Showing posts with label வானொலி ஒலிபரப்பு. Show all posts
Showing posts with label வானொலி ஒலிபரப்பு. Show all posts

Monday, August 05, 2013

கண்பார்வையற்றவர்களுக்கு வானொலி ஒலிபரப்பு இதழியல் டிப்ளமோ படிப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கண்பார்வையற்றவர்களுக்கான தேசிய கல்வி நிறுவனத்தில், பட்டயப் படிப்புக்கு சேர்க்கை நடைபெறுகிறது.
வழங்கப்படும் படிப்பு: Diploma Course in Radio Broadcast Journalism
கால அளவு: ஒரு வருடம்
வயது வரம்பு: 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும்.
அடிப்படை கணினி தெரிந்திருக்க வேண்டும். ப்ரெய்லி முறையில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். படிப்பை வெற்றிகரமாக முடித்த பிறகு Announcer, Presenters Radio Programme Producers & Script Writer Programme Producer Script Writer, Sound Editor ஆக பயிற்சியாளராக பணியாற்றலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: விண்ணப்பப் படிவங்களின் பரிசீலனைக்கு பின் தகுதியானவர்கள் ஆடிஷன் தேர்வு மற்றும் அதனை தொடர்ந்து நேர்முகத் தேர்வுகளுக்கு அழைக்கப்படுவர். மெரிட் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nivh.org.in என்ற இணையதள முகவரியில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Source: Dinnamani 01 August 2013