Sunday, June 14, 2009

சூரியனை ஆராயும் செயற்கைகோள்கள்

விண்வெளியில் உள்ள கோள்கள் அனைத்தும் சூரியனை மையமாக வைத்தே சுழல்கின்றன. ஒவ்வொரு கோள்களும் தங்களுக்கு என வகுத்துள்ள வட்ட மற்றும் நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. சூரியனை அடுத்து மெர்க்குரி, வீனஸ், பூமி, மார்ஸ் (செவ்வாய்), ஜுபிடர், சனி, யுரேனஸ், நெப்டிïன் என்ற வரிசையில் கோள்கள் அமைந்துள்ளன. இது தவிர ஏராளமான துணைக்கோள்களும், நட்சத்திரங்களும், விண்கற்களும் விண் வெளியில் சுற்றி வருகின்றன. இத்தனை கோள்கள், நட்சத்திரங்கள் இருந்தாலும் பூமியில் மட்டுமே மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் வசிக்கும் அமைப்பு உள்ளது. பூமி போல வேறு கோள்களில் உயிரினங்கள் இருக்கின்றதா? அல்லது இதற்கு முன்பு இருந்திருக்கிறதா? என்ற ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

விண்வெளி ஆராய்ச்சியில் தீவிர ஆர்வம் கொண்ட மனிதன் பல நூறு ஆண்டுகளாகவே அது குறித்து ஆய்வுகள் நடத்தி பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருக்கின்றான். பூமிக்கு அருகில் உள்ள கோளான நிலவுக்குச் சென்று கால்பதித்தான் மனிதன். தற்போது அங்கு ஆய்வு நிலையத்தை அமைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றது. நிலவுக்குச்சென்றது போல சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாய்க்கும் விஞ்ஞானிகள் ஆய்வுக்கலங்களை அனுப்பி உள்ளனர். இந்த ஆய்வுக்கலங்கள் செவ்வாயக் கிரகத்தில் இறங்கி பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றது. இதுபோல மற்ற கிரகங்களை ஆராயவும் மனிதன் செயற்கை கோள்களை அனுப்பி இருக்கின்றான்.

பல்வேறு அற்புதங்கள் நிறைந்த விண்வெளியில் மிகப்பெரிய அதிசயமாக திகழ்கிறது சூரியன். ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்கள் நிரம்பிய சூரியன் நெருப்புக்கோளமாகவே உள்ளது. இதில் காணப்படும் கதிர்வீச்சும், காந்தப்புலனும் ஆபத்து நிறைந்தவை. எனவே எந்த ஒரு பொருளும், உயிரினமும் இங்கு நெருங்க முடியாது. எனவே வெகு தூரத்தில் இருந்தே டெலஸ்கோப் மூலம் சூரியனை ஆராய்ந்து வந்தனர். இப்போது சூரியனுக்கு கொஞ்ச தூரத்தில் இருந்து ஆய்வு நடத்த 2 செயற்கை கோள்களை அனுப்ப உள்ளனர். ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிலையமும் , நாசாவும் இணைந்து இந்த செயற்கை கோள்களை அனுப்புகிறது.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வுநிலையம் அனுப்பும் இந்த செயற்கைகோளுக்கு `சோலார் ஆர்பிட்டர்' என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். வருகிற 2015 ம் ஆண்டு இந்த செயற்கை கோள் சூரியனை நோக்கி தனது பயணத்தை தொடங்கும். சிறிய கார் அளவு இருக்கும் இந்த செயற்கை கோள் சூரியனின் வெப்பத்தினால் பாதிக்காத அளவுக்கு பாதுகாப்பு கவசம் கொண்டதாக தயாரிக்கப்படுகிறது. இது தவிர சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மற்றும் காந்தப்புல வீச்சினால் பாதிக்கப்படாத அளவுக்கு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக இந்த செயற்கை கோள் இருக்கும்.

சோலார் ஆர்பிட்டர் சூரியனை சுற்றி வந்து படம் பிடித்து அதை ஐரோப்பிய விண்வெளி ஆய்வுநிலையத்துக்கு அனுப்பி வைக்கும். மேலும் சூரியனின் துருவப்பகுதியையும் இந்த செயற்கை கோள் ஆய்வு செய்யும். சூரியனின் தரைப்பகுதியைவிட வெளிப்புற பகுதி ஏன் அதிக உஷ்ணமாக இருக்கிறது? சூரியனில் ஏன் நெருப்புக்கோள புயல், சூரியப்புள்ளி மற்றும் நெருப்பு பெருவெடிப்புகள் போன்றவை ஏற்படுகின்றன என்பது குறித்தும் ஆய்வுகள் நடைபெறும்.

அமெரிக்காவின் நாசா விண்வெளி நிலையம் அனுப்பும் செயற்கைகோளுக்கு `சோலார் புரோப் பிளஸ்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கலம் சூரியனின் மையப்பகுதி குறித்து ஆய்வுகளை நடத்தும். இந்த ஆய்வுகளின் முடிவில் சூரியன் குறித்த பல அதிசய தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Source: http://www.dailythanthi.com)

Friday, June 12, 2009

சீனாவில் சுற்றுப்பயணம் செய்த கண்ணன் சேகர்க்கு பாரட்டு விழா


07.06.09 அன்று சீனாவில் சுற்றுப்பயணம் செய்த நண்பர் முனுங்கப்பட்டு கண்ணன் சேகர் அவர்களுக்கு நாமக்கல் மாவட்ட நேயர் மன்றம் பாரட்டு விழா நடத்தியது அதில் நாமக்கல் மாவட்ட நேயர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள் மற்றும் பல மாவட்ட நேயர்கள் தொலைபேசி மூலம் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். மற்றும் அதன் நிழற்ப்படத்தை இத்துடன் இணைத்து இருக்கிறோம். (க.செந்தில், பேளுக்குறிச்சி / எஸ்.எம்.இரவிசந்திரன், சேந்தமங்கலம்)

சூரியப்புள்ளியும் சிற்றலை வானொலியும்: பகுதி - 9

நம் சூரியன் தன் சக்தியெல்லாம் இழந்து சிறிதாகிக் கொண்டே வரும்போது அது கரும்துளையாக மாறி மேற்கூறியது போல் அருகிலுள்ள அத்தனை கோள்களையும் தன் ஈர்ப்பு சக்தியால் உறிஞ்சிவிடும். அப்போது நம்மைச் சுற்றியுள்ள எல்லா கிரகங்களும் பூமி உள்பட சூரியனின் கரும்துளைக்குள் (ஸ்ட்ரா வைத்து ஜூஸ் உறிஞ்சப்படுவது போன்று) உறிஞ்சப்பட்டுவிடும். மறுபடியும் ஆற்றலின் ஏற்றதாழ்வுகளால் வெடிப்பு ஏற்பட்டு புது (சூரியன்கள்) விண்மீன்கள் பிறக்கும். இதுதான் நம் சூரிய குடும்பத்தின் பிறப்பும், இறப்பும் நிறைந்த தகவல்.

இதுவரை நாம் கண்டது. இத்தனை பெரிய ஆகாயமும் இதிலுள்ள எல்லா விண்மீன்களும், கேலக்ஸிகளும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் ஒரு சிறு புள்ளியிலிருந்து ஒரு பெரும் ஆற்றலிலிருந்து பிறந்து விரிந்து இருக்கின்றன. அன்று விரியத் தொடங்கிய ஆகாயம் இன்றும் விரிந்தபடி உள்ளது.

