Showing posts with label சீன வானொலி. Show all posts
Showing posts with label சீன வானொலி. Show all posts

Monday, January 27, 2025

சீனாவின் வசந்த விழா அஞ்சலட்டைகள்


2025ஆம் ஆண்டு வசந்த விழா சீனாவில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. சீனப் புத்தாண்டு விழா என பொதுவாக அறியப்பட்ட வசந்த விழா, யுனெஸ்கோவின் கலாச்சாரப் பாரம்பரிய பட்டியலில் இந்த ஆண்டு  தேர்வு செய்யப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. 



சீன அஞ்சல் துறை இந்த ஆண்டும் இதனை சிறப்பு செய்யும் வகையில் சிறப்பு அஞ்சலட்டைகளை வெளியிட்டுள்ளது. இவை அனைத்துமே Pre-paid அஞ்சலட்டைகள். அப்படியெனில், நீங்கள் தனியாக அஞ்சல் தலை ஒட்ட வேண்டியது இல்லை. 


இது போன்று புதிதாக எது வெளிவந்தாலும், அதனை உடனடியாக வாங்கி அனுப்பும் நண்பர் Han Hao அவர்களுக்கு இந்த சமயத்தில் நன்றி சொல்லியே ஆகவேண்டும். எதையும் எதிர்பார்க்காமல் செய்யும் நண்பர்களுக்கு நாம் என்ன செய்துவிடப் போகிறோம்! அன்பைத் தவிர!!


சீன ஊடகக் குழுமத்தின் தமிழ் பிரிவும், சீனப் பாரம்பரிய பண்பாடுகளுடன் கூடிய பாடல்கள், ஆடல்கள் உள்ளிட்ட பல்வகை நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப உள்ளது. கேட்டு மகிழத் தவறாதீர்கள்.


#


 

Thursday, September 19, 2019

Amazon.inல் அனைத்து வானொலிப் புத்தகங்களும் கிடைக்கிறது



Now you may buy "Multiple Perspectives of China Radio International, BBC Tamil, Radio Veritas Asia, Sri Lanka Broadcasting Corporation" and all the four Ham Radio books available in the Amazon.in website.
தற்பொழுது “பன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி, சீன வானொலி, பிபிசி வானொலி, இலங்கை வானொலி” ஆகிய நான்கு புத்தகங்களோடு, ஹாம் ரேடியோ தொடர்பாக வெளிவந்த நான்கு புத்தகங்களும் Amazon.inல் கிடைக்கிறது.
1. பன்முகப் பார்வையில் சீன வானொலி



Thursday, April 13, 2017

Monday, January 18, 2016

சீன வானொலி: 2015ஆம் ஆண்டின் சிறந்த புதிய ஊடக நேயர்கள்

சிறந்த புதிய ஊடக நேயர்கள்

1 வளவனூர் புதுபாளையம் செல்வம்
2 கிளியனூர் ராஜலட்சுமி
3 திருச்சிராபள்ளி எ எம் நஜ்முல் ஆரிபின்
4 அரியலூர் தேவனூர் ப. ஜோதிலட்சுமி
5 பேளுக்குறிச்சி செந்தில்வேலு
6 பரசலூர் பி எஸ் சேகர்
7 மதுரை சோ சண்முகசுந்தரம்
8 விழுப்புரம் எஸ் பாண்டியராஜன்
9 புதுகோட்டை ஜி வரதராஜன்
10 திருப்பூர் எஸ் யுவராஜ்
11 சேந்தமங்கலம் எஸ் எம் ரவிச்சந்திரன்
12 முனுகப்பட்டு பி கண்ணன்சேகர்
13 பகலயூர் பி எ நாச்சிமுத்து
14 திருப்பூர் வி நவநீதகிருஷ்ணன்
15 பள்ளிபட்டி பி ஆர் சுப்ரமணியன்

