கிருஷ்ணன்கோவிலில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் கலசலிங்கம் வானொலி நிலையம் சார்பில், காட்சி சார் அறிவியல் துறைத் தலைவர் முனைவர். கற்பக சுந்தரம் ஏற்பாட்டில் ஏப்ரல் 11, 2026 அன்று வானொலி அறிப்பாளர் குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்தப் பயிற்சி வகுப்பில், வானொலித் துறையின் நுணுக்கங்கள் மற்றும் நேரடி அனுபவங்களை மாணவர்களுக்கு வழங்கினோம். தனித்துவமான குரலால் வானொலித் துறையில் முத்திரை பதிக்க நினைப்பவர்களுக்கு, ஒரு அருமையான வாய்ப்பாக இருந்தது.
சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Friday, April 10, 2026
Friday, January 30, 2026
வானொலி ஆய்வுச் செம்மல்
மகிழ்ச்சியான செய்தி!
மதுரையில் நடைபெற்ற நேசகானம் வானொலியின் (Nesaganam Radio) 10-ஆம் ஆண்டு தொடக்க விழாவில், இணைய வானொலி இயக்குநர்கள் சங்கம் (Online Radio Directors Association) எமக்கு "வானொலி ஆய்வுச் செம்மல்" (Radio Research Excellence Award) விருதினை வழங்கி கௌரவித்தது.
வானொலி இதழியல், ஊடக ஆய்வுகளில் (Radio Journalism and Media Studies) யாம் ஆற்றிவரும் பணிகளுக்காக வழங்கப்பட்ட இந்த அங்கீகாரத்தை மிகுந்த நெகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
இந்த உயரிய விருதிற்கு எம்மைத் தேர்ந்தெடுத்த சங்கத்தின் நிர்வாகிகளான திரு.கே.பிரபாகரன், முனைவர்.எம்.முஹம்மது அஸ்கர், திரு.இராதகிருஷ்ணன் மற்றும் என்னை என்றும் ஊக்கப்படுத்தும் சென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல், தொடர்பியல் துறைக்கும், என் அன்பிற்குரிய மாணவர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வானொலித் துறையின் AI எதிர்காலம் மற்றும் அதன் ஆய்வுப் பணிகளில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட இந்த விருது எமக்கு ஒரு பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது.
அனைவரது அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி!
#
Tuesday, December 16, 2025
ஆகாஷ்வாணி 90 - சிறப்பு நேர்காணல்
ஆகாஷ்வாணி 90 ஆண்டுகளை கொண்டாட உள்ள இந்த சமயத்தில், திருமதி. ராஜ ராஜேஸ்வரி தயாரிப்பில், யாம் பங்கேற்ற சிறப்பு வானொலி நேர்காணல் நிகழ்ச்சி இன்று 16-12-2025 (பாகம் 1) மற்றும் வரும் 28-12-2025 (பாகம் 2) ஆகிய தேதிகளில் ஒலிபரப்பாகிறது; இந்த நிகழ்ச்சியை சென்னை முதன்மை அலைவரிசையில் காலை 08:45 மணிக்கும், FM ரெயின்போ அலைவரிசையில் மதியம் 02:15 மணிக்கும், மற்றும் விவித் பாரதி தமிழ் அலைவரிசையில் இரவு 07:00 மணிக்கும் கேட்டு மகிழலாம். News On Air செயலி ஊடாகவும் கேட்கலாம். விரையில் யூடியூப்பில் பதிவேற்றிய தொடுப்பையும் இங்கே இணைக்கிறோம்.
Wednesday, December 03, 2025
சோனா எஃப்.எம்: மலைவாழ் மக்களின் தோழன்
Wednesday, February 12, 2025
K.S.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி உலக வானொலி தினத்தைக் கொண்டாடுகிறது
திருச்செங்கோடு, பிப்ரவரி 13, 2025 – கே.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் துறை, "வானொலியில் புரட்சி" என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கை பிப்ரவரி 13, 2025 அன்று நடத்துகிறது.
இந்த கருத்தரங்கு, ஒலிபரப்பின் பாரம்பரியத்தையும் புதுமையையும் கொண்டாடும் வகையில், சங்கமம் அரங்கில் காலை 10:00 மணிக்கு நடைபெறும். சென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறை உதவி பேராசிரியர் முனைவர். தங்க.ஜெயசக்திவேல் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்கள் பொறியியல், பல் மருத்துவம், கலை மற்றும் அறிவியல், டிப்ளமோ, ஐடிஐ, துணை சுகாதார அறிவியல், நர்சிங், பார்மசி மற்றும் ஆசிரியர் கல்வி போன்ற பல்வேறு படிப்புகளை வழங்கி வருகின்றன. கே.எஸ்.ஆர். கல்வி நகர், திருச்செங்கோடு, நாமக்கல் - 637215, தமிழ்நாடு என்ற முகவரியில் அமைந்துள்ளது.
















































