சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Monday, March 12, 2012
தைவான் / எகிப்து வானொலிகளின் புதிய வண்ண அட்டைகள்
Saturday, March 10, 2012
சந்தைக்கு புதுசு
வானொலிப் பெட்டிகள் பல்வற்றை பார்த்த உங்களுக்கு இது புதிதாக இருக்கும். ஆனாலும்,
இன்று மொபைலில் வானொலிகள் கேட்க முடிவதால், இது ஆச்சரியமாக இருக்காது.
ஆனாலும் பேனாவில் எழுதிக்கொண்டே பாட்டு கேட்பதில் ஒரு சுகம் நிச்சயம் இருக்கும்.
செய்தியாளர்கள் இதனை ஒலிப்பதிவு கருவியாகவும் பயன்படுத்தலாம். பதிவு செய்த செய்தியைக் கேட்டுக் கொண்டே அதனை எழுத்தாக்கம் செய்யலாம். விலை மற்றும் மேலதிக விபரங்களுக்கு
| INQUIRE NOW |
FOB Price: Get Product Price
Monday, March 05, 2012
இந்தியப் பெருங்கடலில் ஒரு வானொலி
டியாகோ கார்சியா: இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு நேர் கீழாக அமைந்துள்ள ஒரு சிறு தீவு தான் டியாகோ கார்சியா. அமெரிக்க படை வீரர்கள் தங்கியுள்ள இந்த தீவினுல் செல்வது அவ்வளவு எளிதள்ள. ஆனால் அவர்கள் ஒலிபரப்பும் வானொலியான AFRTS-சை நேயர்கள் கேட்கலாம். கேட்பதோடு மட்டும் நின்றுவிடாமல் நீங்கள் அவர்களுக்கு கடிதம் எழுதினால் அதற்கு பதிலும் வண்ண அட்டை வடிவில் உங்களுக்கு அனுப்புகின்றனர். தற்பொழுது
இவர்களது நிகழ்ச்சிகளை தினமும் இந்திய நேரம் மாலை 6 மணி முதல் (1230 உலக நேரம்) ஆங்கிலத்தில் 12759 kHz USB அலைஎண்கள் 22 மீட்டரில்
கேட்கலாம். தொடர்பு கொள்ள இவர்களது முகவரி:American Forces Radio and Television Service (AFRTS),
NMC Det AFRTS-DMC,
23755 Z St., Bldg. 2730,
Riverside, CA 92518-2017,
USA.
Email: qsl@dodmedia.osd.mil
டியாகோ கார்சியா தவிர இவர்களது நிகழ்ச்சிகள் Barrigada(Guam), Keflavik(Iceland), Pearl Harbour(Hawaii), Key West(Florida) and Peurtorica ஆகிய இடங்களில் இருந்தும் ஒலிபரப்பாகி வருகிறது. (Babul Gupta, Rajeesh Ramachandran).
Saturday, March 03, 2012
80 வயதை எட்டும் பிபிசி உலக சேவையின் புகைப்படத் தொகுப்பு
பிபிசி உலக சேவை வானொலியானது பிபிசியின் சாம்ராஜ்ஜிய சேவையாக 1932ஆம் ஆண்டு ஆரம்பித்திருந்தது. அந்தக் காலத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருந்த சிற்றலை ஒலிபரப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொலைதூரப் பிரதேசங்களுக்கு இந்த வானொலி ஒலிபரப்பப்பட்டது. இந்த வானொலியில் வரும் செய்திகள் சிறப்பாகவோ சுவாரஸ்யமாகவோ இருக்காது என்று பிபிசியின் அந்நாளைய தலைமை இயக்குநர் ஜான் ரீத் கணித்திருந்தாலும், அக்கணிப்பு பொய்யாகிப்போய் லண்டனின் பிராட்காஸ்டிங் ஹவுஸில் இருந்து ஒலிபரப்பபட்ட இந்த வானொலிக்கு நல்ல வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்தன. பிபிசி உலக சேவையின் வரலாற்றினை பறை சாற்றும் மேலதிக 9 அறியப் புகைப்படங்களை கிழ்கண்ட தொடுப்பில் காணலாம்.
பிபிசி உலக சேவை பற்றி தமிழோசையின் முன்னாள் தயாரிப்பாளர்கள்
பிபிசி தமிழோசை எண்பது வயதை எட்டும் இத்தருணத்தில் தமிழோசையின் முன்னாள் ஆசிரியர்களான மஹாதேவன், சம்பத்குமார் மற்றும் மூத்த தயாரிப்பாளரான ஆனந்தி ஆகியோர் பிபிசி உலக சேவையில் பணியாற்றிய தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர். அவர்களின் குரலை கீழ்கண்ட தொடுப்பில் கேட்கலாம்.
Monday, February 27, 2012
காலநிலையை மட்டும் அறிவிக்க வானொலி
ஆஸ்திரேலியா: உலகெங்கும் காலநிலையை மட்டும் அறிவிக்க என்று
தனியாக வானொலிகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு சில சமயம்
சிற்றலையிலும் இந்த வானொலிகளைக் கேட்கலாம். இந்த வானொலிகளின் முக்கிய நோக்கமே கடலில் பயணிக்கும் மாலுமிகள் மற்றும் மீனவர்களுக்கு இவர்கள் அவ்வப்போதைய காலநிலைகளை அறிவித்த வண்ணம் இருப்பர்.
இந்த வானொலிகளை இங்கு தமிழ்நாட்டிலும் அவ்வப்போது கேட்கலாம். ஆங்கிலத்தில் ஒலிபரப்பாகும் இந்த வானொலிக்கு நிகழ்ச்சி தர அட்டவணை அனுப்பினால், அருமையான வண்ண அட்டையை லேமினேஷன் செய்து அனுப்புகின்றனர். அவர்களது ஒலிபரப்பினை இந்திய நேரம் காலை 8
மணிக்கு (0230 UTC) ஆங்கிலத்தில் 11030, 13920 அலைஎண்கள் 25 மீட்டரில்
ஒலிபரப்பாகிறது. தொடர்பு கொள்ள இவர்களது முகவரி:
GPO Box 1289,
Melbourne, VIC
3001C, Australia.
(700 Collins Street, Docklands)
Web: http://www.bom.gov.au/inside/offices/
(Alokesh Gupta)
Subscribe to:
Posts (Atom)



