Saturday, May 24, 2008

அகில இந்திய வானொலிக்கு சர்வதேச பரிசு

ஈரானில் நடைபெற்ற 9-வது சர்வதேச வானொலி விழாவில் அகில இந்திய வானொலியின் நிகழ்ச்சிக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.அகில இந்திய வானொலியின் ஒரிசா சம்பல்பூர் ஒலிபரப்பு நிலையம் தயாரித்த 'ஜனிபா, ஆமே கமா கரிபா' (உலகளாவிய சிந்தனையும், உள்ளூர் செயல்பாடும்) என்ற சிறுவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரானில் நடந்த சர்வதேச வானொலி விழாவில் ஒலிபரப்பப்பட்டது. பத்மலோசன்தாஸ் என்ற நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஒரிய மொழியில் இந்த நிகழ்ச்சியை தயாரித்திருந்தார்.வானிலை மாற்றங்கள், நாட்டின் வளங்களை பாதுகாத்தல் போன்ற விஷயங்களை தனது இரண்டு குழந்தைகளுக்கு ஒரு தாய் தாலாட்டாக போதிப்பது போன்று இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு விழாவில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் சிறந்த நிகழ்ச்சிகளுக்கான முதல் பரிசையும் தட்டிச் சென்றது.இதையொட்டி தயாரிப்பாளர் பத்மலோசன் தாஸுக்கு 2000 யூரோ ரொக்கப்பரிசும், தங்க விக்கிரகமும் பரிசளிக்கப்பட்டது. கடந்த 2007ல் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக ஈரான் வானொலி நடத்திய போட்டியிலும் சிறந்த நிகழ்ச்சிக்கான முதல் பரிசையும் தாஸ் வென்றது குறிப்பிடத்தக்கது. (Thanks to Thatstamil.oneindia.in)

Thursday, May 22, 2008

சர்வதேச வானொலி 16 மே - 15 ஜூன் 2008

நமது சர்வதேச வானொலியின் 16 மே - 15 ஜூன் 2008 இதழ் தயாராகிவிட்டது விரைவில் இது உங்கள் கரங்களை வந்தடையும். இந்த இதழில் நடிகர் மற்றும் அமெச்சூர் வானொலி ஒலிபரப்பாளார் சாருகாசன் சிறப்புப் பேட்டி இடம் பெற்றுள்ளது. மாத இதழின் ஆண்டு சந்தா: 100/- தொடர்புகளுக்கு: தங்க. ஜெய்சக்திவேல், 59, அன்னை சத்யா நகர், அரும்பாக்கம், சென்னை - 600 106, பேச: 98413 66086. மின் அஞ்சல்:

தென்கச்சி சுவாமிநாதனுக்கு பாராட்டு விழாவிற்கு

தனது குரலாலும், நகைச்சுவையாலும் 'இன்று ஒரு தகவல்' என்று தினந்தோறும் சென்னை வானொலியில் சொல்லி மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கும் தென்கச்சி சுவாமிநாதன் அவர்களுக்கு அப்புசாமி- சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. நாள்: 31-05-08 மாலை 6.30 இடம்: நாரத கான சபா சிற்றரங்கம்.

வானொலி நாடக விழா 2008

வானொலி நாடக விழா வரும் 01-0-08 முதல் 06-06-08 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வானொலி நிலையங்களால் ஒலிபரப்பாக உள்ளது. மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: நிலைய இயக்குனர், அகில இந்திய வானொலி, காமரஜர் சாலை, மயிலாப்பூர், சென்னை - 600004, பேச:044 2498 5252 / 1215 / 1345

Thursday, May 08, 2008

சர்வதேச வானொலி இதழின் வெளியீட்டு விழா

கரிசல் மண்ணில் பூத்த புது மலர்கள்

திருநெல்வேலியைச் சேர்ந்த கரிசல் திரைப்படச் சங்கத்தின் சார்பாக பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கான விருது வழங்கும் விழா, சர்வதேச வானொலி என்ற இதழின் வெளியீட்டு விழா ஆகியவை, 25.4.2008 அன்று அண்மையில் தமிழகத்தின் திருநெல்வேலி மாநகரில் சிறப்பாக நடைபெற்றது.சங்கத்தின் தலைவர் அருண் கதாதரனும், துணைத் தலைவரும் தினேஷம் இணைந்து பம்பரமாகச் சுழன்று நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள் என்பதை நெல்லை மண்ணை மிதித்ததுமே புரிந்து போனது.நகரில் ஆங்காங்கே கரிசல் திரைப்படச் சங்கம் உங்களை வரவேற்கிறது என்று பாசத்துடன் அழைக்கும் துணி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஹலோ, சூரியன் ஆகிய பண்பலை எஃ.எம். வானொலிகளில் இந்த நிகழ்ச்சியைப் பற்றிய செய்திகளை இரு நாட்களுக்குத் தொடர்ந்து அவ்வப்போது ஒலிபரப்பினார்கள். விழாவில் பங்கேற்ற முக்கிய விருந்தினர்கள், விருது பெற்றவர்களின் பேட்டிகளும் அவ்வப்போது ஒலியேறியது.அனைத்துலக மூத்த தமிழ் ஒலிபரப்பாளர் எனும் பெருமையைப் பெற்றவரும், லண்டனில் உள்ள ஐபிசி வானொலியின் மூலம் உலகெங்கும் உள்ள தமிழர்களுடன் தன் குரலால் ஒன்றிக் கலந்தவருமான அப்துல் ஜபார்தான் நிகழ்ச்சியின் விஐபி.திரைப்படச் சங்கத்தின் நிகழ்ச்சிக்கு மாவட்ட அறிவியல் மையம் கைகொடுத்து உதவியது ஓர் ஆச்சரியம். இதற்கான விளக்கத்தை பின்னர் நிகழ்ச்சியில் பேசுகையில் தெரிவித்தார் மாவட்ட அறிவியல் அதிகாரி கோபாலகிருஷ்ணன். திரைப்பட இயக்குநர் மாரிமுத்து, நிழல் திருநாவுக்கரசு, பத்திரிகையாளரும் குறும்பட இயக்குநருமான அருள் எழிலன், சர்வதேச வானொலி இதழின் ஆசிரியர் ஜெயசக்திவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். (Thanks to tamil.Sify.com)

Friday, May 02, 2008

சர்வதேச வானொலி இதழ் வெளியீட்டு விழா

கடந்த 23-04-08 வெள்ளிகிழமை அன்று திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் சர்வதேச வானொலியின் இதழ் வெளியீட்டு விழா உலகின் மூத்த அறிவிப்பாளரான அப்துல் ஜபார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கரிசல் திரைப்பட இயக்கம் தொடங்கப்பட்டதோடு சிறந்த பத்திரிகைக்கான விருதினை இலங்கையின் 'வீரகேசரி' வார இதழும், சிறந்த பத்திரிகையாளர் விருதுனை மலேசியா 'மக்கள் ஓசை'-யும் பெற்றது.

வெற்றிகரமான வேரித்தாஸ் உறவுச்சங்கம விழா

கடந்த 26-04-08 சனிக்கிழமை திருச்சியில் வெற்றிகரமாக நேயர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
மேலதிக வேரித்தாஸ் உறவுச்சங்கம புகைப்படங்களைக் காண சொடுக்கவும் கீழ்கண்ட தொடுப்பினை