Showing posts with label புதுவை வானொலி. Show all posts
Showing posts with label புதுவை வானொலி. Show all posts

Sunday, December 16, 2018

புதுவை அகில இந்திய வானொலி


புதுவை அகில இந்திய வானொலியில் திருப்பாவை, திருவெம்பாவை நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 16-ஆம் தேதி) முதல் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

இதுகுறித்து புதுவை அகில இந்திய வானொலி நிகழ்ச்சி தலைவர் தட்சிணாமூர்த்தி கூறியதாவது:
மார்கழி மாதம் பிறக்கும் ஞாயிற்றுக்கிழமை முதல் நாள்தோறும் அந்த மாதம் முடியும் வரை காலை 6. 10 மணிக்கு புதுவை வானொலியின் முதல் அலைவரிசையில் திருப்பாவை, திருவெம்பாவை நிகழ்ச்சி ஒலிபரப்பாகும்.
டாக்டர் எம்.எல்.வசந்தகுமாரி பாடிய திருப்பாவை பாடல்களுடன், ஸ்ரீரங்கம், ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீரங்கராமனுஜ மகாதேசிகன், திருக்கோயிலூர் ஜீயர் எம்பெருமானார் ஸ்ரீநிவாச ராமனுஜ ஆச்சார்யா, தேரெழுந்தூர் ராமபத்ராச்சாரி ஆகியோர் வழங்கிய விளக்க உரைகளை வானொலி தனது ஒலிக் களஞ்சியத்தில் இருந்து ஒலிபரப்பு செய்கிறது.

இதேபோல, பிரேமா, ஜெயா ஆகியோர் இணைந்து பாடியுள்ள திருவெம்பாவை பாடல்களுடன், சுகி சிவம், தெய்வநாயகம் ஆகியோர் வழங்கிய விளக்கவுரைகளும் ஒலிபரப்பாகின்றன. திருப்பள்ளி எழுச்சியில் சுகி சிவம் விளக்கவுரையுடன், சீர்காழி திருஞான சம்பந்தம் பாடியுள்ள பக்திப் பாடல்கள்
ஒலிபரப்பாகும். புதுவை வானொலியின் ரெயின்போ பண்பலை 102.8-இல் திருப்பாவை - திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களும், விளக்க உரைகளும் ஞாயிற்றுக்கிழமை முதல் நாள்தோறும் அதிகாலை 5 மணிக்கு ஒலிபரப்பாகும் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி தினமணி