Sunday, December 31, 2017

மார்க்கோனி ரேடியோ இண்டர்நேசனல்

மார்க்கோனி ரேடியோ இண்டர்நேசனிலின் இந்த வருடத்தின் கடைசி ஒலிபரப்பு

Please be advised that Marconi Radio International (MRI) will be on the air today Sunday, 31 December 2017 as follows:
10.30-12.30 and 13.15-15.15 UTC. The frequency is 7720 kHz (USB mode). Reception reports to this E-mail address: 
marconiradiointernational (at) gmail.com
Last but not least, we need your help! If you are a DX blogger, or use social networks, please post an announcement on your own blog and/or Facebook or send out a tweet. You can also forward this message to a friend.
Via Manuel Méndez, Lugo, Spain

Saturday, December 30, 2017

பேரிடர் காலத்தில் ஹாம் வானொலி

பேரிடர் காலத்தில் ஹாம் வானொலியினர் இணைந்து பணியாற்ற வேண்டிய துறைகள்

1.பிரதமர் அலுவலகம் 

2.முதல்வர்  அலுவலகம்

3.துணைமுதல்வர் அலுவலகம்

4.ஆளுநர் அலுவலகம் 

5.மீன் வளத்துறை அமைச்சர் அலுவலகம்

6.பாதுகாப்பு துறை அமைச்சர் அலுவலகம் 

7.கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் அலுவலகம் 

8.மத்திய அரசு

9.தமிழக மாநில அரசு

10.இந்திய வானிலை ஆய்வு மையம்

11.சென்னை வானிலை அறிவிப்பு மையம்

12.Tamil Nadu - National Disaster Management Authority

13.National Disaster Management Authority, India

14.Coastal Security Group Tamil Nadu

15.இந்திய கப்பற்படை 

16.தமிழக ஊடகம் (R.K.நகர் தேர்தல் பக்கம் அதிகம் கவனம் செலுத்தியது)

17.The Indian Mission Control Centre (INMCC)

18.Maritime Rescue Coordination Centres (MRCC)

19.Search and Rescue Points of Contact (SPOC)

20.International Maritime Rescue Federation

21.National Disaster Management Authority: Home

22.The National Disaster Response Force (NDRF)

23.National Cyclone Risk Mitigation Project (NCRMP)

24.Ministry of Defence

25.Ministry of Food Processing Industries

26.National Fisheries Development Board
nfdb.gov.in/


ஏற்காடு ஹாம் சந்திப்பு 2018

ஹாம் வானொலி நேயர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏறகாட்டில் சந்திப்பது வழக்கம். அந்த சந்திப்பின் தொடர்ச்சியாக 2018-ஆம் ஆண்டிற்கான சந்திப்பு 25 மார்ச் 2018 அன்று குழந்தை இயேசு (Infant Jesus) பள்ளியில் நடைபெற உள்ளது. அனைத்து வானொலி நேயர்களையும் அன்புடன் அழைக்கிறது டி.சி.டி நெட்.

TCD EYEBALL MEET is scheduled on 25th March 2018 Sunday.  Venue: Infant Jesus School,Lady's Seat Road, Yercaud.  All are cordially invited to join us. You are requested to register through the link given below.*                  


TCD Team
For any query, contact
Subbu          VU2ZUB  Mobile: 7760507999      
Kannan       VU3PCP   Mobile: 9943879349
Kalyan         VU3LLL    Mobile: 9942128326
Chellappan VU2BFO  Mobile:  9443934141

For accommodation please contact 
Mr.Ajith , Yercaud
Mob: 09345262672 
Via Lion Vijayan Sadayappa

Thursday, November 09, 2017

பேரிடர் காலங்களில் உதவும் ஹாம் வானொலி

ஹாம் வானொலித் தொடர்பான புத்தகங்களின் வரிசையில் இரண்டாவது புத்தகமான “பேரிடர் காலங்களில் உதவும் ஹாம் வானொலி” வரும் 13 நவம்பர் 2017 (மாலை 4.30) அன்று “பொதுசேவை ஒலிபரப்பு நாளை (Nov 12)” ஒட்டி அகில இந்திய வானொலி, சென்னை பல்தட பதிவு அரங்கில் வெளியிடப்பட உள்ளது.  (நிகழ்ச்சி ஏற்பாடு முனைவர். வெ. நல்லதம்பி, எஸ்.எஸ்.பாண்டியன், இந்திய ஒலி ஒளிபரப்பாளர் மன்றம், சென்னை)


