Showing posts with label சிங்கப்பூர் வானொலி. Show all posts
Showing posts with label சிங்கப்பூர் வானொலி. Show all posts

Monday, March 13, 2017

சிங்கப்பூரில் இரண்டு புதிய வானொலி நிலையங்கள்

சிங்கப்பூரில் இரண்டு புதிய இலவச வானொலி நிலையங்கள் வரவுள்ளதாகத் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
குத்தகைக்கு விடப்பட்ட FM89.3, FM96.3 அலைவரிசைகள் SPH Radio நிலையத்தின் கீழ் செயல்படும்.
ஒன்று சீன வானொலி நிலையத்துக்கானது.
அது 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் ரசனைக்கேற்றவாறு இயங்கும்.
ஆரோக்கியம், நல்வாழ்வு, ஓய்வுக்காலத்துக்குத் திட்டமிடுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய வாழ்வியல் குறிப்புகளை முதியவர்களுக்கு வழங்குவது அதன் நோக்கம்.
நிதித்துறை பற்றிய விவரங்களை ரசிகர்களுக்குக் கொண்டுசேர்க்க வகைசெய்வது இரண்டாவது வானொலி நிலையத்தின் நோக்கம்.
ஆங்கில வானொலி நிலையமான அது,  நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், வர்த்தகர்கள் உட்பட அனைவருக்கும் நிதித் துறை நிலவரம் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும்.அந்த இரண்டு புதிய நிலையங்களும் டிசம்பரில் அறிமுகம் காணும்.
நன்றி / http://origin-tamilseithi.mediacorp.sg

Tuesday, July 08, 2008

சிங்கப்பூர் வானொலி நிறுத்தப்பட உள்ளது...

இன்று காலை மின் அஞ்சலில் சிங்கப்பூர் வானொலியின் தலைமை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எழுதியிருந்த கடிதத்தில் வரும் ஜூலை 31, 2008-டன் அனைத்து சிற்றலை சேவைகளையும் நிறுத்த வுள்ளனராம், அது தொடர்பாக ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் தொலைப்பேசி ஊடாக நான் பேச வேண்டும் என கேட்டனர். அது ஒரு புரம் இருக்க.. தொடர்ந்து உலக அளவில் சிற்றலை வானொலிகள் நிறுத்தப்பட்டு வருவது வருத்தமளிக்கிறது.