Showing posts with label நாதம் வானொலிச் சேவை. Show all posts
Showing posts with label நாதம் வானொலிச் சேவை. Show all posts

Monday, May 28, 2012

நாடு கடந்த தமிழீழ அரசின் வானொலி

நாடு கடந்த தமிழீழ அரசின் வானொலியை தடைசெய்யும் விதமான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் இயக்குனர் அனுஷா பல்பிட்டா தெரிவித்துள்ளார்.

ஆனாலும் நாடு கடந்த தமிழீழ அரசின் வானொலியானது 12225 அலை எண்களில் ஒலிபரப்பும் போது, வேறு ஒலிபரப்புகள் வேண்டுமென்றே குறுக்கிடுவதாக இந்திய டி.எக்ஸ். கிளப் இண்டர்நேசனல் தனது பேஸ் புக்கில் (http://www.facebook.com/groups/idxci/) தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த வானொலி கடந்த 18 மே 2012 முதல் தினமும் இரவு 8.30 முதல் 9.30 வரை தனது சேவையை இந்திய இலங்கைத் தமிழர்களுக்காக தொடங்கியது குறிப்பிடத்தக்கது.