Tuesday, November 26, 2013

வானொலி அறிவிப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் துறை, தொழில் முனைவோர் மற்றும் திறன் வளர் மையத்தின் அனுசரணையுடன் வானொலியில் நேரலை” என்ற தலைப்பிலான வானொலி அறிவிப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறையை 27 நவம்பர் 2013 புதன்கிழமை ஏற்பாடு செய்துள்ளது.

இந்தப் பயிற்சிப்பட்டறையில் பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் துறையின் மாணவர்களுக்கு துறை சார்ந்த வல்லுநர்கள் நேரலை நிகழ்ச்சிகளை தயாரிப்பது எப்படி? என்ற வகையில் பயிற்சியினை அளிக்கவுள்ளனர்.

திருநெல்வேலி அகில இந்திய வானொலியின் நிலைய இயக்குநர் (பொறுப்பு) பிரபஞ்சம் எஸ். பாலசந்தர் அவர்கள் “நேரடி நிகழ்ச்சிக்களில் தமிழ் உச்சரிப்பு” என்ற தலைப்பிலும், சூரியன் பண்பலையின் மூத்த அறிவிப்பாளர் ச.வள்ளிமணவாளன் அவர்கள் “பொது வெளியில் நேரலை” என்ற தலைப்பிலும், ஹலோ பண்பலையின் அறிவிப்பாளர் வெங்கட்ராமன் “கலையகத்தில் நேரலை” என்ற தலைப்பிலும் மாணவர்களுக்கு நேர்முகப் பயிற்சியினை வழங்க உள்ளனர்.

பயிற்சிப் பட்டறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் பெ. கோவிந்தராஜூ இது பற்றிக் கூறும் பொழுது, “இது போன்ற பயிற்சிகளின் மூலம் எங்கள் தொடர்பியல் துறை மாணவர்கள் படிப்பு முடிந்து வேலைக்கு செல்லும் பொழுது ஏற்படும் சவால்களை திறம்பட சமாளிக்க முடியும்” என்றார்.



பயிற்சிப் பட்டறையை திறன் வளர் மையத்தின் அனுசரணையுடன் தொடர்பியல் துறையின் உதவிப் பேராசிரியர் தங்க. ஜெய்சக்திவேல் ஒருங்கிணைத்துள்ளார்.




No comments: