Saturday, January 11, 2014

தமிழகத்தில் சீன வானொலித் தமிழ்ப் பிரிவின் தலைவர்


சீன வானொலித் தமிழ்ப் பிரிவின் தலைவர் திருமதி. கலைமகள் வரும் 17 ஜனவரி 2014 அன்று மாலை சென்னைப் புத்தகக் காட்சியில் பேச உள்ளார்கள். புத்தகக் காட்சி நடக்கும் இடம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானம். இதில் சீன வானொலி நேயர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். கீழே புத்தக்காட்சியின் சிறப்பு இணைய தளம்...


                                     


22 ஜனவரி 2014 அன்று கோவையில் தமிழ் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்துள்ள “சர்வதேச கருத்தரங்கில்” திருமதி. கலைமகள்  பேச உள்ளார்கள். 

                                       



Thursday, January 09, 2014

டி.எக்ஸ் போட்டி முடிவுகள் - 2013

DX Quiz Results - 2013 

Indian Winners and Runners

1.     Alagiriswamy, Coimbatore – WRTH 2014 sponsored by World Radio TV Handbook, UK.
2.     Vijay Krishna Bhat.D, Puttur – COBY World Band analogue receiver by Radio Free Asia, USA.
3.     Mittul Kansal, Haryana – Kchibo KK-C37 PLL Receiver by China Radio International, China.
4.     Sabareeshwaran, Tirupur – WRTH 2013 Sponsored by Ohtake Toshi (JSWC), Japan.
5.     Prithwiraj Purkayastha, Assam – WRTH archive CD ROM by ADDX, Germany.
6.     Sakthivel.S, Thasappa Koundan Puthur, Erode - Kchibo PLL Receiver by China Radio International
7.     Ganesan.M, Goa – Kchibo PLL Receiver by China Radio International, China.
8.     Ashok Kumar, Haryana – WRTH collector’s edition by T.Elampooranan, Chennai.
9.     Neelaveni Sivaraj.N, Idappadi, Selam – Let’s Learn Chinese through Tamil, (6 Books+ 1 DVD) China Radio International, China.
10.   Shanmugam.N.T., Thasappa Koundan Puthur, Erode – Radio France International cap + DW Pendrive by RFI, DW, Germany.
11.   Muralidhar.M, Bangalore – ADXL-DL T-shirt, RMRC Aktuel Magazine by ADXL, Germany.
12.   Muhammad Shamim, Tiruvananthapuram – RMRC Collectors QSL calendar + DRM logo Pen by RMRC club, Germany, DRM Consortium, UK.
13.   Vetrivel raj.S, Idappadi, Selam – DW Pen drive by DW radio, Germany.
14.   Shanmugasundaram.S, Madurai – Passport to World Band Radio collector’s edition by Japan Premium, Japan.
15.   Sivaraj.K.C, Idappadi, Selam – DW T-shirt + DW Pennant by DW radio, Germany.
16.   Santhosh Raj.S, Idappadi, Selam – RFA Diary + Stick pad by RFA, USA, DW, Germany.
17.   Sekar.P.S, Thalainayar, TN – DW big Note book + Long wire antenna by DW radio Germany, CRI, China.
18.   Sudarshan.S, Thasappa Koundan Puthur, Erode – DW Note book by DW radio, Germany.
19.   Vedamoorthi.S, Sivakasi – DW Cube game + DW Bag by DW radio, Germany.
20.   Raju.K.M, Andarasan Patti, Dindigul – DW Rummy cards, Stick pad, RMRC Pen.
21.   Bedant Das, Assam – DW Memory game + DW Pen by DW radio, Germany.
22.   Mohanmed Ilyas, Hubli – DW Cube game + DW Bag by DW radio, Germany.
23.   Kathiresan.P, Madurai – DW Cube game by DW radio, Germany.
24.   Breshneve.K, Tirunelveli – DW Cube game by DW radio, Germany.
25.   Boopathi.M.C, Erode – DW Note Book by DW radio, Germany.
26.   Porunai Balu, Tirunelveli – RFA Diary + RMRC Pen + DW Pennant by RFA, RMRC and DW.
27.   Subramanian.A.M, Neyveli – DW writing pads + DW Pen by DW radio, Germany.
28.   Kumaran.V.S, Cuddalore – DW Diary + DW Pen by DW radio, Germany.
International winners
29.   Matthias Martin, Germany – British DX Club B13 Booklet by BDXC, UK + Art of Radio special card by Radio Heritage, New Zealand.
30.   Kurt Enders, Germany – Domestic broadcasting Survey by DSWCI, Denmark + Art of Radio special card by Radio Heritage, New Zealand.
31.   Patrick Robic, Austria – British DX Club Communication Magazine by BDXC, UK + Art of Radio special card by Radio Heritage, New Zealand.
32.   Christian Ghibauda, France – EMWC’s Medium Wave Guide by EMS, Germany + Art of Radio special card by Radio Heritage, New Zealand.
33.   Rudolf Sonntag, Germany – EMWC’s Medium Wave Guide by EMS, Germany + DW Radio Pennant by DW Radio.
34.   Stefan Druschke, Germany – Soft copy of One Year Dxers Guide by ADXC, India.
35.    Andreas Muecklich, Germany – Soft copy of One Year Dxers Guide by ADXC, India.
36.   Kalaus Kohler, Germany – Soft copy of One Year Dxers Guide by ADXC, India.
37.   Werner Reimers, Germany – Soft copy of One Year Dxers Guide by ADXC, India.
38.   Arnold Heiles, Luxembourg – ADXC Special QSL card.
39.   Jose Roberto Da Silva Cunha, Brazil – ADXC Special QSL card**.
*All the entries received the Gyanvani Pennant, AIR 75th anniversary pennant, Special QSL, Special First Day cover, Sticker, Calendar, Ardic DX Club sticker.
** Entry fee were not send.
Once again, we acknowledge with appreciation the many entries in this year come from different parts of the world. Thank you for participating, and we trust that you enjoyed participating as much as we did in perusing all of the interesting entries. All entries will be acknowledged through the post, and all reception reports will be verified, though it will take time, to process them all.

 

Monday, January 06, 2014

அந்தமானில் வானொலி

 சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஊடகங்களுள் வானொலிக்கென்று ஒரு தனி இடம் உண்டு.பாமரர்களுக்கும், எளியவர்களுக்கும் இதமானதொரு பொழுது போக்கும் என்று சொல்வதை விட பொழுதை ஆக்கும் ஒரு சாதனமாக வானொலி இருந்து வந்திருக்கிறது.இன்றும் அகில இந்திய வானொலி நிலையங்களின் தமிழ் நிகழ்ச்சிகள் தமிழ் வளர்க்கும் செவ்விய பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலேயே அந்தமான் நிகோபார் ஒன்றியப்பகுதியில் தான் ஏழு மொழிகளில் ஒலிபரப்பும் அகில இந்திய வானொலி நிலையம் உள்ளது.1963,ஜூன் 2ம் நாள் தனது முதல் ஒலிபரப்பை ஆரம்பித்த இந்த நிலையத்தில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, நிகோபாரி, மலையாளம், வங்காளம் ஆகிய மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.அந்தமான் வானொலி நிலையத்தில் பண்பலை ஒலிபரப்பு செய்யப்படுவதில்லை.புதுமையான நிகழ்ச்சிகளை நேயர்களின் ரசனைக்கேற்றவாறு கொடுப்பதாகச்சொல்லி தனித் தமிழ் நடையிலிருந்து தடம் மாற்றி வழங்கப்படும் பண்பலை நிகழ்ச்சிகள் தமிழ் கூர் நல்லுலகிற்கு நன்மையைச்செய்யவில்லை என்பதே உண்மை.

        அந்தமான் வானொலியில் முதன் முதலில் 1965ம் ஆண்டிலிருந்து தமிழ் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.இந்நிலையத்தின் முதல் அறிவிப்பாளர் திரு.S.D.ராஜன் அவர்கள்.அப்போதெல்லாம் காலை 7மணி முதல் 7.15 மணி வரை தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாயின.அதன் பிறகு வட்டார மொழிகள் நிகழ்ச்சிக்கு 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு ஒலிபரப்பப்படுகிறது.அந்தமானில் எங்கு தமிழ் நிகழ்ச்சிகள் நடந்தாலும் ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்புவது வழக்கம். அந்தமான் கிராமப்பகுதிகளில் நேரடியாகச்சென்று தமிழ் மக்களைச்சந்தித்து ஒலிப்பதிவு செய்து வந்து ஒலிபரப்பும் பழக்கமும் உண்டு.1993ம் ஆண்டு பதினாறு கவனகர் கனக சுப்புரத்தினம் அவர்கள் தீவுகளுக்கு வருகை தந்திருந்த போது, வானொலி நிலைய நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார்.அப்போது பார்வையாளர் பகுதியிலிருந்து திரு மா.அய்யா ராஜு அவர்கள் (தற்போது அந்தமான் கல்விதுறையின் துணை இயக்குனர்) ,'போர்ட் பிளேயர் வானொலியைப்போற்று' என்ற ஈற்றடியை நல்க கவனகர் திரு கனக சுப்புரத்தினம் அவர்கள்,

அக்கரைநம் இந்தியத்தின் ஆன்ற மொழிகளில்
மக்கள் வியக்கும் நிகழ்ச்சிகளை - அக்கறையாய்
வார்த்தே வழங்கி வளங்கள் குவித்திடும்
போர்ட் பிளேயர் வானொலியைப்போற்று'

என்ற அழகான வெண்பாவினை இயற்றிப்பாடினார்.அந்தமானில் ஒவ்வொரு வருடமும் 'தீவுக் கண்காட்சி' நடைபெறும்.இக்கண்காட்சியில் பங்கு பெற நாட்டின் எல்லா மாநிலங்களிலிருந்தும் தீவுகளின் நிர்வாகத்தினர் நாட்டுப்புறக்கலைஞர்களை வரவழைப்பர்.அவர்களிடமும் தமிழ் நிகழ்ச்சிகளுக்கென ஒலிப்பதிவு செய்வதுண்டு.

   இன்று செவ்வாய்க்கிழமைகளில் மகளீர் மட்டும் - பெண்களுக்கான நிகழ்ச்சி,வியாழக்கிழமை தோறும் வேளாண் உலகம், வெள்ளிக்கிழமைகளில் இலக்கியச்சோலை,சனிக்கிழமைகளில் சிறுவர் பூங்கா,இளைய பாரதம் ஆகியன ஒலிபரப்பபடுகிறது.பிற மொழிக்கலப்பின்றி நல்ல தமிழில் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன.இங்குள்ள கவிஞர்கள்,எழுத்தாளர்கள் அனைவரையும் பட்டை தீட்டியது அந்தமான் வானொலி நிலையத்தின் தமிழ்ப்பிரிவு என்று சொன்னால் அது மிகையாகாது.

