Showing posts with label பிரசார் பாரதி. Show all posts
Showing posts with label பிரசார் பாரதி. Show all posts

Wednesday, December 04, 2013

நெல்லை வானொலி நிலைய பொன் விழா

திருநெல்வேலி : நெல்லை வானொலி நிலையத்தின் பொன்விழா நிறைவு நிகழ்ச்சி நடந்தது.
நெல்லை வானொலி நிலையத்தின் பொன்விழா நிறைவை குறிக்கும் விதமாக நெல்லை சங்கீத சபாவில் விழா நடந்தது. பிரசார் பாரதி வாரியத்தின் உறுப்பினர் ஹூசேன் தலைமை வகித்தார். நிலைய இயக்குனர் பாலச்சந்திரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட் வக்கீல் சுப்பிரமணியன், சென்னை வானொலி நிலையத்தின் தென்மண்டல கூடுதல் தலைமை இயக்குனர்(பொறுப்பு) சீனிவாசன் ஆகியோர் பேசினர். விழாவில், நெல்லை வானொலி நிலையத்தின் ஓய்வுபெற்ற முதல் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, முதல் ஒய்வுபெற்ற தலைமைபொறியாளர் அப்பாக்குட்டி, வானொலி நிலையத்தின் முதல் அறிவிப்பாளர் நல்லதம்பி ஆகியோருக்கு பிரசார் பாரதி உறுப்பினர் ஹுசேன் பாராட்டி பொன்னாடி போர்த்தி பாராட்டினார்.
நெல்லை வானொலி நிலைய நிகழ்ச்சி தொகுப்பாளர் தெட்சிணா மூர்த்தி, தூர்தர்ஷன் தொழில்நுட்ப உதவி இயக்குனர் நவநீதன் உட்பட முக்கிய பிரமுகர்கள், வானொலி நேயர்கள் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக,முத்துலட்சுமி குழுவினரின் வில்லுப்பாட்டு, இசக்கியம்மாள் குழுவினரின் கரகாட்டம், காவடியாட்டம் நடந்தன. தொடர்ந்து, உமா, ராதிகா குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடந்தன.நிகழ்ச்சிகளை குருசாமி கவிப்பாண்டியன், சந்திர புஷ்பம், உமா கனகராஜ் தொகுத்து வழங்கினர். ஏற்பாடுகளை நெல்லை வானொலி நிலைய நிர்வாகத்தினர் செய்தனர்.
பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013,01:55 IST
நன்றி: http://www.dinamalar.com

Monday, September 10, 2012

இந்தியாவின் முதல் 1000 கிலோ வாட் டி.ஆர்.எம்


இந்தியாவின் முதல் 1000 கிலோ வாட் டிஜிட்டல் ரேடியோ மொண்டியல் (டி.ஆர்.எம்) சூப்பர் பவர் ஒலிபரப்பி குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள லியாரே கிராமத்தில் உள்ள அகில இந்திய வானொலியில் தொடங்கப்பட்டது.

 இந்த விழாவில் பேசிய பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஜவஹர் சிர்கார், அகில இந்திய வானொலி விரைவில் மற்ற நிலையங்களிலும் டி.ஆர்.எம் எனும் டிஜிட்டல் தொழில்நுட்ப டிரான்ஸ்மிட்டர்களை நிறுவவுள்ளது என்று கூறினார். 
இந்த டிஆர்எம் தொழில்நுட்ப சூப்பர் பவர் ஒலிபரப்பி கொண்டு ஒரே நேரத்தில்  டிஆர்எம், ஏ.எம் மற்றும் சைமல்காஸ்ட் முறைகளில் ஒலிபரப்பும் திறன் வாய்ந்தது ஆகும். இதுவே நாட்டின் முதல் சைமல்காஸ்ட் ஒலிபரப்பி என்பதில் நமக்கெல்லாம் பெருமையே. இந்தத் திட்டத்திற்காக 42 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியிருந்த்து குறிப்பிட்த்தக்கது.

இந்த ஒலிபரப்பி கொண்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் வட மேற்கு திசையில் உள்ள சில வளைகுடா நாடுகளுக்கும் ஒலிபரப்பப்படுகிறது. அகில இந்திய வானொலியின் வெளிநாட்டு சேவைகளான உருது, சிந்தி மற்றும் பெலுசி ஆகிய மொழிகள் இதன் மூலம் ஒலிபரப்பப்படுகின்றன. மத்திய அலையில் 1071 கிலோ ஹெர்ட்ஸிலும் டி.ஆ.எம் சேவையானது 1080 கிலோ ஹெர்ட்ஸிலும் ஒலிபரப்பப்படவுள்ளது. தற்சமயம் சோதனை ஒலிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் உருது மற்றும் விவித பாரதியின் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி வருகிறது.

Saturday, February 18, 2012

பிரசார் பாரதி அமைப்பிற்கு புதிய தலைவர்

பிரசார் பாரதி அமைப்பிற்கு புதிய தலைவராக மேற்கு வங்காளத்தினைச் சார்ந்த திரு. ஜவஹர் சிர்கார் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் தலைவர் லாலி காமன்வெல்த் ஊழல் வழக்கில் பெயர் சேர்கப்பட்டுள்ளதால், அவரது பதவி பறிக்கப்பட்டது. மூன்று நபர்கள் கொண்ட தேர்வு கமிட்டி தற்பொழுது ஜவஹர் சிர்கார் அவர்களை குடியரசுத் தலைவருக்கு பறிந்துறைத்ததன் பேரில் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். அரசின் பொதுத்துறை ஊடகமான அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷானுக்கு இவர் தலைவராக இருப்பார்.