Wednesday, October 18, 2017

புதிய பண்பலை வானொலி நிலையங்கள்

அகில இந்திய வானொலியால் வடகிழக்கு மாநிலங்களில்  அக்டோபர் 2, 2017ல் தொடங்கப்பட்டுள்ள புதிய பண்பலை வானொலி நிலையங்கள்.

The following stations/ channels of All India Radio in North East India were inaugurated on 2 Oct 2017:

Assam:
Goalpara 102.6 MHz 1 kW
Longtherai 102.5 MHz 5 kW (Dhalai Dist)
Lumding 101.5 MHz 1 kW
Nutan Bazar101.2 MHz 1 kW (Cachar Dist)

Manipur:
Ukhrul-100.5 MHz 1 kW

Meghalaya:
Cherrapunji 102.0 MHz 1 kW
Tura 101.7 MHz 5 kW

Via Jose Jacob, VU2JOS

Sent from Yahoo Mail for iPhone

அனைத்துலக வானொலிகளின் சிற்றலைவரிசைகள்


ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறையும் அனைத்துலக வானொலிகளின் சிற்றலைவரிசைகள் மாற்றி அமைக்கப்படும். வரும் அக்டோபர் 29 முதல் இந்த ஆண்டுக்கான b17 பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

The B17 Radio schedules have been published online by the HFCC today:
 
http://www.hfcc.org/data/b17/index.phtml
 
Note: Schedules are still subject to change as the season B17 has not started yet
 
(B17 starts on Sunday 29th October)

Sent from Yahoo Mail for iPhone

Monday, August 28, 2017

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 18

 'Dina Ethal' the Tamil newspaper carrying the 18th part of "Ham Radio for Youth" article. In this weekly column we focused on Ham Club activities, Vandu Net website review, "How to build a Transistor" book review, Review on "HamSphere 4.0 Mobile" android app and more!

'தின இதழ்' நாளிதழில் "இளைஞர்களுக்கான ஹாம் வானொலி" தொடரின் 18ஆவது பகுதியில் ஹாம் வானொலி மன்றங்களின் செயல்பாடுகள், வண்டுநெட் இணையதளத்தின் விபரங்கள், ரூ.12/- க்கு விற்பனைக்கு கிடைக்கும் "டிரான்சிஸ்டர் செய்யும் முறை" புத்தகத்தின் அறிமுகம், ஆண்டிராய்டில் கிடைக்கும் இலவச ஹாம் செயலியான HamSphere 4.0 Mobile எனப் பல்வேறு தகவல்களுடன் வெளிவந்துள்ளது. (நன்றி: வேலாயுதம், சுரேஷ்)


Monday, August 21, 2017

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 17

'Dina Ethal' the Tamil newspaper carrying the 17th part of "Ham Radio for Youth" article. In this weekly column we focused on Ham Clubs, Hamfest 2017, "Radio" book review, Review on "Track Sats" android app and more!
'தின இதழ்' நாளிதழில் "இளைஞர்களுக்கான ஹாம் வானொலி" தொடரின் 17ஆவது பகுதியில் ஹாம் வானொலி மன்றங்கள், 2017 டிசம்பரில் கொல்கத்தாவில் நடக்கவுள்ள ஹாம் வானொலி திருவிழா பற்றியும், துரை.முனிரத்தினம் எழுதிய "வானொலி" புத்தகத்தின் அறிமுகம், ஆண்டிராய்டில் கிடைக்கும் இலவச ஹாம் செயலியான Track Sats எனப் பல்வேறு தகவல்களுடன் வெளிவந்துள்ளது. (நன்றி: வேலாயுதம், சுரேஷ்)