ஆகாயம் விரியும் போது அதிலுள்ள விண்மீன்கள் ஒன்றைவிட்டு ஒன்று விலகி தள்ளிப் போக வேண்டும். அவற்றுக்கு இடையே உள்ள தூரம் பெருகிக்கொண்டே போக வேண்டும். செம்பெயர்ச்சி என்ற அறிவியல் அடிப்படையில் இதனை அளக்க முடியும். விண்மீன்கள் விலகும் வேகம், தூரம் ஆகியவைகளை அளக்க ஹப்புள் மாறிலியை உபயோகித்தனர். செமபீய்டு வேரியபுள் என்ற ஒரு வகை விண்மீன்கள் உள்ளன. இவை தொடர்ந்து கண் சிமிட்டிய படி இருக்கும். அது அமைந்திருக்கும் தொலைவுக்கேற்ப, அதன் கண் சிமிட்டல் வேகம் அமையும். இதைப் பயன்படுத்தி ஹப்புள் மாறிலியை கணக்கிட்டுள்ளார்கள். இதன் அடிப்படையில் இந்த பிரபஞ்சம் பிறந்த தேதியை சரியாக, துல்லியமாக கணக்கிட முடியும் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

கடந்த 1995 முதல் 2004 வரை மேற்கொண்ட ஆராய்ச்சியின் விளைவாக இதுவரை 111 சூரியன்கள் அருகே கோளங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. தாய் சூரியனின் குறுக்காக அக் கோளங்கள் நகர்ந்து கொண்டிருப்பது அறியப்பட்டுள்ளது.
தொடரும்...
- கிழக்கு தாம்பரம் வி. பாலசுப்ரமணி, அலைபேசி: 99520 67358

Wednesday, June 10, 2009

சூரியப்புள்ளியும் சிற்றலை வானொலியும்: பகுதி - 8

ஒரு காலத்தில் நம் சூரியனில் போதிய ஆற்றல் உண்டாக்க அணுக்கருக்கள் தீர்ந்து போகும். அன்று நசுக்கத்தை ஈடு செய்ய வெப்ப விரிவு இல்லாது போய்விடும் உடனே நம் சூரியன் சுருங்கி முடிவில் சிறிய கொட்டைப் பாக்கு அளவுக்கு நொறுங்கிப் போய்விடும்! எனினும் எதுவுமே இல்லாத சூரியன் அல்ல அது. ஆரம்பத்தில் அந்த சூரியனில் இருந்த அதன் அளவற்ற எடையும், ஈர்ப்பு விசையும் அந்த சிறிய கொட்டைப் பாக்கு அளவு சூரியனுக்கும் இருக்கும்.

பல மில்லியன் சூரியன்கள் சேர்ந்து நசுங்கி மகா சக்தி வாய்ந்த மையக் கரும்துளைகள் உண்டாகி எப்போதும் இருந்து வருகின்றன. அவற்றைக் காண வானவியல் வல்லுநர்கள் பாடுபட்டு வருகிறார்கள்.

நல்ல வேளையாக நம் விண்வெளி வல்லுநர்கள் ஹப்புள் என்ற டெலஸ்கோப் அனுப்பியதுடன் மேலும் பல கோள்களை ஆராய செயற்கை கோள்களை அனுப்பி பல புதிய தகவல்களைப் பெற்றுள்ளனர். 3சி120 என்ற எண்ணுள்ள விண்மீன் குவியல் (கேலக்ஸி)நடுவில் ஒரு கரும்துளை ஆராய்ச்சி மேற்கொள்ளத் தக்கதாக ஒரு நிகழ்வு அமைந்தது. வாயைப்பிளந்தபடி பிரபஞ்சத்தின் நாடகக் காட்சிகளை வல்லுநர்கள் பார்த்து அதிசயித்தனர்.
கரும்துளைகளின் அபரிவிதமான ஈர்ப்பு விசையால் அதைச் சுற்றி உள்ள பொருள்களை எல்லாம் தன்னுள் ஈர்த்துக் கொள்ளும். (நீங்கள் ஸ்ட்ரா வைத்து ஜூஸ் உறிஞ்சுவது போல்). பள்ளத்தில் மண் சரிவது போல் மளமளவென்று அருகில் உள்ள பொருள்கள்யாவும் சரிந்து ஈர்க்கப்படும். தள்ளி நிற்கும் பொருள்கள் ஒரு வளையம் மாதிரி கரும்துளையைச் சுற்றி நின்று விடும். அதன்பிறகு பொருள் சரிவு மிதமாக தொடர்ந்து நடைபெறும்.

