1975 வரையில் ரேடியோஆஸ்திரேலியாவில் தமிழ் ஒலிபரப்பானது 41 மீட்டரில் செய்யப்பட்டு வந்தது. உலகச்செய்திகள், விளையாட்டுச்செய்திகள், ஆங்கில இசை, அறிவியல் செய்திகள், நேயர்களின்மடல்களுக்கு பதில் வழங்குதல், தமிழ்திரைப்படப் பாடல்கள் ஒலிபரப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை ஆஸ்திரேலிய வானொலி ஒலி பரப்பியது. ரேடியோ ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் வர்ணனையாளராகப் பணிபுரிந்தவர் தமிழகத்தைச் சார்ந்த வி.எம்.சக்ரபாணி ஆவார். இவருடைய குரல் வளத்தில் அனுதினமும்இந்திய நேரப்படி இரவு 9.55 முதல் 10.15 மணி வரையில் தமிழ்திரைப்படப் பாடல்களை ஒலிபரப்பி சிறப்புச் செய்தார். இந்த நிகழ்ச்சியில் அடிக்கடி எம்.ஜி.ஆர் பாடல்களைக்கேட்கலாம். அதிலும் குறிப்பாக அடிமைப் பெண்,குடியிருந்த கோயில், ஆயிரத்தில் ஒருவன், காதலிக்க நேரமில்லை போன்றப் படப் பாடல்களை ஒலிபரப்பினார். உலகிலுள்ள வெளிநாட்டு வானொலி நிலையங்களிலிருந்து நேயர்களுக்கு தரச் சான்று அறிக்கை தவறாதுஅனுப்பி வைப்பார்கள். அவ்வறிக்கையைப் பூர்த்திச் செய்து நேயர்கள் திருப்பி அனுப்பி வைப்பார்கள். அங்கிருந்து நேயர்களுக்கு ஸ்டிக்கர், நாள்காட்டி, டைரி, கீ-செயின்மற்றும் புத்தகங்களையும் அனுப்பி மகிழ்விப்பார்கள்.1975-ஆம் ஆண்டு ரேடியோ ஆஸ்திரேலியாவும், அமெரிக்காவும் தமிழ் நிகழ்ச்சிகளின் ஒலிபரப்பை நிறுத்திவிட்டன. பின்பு மாஸ்கோ வானொலியும், சமீபத்தில் பாகிஸ்தான் வானொலியும் தமிழ் ஒலிபரப்பினை நிறுத்தி விட்டன. 31-05-2008-டன் இலங்கை வானொலி சர்வதேச ஒலிபரப்பை நிறுத்திவிட்டன. கடந்த 84 ஆண்டுகளாக தமிழ் நிகழ்ச்சிகளை இலங்கை வானொலி ஒலிபரப்பி வந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. - பத்தமடை எஸ். கந்தசாமி (+91 94872 44449)சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Saturday, August 02, 2008
ரேடியோ ஆஸ்திரேலியாவில் தமிழ்
1975 வரையில் ரேடியோஆஸ்திரேலியாவில் தமிழ் ஒலிபரப்பானது 41 மீட்டரில் செய்யப்பட்டு வந்தது. உலகச்செய்திகள், விளையாட்டுச்செய்திகள், ஆங்கில இசை, அறிவியல் செய்திகள், நேயர்களின்மடல்களுக்கு பதில் வழங்குதல், தமிழ்திரைப்படப் பாடல்கள் ஒலிபரப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை ஆஸ்திரேலிய வானொலி ஒலி பரப்பியது. ரேடியோ ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் வர்ணனையாளராகப் பணிபுரிந்தவர் தமிழகத்தைச் சார்ந்த வி.எம்.சக்ரபாணி ஆவார். இவருடைய குரல் வளத்தில் அனுதினமும்இந்திய நேரப்படி இரவு 9.55 முதல் 10.15 மணி வரையில் தமிழ்திரைப்படப் பாடல்களை ஒலிபரப்பி சிறப்புச் செய்தார். இந்த நிகழ்ச்சியில் அடிக்கடி எம்.ஜி.ஆர் பாடல்களைக்கேட்கலாம். அதிலும் குறிப்பாக அடிமைப் பெண்,குடியிருந்த கோயில், ஆயிரத்தில் ஒருவன், காதலிக்க நேரமில்லை போன்றப் படப் பாடல்களை ஒலிபரப்பினார். உலகிலுள்ள வெளிநாட்டு வானொலி நிலையங்களிலிருந்து நேயர்களுக்கு தரச் சான்று அறிக்கை தவறாதுஅனுப்பி வைப்பார்கள். அவ்வறிக்கையைப் பூர்த்திச் செய்து நேயர்கள் திருப்பி அனுப்பி வைப்பார்கள். அங்கிருந்து நேயர்களுக்கு ஸ்டிக்கர், நாள்காட்டி, டைரி, கீ-செயின்மற்றும் புத்தகங்களையும் அனுப்பி