எமக்கு வந்தவை
பல்கேரியா: ரேடியோ பல்கேரியா - புதிய நிகழ்ச்சிநிரல் பட்டியல்.
இந்தியா: பீபா வானொலி – 2011 நாள்காட்டி மற்றும் புதிய நிகழ்ச்சிநிரல் பட்டியல்.
தைவான்: ரேடியோ தைவான் இண்டர்நேசனல் – நியூஸ் லெட்டர் மற்றும் நிகழ்ச்சிநிரல் பட்டியல்.
ஜெர்மனி: ரெய்ன் மெய்ன் ரேடியோ கிளப் – செயின்ட் ஹெலினா வானொலிக்கான சிறப்பு வண்ண அட்டைகள்.
அமெரிக்கா: ரேடியோ ப்பீரீ ஆசியா – ஆர்.எப்.ஏ-வின் 14வது ஆண்டு சிறப்பு வண்ண அட்டை, 2011 மாதாந்திர நாள்காட்டி, 2011 வருடத்திற்கான டைரி.
நெதர்லாந்த்: ரேடியோ நெதர்லாந்த் - புதிய நிகழ்ச்சிநிரல் பட்டியல், புதிய வடிவிலான ஸ்டிக்கர், 2011 ஸ்டிக்கர் நாள்காட்டி, வண்ண அட்டை.
இந்தியா: அகில இந்திய வானொலி - உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஒலிபரப்புகளின் நிகழ்ச்சிநிரல் பட்டியல்.
சீனா: சைனா ரேடியோ இண்டர்நேசனல் – சுவற்றில் மாட்டக் கூடிய ஐந்து வகையான பட்டுத்துணியிலான வரைபடங்கள். 2011 வருடத்திற்கான வாழ்த்து அட்டை மற்றும் நாள்காட்டி, சலார் மக்களை மையப்படுத்திய வண்ண அட்டை.
ஜெர்மனி: வாய்ஸ் ஆப் ஜெர்மனி - 2011ஆம் ஆண்டிற்கான வாழ்த்து அட்டை, புதிய நிகழ்ச்சிநிரல் பட்டியல் மற்றும் மாதாந்திர நாள்காட்டி.
கொரியா: கொரியன் புராட்காஸ்டிங் கார்பரேசன் - புதிய நிகழ்ச்சிநிரல் பட்டியல், மேசையில் வைக்கக்கூடிய நாள்காட்டி மற்றும் புதிய ஸ்டிக்கர்.
வத்திகான்: ரேடியோ வத்திகான் – மாதாந்திர வத்திகான் வானொலி செய்தி இதழ்.
பிலிப்பைன்ஸ்: ரேடியோ வெரித்தாஸ் ஆசியா - 2011 வருடத்திறகான அட்டை வடிவிலான நாள்காட்டி.
வியட்னாம்: வாய்ஸ் ஆப் வியட்நாம் - புதிய நிகழ்ச்சிநிரல் மற்றம் அலைவரிசைப் பட்டியல், வியட்நாம் தபால்தலைகள்.
சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Showing posts with label ரேடியோ பல்கேரியா. Show all posts
Showing posts with label ரேடியோ பல்கேரியா. Show all posts
Sunday, April 24, 2011
Friday, August 08, 2008
உங்களுக்காக..
பல்கேரியா : ரேடியோ பல்கேரியா சமீபத்தில் தனது நேயர்களுக்கு ஒரு கருத்தாய்வினை நடத்தியது. இதில் கலந்துகொண்ட அனைத்து நேயர்களுக்கும் இது, பல்கேரிய இசையினை மையப்படுத்திய குறுவட்டினை அனுப்பியது. தற்பொழுதும் தனது நேயர்களுக்கு அந்த குறு வட்டினை அனுப்பிவருகிறது. தேவைப்படும் நேயர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: English Section, Radio Bulgaria, P.O.Box: 900, 1000 Sofia, Bulgaria. E.Mail: radiobulgaria@bnr.org சீனா : சைனா ரேடியோ இண்டர்நேசனல்: இந்த வானொலி ஒவ்வோரு முறையும் நேயர்களுக்குப் புதுமையான வகையில் நினைவுப்பரிசுகளை அனுப்பிவருகிறது. அந்தவகையில் ஆங்கிலப்பிரிவானது தற்பொழுது தனது நேயர்களுக்கு சீனாவின் வரைபடத்தினை போஸ்டர் வடிவில் அனுப்பிவருகிறது. தேவைப்படும் நேயர்கள் உடனே அவர்களை வான் அஞ்சலில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். முகவரி: English Section, China Radio International, 16A, Shijing shan Road, Beijing 100 040, P.R. China, E.mail : crieng@crifm.com
Subscribe to:
Posts (Atom)