Thursday, July 31, 2008

பெர்சூயஸ்: புதிய சிற்றலை மென் பொருள்

து நாள் வரை நாம் வானொலிப் பெட்டிமூலமே சிற்றலை ஒலிபரப்புகளை கேட்டுவந்துள்ளோம். இதன் அடுத்த கட்டமாக நாம் கம்ப்யூட்டர் மூலம் வானொலிகளை கேட்கத்துவங்கினோம், இப்பொழுது இன்னும் ஒரு படிமேலே சென்று சிற்றலை வானொலிகளை கம்ப்யூட்டருடன் இணைத்து கேட்பதற்காகவே தனியான மென்பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.இத்தாலிய நிறுவனமான மைக்ரோ டெலிகாம் பெர்சூயஸ் புதிய சிற்றலை மென் பொருளை ICOM-க்கு போட்டியாக விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் 10 KHz முதல் 30 KHz வரையிலான வானொலிகளின் ஒலிபரப்புகளைக் கேட்கலாம். எந்த வானொலிப் பெட்டிகளுடனும் ஒப்பிட முடியாதத் தொழில் நுட்பத்துடன் வெளிவந்துள்ள இந்த வானொலிப் பெட்டியைக்கேட்க கம்ப்யூட்டர் அவசியம் தேவை.

Spectrum எனப்படும் ஒலிக்கற்றைகளைத் தெளிவாகக் காணும் வசதியுடன் இந்த மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. நல்ல ஸ்பீக்கர்இணைக்கப்பட்டால், முழுமையாக இதன் ஒலித்தரத்தினை அனுபவிக்கலாம். அடிப்படைவசதிகள் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களிலும் இந்த வானொலி மென்பொருளை இணைத்துக் கேட்கலாம்.இந்த சிற்றலை வானொலி மென்பொருளின்விலை ரூ 52,000/- கிடைக்குமிடம்: Martin Lynch &Sons Ltd, Outline House, 73, Guild Ford Street,Chertsey, Surrey, KT16 9AS, UK. Email: sales@hamradio.co.uk

Tuesday, July 29, 2008

இலங்கை வானொலியின் 2500 மீட்டர் உயரமுள்ள ஆன்டனா


இலங்கை ரூபவாஹினி கார்பரேசன் தனது சக்தியை அதிகரிக்க உள்ளதாக புராட்காஸ்ட் ஆசியா இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்புக்கு அருகில் உள்ள பிதிருடலகா மலையின் உச்சியில் சக்தி வாய்ந்த ஜம்ப்ரோ வகை ஆன்டனாவை நிறுவ உள்ளது. இந்த மலையானது 2500 மீட்டர் உயரமுள்ளதால், இலங்கை முழுவதும் இந்த ஒரு இடத்தில் இருந்தே இலங்கை முழுவதும் ஒலிபரப்ப முடியும். பண்பலை ஒலிபரப்பினை இந்த ஆன்டனா மூலம் செய்தால், தமிழக நேயர்களும் இலங்கை வானொலியின் நிகழ்ச்சிகளை கேட்டக வாய்ப்புள்ளது.

Friday, July 18, 2008

சர்வதேச வானொலி - ஜூன்/ஜூலை 2008

வெளிவந்து விட்டது இந்த மாத சர்வதேச வானொலி இதழ். பத்தாவது ஆண்டுமலராக அதிக பக்கங்களுடன் மலர்ந்துள்ளது இதில், ஆண்டுமலர் சிறப்புப் போட்டி ஒன்றை வைத்துள்ளோம். அனைவரும் இதில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம். இதழைப் படிக்க கீழ்கண்ட தொடுப்பினைச் சொடுக்கவும்.

Tuesday, July 08, 2008

சிங்கப்பூர் வானொலி நிறுத்தப்பட உள்ளது...

இன்று காலை மின் அஞ்சலில் சிங்கப்பூர் வானொலியின் தலைமை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எழுதியிருந்த கடிதத்தில் வரும் ஜூலை 31, 2008-டன் அனைத்து சிற்றலை சேவைகளையும் நிறுத்த வுள்ளனராம், அது தொடர்பாக ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் தொலைப்பேசி ஊடாக நான் பேச வேண்டும் என கேட்டனர். அது ஒரு புரம் இருக்க.. தொடர்ந்து உலக அளவில் சிற்றலை வானொலிகள் நிறுத்தப்பட்டு வருவது வருத்தமளிக்கிறது.