மகிழ்விப்பார்கள்.1975-ஆம் ஆண்டு ரேடியோ ஆஸ்திரேலியாவும், அமெரிக்காவும் தமிழ் நிகழ்ச்சிகளின் ஒலிபரப்பை நிறுத்திவிட்டன. பின்பு மாஸ்கோ வானொலியும், சமீபத்தில் பாகிஸ்தான் வானொலியும் தமிழ் ஒலிபரப்பினை நிறுத்தி விட்டன. 31-05-2008-டன் இலங்கை வானொலி சர்வதேச ஒலிபரப்பை நிறுத்திவிட்டன. கடந்த 84 ஆண்டுகளாக தமிழ் நிகழ்ச்சிகளை இலங்கை வானொலி ஒலிபரப்பி வந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. - பத்தமடை எஸ். கந்தசாமி (+91 94872 44449)Thursday, July 31, 2008
பெர்சூயஸ்: புதிய சிற்றலை மென் பொருள்
இது நாள் வரை நாம் வானொலிப் பெட்டிமூலமே சிற்றலை ஒலிபரப்புகளை கேட்டுவந்துள்ளோம். இதன் அடுத்த கட்டமாக நாம் கம்ப்யூட்டர் மூலம் வானொலிகளை கேட்கத்துவங்கினோம், இப்பொழுது இன்னும் ஒரு படிமேலே சென்று சிற்றலை வானொலிகளை கம்ப்யூட்டருடன் இணைத்து கேட்பதற்காகவே தனியான மென்பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.இத்தாலிய நிறுவனமான மைக்ரோ டெலிகாம் பெர்சூயஸ் புதிய சிற்றலை மென் பொருளை ICOM-க்கு போட்டியாக விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் 10 KHz முதல் 30 KHz வரையிலான வானொலிகளின் ஒலிபரப்புகளைக் கேட்கலாம். எந்த வானொலிப் பெட்டிகளுடனும் ஒப்பிட முடியாதத் தொழில் நுட்பத்துடன் வெளிவந்துள்ள இந்த வானொலிப் பெட்டியைக்கேட்க கம்ப்யூட்டர் அவசியம் தேவை.Spectrum எனப்படும் ஒலிக்கற்றைகளைத் தெளிவாகக் காணும் வசதியுடன் இந்த மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. நல்ல ஸ்பீக்கர்இணைக்கப்பட்டால், முழுமையாக இதன் ஒலித்தரத்தினை அனுபவிக்கலாம். அடிப்படைவசதிகள் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களிலும் இந்த வானொலி மென்பொருளை இணைத்துக் கேட்கலாம்.இந்த சிற்றலை வானொலி மென்பொருளின்விலை ரூ 52,000/- கிடைக்குமிடம்: Martin Lynch &Sons Ltd, Outline House, 73, Guild Ford Street,Chertsey, Surrey, KT16 9AS, UK. Email: sales@hamradio.co.uk
Tuesday, July 29, 2008
இலங்கை வானொலியின் 2500 மீட்டர் உயரமுள்ள ஆன்டனா

இலங்கை ரூபவாஹினி கார்பரேசன் தனது சக்தியை அதிகரிக்க உள்ளதாக புராட்காஸ்ட் ஆசியா இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்புக்கு அருகில் உள்ள பிதிருடலகா மலையின் உச்சியில் சக்தி வாய்ந்த ஜம்ப்ரோ வகை ஆன்டனாவை நிறுவ உள்ளது. இந்த மலையானது 2500 மீட்டர் உயரமுள்ளதால், இலங்கை முழுவதும் இந்த ஒரு இடத்தில் இருந்தே இலங்கை முழுவதும் ஒலிபரப்ப முடியும். பண்பலை ஒலிபரப்பினை இந்த ஆன்டனா மூலம் செய்தால், தமிழக நேயர்களும் இலங்கை வானொலியின் நிகழ்ச்சிகளை கேட்டக வாய்ப்புள்ளது.
Friday, July 18, 2008
சர்வதேச வானொலி - ஜூன்/ஜூலை 2008
வெளிவந்து விட்டது இந்த மாத சர்வதேச வானொலி இதழ். பத்தாவது ஆண்டுமலராக அதிக பக்கங்களுடன் மலர்ந்துள்ளது இதில், ஆண்டுமலர் சிறப்புப் போட்டி ஒன்றை வைத்துள்ளோம். அனைவரும் இதில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம். இதழைப் படிக்க கீழ்கண்ட தொடுப்பினைச் சொடுக்கவும்.
Tuesday, July 08, 2008
சிங்கப்பூர் வானொலி நிறுத்தப்பட உள்ளது...