Sunday, January 17, 2016

சீன வானொலி: 2015ஆம் ஆண்டு சிறந்த நேயர்களின் பெயர் பட்டியல்

2015ஆம் ஆண்டின் சிறந்த வானஞ்சல் நேயர்கள்
1 மதுரை திருமங்கலம் P.கதிரேசன்
2 சிவகாசி கிழக்கு ரெய்கி.செ.வேதமூர்த்தி
3 ஈரோடு M.C.பூபதி
4 தேனிகம்பம் அ.இருதயராஜ்
5 சென்னை மறைமலைநகர் சி.மல்லிகாதேவி
6 நீலக்கிரி கீழ்குந்தா K.K.போஜன்
7 திருச்சிராப்பள்ளி ஏ.எம்.நாஜிமுல் ஆரிஃபின்
8 மதுரை எஸ்.வரதராஜன்
9 கடையாலுருட்டி M.பிச்சைமணி
10 வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்
11 கோயம்புத்தூர் என்.வெங்கடாச்சலம்
12 நாமக்கல் எம்.சிவகுமார்
13 தஞ்சாவூர் N.S.பாலமுரளி

சிறந்த வானஞ்சல் நேயர்களுக்குப் பரிசுப் பொருள்
*இப்பரிசுகளை சென்னைப் பல்கலைக்கழத்தில் நடைபெரும் அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 26 ஆவது கருத்தரங்கில் நேயர்களுக்கு வழங்குவோம்

Monday, December 22, 2014

தருன் விஜய் சீன வானொலி தமிழ்ப் பிரிவுக்கு பேட்டி

தமிழ் வளர்ச்சிக்கு உதவ பெய்ஜிங் பல்கலை. குழுத் தலைவரிடம் தருண் விஜய் வேண்டுகோள்


தமிழகத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுடன் சேர்ந்து தமிழ் மொழித் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்று சீனாவில் உள்ள பெய்ஜிங் (பீகிங்) பல்கலைக்கழகக் குழுத் தலைவர் ஜூ ஷான்லுவிடம் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் வலியுறுத்தினார்.
இந்தியா சீனா இடையே நல்லுறவை மேம்படுத்துவதற்காக பகத் சிங் கோஷ்யாரி தலைமையில் 13 பாஜக எம்.பி.க்கள் கடந்த சனிக்கிழமை சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தக் குழுவில் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தருண் விஜய் இடம் பெற்றுள்ளார்.
வட மாநிலத்தில் பிறந்திருந்தாலும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அவர் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் குரல் கொடுத்து வருகிறார்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், வாராணசியில் பாரதியார் வாழ்ந்த இடத்தை தேசிய நினைவிடமாக்க வேண்டும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர் வலியுறுத்தி வருகிறார்.
இதையடுத்து, தருண் விஜயை கௌரவிக்கும் வகையில் அண்மையில் சென்னையில் கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பாராட்டு விழா நடத்தினர். இந்த நிலையில், சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்றுள்ள தருண் விஜய், அங்குள்ள பழைமையும் பாரம்பரியமும் மிக்க பெய்ஜிங் (பீகிங்) பல்கலைக்கழகத்துக்குச் சென்றார். உலகின் பன்னாட்டு மொழிகளும் அந்தப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படுவது குறித்து அவர் கேட்டறிந்தார். அந்தப் பல்கலைக்கழகக் குழுத் தலைவர் ஜூ ஷான்லுவிடம் பன்னாட்டு மொழிகளைப் பயிற்றுவிக்கும் போது உலகின் தொன்மை வாய்ந்த தமிழ் மொழியையும் பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தருண் விஜய் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து "தினமணி' நிருபரிடம் தருண் விஜய் தொலைபேசி மூலம் அளித்த பேட்டியின் விவரம்:
"சீனத் தலைநகர் பெய்ஜிங்கின் மேற்குப் பகுதியில் உள்ள ஹைதியான் மாவட்டத்தில் இந்தப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. கலை, அறிவியல், உலகப் பொறியியல், பல்துறை ஆராய்ச்சி ஆகியவற்றில் அந்தப் பல்கலை. தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது. சீனாவின் பழைமையான, முதலாவது பல்கலைக்கழகமாக இது விளங்குகிறது. அதன் குழுத் தலைவர் ஜூ ஷான்லு, மொழி வளர்ச்சியில் பெய்ஜிங் பல்கலைக்கழகம் ஆற்றி வரும் சேவைகளை விளக்கினார்.
அப்போது, அவரிடம் இந்தியாவிலும் உலகின் பழைமையான மொழியான தமிழ் உள்ளது. உலகப் பொதுமறையான திருக்குறளை தமிழ் மொழி அளித்துள்ளது. உலக நெறிகள் பலவற்றுக்கும் தமிழ் முன்னுதாரணமாக உள்ளது என்று கூறினேன். அதைக் கேட்ட அவர், தமிழ் மொழியின் சிறப்பை நாங்களும் அறிவோம். சீன அரசால் தமிழ் மொழி வானொலி சேவை வழங்கப்படுகிறது. சீனாவில் வசிக்கும் தமிழர்களிடையே சீன வானொலிக்கு வரவேற்பு உள்ளது என்றார்.
இதையடுத்து, தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுடன் கூட்டுச் சேர்ந்து தமிழ் மொழியை சீனாவில் வளர்க்க நடவடிக்கை எடுங்கள் என்று ஜூ ஷான்லுவிடம் கேட்டுக் கொண்டேன். இந்த யோசனையை ஏற்றுக் கொண்ட அவர், விரைவில் இது தொடர்பாக பல்கலைக்கழக கவுன்சிலில் பேசி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்' என்று தருண் விஜய் கூறினார்.
சீனப் பயணத்தையொட்டி அந்த நாட்டு வானொலியின் தமிழ் சேவைக் குழுவினர் தருண் விஜயை பேட்டி எடுத்தனர். அந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள வைரமுத்துவிடமும் சீன தமிழ் வானொலி சேவைக் குழுவினர் பேட்டி கண்டனர்.

நன்றி: தினமணி 21-Nov-2014

Thursday, August 21, 2014

சீன வானொலியின் மூத்த ஹிந்தி அறிவிப்பாளர் மறைவு

சீன சர்வதேச வானொலி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட "ரேடியோ ஆஃப் பெய்ஜிங்'கின் ஹிந்தி அறிவிப்பாளராகப் பணியாற்றிய ஷியாமா வல்லப் உடல்நிலை சரியில்லாமல் திங்கள்கிழமை காலமானார்.
இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷியாமா வல்லப். இவர் தனது கணவரும் ஹிந்தி மொழி அறிஞருமான ஜானகி வல்லபுடன் கடந்த 1958-ஆம் ஆண்டு சீனாவில் குடியேறினார். அங்கு "ரேடியோ ஆஃப் பெய்ஜிங்'கில் ஹிந்தி அறிவிப்பாளராக கடந்த 1962-ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.
சீனாவின் வெளிநாட்டு மொழிகளுக்கான அமைப்புடன் நீண்ட காலம் தொடர்பில் இருந்த ஷியாமா வல்லப், குழந்தைகளுக்கான பல சித்திரக் கதைப் புத்தகங்களை ஹிந்தியில் வெளியிட்டுள்ளார்.
தகவல் http://www.dinamani.com/

Tuesday, February 25, 2014

பொன்விழா சிறப்பிதழ் வெளியிடப்பட்டது!

2013ஆம் ஆண்டு, சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் பொன்விழா ஆண்டாகும். இதற்காக சீன வானொலி தமிழ்ப்பிரிவு, சர்வதேச வானொலி இதழுடன் ஒத்துழைத்து, சீனத் தமிழொலி என்னும் பொன்விழா சிறப்பிதழை வெளியிட்டது. இந்த பொன்விழா இதழ் வெளிவர உதவியளித்த தங்க. ஜெய்சக்திவேல் அவர்களுக்கும், கவுதம் பதிப்பகத்துக்கும் மிக்க நன்றி.

