Monday, March 21, 2011

உலகத் தமிழ் சிற்றலை வானொலிகள்

உலகத் தமிழ் சிற்றலை வானொலிகள் (b10)
(25 அக்டோபர் 2010 முதல் 29 மார்ச் 2011)


தமிழ் நாதம் (இந்தியா)
0530-0615 காலை 1053,727,9835,1174, 11985,13795 41,31,25,22
0445-0545 மாலை 1053,727,1371,1505,1577, 1781,17860 41,22,19,16

அ.இ.வா (இந்தியா)
0545-0815 காலை 4920 60
0830-1000 காலை 7380 41
1240-0300 மதியம் 7380 41
0530-1105 இரவு 4920 60

பீபா (இங்கிலாந்து)
0700-0730 காலை(தி-வெ) 9725 (Nடீகூ in றுசுகூழ 2011) 31
0600-0630 காலை(ளுரனேயல டீடேல) 9770 31

வெரித்தாஸ் (பிலிப்பைன்ஸ்)
0600-0630 காலை 11935 25
0730-0800 இரவு 9520 31

ஆத்மீக யாத்திரை (அமொpக்கா)
0630-0700 காலை 6140 49

வத்திகான் வானொலி (வத்திகான்)
0630-0650 காலை 5895,7335, 49,31
0750-0810 காலை 15460 19
0820-0840 இரவு 7585,1185,013765 41,25,22

சீன வானொலி
0730-0830 காலை 136,0013735 22
0830-0930 காலை 136,0013730 22
0730-0830 இரவு 957,09665 31
0830-0930 இரவு 973,013600 31,22

பாகிஸ்தான் வானொலி
0630-0700 இரவு 1188,015540 19,25

பிபிசி தமிழோசை
0915-0945 இரவு 6135,76,009605,11965 49,41,31,25

அ.இ.வா (திருவணந்தபுரம்)
1108-1200 மதியம் 7290 41

அ.இ.வா (அந்தமான்)
0500-0530 மாலை 4760 60

ஆசிய சேவை (இலங்கை)
0500-0700 மாலை 719,011905 41,25

பைபிள ;குரல் (கனடா)
0830-0845 இரவு(வியாழன் மட்டும்)11895 (NOT in WRTH 2011) 25
0830-0845 இரவு(Sunday Only)12035 (NOT in WRTH 2011) 22

TWR
0600-0630 காலை 882
1015-1045 இரவு 882

அட்வண்டிஸ்ட் வானொலி (அமொpக்கா)
0830-0900 இரவு 11685 25

குடும்ப வானொலி (அமொpக்கா)
0730-0830 இரவு 17810 16
0830-0930 இரவு 11935 25
0700-0800 காலை 863
0400-0500 மாலை 873

HCJB(ஆஸ்திரேலியா)
0645-0700 காலை(சனி மட்டும்) 15400 19
0645-0700 இரவு(சனி மட்டும்) 15340 19

Thursday, March 17, 2011

சர்வதேச வானொலி -டிசம்பர் 2009

Dec 2k9

சர்வதேச வானொலி - ஏப்ரல் 2010

April 2010

சர்வதேச வானொலி - பிப்ரவரி 2010

Feb 2010-2

சர்வதேச வானொலி - ஜனவரி 2010

Jan 2010

சர்வதேச வானொலி - மே 2010

http://www.scribd.com/doc/50927324/May-2010

டி.எக்ஸ் போட்டி - 2011

நமது ஆர்டிக் சர்வதேச வானொலி நேயர்கள் மன்றம் தொடங்கப்பட்டு 13 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி நமது சர்வதேச வானொலி மாத இதழ் உலகம் தழுவிய டி.எக்ஸ் போட்டி ஒன்றினை கடந்த இரண்டு ஆண்டுகளைப் போன்று இந்த ஆண்டும் அறிவித்துள்ளோம்.

கடந்த ஆண்டுகளில் சிறந்த வரவேற்பினை பெற்ற இந்த போட்டி இந்த ஆண்டிலும் அதை விட நல்ல வரவேற்பினைப் பெரும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். இந்த ஆண்டும் பல வானொலி நிலையங்கள் பரிசுகளை அள்ளி வழங்க சம்மதித்துள்ளனர். குறிப்பாக சீன வானொலி, ஜெர்மன் வானொலி, ரேடியோ ஃப்ரீ ஆசியா, ரேடியோ தைவான் இண்டர்நேசனல் மற்றும் நமது அகில இந்திய வானொலி ஆகியவை போட்டியில் வெல்பவருக்கான பரிசுகளை வழங்க உள்ளன.

World Radio TV Handbook (WRTH) எனும் புத்தகம் இந்த ஆண்டும் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. உலகின் முதன்மையான வானொலி புத்தகங்களை கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக பதிப்பித்துவரும் WRTH நமது போட்டியை ஊக்குவிப்பது நமக்கெல்லாம் பெருமையே. 650 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் இந்திய விலை ரூ. 1800 ஆகும்.

போட்டிக்கான விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31 மார்ச் 2011.
போட்டிக்கான கேள்விகளை www.dxquiz.wordpress.com எனும் முகவரியில் காணலாம்.

Tuesday, March 01, 2011

பிரசார் பாரதிக்கு நிதி குறைப்பு?!