இன்று காலை மின் அஞ்சலில் சிங்கப்பூர் வானொலியின் தலைமை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எழுதியிருந்த கடிதத்தில் வரும் ஜூலை 31, 2008-டன் அனைத்து சிற்றலை சேவைகளையும் நிறுத்த வுள்ளனராம், அது தொடர்பாக ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் தொலைப்பேசி ஊடாக நான் பேச வேண்டும் என கேட்டனர். அது ஒரு புரம் இருக்க.. தொடர்ந்து உலக அளவில் சிற்றலை வானொலிகள் நிறுத்தப்பட்டு வருவது வருத்தமளிக்கிறது.
Thursday, June 26, 2008
பிபிசியின் ருமேனிய சேவை நிறுத்தப்படுகிறது
69 ஆண்டுகளாக ஒலிபரப்பாகிவரும் பிபிசியின் ருமேனிய மொழி வானோலி சேவை எதிர்வரும் ஆகஸ்ட் முதல் திகதியுடன் மூடப்படும் என்று பிபிசி உலக சேவை அறிவித்துள்ளது.
உலக சேவையின் இயக்குனர் நைஜல் சேப்மேன், தடையற்ற, சுதந்திரமான தகவல்களை தருவதில் ருமேனிய சேவை முன்னணியில் இருந்ததாக புகழாரம் சூட்டியுள்ளார்.
ருமேனியாவில் அதிகரித்துள்ள ஊடகங்களுக்கு இடையேயான போட்டி மற்றும் ருமேனிய சேவை கேட்கும் நேயர்கள் குறைந்தமை, உலக சேவையின் அனைத்துப் பிரிவுகளிலும் பணத்தை சேமிக்க வேண்டிய கட்டாயம் போன்றவைதான் இந்த முடிவுக்கு காரணங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூடப்படும் ருமேனிய சேவையின் ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நேஷ்னல் யூனியன் ஆப் ஜேர்னலிஸ்ட் அமைப்பு இந்த முடிவு ஏற்க முடியாத ஒன்று என்று கூறியுள்ளது.
உலக சேவையின் இயக்குனர் நைஜல் சேப்மேன், தடையற்ற, சுதந்திரமான தகவல்களை தருவதில் ருமேனிய சேவை முன்னணியில் இருந்ததாக புகழாரம் சூட்டியுள்ளார்.
ருமேனியாவில் அதிகரித்துள்ள ஊடகங்களுக்கு இடையேயான போட்டி மற்றும் ருமேனிய சேவை கேட்கும் நேயர்கள் குறைந்தமை, உலக சேவையின் அனைத்துப் பிரிவுகளிலும் பணத்தை சேமிக்க வேண்டிய கட்டாயம் போன்றவைதான் இந்த முடிவுக்கு காரணங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூடப்படும் ருமேனிய சேவையின் ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நேஷ்னல் யூனியன் ஆப் ஜேர்னலிஸ்ட் அமைப்பு இந்த முடிவு ஏற்க முடியாத ஒன்று என்று கூறியுள்ளது.
Monday, June 02, 2008
கொழும்பு சர்வதேச வானொலி நிறுத்தப்பட்டது.
80 ஆண்டுகளுக்கும் மேலாக தனது சேவையைச் செய்து வந்த கொழும்பு சர்வதேச வானொலி தன து மத்திய அலை ஒலிபரப்பை (873 கி.ஹெ) நேற்று 01 ஜூன் 2008 முதல் நிறுத்தி விட்டது. இதற்கு விளம்பர வருவாய் குறைந்ததேக் காரணமாக இருக்கலாம் என அறியப்படுகிறது. தமிழக வானொலிகளில் கூட இல்லாத பாடல்களைக் கொண்ட ஒலிக்களஞ்சியம் இந்த வானொலியில் உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.இந்த வானொலி நிறுத்தப்பட்டதற்கு மற்றும் ஒரு காரணமாக தமிழக தனியார் பண்பலை வானொலிகள் உள்ளன. கொழும்பு சர்வதேச வானொலியில் கொடுக்கப்பட்ட விளம்பரங்கள் அனைத்தும் தற்பொழுது தமிழக தனியார் பண்பலை வானொலிகளில் ஒலிபரப்பாகிறது.
ஒரு காலகட்டத்தில் தமிழக நேயர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இந்த வானொலியின் சகாப்தம் முடிந்துவிட்டது. மயில்வாகணன், சிவபாத சுந்தரம், சுந்தா சுந்தரலிங்கம், கே.எஸ். ராஜா, பி. ஹெச். அப்துல் ஹமீது போன்ற ஜாம்பவான்களின் குரல் ஒலித்த இந்த வானொலி மீண்டும் உயிர் பெற நேயர்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்?!
-தங்க. ஜெய்சக்திவேல், சென்னை.
Subscribe to:
Posts (Atom)