Friday, February 14, 2025

இலங்கை வானொலியின் நூற்றாண்டு நினைவுத் தபால்தலை


இலங்கை வானொலியின் நூற்றாண்டை (1924-2024) நினைவுகூரும் வகையில் இந்த தபால்தலைகளை வெளியிட்டுள்ளது இலங்கை அஞ்சல்துறை. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முகப்புக் கட்டடம் இதில் இடம்பெற்றுள்ளது. கூடவே, SLBC இன் Logo மற்றும் Transmitter ஒன்றும் பின்னணியில் உள்ளது.

இந்த தபால்தலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் "SRI LANKA" என்று அச்சிட்டுள்ளனர், மேலும் இதன் முக மதிப்பு 50.00 இலங்கை ரூபாய் ஆகும்.  "இலங்கை வானொலி தொலைத்தொடர்பாடலின் நூற்றாண்டு" (தமிழ்), என்று மூன்று மொழிகளிலும் அச்சிட்டுள்ளனர். இந்த தபால்தலையைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்த ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி!

இந்த தபால்தலை தேவைப்படுபவர்கள் இந்த இணைய தளத்தில் வாங்கலாம்.

https://stamps.slpost.gov.lk/product/6439


Wednesday, February 12, 2025

K.S.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி உலக வானொலி தினத்தைக் கொண்டாடுகிறது


திருச்செங்கோடு, பிப்ரவரி 13, 2025 – கே.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் துறை, "வானொலியில் புரட்சி" என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கை பிப்ரவரி 13, 2025 அன்று நடத்துகிறது.

இந்த கருத்தரங்கு, ஒலிபரப்பின் பாரம்பரியத்தையும் புதுமையையும் கொண்டாடும் வகையில், சங்கமம் அரங்கில் காலை 10:00 மணிக்கு நடைபெறும். சென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறை உதவி பேராசிரியர் முனைவர். தங்க.ஜெயசக்திவேல் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்கள் பொறியியல், பல் மருத்துவம், கலை மற்றும் அறிவியல், டிப்ளமோ, ஐடிஐ, துணை சுகாதார அறிவியல், நர்சிங், பார்மசி மற்றும் ஆசிரியர் கல்வி போன்ற பல்வேறு படிப்புகளை வழங்கி வருகின்றன. கே.எஸ்.ஆர். கல்வி நகர், திருச்செங்கோடு, நாமக்கல் - 637215, தமிழ்நாடு என்ற முகவரியில் அமைந்துள்ளது.