மேற்கூறிய வளையத்தை அக்ரீஷன் டிஸ்க் (திரட்சித் தட்டு) என்பார்கள். இந்தத் தட்டிலிருந்து ஆவேசமாக பல எக்ஸ் (ல) கதிர்கள் அடிக்கடி வெளிப்படும். இடைஇடையே ரேடியோ நுண் அலைகளும் வெளிப் படும். ஏற்கனவே இந்த நிகழ்வுகளைப் பற்றி நன்கு அறிந்த பிரபஞ்சவியல் வல்லுநர்கள், கரும்துளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்கூடாக அறிந்துள்ளனர்.
தொடரும்...
- கிழக்கு தாம்பரம் வி. பாலசுப்ரமணி, அலைபேசி: 99520 67358

Monday, June 08, 2009

சூரியப்புள்ளியும் சிற்றலை வானொலியும்: பகுதி - 7

சுமார் 100 முதல் 250 மில்லியன் ஆண்டு வாக்கில் முதல் தலைமுறை நட்சத்திரங்கள் உதிக்க ஆரம்பித்தன. ஆற்றல் ஏற்ற தாழ்வுகளால் மேகம் போன்ற ஆதி கேலக்ஸிகள் ஆங்காங்கே குவிய ஆரம்பித்தன. அவற்றிடையே முதல் தாரகைகள் கண் விழித்தன.

ஆரம்பத்தில் ஆதி கேலக்ஸிகள் ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்களைத் தவிர வேறு ஏதும் உருவாகாத நிலையில், ஆதி விண்மீன்கள் பெரிய ஹைட்ரஜன் கோளங்களாக பல்லாயிரம் மடங்கு ஒளி வீசிய படி இருந்தன.

பல விண்மீன்கள் சீக்கிரமே பழுத்து வெடித்துச் சிதறின. அந்தச் சிதறல்களில் ஏராளமான கனரக அணுக்களும் இருந்தன. சில சுருங்கி கரும்துளைகளாக மாறி கேலக்ஸி குவியல்களின் மையமாக விளங்க ஆரம்பித்தன.

ஒவ்வொரு சூரியனும் (அதாவது நட்சத்திரங்களும்) எப்போது நாம் சுருங்கி பாக்கு அளவுக்கு குறைந்து போவோம் என்று காத்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் அந்த நசுக்கமே அதன் விரிவுக்கும் காரணம். நசுக்கத்தால் ஏற்படும் அணுக்கரு பிணைவுகளால் அணுசக்தி வெளிப்படுகிறது. அந்த அணுசக்தியின் வெப்பம் சூரியனை பன் மாதிரி உப்ப வைக்கிறது. ஒரு பக்கம் நசுக்கமும், மறுபக்கம் விரிவும் சேர்ந்து சூரியனை ஒரு நிரந்தர கோளமாக நிறுத்தி வைக்கிறது.
தொடரும்...
- கிழக்கு தாம்பரம் வி. பாலசுப்ரமணி, அலைபேசி: 99520 67358

Saturday, June 06, 2009

மதுரை மாவட்டம் திருமங்களம் தாலுக்காவில் உள்ள டி.புதுபட்டியில் புதிய சமுதாய வானொலி

மதுரை மாவட்டம் திருமங்களம் தாலுக்காவில் உள்ள டி.புதுபட்டியில் புதிய சமுதாய வானொலியைத் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. "கிராமப் புற மக்கள் வளர்ச்சி குழுமத்திற்கு" [People's Association for Rural Development (PARD)]இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. விரைவில் இந்த அமைப்பு ஒலிபரப்பினைத் தொடங்க உள்ளது. இந்த வானொலி குறித்த மேலதிக விபரங்களுக்கு. திரு. ஜேம்ஸ் - 93441 03735

சூரியப்புள்ளியும் சிற்றலை வானொலியும்: பகுதி - 6

ஆரம்பத்தில் நம் பிரபஞ்சம் சுமார் 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் அணுவை விட மிகச் சிறியத் துகள்களான எலக்ட்ரான், புரோட்டான், பாஸிட்ரான், நியூட்ரான் போன்றவைகளாலும் சிறையில்லாத துகள்களான நியூட்டிரினோக்கள், ஆன்டி நியூட்டிரினோக்கள் மற்றும் ஃபோட்டான் ஆகியவைகளால் உண்டானது. இவை 10-28 செ.மீ. (தசம புள்ளிகளுக்குப்பின் 27 பூஜ்ஜியங்கள் எழுதி, பிறகு ஒன்று எழுத வேண்டும்).
பெரிய வெடிப்பு (பிக் பேங்) ஏற்பட்டதும் சில நொடிகளில் மிக அடர்த்தியான இந்த மிகச் சிறிய துகள்களின் பெரிய வெடிப்பு ஏற்பட்டு நியூட்ரான் சிதைந்து புரோட்டானாகவும், எலக்ட்ரானாகவும் மாறி அதிக சக்தியை வெளிப்படுத்தியது. (நியூட்ரான்-புரோட்டான் பிளஸ் எலக்ட்ரான் பிளஸ் சக்தி)

ஹைட்ரஜன் அணுவின் ஒரு அணுக்கருவில் (நியூக்கியஸ்) ஒரு புரோட்டான் உள்ளதால் நியூட்ரான் புரோட்டானாக மாறும் சிதைவு நம் பிரபஞ்சத்தில் ஹைட்ரஜன் உண்டாவதற்கு ஆதாரமாக உள்ளது.

ஹைட்ரஜன் அணுக்கரு, அதிகமான வெப்பத்தில் ஹீலிய அணுக்கருவாக மாறும் போது பல மில்லியன் டிகிரி, வெப்பம் ஏற்படுகிறது. ஹீலியம் எரியும்போது கார்பன் (கரி) அணுக்கரு முதலில் உண்டாகிறது. பிறகு இரும்பு போன்ற தனிமங்கள் ஏற்படுகின்றன.
தொடரும்...
- கிழக்கு தாம்பரம் வி. பாலசுப்ரமணி, அலைபேசி: 99520 67358

Thursday, June 04, 2009

சூரியப்புள்ளியும் சிற்றலை வானொலியும்: பகுதி - 5

பெரு வெடிப்பு2003-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி வான் இயல் வல்லுநர்கள் நம் பிரபஞ்சம் பிறந்த தேதியை ஓரளவுக்குத் துல்லியமாகக் கண்டு பிடித்ததாகத் தகவல் வெளியிட்டுள்ளார்கள். பிரபஞ்சம் முதலில் எவ்வாறு இருந்தது என்ற ஒரு வரைபடம் (மேப்) ஒரு செயற்கைக் கோள் தந்த தகவல்படி வரையப்பட்டுள்ளது.Hubble என்ற செயற்கைக்கோள் பெரிய வெடிப்பின் போது ஏற்பட்டபோது எஞ்சியிருந்த ரேடியோ மைக்ரோவேவ் (நுண்அலை) களின் வேறுபாடுகளைக் கணக்கிட்டு ஒரு வரைபடம் தந்துள்ளது. இந்த வரைபடம் முதன்முதலில் விண்மீன்கள் நமது பிரபஞ்சத்தில் தோன்றியதையும் பெரிய வெடிப்பிற்குப் பின் 200 பில்லியன் ஆண்டுகள் கழித்து) எப்படி பெரிய வெடிப்பு ஏற்பட்டது என்பதற்கு ஆதாரமாக உள்ளது.

