இலங்கை நேயர்கள் கவனத்திற்கு: பிபிசி தமிழோசை
நேயர்களே, நேற்றைய (28/12/2007) பிபிசி தமிழோசை ஒலிபரப்பில் இலங்கை நேயர்களுக்கு நேரிட்ட சில பிரச்சினைகள் குறித்து விளக்க விரும்புகிறோம்.
நேற்று நவம்பர் 27 ஆம் திகதி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண்பலை வலையமைப்பு மூலமாக இலங்கை நேயர்கள் கேட்ட எமது நிகழ்ச்சி, எமது முழுமையான நிகழ்ச்சி அல்ல.
இலங்கை நேயர்கள் கேட்ட அந்த நிகழ்ச்சி, காலதாமதமாக மறு ஒலிபரப்பு செய்யப்பட்டது, அது மட்டுமல்லாமல், எங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படாமலும், எமது அனுமதியைப் பெறாமலும், நிகழ்ச்சியின் சில பகுதிகள் வெட்டப்பட்டன. அந்த நிகழ்ச்சி எங்களால் வெட்டப்படவில்லை என்பதை நேயர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
சிற்றலை ஒலிபரப்பு மூலமாகவும், இணைய தளம் மூலமாகவும் கேட்கும் நேயர்கள் முழுமையாக இந்த நிகழ்ச்சியை கேட்டிருப்பார்கள்.
நன்றி: பிபிசி தமிழோசை
Source: http://www.bbc.co.uk/tamil/news/story/
2004/05/040528_tamil_currentaffairs.shtml








