Monday, July 23, 2018

ஊடகங்களில் காலமும் வெளியும்

Immanuel Kant அவர்களின் கூற்றுப்படி பொதுத்துறை ஊடக வெளியை நுகர்வதற்கான (sense the space experience) வாய்ப்பு ஒன்று எனக்கும் கிடைத்தது. அந்த வெளியில் என்னால் Invariance மற்றும் covariance-ஐ காண முடிந்தது.

பொதுவாகவே 'வெளி' - ஊடகங்களில் மிக அருமையாக பயன்படுத்தப்படுகிறது. அந்த வெளியை சரியான வகையில் பயன்படுத்தும் ஒரு ஊடகமாக பொதிகை தொலைக்காட்சி இருந்து வந்துள்ளது. வெளி-யில் வண்ணங்கள் முக்கியமானதாகிறது. 'ழகரம்' அதை சரியான முறையில் கையாண்டுள்ளது. 12.05-க்கு தொடங்க வேண்டிய நிகழ்ச்சி. 12.00 மணி வரை பதட்டமின்றி 'ழகரம்' குழுவினர் அந்த வெளியைப் பயன்படுத்தியது, முதன் முறையாக நேரலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாருக்கும் பதட்டத்தினை ஏற்படுத்தும். ஆனால் நெறியாள்கை செய்த முனைவர் ஜெய்கணேஷ் ஆகட்டும், அவரோடு இணைந்து குரல் கொடுத்த செல்வ முத்துமாரி ஆகட்டும், அந்த கலையக வெளியை அருமையாக பயன்படுத்தினர்.

Endurantism and perdurantism-த்தினையும் அந்த வெளியில் காண முடிந்தது.David Lewis இதனை மிக அழகாக கூறியுள்ளார். அவரது பார்வையில் நான் 'ழகரத்தினை' பார்த்தது கொஞ்சம் அதிகம் தான். எனினும் அதன் "temporal parts" -ஐ என்னால் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

காலமும் வெளியும் ஒரு நேரலை நிகழ்ச்சியில் மிக முக்கியமானதாகிறது. அங்கே "temporal parts"
முக்கியமாகிறது. காலத்தினை கட்டுப்படுத்துவது இயலாது. ஆனால் நெறியாளர், நேரலை நிகழ்ச்சியில் அதனை செய்தே ஆகவேண்டும். அதில் இம்மியளவும் முகத்தில் பதட்டத்தினைக் காட்டாமல் இருப்பது மிக முக்கியம். அடுத்து குழுப் பணி, ஒரு போட்டி நிகழ்ச்சிக்கு பக்க பலமாக இருப்பது தொழில்நுட்பக் குழு. எந்த இடத்திலும், ஒரு சிறு தவறு நேர்ந்தாலும், நிகழ்ச்சியின் தன்மை முற்றிலும் மாறிவிடும். அதனை கட்டுக்கோப்பாக கொண்டு செல்லும் பொறுப்பு அந்த களத்தின் ஒருங்கிணைப்பாளருக்கு உண்டு. நண்பர், பிரகாஷ் Prakazz Durai மிக கவனமாக அனைத்து பணிகளையும் மேற்கொண்டார்.

அடுத்து, நிகழ்ச்சி தயாரிப்பாளர். திருமதி.சந்தியா அவர்கள், அந்த 'ழகரம்' அரங்கின் காலத்தினையும், வெளியையும் ஒரு சேரக் கட்டுப்படுத்தியது சிறப்பாக இருந்தது. எந்த ஒரு நிகழ்ச்சிக்கும், நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒரு தூண். ஒரு பொதுத்துறை தொலைக்காட்சியில் இது போன்ற நிகழ்ச்சி தொடர்ந்து 46 வாரங்கள் நடைபெற்றுக் கொண்டு இருப்பதே ஒரு பெரிய சாதனை. அதற்கு மிக முக்கிய காரணம், அதன் உள்ளடக்கம். அதனை செவ்வனே ஒவ்வொரு வாரமும் ஆய்வுப் பணிகளுக்கு இடையிலும் எடுத்துச் செய்து வரும் நண்பர் முனைவர். ஜெய்கணேஷ் அவர்களுக்கு ஒரு சபாஷ்.

21 ஜூலை 2018 அன்றைய 46-வது வார 'ழகரம்' நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ஸ்ரீ கிருஸ்ணசாமி மகளிர் கல்லூரி மற்றும் கன்னிகா பரமேஸ்வரி கல்லூரி மாணவிகளுடன் கலந்து கொண்டது 'வெளியைக் காலத்திற்குள்' அடக்கிய ஒரு நிகழ்வாக இருந்தது.

அந்த நிகழ்ச்சியை காண
https://www.youtube.com/watch?v=q6dc5b6vsF0&feature=youtu.be


#zhagaram #dd #podhigai #

Inline image

Inline image


No comments: