Thursday, June 28, 2012

எமக்கு வந்தவை


அமெரிக்கா: வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா – 2012 அமெரிக்க நகரங்களும் விழாக்களும் பற்றியத் தகவல்களுடன் கூடிய மாதாந்திர நாள்காட்டி, மேற்படி வானொலியின் வரலாற்று இதழ். (பி.எஸ்.எஸ்.)

க்யூபா: ரேடியோ ஹவானா க்யூபா - சிறிய பாக்கெட் நாள்காட்டி. (கே.எம்.ஆர்)

சைனா: சீன வானொலி நிலையம் (தமிழ்) – பொது அறிவுப் போட்டியின் பரிசாக மடக்கும் குடை, சிறந்த நேயருக்கான சான்றிதழ், பேனாவுடன் கூடிய லைட், சீனத் தமிழ் ஒலி இதழ்கள் இரண்டு, பை இரண்டு, வண்ண அட்டைகள், கத்தரிப்பு படங்கள், தொங்கான் அட்டைகள், 15 இலவச கடித உரைகள். (பி.எஸ்.எஸ், கே.எம்.ஆர்)

தைவான்: ரேடியோ தைவான் இண்டர்நேசனல் – புதிய நிகழ்ச்சி நிரல், பஸ்சுங் நிலையத்தின் வண்ண அட்டை, 2012 டைரி, டேபிள் காலண்டர். (பி.எஸ்.எஸ் & கே.எம்.ஆர்)

ரோமேனியா: ரேடியோ ரோமேனியா இண்டர்நேசனல் - புதிய நிகழ்ச்சி நிரல் மற்றும் ஸ்டிக்கர், பாக்கெட் காலண்டர். (கே.எம்.ஆர்)

இந்தியா: விஸ்வவாணி - 2012 மாத நாள்காட்டி மட்டும். (கே.எம்.ஆர்)

நெதர்லாந்து: ரேடியோ நெதர்லாந்து -  கோடைகாலத்தினை மையப்படுத்திய வண்ண அட்டை. (பி.எஸ்.எஸ்.)

சீனா: சீன வானொலி நிலையம் (ஆங்கிலம்) – தி மெசன்ஜர் மாத இதழ், ஐந்து இலவச கடித உரைகள். (கே.எம்.ஆர்)

இந்தியா: ஜி.எம்.டி.ஏ வானொலி – இயேசு கிறுஸ்துவின் படம் போட்ட இரண்டு பெரிய மாதாந்திர நாள்காட்டி, அலைவரிசைப் பட்டியல். (கே.எம்.ஆர்)

செக் குடியரசு: ரேடியோ ப்ராஹா - புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், ஸ்டிக்கர், அலைவரிசை அட்டவணை மற்றும் வண்ண அட்டை. (கே.எம்.ஆர்)

இந்தியா: அகில இந்திய வானொலி – மிருகங்களை மையப்படுத்திய புதிய வண்ண அட்டை. (பி.எஸ்.எஸ்.)

குவாம்: அட்வண்டிஸ்ட் உலக வானொலி – கடிதம் மற்றும் அலைவரிசைப் பட்டியல். (கே.எம்.ஆர்)

இந்தியா: பீஃபா வானொலி - புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், பத்து புதிய பாக்கெட் நாள்காட்டிகள். (பி.எஸ்.எஸ். & கே.எம்.ஆர்)

ஜெர்மனி: வாய்ஸ் ஆஃப் ஜெர்மனி - ஆங்கில பிரிவில் இருந்து ஒலிபரப்பு நிறுத்தம் பற்றிய விளக்கக் கடிதம். (கே.எம்.ஆர்)

தகவல் உதவி: 
ADXC 2078: பி.எஸ்.எஸ். - பி.எஸ். சேகர், தலைஞாயிறு, வேதாரண்யம்.
ADXC 2068: கே.எம்.ஆர் – கே.எம். ராஜø, ஆண்டரசன்பட்டி, திண்டுக்கல்.

Thursday, June 21, 2012

சூரிய சக்தியில் இயங்கும் வானொலிப் பெட்டி


வானொலிகளில் மின்சாரம் இல்லாமல் இயங்கும் வானொலிப் பெட்டிகளுக்கு சமீப காலமாக நல்ல மவுசு. அதன் அடிப்படையில் பல சீன நிறுவனங்கள் டைனமோ மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் வானொலிப் பெட்டிகளைத் தயாரித்து வெளியிட்டு வருகிறது. மத்திய அலை (530-1600 கி.ஹெ), பண்பலை (88-108 மெ.ஹெ) மற்றும் காலநிலை அலைவரிசை (162.40-162.55 மெ.ஹெ) ஆகியவற்றை இதில் கேட்கலாம். மாடல் எண்: HT-898C-1-1-1. 

எமர்ஜென்சி லைட் மற்றும் சைரன் வசதியும் இந்த வானொலியில் உள்ளது. தெர்மாமீட்டர் இதில் உள்ளதால் நீங்கள் இருக்கும் இடத்தின் தட்பவெப்பத்தினை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். மேலும் நமது மொபைல் போன்களையும் இதன் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த வானொலியை சீனாவின் டொன்குவான் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. விலை விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: Dongguan Haitong Plastics Electrical Factory, Chashan Town, Dongguan, Guangdong, China  523396, Mobile:  (86 136) 00295295, Homepage Address http://www.globalsources.com/hai-tong.co<

Thursday, June 14, 2012

தினமணியில் பிபிசி உலக சேவை பற்றிய எனது கட்டு

 பிபிசி உலக சேவை பற்றிய எனது கட்டுரை இன்றைய தினமணியின் நடுபக்கத்தில் வெளிவந்துள்ளது. படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்.
கட்டுரையை படிக்க கீழ்கண்ட தொடுப்பினை கிளிக்கவும்...
http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial%20Articles&artid=612874&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D

126 வானொலிகள் மட்டுமே....!

2004-ல் முதல் சமுதாய வானொலித் தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வரை இந்திய அரசு 336 சமுதாய வானொலி நிலையங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் 126 வானொலிகள் மட்டுமே தொடர்ந்து ஒலிபரப்பி வருகிறது. அவற்றிலும் 76 வானொலி நிலையங்கள் கல்வி நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகிறது. 36 வானொலிகள் மட்டுமே அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கிறார், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின், தொடர்பியல் துறை பேராசிரியர் காஞ்சன் மாலிக்.

Thursday, June 07, 2012

ரேடியோ உஜ்ஜாஸ்


இந்தியாவின் எல்லை பகுதியில் தொடங்கப்பட்ட முதல் சமுதாய வானொலியாக அமைந்துள்ளது ‘ரேடியோ உஜ்ஜாஸ்’. இது பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளதால் பாகிஸ்தான் மக்களும் இந்த வானொலியைக் கேட்கலாம். ஐந்து வருடங்களுக்கு முன் சமுதாய வானொலிக்கான உரிமத்திற்கு விண்ணப்பித்த இந்த வானொலி கடந்த 2011, மார்ச் 10-ல் தனது முதல் ஒலிபரப்பினைத் தொடங்கியது. குஜராத் மாநிலத்தின் பீம்சார் கிராமத்தில் இருந்து இந்த வானொலியானது ஒலிபரப்பினைச் செய்து வருகிறது.

Tuesday, June 05, 2012

Dxers Guide தயார்...நமது Ardic DX Club ஆங்கிலத்தில் வெளியிட்டு வரும் Dxers Guide-ன் சமீபத்திய இதழ் வெளிவந்துவிட்டது. இத்துடன் Broadcast in English (A12)  இதழும் இணைத்து அனுப்பப்படுகிறது. உலக வானொலிகள் கேட்க ஆர்வமுள்ளவர்கள் கையில் அவசியம் இருக்க வேண்டிய இதழகள் இவை.

Friday, June 01, 2012

கைப்பேசியில் சிற்றலை வானொலி

கைப்பேசியில் சிற்றலை வானொலி கேட்பது தொடர்பாக பல நண்பர்கள் தொடர்ந்து கேட்ட வண்ணம் இருந்தனர். அவர்களுக்காக இந்த இடுகை. உங்களிடம் அண்ட்ராய்டு இயங்கு தளத்துடன் கூடிய கைப்பேசி இருந்தால், இனி எளிதாக சிற்றலை மற்றும் டி.ஆர்.எம் வானொலிகளை உங்கள் கைப்பேசியிலேயே கேட்கலாம். அதற்கான அப்ளிகேசனை கிழ்கண்ட கூகிள் பிளே இணைய தளத்தினில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.