சீனத் தமிழொலி என்னும் பொன்விழா சிறப்பிதழ் பெற விரும்பும் நேயர்கள், 9597280064 என்ற கைபேசி எண்ணுக்கு குறுந்தகவல் மூலம், அஞ்சல் முகவரியை அனுப்புங்கள். இந்தக் கைபேசி, குறுந்தகவல் மூலம் இதழ் பெற விரும்பும் நேயர்களின் முகவரிகளைச் சேகரிப்பதற்கு மட்டுமே. கைபேசி எண்ணை மீண்டும் சொல்கின்றோம்:9597280064. தயவு செய்து அழைக்கவேண்டாம்.
 
மேலும், கடந்த ஜனவரி 25ஆம் நாளன்று, அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 25வது கருத்தரங்கு ஈரோடில் நடைபெற்றது. தமிழ்ப்பிரிவின் இணையதளத்தில் இக்கருத்தரங்கின் ஒலிப்பதிவு, புகைப்படம் முதலியவை நிறைய வைக்கப்பட்டுள்ளன. கண்டு இரசியுங்கள். (நன்றி; சீன வானொலி)

Monday, January 13, 2014

சீன வானொலி பொன்விழா மலர்

கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக முழுவதும் வண்ணப் பக்கங்களில்  நமது சர்வதேச வானொலி வெளியாவது இதுவே முதல் முறை. அதற்கு வழிவகுத்த சீன வானொலித் தமிழ் பிரிவுக்கும் நிச்சயமாக ஒரு நன்றியைக் கூறியே ஆக வேண்டும். 

சீன வானொலியின் பொன் விழா சிறப்பு கருத்தரங்கம் வரும் 25 ஜனவரி 2014 அன்று பெருந்துறையில் வைத்து நடைபெற உள்ளது. இதில் இந்த பொன் விழா மலர் வெளியிடப்பட உள்ளது. மலரின் அட்டைப் படத்தினைத் தான் இங்கே நீங்கள் பார்கிறீர்கள்.


நிச்சயம் உங்கள் அனைவருக்கும் இந்த இதழ் பிடிக்கும் என நம்புகிறோம். இந்த இதழ் வெளியாவதற்கு காரணமாக இருந்த சீன வானொலித் தமிழ் பிரிவின் அனைத்து பணியாளர்களுக்கும், குறிப்பாக தமிழ்ப் பிரிவின் தலைவர் திருமதி. கலைமகள் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


Monday, August 26, 2013

ஆகஸ்ட் முதல் நாள் பொன்விழா கண்டது சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு

தற்போது சிற்றலையில் வெளிநாடுகளிலிருந்து ஒலிபரப்பாகிடும் தமிழ் ஒலிபரப்பில் நேயர்களிடம் சிறப்பிடம் பெறுபவை சீன வானொலி தமிழ்ப்பணி, பி பி சி தமிழோசை, வேரித்தாஸ் வானொலி ஆகியவை எனலாம்.
இதில் சீன வானொலி தமிழ்ப் பணி அதிகபட்சமாக தனது ஒரு மணி நேர நிகழ்ச்சிகளை தினமும் நேயர்களுக்கு அளித்து வருகிறது. அதோடு அந்த நிகழ்ச்சிகளை மீண்டும் மூன்று முறை மறு ஒலிபரப்பும் செய்து வருகிறது. தற்போது இரவு 0730 மணிக்கு 13600 Khz, 11635 Khz ல் ஒலிக்கும் அதன் முதல் ஒலிபரப்பினை அதேநாள் இரவு 0830 மணிக்கு 9490 khz,11800 Khz லும்  மறுநாள் காலை 0730 மணிக்கு 13600 Khz, 15260 Khz லும் காலை 0830 மணிக்கு 13600 khz,13730 Khz லும் மறு ஒலிபரப்பாகவும் கேட்க முடியும். தவிர அதன் நிகழ்ச்சிகளை இணயதளம் மற்றும் இணயதள வசிதிகொண்ட செல் போன்கள் வாயிலாகவும் கேட்க முடியும் அதன் இணயதளம் மூலம் எண்ணற்ற தகவல்களை வாசிக்க,பார்க்க இயலும்.சீ’ன வானொலி தமிழ்ப் பணி 1963 ல் ஆகஸ்ட் முதல் துவங்கபெற்றது. தற்போது ஐம்பது வருடங்களை நிறைவு செய்து பொன்விழா கண்டது. பதினெட்டு பணியாளர்கள் அதன் தமிழ் பணியில் வெவ்வேறு நிகழ்ச்சிகளை வழங்கிவருகின்றனர் இதில் பதினாறு பணியாளர்கள் சீனர்கள், பெரும்பாலோனோர் இளைஞர்கள்.
கட்டுரை, பொது அறிவு போட்டிகளை அவ்வப்போது நடத்தி நேயர்களை அதில் பங்கேற்க செய்து வெற்றி பெற்றோருக்கு பல்வேறு பரிசு பொருள் சான்றிதழ்களை நேயர்களுக்கு வழங்குகிறது போட்டியில் சிறப்பு தேர்வு பெற்ற நேயர்களை சீனாவிற்கு இலவச பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பினை வழங்கி மற்ற வெளிநாட்டு வானொலிகளிடமிருது சீன வானொலி தமிழ்ப் பணி வேறுபட்டு சிறப்பிடம் பெறுகிறது. அந்த வாய்ப்பினை பல நேயர்கள் பெற்று பயனடைந்துள்னர். அவர்கள் இன்றும் தொடர்ந்து சீன வானொலி தமிழ்ப் பணிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். சீன வானொலி தமிழ்ப் பிரிவின் பொன்விழாவை முன்னிட்டு, உலகளவில் சீன வானொலி தமிழ்ச் சேவையின் செல்வாக்கு எனும் கருத்தரங்கு பெய்ஜிங்கிலுள்ள இந்திய தூதரகத்தில் ஆகஸ்ட் 3ஆம் நாள் நடைபெறுகிறது. இக்கருத்தரங்கில் சீனாவுக்கான இந்தியா, இலங்கை மற்றும் சிங்கபூர் தூதாண்மை அலுவலர்களும் தமிழக நேயர்கள் வளவனூர் புதுப்பாளையம் எஸ். செல்வம், ஈரோடு பகலாயூர் பி.ஏ.நாட்சிமுத்து, சீனச் சமூக மற்றும் அறிவியல் கழகத்தின் நிபுணர்களும், தமிழ்ப் பிரிவின் மூத்தப் பணியாளர்களும் அழைப்பின் நேரில் கலந்து கொள்கிறார்கள். இக்கருத்தரங்கு பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஆகஸ்ட் 5ஆம் நாள் முதல் வழங்க உள்ளது.
மேலதிக விபரங்களை tamil.cricri.cn என்ற அதன் இணயதளத்தில் பெறலாம். By மு.கணேசன் (கோவா)
Source: http://dinamani.com/world_tamils

Sunday, August 18, 2013

பொன்விழா ஓவியம் ஒன்றை வழங்கப்படுகிறது

தமிழ்ப்பிரிவின் அரிய பணிகளை பாராட்டி, ஓவியம் ஒன்றை வழங்க வருகிறார் முன்னாள் பணியாளரும், இளம் தலைமுறையினர் பலருக்கு தமிழ் மொழி ஆசிரியையுமாக விளங்கிய பி.லூசா அவர்கள். இந்த ஓவியத்தை பெற்றுக்கொள்வதற்குத் தமிழ்ப்பிரிவின் தலைவர் திருமதி கலைமகள் அவர்களை அழைகின்றோம்.

மேலும் காண
http://tamil.cri.cn/301/2013/08/01/1s130885_1.htm

Saturday, August 17, 2013

பொன் விழா கேக் தயார்

சீனத் தமிழ் ஒலிபரப்பு என்னும் குழந்தைக்கு 50 வயது. அதனால் நாம் கேக் வெட்டி மகிழ வேண்டாமா!! கேக் தயார். அதனை வெட்டி ஐம்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடுவோம். பொன்விழா கேக் வெட்டுவதற்காக சீன வானொலி. தெற்காசிய மையத்தின் தலைவர்களும் மேடைக்கு அழைக்கின்றோம். 

