சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Tuesday, May 29, 2018
Radio Drama Festival 2018
வானொலி நாடக விழா இந்த ஆண்டு 3 ஜூன் முதல் 8 ஜூன் 2018 வரை தினமும் இரவு 8 மணிக்கு தமிழகத்தின் அனைத்து அகில இந்திய வானொலிகளில் ஒலிப்ரப்ப உள்ளது.
Tuesday, May 22, 2018
கிஸான் வாணி
‘கிஸான் வாணி’ நிகழ்ச்சிப் பிரிவு பொறுப்பாளர் ஆர்.வெங்கடேஸ்வரன் கூறியபோது, “மத்திய அரசின் வேளாண் மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தின் நேரடி நிதியுதவியுடன் 2004 பிப்ரவரி முதல், நாட்டில் தேர்வு செய்யப்பட்ட 96 வானொலி நிலையங்களில் கிஸான் வாணி நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டு வருகிறது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 12 வானொலி நிலையங்களில் காரைக்கால், நாகர்கோவில் ஆகிய 2 வானொலி நிலையங்களுக்கு மட்டுமே இந்நிகழ்ச்சிக்கென மத்திய வேளாண் அமைச்சகத்தின் மூலம் நேரடியாக ஆண்டுக்கு ரூ.12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மேலும் படிக்க
Saturday, May 19, 2018
திருச்சி வானொலிக்கு வயது 80
திருச்சி வானொலி நிலையம் தொடங்கி 80 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி ஆண்டு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அதன் நிகழ்ச்சி இயக்குநர் கே. நடராஜன்.
கடந்த 1939 மே 16-ல் தொடங்கப்பட்ட அகில இந்திய திருச்சி வானொலி நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற 80ஆவது ஆண்டு தொடக்க விழாவில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை 10 மணிக்கு மங்கள இசை, திருவையாறு பி.வி. ஜெயஸ்ரீ குழுவினரின் பாமாலை நிகழ்ச்சியைச் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார், மாநகரக் காவல் ஆணையர் அ. அமல்ராஜ், முன்னாள் காவல் துறை மாவட்டக் கண்காணிப்பாளர் அ. கலியமூர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
விரிவாக படிக்க
Wednesday, May 16, 2018
AIR Tiruchi celebrates it's 80th anniversary / திருச்சி வானொலிக்கு 80 வயது
திருச்சி வானொலிக்கு இன்று 80 வயது. காலையிலேயே தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொன்னேன். என் வாழ்த்துச்செய்திவானொலியில் நேரலையில் ஒலிபரப்பானது. பாரம்பரியக் கலை வடிவங்களை , இசையை வானொலி வளர்த்துவருகிறது. திருச்சி வானொலியில் ஒலிபரப்பாகும் நாதஸ்வர இசை வெகு கம்பீரமானது. எல்லா உயிர்களும் அவ்விசைக்கு மயங்கிக் கிடக்கின்றன. இந்நிலையம் கர்நாடக இசையை இராகம் DTH அலைவரிசையில் ஒலிபரப்பி வருகிறது. பண்பலை ஒலிபரப்பும் உண்டு. வாழ்த்துகள் வானொலி என்னும் தேனொலிக்கு !!!
- ஜெயக்குமார்
Monday, May 14, 2018
Radio World's eBook "New Directions for HD Radio"
ரேடியோ வோல்ட் வெளியிட்டுள்ள மிக முக்கியமான புத்தகம் தான் இந்த New Directions for HD Radio. இலவசமாக கிடைக்கும் இந்த புத்தகத்தினை பெற கீழ்கண்ட இணைப்பிற்கு செல்லுங்கள்.
Radio World's eBook "New Directions for HD Radio" explores what's next for the digital radio format as well as best practices for 2018 and beyond. Nothing sparks passion among radio technologists like discussion of the future of digital radio.
Via Jaisakthivel
Ardicdxclub
India
Sent from
India Radio Forum / இந்தியா ரேடியோ போரம் - 201
தனியார் துறை பண்பலை வானொலிகளின் சங்கமம். "இந்தியா ரேடியோ போரம் - 2018" வரும் மே 18 அன்று புது தில்லி, குருகிராமில் உள்ள லீலா ஆம்பியன்சில் நடைபெற உள்ளது.
A warm welcome to the 13th edition of the 'India Radio Forum and Excellence in Radio Awards 2018'. This is to celebrate the growth of a promising new chapter in the radio industry on the back of Demonetisation, GST & RERA roll out! The forum not only honors the outstanding work done by radio professionals, but is also dedicated to bringing forth interesting discussions from industry stalwarts.
https://www.indiaradioforum.com/
Sent from Yahoo Mail for iPhone
Sunday, May 13, 2018
RVA Closing / வேரித்தாஸ் வானொலி நிறுத்தப்படுகிறது
முக்கிய செய்தி:
வேரித்தாஸ் வானொலியின் அனைத்து சிற்றலை ஒலிபரப்புகளும் வரும் 30 ஜூன் 2018-டன் நிறுத்தப்படுகிறது. இனி வேரித்தாஸ் வானொலியை இணையத்தில் மட்டுமே கேட்கமுடியும் என AWR Wavesacn தெரிவிக்கிறது.
There is nothing to be found on the RVA website about its closing:
http://www.rveritas-asia.org/about-us
Here`s the schedule for what we now know to be its final sesquimonth:
http://hfcc.org/data/schedbyfmo.php?seas=A18&fmor=RVA
Sent from Yahoo Mail for iPhone
Subscribe to:
Posts (Atom)




