2025ஆம் ஆண்டு வசந்த விழா சீனாவில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. சீனப் புத்தாண்டு விழா என பொதுவாக அறியப்பட்ட வசந்த விழா, யுனெஸ்கோவின் கலாச்சாரப் பாரம்பரிய பட்டியலில் இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
சீன அஞ்சல் துறை இந்த ஆண்டும் இதனை சிறப்பு செய்யும் வகையில் சிறப்பு அஞ்சலட்டைகளை வெளியிட்டுள்ளது. இவை அனைத்துமே Pre-paid அஞ்சலட்டைகள். அப்படியெனில், நீங்கள் தனியாக அஞ்சல் தலை ஒட்ட வேண்டியது இல்லை.
இது போன்று புதிதாக எது வெளிவந்தாலும், அதனை உடனடியாக வாங்கி அனுப்பும் நண்பர் Han Hao அவர்களுக்கு இந்த சமயத்தில் நன்றி சொல்லியே ஆகவேண்டும். எதையும் எதிர்பார்க்காமல் செய்யும் நண்பர்களுக்கு நாம் என்ன செய்துவிடப் போகிறோம்! அன்பைத் தவிர!!
சீன ஊடகக் குழுமத்தின் தமிழ் பிரிவும், சீனப் பாரம்பரிய பண்பாடுகளுடன் கூடிய பாடல்கள், ஆடல்கள் உள்ளிட்ட பல்வகை நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப உள்ளது. கேட்டு மகிழத் தவறாதீர்கள்.
#