   இதோடு வாரத்தில் இரண்டு நாள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை மணி 6.15 முதல் 6.30 வரை தமிழில்,'பக்தி மாலை' நிகழ்ச்சி ஒலிபரப்பாகும்.முன்னாட்களில் இசைத்தட்டுகளை எடுத்து வைத்துவிட்டு வந்துவிட்டால் இந்தி அறிவிப்பாளர்கள் ஒலிபரப்புவார்கள்.ஆனால் நிகழ்ச்சி பொறுப்பாளராக ஐயா தெய்வத்திரு இலஞ்சி நடராஜன் அவர்கள்பொறுப்பேற்ற பின், ' அதென்ன,மொழி தெரியாத ஒரு ஆளு தமிழ்ல பக்தி பாட்ட போடுறது. அப்டிப் போகக் கூடாது' என்று கூறிய  நாள்முதல் தமிழில் அழகுற தொகுப்புரை வழங்கி பாடல்களை ஒலிபரப்பினார். அவரது கவனிப்பில் தமிழ்,தெலுங்கு,மலையாளம் என்று மூன்று தென்னிந்திய மொழிகள் பிரிவும் இருந்தன.இன்றும் மூன்று பிரிவுகளிலும் பக்தி மாலை நிகழ்ச்சி இப்படித்தான் போகிறது.மார்கழி மாதத்தில் திருப்பாவை,திரு வெம்பாவை விளக்க உரையுடன்,நவராத்திரி தினங்களில் நவராத்திரி பாடல்கள்,இஸ்லாமிய,கிறித்துவ பன்டிகைகளின் போது உரிய விளக்க உரைகளுடன் பக்திமாலை நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.எங்கள் ஒவ்வொருவரிடமும் கீதை,குரான்,பைபிள் புத்தகங்கள் இருக்கும்.

         1993ல் முசிறி டி.வீராச்சாமி அவர்கள், சிதம்பரம்.ஏ.சுவாமிநாதன் அவர்கள் இருந்தார்கள்.அவர்கள் இருந்த காலம் அந்தமான் வானொலித் தமிழ்ப் பிரிவின் பொற்காலம்.அதன் பிறகு அந்தப்பொற்காலம் 2001 ம் ஆண்டு தான் திரும்பியது.நிகழ்ச்சி பொறுப்பாளராக ஐயா தெய்வத்திரு இலஞ்சி நடராஜன் அவர்கள் வந்த பிறகு யார் யாருக்கு திறமை இருக்கிறதோ அவர்கள் வானொலி நிகழ்ச்சி வழங்க வாருங்கள் என்று அழைக்கவில்லை.யார் யாருக்கெல்லாம் ஆசை இருக்கிறதோ வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார். தமிழ்நாட்டிலிருந்து புத்தங்கள் வரவழைத்து அவரவர் ஆர்வத்திற்கு ஏற்றபடி புத்தகங்களைக் கொடுத்தனுப்பி பிறகு எழுதிவரச்சொல்லி வாசித்துக்காட்டச்சொல்லி உச்சரிப்பைச்சரிசெய்து ஒலிப்பதிவு செய்ய எங்களைப் பணிப்பார்.உச்சரிப்பு சரியில்லாது நாங்கள் ஒலிப்பதிவு செய்து விட்டால் யார் நிகழ்ச்சியை ஒலிப்பதிவு செய்தார்களோ அவர் தான் மீண்டும் சம்பந்தப்பட்டவரை வரச்சொல்லி ஒலிப்பதிவு செய்யவேண்டும்.அவர் வந்த பிறகு தான் தீவின் தமிழ்ப் பெரியவர்களை அழைத்து 'இவர்களைச்சந்தியுங்கள்' என்ற நிகழ்ச்சியின் மூலம் அவர்கள் தீவுத் தமிழர்களுக்கு ஆற்றிய பணிகளை வெளியுலகம் அறியும்படி செய்தார்.'ரசிகர் தேன் கிண்ணம்' என்ற நிகழ்ச்சியின் மூலம் படிக்காதவர்களையும் பங்கு கொள்ள வைத்தார். தங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் சில திரைப்பட பாடல்களை நினைவூட்டுமில்லையா? அப்படிபட்ட பாடல்களைப் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்லி இல்லத்தரசிகள் பலரைப் பங்கு பெறச்செய்தார்.இவரது பணிக்காலத்தில் நிறைய கவிதைகள்,கவியரங்கங்கள்,வரலாற்று,சமூக,நகைச்சுவை நாடகங்கள்,குழந்தைகள், மகளீர் மற்றும் மருத்துவ நிகழ்ச்சிகள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு காற்றலைகளில் கலந்தன.தமிழர் சங்கத்துடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார்.இன்றொரு தகவல் புகழ் அமரர். தென் கச்சி சுவாமிநாதன் அவர்கள்,நடிகர்.எஸ்.வீ.சேகர் அவர்கள்,இயக்குனர் ஆர்.கே.செல்வமணி அவர்கள் மற்றும் பல பிரமுகர்கள் தீவுக்கு வருகை தந்த போது வானொலிக்கென நிக்ழ்ச்சிகள் ஒலிப்பதிவு செய்தார். 2001ம் ஆண்டில் தெய்வத்திரு இலஞ்சி நடராஜன் ஐயா அவர்கள் தனது பெரு முயற்சியாலும் மற்றும் பல தமிழ்ப்பெருமக்களின் ஆதரவோடும்,'கம்பன் கழகத்தை'த் தொடங்கினார்.தமிழ்நாட்டின் கம்பன் கழக அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு கம்பராமாயணம் சம்பந்தப்பட்ட புத்தங்களை வரவழைத்து கம்பன் கழக உறுப்பினர்களுக்கு வழங்கி,ஒவ்வொரு சனிக்கிழமை மாலை கம்பன் கழகக்கூட்டங்களை ஏற்பாடு செய்து,உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு தலைப்பு கொடுத்து அவர்களை உரையாற்ற வைத்து ஒலிப்பதிவு செய்து வானொலியில் ஒலிபரப்பினார்.இலஞ்சி நடராஜன் ஐயா அவர்கள் மாற்றலாகிப் போன சில காலத்தில் கம்பன் கழகம் காணாமல் போய்விட்டது வருத்தத்திற்குரியது.