Hubble கோள் தகவல்கள்படி பிரபஞ்சம் (13.7 பில்லியன் ஆண்டுகள் 1 %) வயதுள்ளது. அதன் நிறையில் 4% அணுக்களும், 23% இருள் பொருள் (டார்க் மேட்டர்) உள்ளதாகவும் பெரிய வெடிப்பின் போது ஏற்பட்டு எஞ்சியுள்ள துகள்கள் இன்னும் உள்ளன என்றும் 73% இருள் ஆற்றல் (டார்க் எனர்ஜி) இருப்பதாகவும் வல்லுநர்கள் அறிவித்துள்ளார்கள்.
நம் பிரபஞ்சத்தில் அதிகமாகக் காணப்படும் தனிமங்கள்:

1) 90 - 95% ஹைட்ரஜன் அணுக்கள் பிரபஞ்சத்தில் உள்ளன.
2) 4 - 9% ஹீலியம் அணுக்கள் உள்ளன.
3)மற்ற எல்லா தனிமங்களும் சேர்ந்து சுமார் 1% என்றளவில் பிரபஞ்சத்தில் உள்ளன.
4) லித்தியம், பெரிலியம், போரான் போன்ற தனிமங்கள் மிகவும் குறைவு. இரும்பு அதிகமாக இருப்பினும் ஆக்ஸிஜன் முதல் ஈயம் (லெட்) வரை மற்ற தனிமங்கள் அதிகம் இல்லை.
தொடரும்...
- கிழக்கு தாம்பரம் வி. பாலசுப்ரமணி, அலைபேசி: 99520 67358

Wednesday, June 03, 2009

தமிழ் இணைய மாநாடு -2009- உத்தமம் அறிவிப்பு.

2009ஆம் ஆண்டுக்கான உத்தமத்தின் "தமிழ் இணைய மாநாடு" இந்த முறை ஜெர்மனியில் உள்ள கொய்ல்ன் நகரத்தில் வரும் அக்டோபர் 9 முதல் 11 வரை நடைபெற உள்ளது. மேலதிக விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

Monday, June 01, 2009

சூரியப்புள்ளியும் சிற்றலை வானொலியும்: பகுதி - 4

ஒவ்வொரு சந்ததி சூரியர்கள் வெடித்து மறையும் போது, முன்பு இருந்ததை விட பலதரப்பட்ட புதிய அணுக்கள் உருவாகி இருந்தன. அவை மீண்டும் மீண்டும் திரண்டு புதிய ஆதவர்களாக உருவாகி மறைந்து போயின. இப்படித்தான் நாம் காணும் அனைத்து மூலகங்களும் உருவாயின. ஒரு சூரியன் எங்கோ, என்றோ ஒரு நாள் வெடித்து மாண்டபின் கக்கிய துகள்களிலிருந்து வெளிபட்டவை நம் பூமிபோன்று திரண்டு மண், கல், தங்கம், வைரம், வெள்ளி என்று பல்வேறு கனிமங்களாக நமக்குப் பயன்படுகின்றன. இன்றைய நட்சத்திரக் குவியல்கள் (கேலக்ஸிகள்) 12 முதல் 14 பில்லியன் ஆண்டுகளுக்குப்பின் தோன்றி வாழ்ந்து வருகின்றன.
இன்றைய நம் சூரியனையும் ஆதி சூரியனையும் 10 பில்லியன் வருடங்களுக்கு (2008) முன் ஒப்பிட்டுப் பார்த்ததில் கீழ்க்கண்ட தகவல்கள் வியப்பூட்டும் வகையில் உள்ளன.
தொடரும்...
- கிழக்கு தாம்பரம் வி. பாலசுப்ரமணி, அலைபேசி: 99520 67358