விரிவாக்க பணிகளுக்கு தயாராகிறது பிரசார் பாரதி

புதிய விரிவாக்க பணிகளை மேற்கொள்ள பிரசார் பாரதி நிறுவனம் முடிவு செய்துள்ளது.மத்திய அரசின் செய்தித் துறையின் கீழ் இயங்கும் பிரசார் பாரதி நிறுவனம், நாடு முழுவதும் பொது வானொலி மற்றும் ஒளிபரப்பு சேவை வழங்கி வருகிறது. தற்போதைய சூழலில், பல்வேறு "டிவி' நிறுவனங்களும், பண்பலை வானொலிகளும் புதிய நிகழ்ச்சிகளை வழங்கி வருவதால், பிரசார் பாரதியின் அனைத்து பிராந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் "டிவி' நிகழ்ச்சிகளும் ஓரங்கட்டப்பட்டுள்ளன.போதிய நிதியும், அதே சமயம் புதிய சிந்தனைகளை செயல்படுத்தும் தன்மையும் இல்லாமல் போனதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. சமீபத்தில், அவ்வாறு முறைகேடுகளில் ஈடுபட்ட பிரசார் பாரதி தலைமை செயலர் லாலி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.அதன்பின், செய்தித் துறை சார்பில் அனுமதிக்கப்பட்ட நிதிக் குழுவினர் 142 கோடி ரூபாய் உதவித்தொகையை பிரசார் பாரதி வளர்ச்சி பணிகளுக்காக வழங்கினர்.இதன் மூலம், தன் பணிகளை கூடுதல் விரிவாக்கம் செய்ய முடிவெடுத்த பிரசார் பாரதி நிறுவனம், தனக்கு வழங்கப்பட்ட நிதித் தொகையுடன், பல்வேறு விளம்பரங்களில் கிடைக்கும் 40 கோடி ரூபாய் தொகையையும் சேர்த்து, 15 ஆயிரம் புத்தம் புதிய எபிசோட்களை தயாரிக்க முடிவு செய்துள் ளது. விளம்பரங் களுக்காக, புதிய நிகழ்ச்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஆறு மணி நேரத்தை 14 மணி நேரமாக்கவும் அதிகரித்துள்ளது. தற்போது வரவுள்ள பட்ஜெட் தொடரில், பிரசார் பாரதி நிறுவனத்திற்கு 1,200 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்க திட்டக் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.புதிய விரிவாக்கப் பணிகளுக்காக, மத்திய ஊழல் கண்காணிப்புக் குழு அதிகாரி தலைமையில் ஒரு குழுவும், பிரசார் பாரதியின் சீனியர் செகரட்டரியின் தலைமையில் ஒரு குழுவும், உள்துறை அமைச்சர் சிதம்பரம் தலைமையிலான மந்திரிகள் குழுவும், மார்க்கெட்டிங் டீம் ஒன்றும், தற்சார்பு ஆலோசனைக் குழு உள்ளிட்ட ஐந்து கமிட்டிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. புதிய கமிட்டிகள், நிறுவனத்தை பல்வேறு நிலைகளில் நவீனப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவர். இதில், பிரசார் பாரதி ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் முக்கியத்துவம் உண்டு. திட்டமிடப்பட்ட பணிகளை முடிப்பதற்காக, தற்சார்பு ஆலோசகர்களும் பணியில் அமர்த்தப்படுகின்றனர். வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், மார்கெட்டிங் பணிக்காக புதிய ஆட்கள் நியமிக்கப் படுகின்றனர். பல்வேறு மாநிலங்களின் தலைநகரங்களில் பிரத்யேக விற்பனை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, தூர்தர்ஷனின் நிகழ்ச்சிகளை சந்தைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களை வைத்து பல்வேறு குறும் படங்களை இயக்க செய்யலாம் என, சமீபத்தில் நடந்த பிரசார் பாரதி செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.வரும் 9ம் தேதி நடக்கும் மந்திரிகள் கூட்டத்தில், பிரசார் பாரதியின் நிர்வாக சட்டத்தில் சில முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. ஒழுங்கு முறைப் பணிகளை மேற்கொள்வதற்காக, துணைக் குழு ஒன்றும் ஏற்படுத்தப்படுகிறது. இதில், முன்னாள் செயற்குழு உறுப்பினர்களும் அடங்குவர்.பிரசார் பாரதி நிர்வாக தலைவர் மரினல் பாண்டே இதுகுறித்து கூறியதாவது:நிறுவன செயல்பாடுகளை விரிவாக்கம் செய்வது பற்றி ஆலோசனை நடந்து வருகிறது. இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஐந்து கமிட்டிகளும் தங்கள் ஆலோசனைகளை நிர்வாகத்திற்கு தெரியப் படுத்துவர். செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறையில் கூடுதல் செயலராகவும், தற்காலிக பிரசார் பாரதியின் தலைமை செயலராக உள்ள ராஜீவ் தாக்கரும் புதிய செயற்குழுவில் உறுப்பினராக உள்ளார்.தற்போதைய நிலையில், 140 பேருக்கான பணி விவரம் இறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பிரசார் பாரதி பிராந் திய அலுவலகங்களில் 11 ஆயிரம் பேருக்கு பற்றாக்குறை உள்ளது. இதில், 3,000 பதவிகள் நிச்சய மற் றவை.இவ்வாறு மரினல் பாண்டே கூறினார்.

நன்றி: தினமலர்