Monday, December 17, 2018

காரைக்கால் வானொலி

 
காரைக்கால் அகில இந்திய வானொலி நிலையத்தின் ஒலிபரப்புத் திறன் அதிகரிப்பு சேவையை மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.

காரைக்கால் பண்பலை வானொலி (100.3) ஒலிபரப்புத் திறன் 6 கிலோ வாட்டிலிருந்து 10 கிலோ வாட்டாக திங்கள்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி நிலைய வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் கலந்துகொண்டு, நிலைய கட்டுப்பாட்டு அறையில் புதிய கூடுதல் திறனை மக்களின் பயன்பாட்டுக்குத் தொடங்கிவைத்தார்.
நிலைய நேரடி நிகழ்ச்சியில், நேயர்களிடையே ஆட்சியர் பேசினார். காரைக்கால் வானொலி நிலையத்தில் ஒலிபரப்புத் திறன் அதிகரிப்பு செய்ததன் மூலம் பல மாவட்டங்களைச் சேர்ந்த நேயர்கள் நல்ல பயனை அடைவார்கள். கஜா புயலின்போது, காரைக்கால் வானொலியின் சேவை மிகுந்த பாராட்டுக்குரியது.
தொடர்ந்து புயல் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியதன் மூலம் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. வானொலி நிலையத்தின் பணி வரவேற்புக்குரியதாக இருந்தது. தொடர்ந்து அரசின் நலத் திட்டங்களின் மூலம் மக்கள் பயன்பெறும் வகையில் சேவையை தொடர்ந்து செய்ய வேண்டும். ஒலிபரப்புத் திறன் அதிகரிப்பு சேவை வெற்றிபெற வாழ்த்துவதாக நிகழ்ச்சியின்போது ஆட்சியர் குறிப்பிட்டார்.

விரிவாக படிக்க

No comments: