Monday, April 23, 2012

தென் மண்டல சமுதாய ரேடியோ சங்க மாநாட்டில் அதிரடி தீர்மானம்

திருச்சி: "சமுதாய ரேடியோவுக்கு உரிமை (லைசன்ஸ்) கட்டணம் உயர்த்துவதை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்' என தென் மண்டல சமுதாய ரேடியா சங்கத்தின் முதலாவாது மாநாட்டில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தென் மண்டல சமுதாய ரேடியோ சங்கத்தின் கீழ் தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என நான்கு மாநிலங்களும், ஒரு யூனியன் பிரதேசமும் உள்ளது. தென் மண்டல சமுதாய ரேடியோ சங்கத்தின் முதலாவது மாநாடு தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலை டாக்கின்ஸ் ஹாலில் நேற்று நடந்தது.தமிழகம்-புதுச்சேரி சமுதாய ரேடியோ சங்கப் புரவலரும், தினமலர் வெளியீட்டாளருமான ஆர்.லட்சுமிபதி தலைமை வகித்து பேசினார். பெரியார் மணியம்மை பல்கலை துணைவேந்தர் ராமச்சந்திரன், பதிவாளர் அய்யாவு, தமிழகம்-புதுச்சேரி சமுதாய ரேடியோ சங்க தலைவர் தங்கராஜ், துணைத்தலைவர் தாமஸ் ஜோஸப் தெரக்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் சமுதாய ரேடியே சங்க பொதுச்செயலாளர் வீரேந்திரா சிங் சவுக்கான் பேசியதாவது: சமுதாய ரேடியோ உரிமைக்கான (லைசன்ஸ்) ஆண்டு கட்டணமாக மத்திய அரசுக்கு 19 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். இதை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சமுதாய ரேடியோக்கள் 91 ஆயிரம் ரூபாய் ஆண்டு கட்டணமாக செலுத்த வேண்டும்.எந்தவித வருமானமும் இல்லாமல், பொதுசேவைக்காக நடத்தப்படும் இதுபோன்ற சமுதாய ரேடியோக்களால் இவ்வளவு பெரிய தொகையை செலுத்துவது என்பது இயலாத காரியம். எனவே, டில்லியில் நடக்கும் கூட்டத்தில் இதுதொடர்பாக பேச உள்ளேன்.இந்த கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என இந்த கூட்டத்தின் வாயிலாக நாம் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் கையை உயர்த்துங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.அனைவரும் கையை உயர்த்தி தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, தீர்மானம் முழுமனதாக நிறைவேறியது."சமுதாய ரேடியோவுக்கு ஆண்டு லைசன்ஸ் கட்டணம் உயர்த்தும் முடிவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்' என எழுத்து மூலமான தீர்மானத்தில் அனைவரும் கையெழுத்திட்டனர். [தினமலர் ஏப்ரல் 23,2012]

Friday, April 20, 2012

சீன வானொலியில் எனது பேட்டி

சீன வானொலி தமிழ் பிரிவின் 'நேருக்கு நேர்' நிகழ்ச்சியில் எனது பேட்டி இனி  வரும் நான்கு வாரங்கள் தொடர்ந்து ஒலிபரப்பாக உள்ளது.  நீங்களும் கீழ்கண்ட தொடுப்பில் கேட்கலாமே.
உங்கள் கருத்துக்களை சீன வானொலிக்கும், எனக்கும் தெரிவியுங்கள். - தங்க. ஜெய்சக்திவேல்

Thursday, April 19, 2012

இலங்கை வானொலியில் இந்தி ஒலிபரப்பின் நேரம் அதிகரிப்பு

இன்று முதல் (19 ஏப்ரல் 2012) இலங்கை வானொலியில் இந்தி ஒலிபரப்பின் நேரம் அதிகரிக்கப்படுகிறது.
இதன் காரணமாக இனி தினமும் கூடுதலாக இரண்டு மணி நேரங்கள், அதாவது இரவு 7 மணி முதல் 9 மணி வரை இந்தி ஒலிபரப்பானது 11905 மற்றும் 7190 அலை எண்களில் எக்காளா எனும் இடத்தில் உள்ள ஒலிபரப்பிகளில் இருந்து செய்யப்பட உள்ளது. 

[தகவல்: சகாதேவன் விஜயகுமார் மற்றும் G. Victor A. Goonetilleke 4S7VK,"Shangri-la"' 298 Madapatha Road,Piliyandala. Sri Lanka]

Thursday, April 12, 2012

வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் உறவு சங்கம விழா

©­lûTuv:
வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இந்த ஆண்டுக்காண உறவு சங்கம விழா இரண்டு இடங்களில் நடை பெறவுள்ளது. அது பற்றிய விபரங்களை தங்களுக்கு அறியத் தருவதில் மகிழ்ச்சியடைகின்றோம். 1. நாள்: 15.04.2012, ஊர் : சென்னை, இடம்: சென்னை மேய்ப்புப் பணி நிலையம்., முகவரி: எண்-25, ரோசரி சர்ச் ரோடு, சென்னை-4, வழி: 1. கோயம்பேடு பேருந்து நிலையம் செல்வதற்கு முன்வரும் நூ\டிச்சாலை நிறுத்தத்தில் இறங்கி பட்டி]ப்பாக்கம் செல்லும் 12B பேருந்தில் ஏறி சாந்தோம் சர்ச் என்று கேட்டு இறங்கவும். நீங்கள் இறங்கிய இடத்திக்கு எதிர்புறம் மேய்ப்புப் பணி நிலையம் உள்ளது. 2.  சென்னைக்கு இரயிலில் வருபவர்கள் 6A / 32 பேருந்தில் ஏறி சாந்தோம் சர்ச் என்று கேட்டு இறங்கவும்.
 
2. நாள்: 29.04.2012, ஊர்: மதுரை, இடம்: மேய்ப்புப் பணி நிலையம், முகவரி: மதுரை பேராயர் இல்லம், கே.புதூர், மதுரை-8, வழி: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இறங்கி கே.புதூர் செல்லும் பேருந்தில் ஏறி ITI / வேலை வாய்ப்பு அலுவலகம் என்று கேட்டு இறங்கவும். இறங்கிய இடத்திக்கு  அருகில் பேராயர் இல்லம் உள்ளது. பேராயர் இல்லத்திலிருந்து இடதுபுறம் செல்லும் சாலையில் சென்றால் (அஞ்சலகம் செல்லும் வழி) விழா நடத்துமிடம் வந்துவிடும். அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது வேரித்தாஸ் தமிழ்ப்பணி. (சகோதரி.அருள்மேரி, ஒருங்கிணைப்பாளர், வேரித்தாஸ் தமிழ்ப்பணி, சென்னை. Via கே.சி சிவராஜ், எடப்பாடி)

Monday, April 09, 2012

சாதனைக்காக தமிழ் கற்கும் சீன மாணவி!

புதுச்சேரி, மார்ச் 23:   தொழிலில் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் சீனாவைச் சேர்ந்த மாணவி
ஜெயா (எ) லீலூஸ் (படம்) தமிழ் கற்று வருகிறார்.
சீனாவில் பெய்ஜிங் பகுதியைச் சேர்ந்தவர் லீலூஸ். இவர் சீனாவில் உள்ள கம்யூனிகேஷன் யுனிவர்சிட்டி ஆப் சீனா என்ற பல்கலைக்கழகத்தில் ஆர்வமுடன் தமிழ் பயின்றார். இதைத் தொடர்ந்து அவருக்கு சீனாவில் உள்ள தமிழ்
வானொலியில் வேலை கிடைத்தது. சீன மொழியில் இருக்கும் செய்திகளை இவர் தமிழில் மாற்றித் தர வேண்டும் என்பதே இவரது பணி. இப் பணியை இவர் தொடர்ந்து சிறப்பாக செய்து வருகிறார். லீலூஸ் என்ற சீனப் பெயரையும் இவர் தமிழர்களின் பெயருக்கு தகுந்தாற்போல் ஜெயா என்று மாற்றிக் கொண்டார்.
எழுத்து வடிவில் இருக்கும் தூய தமிழைப் போல் இவர் பேசுகிறார். இந் நிலையில்  தமிழர்கள் பேச்சு வழக்கில் மொழியை எவ்வாறு கையாள்கிறார்கள் என்று அறிவதில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து புதுச்சேரி வந்த இவர், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த 5 மாதமாக பேச்சு வழக்கில் உள்ள தமிழை பயின்று வருகிறார். இவருக்கு பேராசிரியர்கள் ரவிசங்கர், பரசுராம் ஆகியோர் தமிழ் கற்றுக் கொடுக்கின்றனர்.
இது குறித்து ஜெயா (எ) லீலூஸிடம் கேட்டபோது, நான் தமிழ் வானொலியில் பணி செய்வதால் தமிழ் மீது ஆர்வம் ஏற்பட்டது. சீனாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் தமிழ் பயின்றேன். அங்கு பேச்சு வடிவில் மக்கள் எவ்வாறு தமிழை பேசுகிறார்கள் என்பதை பயில்வதற்கான வசதி இல்லை. பேச்சு வடிவிலான தமிழ் தெரிந்தால் எனது தொழிலில் சாதிப்பதற்கு உறுதுணையாக இருக்கும் என்று கருதினேன். இதனால் இங்கு தமிழ் பயின்று வருகிறேன் என்றார்.
இவரது கணவர் வாங்க் ஹுயும் உறுதுணையாக இவருடன் புதுச்சேரி வந்து தங்கியுள்ளார். தமிழ் கற்று சாதிக்க நினைக்கும் சீன மாணவியின் செயல்பாடு தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. (தினமணி 23/04)

Monday, April 02, 2012

சூடானில் இருந்து ரேடியோ டபாங்கா


ரேடியோ டபாங்கா: சூடானில் இருந்து செயல்பட்டுவரும் வானொலி ரேடியோ டபாங்கா. இந்த வானொலியும் சமீப காலமாக நேயர்களுக்கு வண்ண அட்டைகளை அனுப்பத் தொடங்கியுள்ளது. ஒரு சில நாடுகளின் வண்ண அட்டைகள் முக்கியமானதாக கருதப்படும். அதற்கு காரணம் அந்த நாடுகளில் சிற்றலை ஒலிபரப்பு இல்லாமல் இருக்கும். அப்படியே இருந்தாலும் அது மிக குறைந்த சக்தியில் இருக்கும். அப்படிப்பட்ட வானொலி தான் இந்த ரேடியோ டபாங்க. ஒரு சில சிற்றலை நேயர்களுக்கு இதன் முகவரிக் கூட தெரியாது. இவர்களது நிகழ்ச்சிகளை தினமும் இந்திய நேரம் இரவு 9 மணிக்கு (1530 UTC) ஆங்கிலத்தில் 13730 kHz அலைஎண்கள் 22 மீட்டரில் கேட்கலாம். தொடர்பு கொள்ள இவர்களது முகவரி: http://www.radiodabanga.org/contact  என்ற இணைய முகவரியில் உங்கள் கடிதத்தினை அனுப்பினால் உங்களுக்கு பதில் அனுப்புகின்றனர். (Babul Gupta).