Showing posts with label வாசகர்கள் சந்திப்பு. Show all posts
Showing posts with label வாசகர்கள் சந்திப்பு. Show all posts

Monday, June 24, 2013

நெல்லையில் வானொலி பண்பலை வாசகர்கள் சந்திப்பு சங்கம விழா

திருநெல்வேலி:வானொலி நெஞ்சங்கள் பண்பலை வாசகர்களின் சங்கம விழா மே 27,2013 அன்று நெல்லையில் நடந்தது. அனைத்து வானொலி நெஞ்சங்கள் பண்பலை வாசகர்களின் சங்கம விழா நெல்லை மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கமிட்டி தலைவர் உக்கிரன்கோட்டை மணி தலைமை வகித்தார். செயலாளர் கே.எஸ்.நாராயணன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மதிதா கல்வி சங்க செயலாளர் செல்லையா, லயன் மாவட்ட தலைவர் ஜானகிராம் அந்தோணி வாழ்த்துரை வழங்கினர். சங்கம விழாவில் ஈஸ்வரமூர்த்தி, ராமகிருஷ்ணன், திருவருள் லத்தீப், அமீதுஅலி, செல்லத்துரை, கே.டி.சி.நகர் ஈஸ்வரமூர்த்தி, ஜாபர், எஸ்.ஆர்.பாஸ்கரன், பக்கீர் முகைதீன், சிந்துக்கண்ணன், மணி, ஜெயராஜ், நடராஜன் பேசினர். நெல்லை வானொலி அறிவிப்பாளர் கவிப்பாண்டியன், செய்தலை மணியன், மீனா உட்பட பலர் பேசினர்.
நன்றி: http://www.dinamalar.com