறுவோர் அழைப்பின் பேரில் 2008ம் ஆண்டு ஜுன் திங்களில் பெய்ஜிங்கில் சிறப்புப் பயணம் மேற்கொள்ளலாம். ஒலிம்பிக் விளையாட்டு அரங்குகள், திடல்கள் ஆகியவற்றைச் சுற்றிப்பார்த்து, புகழ்பெற்ற சீன விளையாட்டு வீரர்களைச் சந்தித்து மகிழலாம். இதர பரிசுகள் பெறுவோர்களுக்குச் சீன வானொலி நிலையத்தின் நினைவுப் பொருட்கள் வழங்கப்படும். தங்களின் விவரமான தொடர்பு தகவல்களை குறிப்பிடுங்கள்.பரிசுப் பெறுவோரின் பெயர் பட்டியல் சீன வானொலி நிலையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.சிறப்பு விளக்கம் : பரிசுகளைத் தீர்மானிக்கும் உரிமை சீன வானொலிக்குரியது


நடத்தும் தரப்பு: சீன வானொலி நிலையம்

ஆதரவு தரப்பு : 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக்

குழுபொறுப்பு : CRI ONLINE