          அவருக்குப்பிறகு நிகழ்ச்சி பொறுப்பாளராக உயர்திரு.ராமஸ்வாமி சுதர்சன் அவர்கள் வந்து நேரடித்தொலை பேசி நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்தார். நாடகங்கள் பலவற்றில் நடித்து, ஒலிப்பதிவு செய்து,அழகுற வடிவாக்கம் செய்தார்.அவர் நாடகங்கள் ஒத்திகை செய்யும் போது எங்களை சரியாக நிமிர்த்திவிடுவார். அவர் வசனம் வரும் போது வாசித்துக்காட்டுவார். என்ன நம்மை இப்படி வேலை வாங்கிவிட்டு இவர் வாசிக்கிறார் என்று நினைத்தோம்.முதல் நாடகம் இந்திர விழா என்ற வரலாற்று நாடகம்.ஓ.கேம்மா!.டேக்! என்பார்.ஒலிப்பதிவு செய்யும் போது ஒலிவாங்கியைக் கையில் பிடித்து ஆடாமல் அசையாமல் ஒலியிலும் உச்சரிப்பிலும் வர்ண ஜாலம் காட்டுவதைப்பார்த்து எங்கள் வசனம் மறந்துவிட்டது.ஒரு நாடகத்தில் இவர் எதிர்பார்த்த தரம் கிடைக்காது போக இவரே நான்கு வேடம் ஏற்று நடித்ததும் உண்டு.

      அடுத்து வந்த உயர்திரு.ராமச்சந்திரன் அவர்களால் இவர்கள் அளவு பிரகாசிக்க முடியாது போனது எங்களது துரதிர்ஷ்டம்.அந்தமான் வானொலித் தமிழ்ப்பிரிவிற்கு விடியல் எப்போது? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.பல ஜாம்பவான்கள் அலங்கரித்த நிகழ்ச்சிப் பொறுப்பாளர் பதவி நிரப்பப்படாது இருப்பதால் தமிழ்ப்பிரிவு வேற்று மொழி மேலதிகாரிகளின் கீழ் தற்காலிக அறிவிப்பளர்களான எங்கள் பொறுப்பில் தான் இருக்கிறது. எங்களின் திறமையின் எல்லை எவ்வளவோ அதுவரை தான் தமிழ்ப்பிரிவின் செயல் பாடுகளும் உள்ளது.நிரந்தரமற்ற பணியில் இருக்கும் எங்களுக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதோ அதற்குள் தான் சுற்றிச்சுழல வேண்டியுள்ளது.நாங்கள் எல்லோருமே வெவ்வேறு துறைகளில் இருக்கிறோம்.அது வயிற்றுக்கு. இது உயிருக்கு.இருந்தாலும் வேற்று மொழி மேலதிகாரிகள் அலுவலகச்சட்டதிட்டங்களுக்குட்பட்டு என்ன உதவி செய்யமுடியுமோ அதை வட்டார மொழிப்பிரிவுகளுக்கு வழங்கி வருகிறார்கள்.

     கடந்த மாதம் அந்தமான் தமிழர் சங்கத்தில் நடை பெற்ற வி.ஜி.பி.உலகத்தமிழ்ச்சங்கமும்,அந்தமான் தமிழர் சங்கமும் இணைந்து நடத்தியபிரம்மாண்ட 9வது திருக்குறள் மாநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை இரண்டு நாட்கள் ஒலிப்பதிவு செய்தோம். தமிழ் நாட்டில் இருந்து வருகை தந்திருந்த பெருமக்கள் அனைவரின் உரைக்கோவைகள், கவிதைகள், பட்டிமன்றங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்து பிறகு கணிப்பொறிக்கு அதை மாற்றி,வெட்டி,ஒட்டி வானொலிக்கேற்ற வடிவமாக்கி, இரண்டு நாள் நிகழ்ச்சிகளை ஒரு நாள் வானொலித்தொகுப்பாக, மற்ற நிகழ்ச்சிகளை நிகழ்ச்சிக்கேற்றவாறு ஒலிபரப்பு செய்கிறோம்.தூரத்தீவுகளில் இருக்கும் நேயர்களுக்கு வானொலி நிகழ்ச்சிகள் தலை நகர் நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள உதவும் ஒரு கருவி. ஆகவே எந்த ஊதியமும் எதிர்பாராது,இது போன்ற தருணங்களை எங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளாகக் கருதி ஆர்வமுடன் செய்து வருகிறோம்.

அந்தமான் வானொலித் தமிழ்ப்பிரிவு ஒரு விடியலை நோக்கிக் காத்திருக்கிறது.

நன்றி:  க.நா.சாந்தி லெட்சுமணன்.
http://andamantamizhosai.blogspot.in

Monday, December 30, 2013

வானொலி வளர்த்த தமிழ்



வானொலியின் வரலாறு, வானொலி வளர்த்த இயற்றமிழ், வானொலி வளர்த்த இசைத்தமிழ், வானொலி வளர்த்த நாடகத் தமிழ், வானொலி வளர்த்த அறிவியல் தமிழ் என விரிந்து செல்கிறது இந்நூலின் ஆய்வுப் பரப்பு.
தில்லி, மும்பை, கொல்கத்தா, லக்னோ, சென்னை, திருச்சி ஆகிய   ஆறு வானொலி நிலையங்களே நாடு சுதந்திரமடைந்த செய்தியை ஒலிபரப்பின என்பது போன்ற சுவையான தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
வானொலியில் ஒலிபரப்பான  உரைகள், கல்வி ஒலிபரப்பு, சிறுகதைகள், வானொலிக் கவியரங்கங்கள், வாசிக்கப்பட்ட கவிதைகள், நேர்முகங்கள் ஆகியவை இயற்றமிழ் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவின என்பதை இந்நூல் விளக்குகிறது.
கர்நாடக - ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சிகள், மெல்லிசை நிகழ்ச்சிகள், வாத்திய விருந்தா எனும் இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற இசையை வானொலி பயன்படுத்திக் கொண்டவிதம் ஆகியவற்றை "வானொலி வளர்த்த இசைத் தமிழ்' கட்டுரை விளக்குகிறது.
அகில பாரத நாடகங்கள், சரித்திர நாடகங்கள், புராண இதிகாச நாடகங்கள் உட்பட வானொலியில் ஒலிபரப்பான நாடக வகைகளைப் பற்றியும் தெரிந்து கொள்கிறோம்.
விவசாயம், மருத்துவம் பற்றி வானொலியில் ஒலிபரப்பான நிகழ்ச்சிகள் அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு உதவின என்கிறார் நூலாசிரியர்.
வானொலி நிகழ்ச்சிகள் பற்றிய நூலாக இருந்தாலும், இதழியல் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் ஒவ்வொரு நிகழ்ச்சிகளின் தனித்தன்மை, தொழில்நுட்பம் ஆகியவற்றையும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 
வானொலி வளர்த்த தமிழ் - இளசை சுந்தரம்; பக்.260; ரூ.150; 
மீனாட்சி புத்தக நிலையம், மதுரை 
0452- 2560517.

'காசிநகர்ப் புலவன் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்குவோம்' என, மகாகவி பாரதியார் கண்ட கனவை நனவாக்கிய கருவி வானொலி. அந்த வானொலி பற்றிய ஆய்வு நூலை, பாரதி பிறந்த எட்டையபுரத்து மண்ணின் மைந்தர், பாரதி வேடமிட்டு உலக மேடைகளில் உலா வரும் பேச்சாளர், எழுத்தாளர் இளசை சுந்தரம் எழுதியிருப்பது பொருத்தமானது.
தகவல் தொடர்பியல் மாணவர்களுக்கு இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும். வானொலியின் வரலாறு, வானொலி வளர்த்த இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ் என, தனித்தனி அத்தியாயமாக எழுதப்பட்டுள்ளது. தொலைக்காட்சியின் வருகைக்கு பின், வானொலி வாழுமா என்ற கேள்விக்கு இளசையின் பதில் சிந்திக்க தூண்டுவது. இந்த புத்தகம் ஒரு வானொலி ஆவணம்.
-ஜிவிஆர் 

Wednesday, December 04, 2013

தமிழ் ஒலி - இதழ் தொகுப்பு

இலங்கையில் இருந்து திரு. உமா காந்தன் அவர்கள் 1980களில் வானொலிக்கென வெளியிட்ட தமிழ் ஒலி இதழ் தொகுப்பு இப்பொழுது இணையத்தில் பதிவு இறக்கம் செய்து படிக்க வசதி செய்யப் பட்டுள்ளது.

அனித்து இதழ்களையும் பதிவு இறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

நெல்லை வானொலி நிலையப் பொன் விழா

திருநெல்வேலி வானொலி நிலையத்தின் பொன்விழா நிறைவு நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. விழாவில் நிகழ்த்தப்பட்ட கிராமிய கலைஞரின் காவடியாட்ட நிகழ்ச்சி நேயர்களை பெரிதும் கவர்ந்தது.
திருநெல்வேலி அகில இந்திய வானொலி நிலையம் 1963-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி திருச்சி வானொலி நிலையத்தின் துணை வானொலி நிலையமாக நிகழ்ச்சி ஒலிபரப்பைத் தொடங்கியது. பின்னர், 1977ஆம் வருடம் ஜனவரி 12-ம் தேதிமுதல் தனது முழுநேர ஒலிபரப்பு சேவையைத் தொடங்கியது.
50 ஆண்டு நிறைவு பெறுவதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை சங்கீத சபாவில்  பொன் விழா நிறைவு நிகழ்ச்சி பிரசார் பாரதி வாரிய உறுப்பினர் பிரிகேடியர் வி.ஏ.எம்.  ஹுசேன் தலைமையில் நடைபெற்றது. அகில இந்திய வானொலி நிலைய  தென்மண்டல தலைமை இயக்குநர் க.பொ. ஸ்ரீனிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் பி. சுப்பிரமணியன் வாழ்த்திப் பேசினார்.
ஓய்வுபெற்ற திருநெல்வேலி வானொலி நிலைய இயக்குநர் பாலக்காடு எஸ். கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் வி. அப்பாக்குட்டி, முதல்  அறிவிப்பாளர் வி. நல்லதம்பி ஆகியோர் விழாவில் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சித் தொகுப்பாளர் க. தெட்சிணாமூர்த்தி, தூர்தர்சன் தொழில்நுட்ப உதவி இயக்குநர் நவநீதகிருஷ்ணன் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான நேயர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி தொடக்கமாக கிராமிய கலைஞர் கே.பி. முத்துலட்சுமி குழுவினரின்  வில்லுப்பாட்டு நிகழ்ச்சி, இசக்கியம்மாள் குழுவினரின் கரகாட்டம், காவடியாட்டம் நடைபெற்றது. காவடியாட்டம் நேயர்களைப் பெரிதும் கவர்ந்தது.
முடிவில் உமா, ராதிகா குழுவினரின் பாட்டு, உஷாராஜகோபாலன் வயலின், ஆர். ரமேஷ் மிருதங்கம், ஆர். ராமன் முகர்சங்கு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியை வானொலி அறிவிப்பாளர்கள் கரைசுற்றுபுதூர் குருசாமிகவிபாண்டியன், சந்திரபுஷ்பம், உமாகனகராஜ் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
 
நன்றி: http://dinamani.com

நெல்லை வானொலி நிலைய பொன் விழா

திருநெல்வேலி : நெல்லை வானொலி நிலையத்தின் பொன்விழா நிறைவு நிகழ்ச்சி நடந்தது.
நெல்லை வானொலி நிலையத்தின் பொன்விழா நிறைவை குறிக்கும் விதமாக நெல்லை சங்கீத சபாவில் விழா நடந்தது. பிரசார் பாரதி வாரியத்தின் உறுப்பினர் ஹூசேன் தலைமை வகித்தார். நிலைய இயக்குனர் பாலச்சந்திரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட் வக்கீல் சுப்பிரமணியன், சென்னை வானொலி நிலையத்தின் தென்மண்டல கூடுதல் தலைமை இயக்குனர்(பொறுப்பு) சீனிவாசன் ஆகியோர் பேசினர். விழாவில், நெல்லை வானொலி நிலையத்தின் ஓய்வுபெற்ற முதல் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, முதல் ஒய்வுபெற்ற தலைமைபொறியாளர் அப்பாக்குட்டி, வானொலி நிலையத்தின் முதல் அறிவிப்பாளர் நல்லதம்பி ஆகியோருக்கு பிரசார் பாரதி உறுப்பினர் ஹுசேன் பாராட்டி பொன்னாடி போர்த்தி பாராட்டினார்.
நெல்லை வானொலி நிலைய நிகழ்ச்சி தொகுப்பாளர் தெட்சிணா மூர்த்தி, தூர்தர்ஷன் தொழில்நுட்ப உதவி இயக்குனர் நவநீதன் உட்பட முக்கிய பிரமுகர்கள், வானொலி நேயர்கள் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக,முத்துலட்சுமி குழுவினரின் வில்லுப்பாட்டு, இசக்கியம்மாள் குழுவினரின் கரகாட்டம், காவடியாட்டம் நடந்தன. தொடர்ந்து, உமா, ராதிகா குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடந்தன.நிகழ்ச்சிகளை குருசாமி கவிப்பாண்டியன், சந்திர புஷ்பம், உமா கனகராஜ் தொகுத்து வழங்கினர். ஏற்பாடுகளை நெல்லை வானொலி நிலைய நிர்வாகத்தினர் செய்தனர்.
பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013,01:55 IST
நன்றி: http://www.dinamalar.com