Monday, August 14, 2017

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 16

'Dina Ethal' the Tamil newspaper carrying the 16th part of "Ham Radio for Youth" article. In this week column we focused on noise, different types of radios, noise cancellation software, "The World of Ham Radio" book review, Review on Pocket Prefix Plus android app and more!
இன்றைய 'தின இதழ்' நாளிதழில் "இளைஞர்களுக்கான ஹாம் வானொலி" தொடரின் 16ஆவது பகுதியில் வானொலி இரைச்சல், வானொலி வகைகள்போன்றவை பற்றியும், ஹாம் புத்தகம், ஆண்டிராய்டில் கிடைக்கும் இலவச ஹாம் செயலி எனப் பல்வேறு தகவல்களுடன் வெளிவந்துள்ளது. (நன்றி: வேலாயுதம், சுரேஷ்)

Monday, August 07, 2017

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 15

 'Dina Ethal' the Tamil newspaper carrying the 15th part of "Ham Radio for Youth" article. In this week column we focused on propagation, review on A17 (http://www.geocities.jp/binewsjp) website, "The Radio Amatures Handbook" book review, HamGPS android app review and more!

'தின இதழ்' நாளிதழில் "இளைஞர்களுக்கான ஹாம் வானொலி" தொடரின் 15ஆவது பகுதியில் அலைபரவல், வெப்பமண்டல ஒலிபரப்பு போன்றவை பற்றியும், இலவசமாக கிடைக்கும் ஹாம் புத்தகம், ஆண்டிராய்டில் கிடைக்கும் இலவச ஹாம் ஜிபிஎஸ் செயலி எனப் பல்வேறு தகவல்களுடன் வெளிவந்துள்ளது. (நன்றி: வேலாயுதம், சுரேஷ்)


Monday, July 31, 2017

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 14

'Dina Ethal' the Tamil newspaper carrying the 14th part of "Ham Radio for Youth" article. In this week column we focused on modulation, mode and repeaters, "RTL-SDR" book review, RF Analyzer android app review and more!
இன்றைய 'தின இதழ்' நாளிதழில் "இளைஞர்களுக்கான ஹாம் வானொலி" தொடரின் 14ஆவது பகுதியில் மாடுலேசன், மோட், ரிப்பீட்டர்ஸ் போன்றவை பற்றியும், புதிதாக வந்துள்ள எஸ்.டி.ஆர் புத்தகம், ஆண்டிராய்டில் கிடைக்கும் ஆர்.எப் அனலைசர் செயலி எனப் பல்வேறு தகவல்களுடன் வெளிவந்துள்ளது. (நன்றி: வேலாயுதம், சுரேஷ்)


Monday, July 24, 2017

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 13

 'Dina Ethal' the Tamil newspaper carrying the 13th part of "Ham Radio for Youth" article. In this week column we focused on equipment need for Ham Radio, "Hamsat" book review, Solar data android app review and more!
'தின இதழ்' நாளிதழில் "இளைஞர்களுக்கான ஹாம் வானொலி" தொடரின் 13ஆவது பகுதி வெளிவந்துள்ளது. இதில் புதிய ஹாம் ரேடியோ நிலையத்தை அமைக்க தேவையானவை, புதிதாக வந்துள்ள ஹாம்சேட் புத்தகம், ஆண்டிராய்டில் கிடைக்கும் சோலார் செயலி எனப் பல்வேறு தகவல்களுடன் வெளிவந்துள்ளது. (நன்றி: வேலாயுதம், சுரேஷ்)

Monday, July 17, 2017

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 12

'Dina Ethal' the Tamil newspaper carrying the 12th part of "Ham Radio for Youth" article. In this week column we focused on HF,UHF,VHF and Ultra frequency details , "Ham Radio: an easy guide for beginners" book review, QRZ Now android review and more!

'தின இதழ்' நாளிதழில் "இளைஞர்களுக்கான ஹாம் வானொலி" தொடரின் 12ஆவது பகுதியில் புதிய ஹாம் ரேடியோவுக்கான அலைவரிசைகள், புதிதாக வந்துள்ள ஹாம் புத்தகம், ஆண்டிராய்டில் கிடைக்கும் QRZ Now செயலி ஆகியவை என பல்வேறு தகவல்களுடன் வெளிவந்துள்ளது. (நன்றி: வேலாயுதம், சுரேஷ்)

Monday, July 10, 2017

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 11

'Dina Ethal' the Tamil newspaper carrying the 11th part of "Ham Radio for Youth" article. In this week column we focus on the Ham Radio Deluxe Software, Electronics for all book review (Rs.25),
HamSphere review and more!

 'தின இதழ்' நாளிதழில் "இளைஞர்களுக்கான ஹாம் வானொலி" தொடரின் 11ஆவது பகுதியில் புதிய ஹாம் ரேடியோ டீலக்ஸ் மென்பொருள், ரூ.25க்கு கிடைக்கும் "இயங்கும் எலக்ரானிக்ஸ்" புத்தகம், ஆண்டிராய்டில் கிடைக்கும் ஹாம்ஸ்பியர் செயலி ஆகியவை என பல்வேறு தகவல்களுடன் வெளிவந்துள்ளது. (நன்றி: வேலாயுதம், சுரேஷ்)

Monday, July 03, 2017

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 10

'Dina Ethal' the Tamil newspaper carrying the 10th part of "Ham Radio for Youth" article. In this week column we focus on the India’s Youngest Ham and more!
 'தின இதழ்' நாளிதழில் "இளைஞர்களுக்கான ஹாம் வானொலி" தொடரின் 10ஆவது பகுதியில் இந்தியாவின் மிக இளவயது ஹாம் மற்றும் ரூ.15ற்கு தமிழில் ஹாம் தொடர்பாக கிடைக்கும் புத்தகம் என பல்வேறு தகவல்களுடன் வெளிவந்துள்ளது. (நன்றி: வேலாயுதம், சுரேஷ்)


Wednesday, June 28, 2017

ஹாம் வானொலி ஒரு அறிமுகம் – 1



ஹாம் வானொலி எனப்படும் அமெச்சூர் வானொலிப் பற்றி இன்றைய இளைஞர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வாய்ப்பிள்ளை. சொல்வதற்கும் சொற்பமானவர்களே உள்ளனர். ஏன் இது பற்றி இன்றைய இளைஞர்களுக்கு சொல்ல வேண்டும்? இன்றைய இளைஞர்களுக்கு சமூக ஊடகங்கள் ஒரு பொழுதுபோக்கு அம்சங்களாக திகழ்கின்றன. ஹாம் வானொலியும ஒரு விதத்தில் பொழுபோக்கு அம்சமாக இருந்தாலும், இதன் பயன் வேறுபட்டது.

மிக முக்கியமாக ஹாம் வானொலியின் பயன் இயற்கை சீற்றங்களின் போது தான். அனைத்து தொலைத்தொடர்பு சாதனங்களும் செயல் இழந்துவிட்ட சூழ்நிலைகளில் இந்த ஹாம் வானொலிகள் தான் பெரிதும் பயன்படுகின்றன. ஆபத்துகால மேலாண்மையின் அனைத்து நாடுகளிலும் இதன் பங்கு பெரியது.

இன்றைய மின் அஞ்சல் மற்றும் முகநூல் காலகட்டத்திற்கு முன் நாம் அனைவரும் வானொலியையே ஹாம் வானொலியையே சார்ந்து இருந்தோம். அதற்கு காரணம் ஒரு பைசா செலவு இல்லாமல் உலகம் முழுவதும் ஹாம் வானொலி ஊடாக பேசிக்கொள்ளலாம். அதுவும் ஆபத்து காலகட்டத்திலும், இயற்கை சீற்றங்களின் போதும் இதன் பயன் அளவிடமுடியாதது.
இன்றும் ஹாம் வானொலியின் பயன்பாடு தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. ஆனால் இன்றைய ஹாம் வானொலிகள் படங்களையும் இணையத்தினையும் பயன்படுத்த ஏதுவாக அமைந்துள்ளது. இது பெரும்பான்மையோருக்கு தெரிய வாய்ப்பில்லை. இணையத்தினை ஹாம் வானொலியோடு தொடர்புபடுத்தினால் செலவு எதுவும் இல்லாமல் பயன்படுத்த முடியும். அது எப்படி என்பதை தொடர்ந்து இந்தத் தொடரில் காணலாம்.