Tuesday, August 13, 2013

சீன வானொலி பொன்விழா கட்டுரைப் போட்டிக்கான சான்றிதழ்


பொன்விழா கட்டுரைப் போட்டிக்கான பரிசுச் சான்றிதழ் நேயர் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படுகிறது

Monday, August 12, 2013

சீன வானொலி தமிழ்ப் பிரிவின் தலைவர் திருமதி.கலைமகள்



சீன வானொலி தமிழ்ப் பிரிவின் தலைவர் திருமதி.கலைமகள் உரை நிகழ்த்துகிறார்


தமிழ்ப்பிரிவின் துணைத் தலைவர் திருமதி.வாணி 

வாணி: நன்றியுரை

சீன வானொலியின் தென்காசிய ஒளிபரப்பு மையம் ஓர் ஆலமரம்

லொ ஹொங்பின்: சிறப்பு உரை
சீன வானொலியின் தென்காசிய ஒளிபரப்பு மையம் ஓர் ஆலமரம். அதன் ஒரு கிளை தான் தமிழ்ப்பிரிவு. அந்த ஆலமரத்தின் தலைவர் லொ ஹொங் பின் இதோ சிறப்பு உரை நிகழ்த்த வருகிறார்.

Sunday, August 11, 2013

இந்திய-சீன நட்புறவு வளர்ச்சியில் சீன வானொலி

சீனாவுக்கான இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த அரசியல் ஆலோசகர் திரு கே. ஜேக்கப் கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார். இந்திய-சீன நட்புறவு வளர்ச்சியில் சீன வானொலி ஆற்றிய பங்கை அவர் வெகுவாகப் பாராட்டினார். இந்தியத் தூதர் முனைவர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இந்தியத் தூதரகப் பணியாளர்களின் சார்பில் தமிழ் ஒலிபரப்பின் பொன்விழாவுக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

திரு கே.ஜேக்கப்: வாழ்த்துரை

Friday, August 09, 2013

இந்திய தூதரக அதிகாரிகளுடன் சீன வானொலியினர்

தமிழ் பிரிவின் தலைவருடன்


குழு நிழற்படம்

Wednesday, August 07, 2013

சீன வானொலி தெற்காசிய பிரிவின் தலைவருடன்

முன்னாள் நிபுனர் திரு.கடிகாச்சலம்

திரு.செல்வம் மற்றும் திரு. நாச்சிமுத்து ஒரு மகிழ்ச்சியான தருணத்தில்

சீன வானொலி மென்ஒருங்கு ஆய்வு

APP எனப்படும் மென்ஒருங்கு ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பற்றிய உங்கள் கருத்து
சீன வானொலி தமிழ் இணையத்தை பல்வகையான கைபேசிகளிலும் உலா வந்து படிக்கும் வசதி அளிக்க, தமிழ்ப் பிரிவு தற்போது APP எனும் மென்ஒருங்கு ஒன்றை ஆய்வு செய்து உருவாக்கி வருகிறது.
நேயர்கள், இணையதளப் பயனர்கள் அனைவரும் இதுப்பற்றி எங்களுக்கு ஆலோசனை அளிப்பதை எதிர்பார்க்கிறோம். எந்த விதமான முன்மொழிவு இருந்தாலும் , tamil@cri.com.cn என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்புக. 
மேலும், கருத்துக்கணிப்பு ஒன்று
1, உங்கள் கைபேசியின் இயங்குதளம் என்ன?
A/ஐஒஎஸ் IOS
B/அண்ட்ராய்டு Android
C/வின்டோபோன்WindowPhone
D/பிற
2, தமிழ்ப் பிரிவு எதிர்காலத்தில் வெளியிடும் மென்ஒருங்கில் இடம்பெற வேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கும் தகவல்கள் என்னென்ன?
A/செய்திகள்
B/சுற்றுலா மற்றும் பண்பாடு
C/கேட்பொலி மற்றும் காணொலி
D/வணிகம் சார்ந்த தகவல்கள்
E/பிற
நன்றி: http://tamil.cri.cn