Wednesday, February 17, 2010

மீண்டும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடாக பிபிஸியின் ஒலிபரப்பு

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடாக பிபிஸியின் ஒலிபரப்பு மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் ஊடகத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.இவ்வொலிபரப்பு தொடர்பாக இன்றுகாலை இரு தரப்பினரிடையே ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சார்பாக அதன் தலைவர் ஹட்சன் சமரசிங்கவும் பிபிஸி சார்பாக அதன் தெற்காசிய பணிப்பாளர் மிஷைல் ரோபலும் கைச்சாத்திட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பிபிஸியின் ஒலிபரப்பு நீண்டகாலமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடாக பரிவர்த்தனை ஒலிபரப்பு செய்யப்பட்டபோதும் கடந்தகால உள்நாட்டு மோதல்களின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக அது இடைநிறுத்தப்பட்டிருந்தது.ஆயினும் தற்போது உள்நாட்டு மோதல்கள் அனைத்தும் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பிபிஸியின் ஒலிபரப்பு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tuesday, February 02, 2010

பாகிஸ்தான் வானொலி மீண்டும் தமிழில்

பாகிஸ்தான் வானொலி நீண்ட நாட்களுக்கு பிறகு தற்பொழுது தமிழில் தனது சேவையைத் மீண்டும் தொடங்கியுள்ளது. இவர்களது நிகழ்ச்சிகளை தினமும் இந்திய நேரம் மாலை 06.30 முதல் 07.00 மணி வரை 25 மீட்டர் 11525 கிலோ ஹேர்ட்ஸ் மற்றும் 19 மீட்டர் 15630 கிலோ ஹேர்ட்ஸில் கேட்கலாம்.