இந்தத் தொடரில் ஹாம் வானொலி என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது? உங்களுக்கான குழுவை எப்படி இதன் ஊடாக கண்டுபிடிப்பது. ஹாம் வானொலியில் எத்தனை வகைகள் உள்ளன. ஹாம் வானொலி உரிமத்தினை இந்தியாவில் பெற என்ன செய்ய வேண்டும். எப்படி எளிதாக ஹாம் தேர்வில் தேர்ச்சி பெறலாம்? உங்களுக்கான அடையாள குறியீட்டினை (Call Sign) எப்படி எளிதாகத் தேர்வு செய்வது போன்றவற்றை பார்க்கலாம்.

ஹாம் வானொலிகளை பயன்படுத்துவதற்கு முன் அது எந்த வகையான வானொலி அலைவரிசைகளில் கேட்கலாம். அதற்கான வானொலிப் பெட்டிகள் எவை? SSB, FM, HF, VHF மற்றும் UHF அலைரிசைகள் பற்றியும் விரிவாக அறிந்துகொள்ள இந்தத் தொடர் பயன்படும். பெரும்பான்மையோர் இது என்ன புதுக் கதை எனக் குழம்ப அவசியம் இல்லை. இவை பற்றி தெளிவாகவும் விரிவாகவும் பார்க்கவுள்ளோம்.

மேலும் உங்களுக்கான வானொலி நிலையத்தினை உங்கள் இல்லத்திலேயே குறைந்த செலவில் எப்படி அமைத்துக்கொள்வது? அந்த வானொலியில் எவற்றையெல்லாம் பேசலாம்? உலகம் முழுவதும் உங்கள் வானொலியை ஒலிக்கச் செய்ய எந்த வகையான ஆண்டனாக்களைப் பயன்படுத்தி ஒலிபரப்பலாம்? போன்றவையும் மிகப் பயனுள்ளதாக இருக்கும்.

ஹாம் வானொலியைப் பயன்படுத்துவது ஒரு கலை. எப்படி சர்வதேச ஹாம் வானொலி நிலையங்களுடன் தொடர்பு கொள்வது? உள்நாட்டில் உள்ள நிலையங்களை எப்படி அனுகுவது? சர்தேவ போட்டிகளில் எப்படி கலந்துகொள்வது போன்ற விபரங்களையும் காணலாம்.

ஹாம் வானொலி நிலையம் உங்களுடையது எனில் நீ்ங்கள் தான் அதன் இயக்குனரும் ஆவீர்கள். அப்படியான பணியில் உள்ள நீங்கள், உங்களுக்கான ஹாம் வானொலிப் பெட்டியை எப்படித் தேர்ந்தெடுப்பீர்கள்? உங்களுக்கான நிலையத்தினை எப்படி வடிவமைப்பீர்கள்? அந்த வானொலி நிலையத்தின் துணை கொண்டு எப்படியெல்லாம் இந்த சமுதாயத்திற்கு உதவலாம்? என்பனப் போன்றவற்றையும் இந்தத் தொடர் உங்களுக்கு தெளிவாக்கும்.


மிக முக்கியமாக இந்தத் தொடரை ஐந்து பாகங்களாக பிரித்து வழங்கியுள்ளோம். முதல் பாகத்தில் ஹாம் வானொலியின் அறிமுகம், இரண்டாவதாக ஹாம் வானொலி உரிமத்தினை பெருவதற்கு செய்ய வேண்டியவை, மூன்றாவதாக எப்படி ஹாம் வானொலி துணைகொண்டு உலகம் முழுவதும் தொடர்பு கொள்வது, நான்காவதாக உங்களுடைய நிலையத்தினை எளிதாக அமைக்கும் முறை, ஐந்தாவதாக தொடக்க நிலையினர்க்கான அடிப்படைத் தகவல்களை காணலாம்.
- முனைவர் தங்க.ஜெய்சக்திவேல் (VU3UOM)

Monday, June 26, 2017

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 9

'Dina Ethal' the Tamil newspaper carrying the ninth part of "Ham Radio for Youth" article. In this week column we focus on the free Ham Radio catalogs and more!

 'தின இதழ்' நாளிதழில் "இளைஞர்களுக்கான ஹாம் வானொலி" தொடரின் ஒன்பதாவது பகுதியில் இலவச ஹாம் வானொலி விலைப்பட்டியல் புத்தகங்கள் பற்றி என பல்வேறு தகவல்களுடன் வெளிவந்துள்ளது. (நன்றி: வேலாயுதம், சுரேஷ்)


Thursday, June 22, 2017

‘உலக வானொலிகள்’ புத்தகம் தற்பொழுது இணையத்தில்


‘உலக வானொலிகள்’ புத்தகம் தற்பொழுது இணையத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. உங்கள் இல்லத்தில் இருந்தபடியே ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். நாமக்கல் பகுதியில் வசிப்பவர்கள் 4 -வது தளம்,
ஸ்ரீனிவாச காம்ப்ளெக்ஸ், மோகனூர் ரோடு, நாமக்கல்லில் அமைந்துள்ள ஜீவா புத்தகாலயம் சென்று நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். இணையத்தில் வாங்க இங்கே சொடுக்கவும்.

ஜீவா புத்தகாலயம்
4 -வது தளம்,
ஸ்ரீனிவாச காம்ப்ளெக்ஸ்,
மோகனூர் ரோடு,
நாமக்கல் – 637001,
தமிழ்நாடு,
இந்தியா.
+91 – 7667 – 172 – 172
+91- 04286 – 223233
ccare@noolulagam.com
news@noolulagam.com  

Tuesday, June 20, 2017

தொடக்க நிலையினருக்கான ஹாம் வானொலி


ஹாம் வானொலித் தொடர்பாக உலகம் முழுவதும் ஏராளமாக புத்தகங்கள் வெளிவந்தாலும் ஆங்கிலத்தில் வெளியான இந்தப் புத்தகம் தான் ஹாம் வானொலி பற்றி அறிந்து கொள்பவர்களுக்கு பெரிதும் விரும்பி படிக்கப்பட்ட புத்தகமாகும். Ham Radio For Beginners எனும் இந்தப் புத்தகம் ஹாம் வானொலிப் பற்றி அடிப்படைத் தகவல்ளைக் கொண்டுள்ளது. மைக்கேல் வேல்ஸ் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தை பல அமெரிக்கர்கள் தங்களின் முதல் கட்டத் தேர்வுக்குப் பயன்படுத்துகின்றனர். அமேசான் இணைய தளத்தில் இந்தப் புத்தகத்தின் கிண்டில் பதிப்பு ரூ.199 க்கு கிடைக்கிறது.

Monday, June 19, 2017

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 8

"How to build your own antenna with out a paisa?!, and the etymology of HAM word"
For details...Don't missed to read today's 'Dina Ethal' " Ham Radio For Youth" full page article (part 8)
"இளைஞர்களுக்கான ஹாம் வானொலி" தொடரின் எட்டாவது பகுதியில் எப்படி உங்களுக்கான ஆண்டனாவை ஒரு பைசா செலவில்லாமல் அமைக்கலாம்?, 'ஹாம்' என்ற வார்த்தை எப்படி பிறந்தது, அறிந்து கொள்ள படியுங்கள் இன்றைய தின இதழை! (நன்றி: வேலாயுதம் சுரேஷ்)
www.dinaethal.com


Sunday, June 18, 2017

ரேடியோ ஆஸ்திரேலியாவில் தமிழ்


Photo Courtesy: Pathamadai Kandasamy

"ரேடியோ ஆஸ்திரேலியா" ஏ.பி.சி என்ற பெயரில் ஒலிரப்பாகி வந்தது. இந்த ஆண்டு தனது சிற்றலை ஒலிபரப்புகளை நிறுத்திவிட்டது. 1984ல் வி.சக்ரபாணி ரேடியோ ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வந்தார். இவரே இந்திய இசை நிகழ்ச்சியில் தமிழ் பாடல்களை வாரம் தோறும் ஒலிபரப்பினார். இன்று தமிழும் இல்லை, சிற்றலையும் இல்லை! (Cricket Commentator  & Radio Australia former Tamil Service Announcer  Mr .V.Chakrapany (Photo courtesy:Radio Australia Programme guide, 1984) Via Pathamadai Kandasamy.)