நாட்டின் பொன்விழாக் கொண்டாட்டத்தின் தொடர்பில் மீடியாகார்ப் நிறுவனம் சில முக்கிய தேசிய தின நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சி, வானொலி, இணையம் ஆகியவற்றில் ஒலி, ஒளிபரப்பவிருக்கிறது. Toggle, Channel News asia இணையத்தளம் ஆகியவற்றின் வழியாக உள்ளூர், வெளியூர் நேயர்கள் நிகழ்ச்சிகளைக் காணலாம். http://seithi.mediacorp.sg/mobilet/singapore/04-aug-sg50-specials-by/2028450.html |
சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Friday, August 07, 2015
சிங்கப்பூர் மீடியாகார்ப்பின் தேசிய தின நிகழ்ச்சிகள்
இலங்கை சூரியன் FM - பண்பலையின் முதலிடத்தில் 17 ஆண்டுகள்
17 ஆண்டுகள் பல துறை சாதனை படைத்து தமிழ் ஒலிபரப்பில் தனக்கென்று தனி இடம்பிடித்து தமிழ் பேசுவோரின் தரமான தெரிவாக முதல் தரமாக மகத்தான தமிழ் பரப்பும் சூரியன் வானொலிக்கு 25ஆம் திகதி மற்றுமொரு சாதனை ஆண்டு ஆரம்பமாகியுள்ளது. http://www.virakesari.lk/articles/2015/07/25/சூரியன்-fm-பண்பலையின்-முதலிடத்தில்-17-ஆண்டுகள் |
தமிழை விரும்பும் சீனப் பெண்
தமிழில் பேசுவதையே பல தமிழர்கள் தரக்குறைவாக நினைக்கும் போது சீன மாணவியான நிலானி, தன் தமிழ் அறிவை மேம்படுத்தி க்கொள்வதற்காக இந்தியா வந்திருக்கிறார். சீன வானொலி தமிழ்ப் பிரிவில் அறிவிப்பாளராகப் பணிபுரியும் அவர் தற்போது வந்திருப்பது பேச்சுத் தமிழ் கற்க. http://m.tamil.thehindu.com/society/women/தமிழை-விரும்பும்-சீனப்-பெண்/article7490014.ece |
இருந்தபடி சர்வதேச விண்வெளி நிலையத்துடன் பேசியவர்
வானொலி மீது ஆர்வம் கொண்ட பிரிட்டனில் வசிக்கும் ஒருவர் தனது தோட்டத்தில் இருக்கும் கொட்டகையில் அமர்ந்தபடியே சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர் ஒருவரிடம் சிறிது நேரம் அரட்டை அடித்துள்ளார். http://www.bbc.com/tamil/global/2015/08/150806_space |
Wednesday, July 22, 2015
அகில இந்திய வானொலி நிலையத்தில் போலீஸார் அத்துமீறல்: துப்பாக்கிச்சூட்டால் பரபரப்பு
டெல்லியில் உள்ள அகில இந்திய வானொலி நிலைய வளாகத்தினுள் போலீஸார் அத்துமீறிய நிலையில் அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். உச்சகட்ட பாதுகாப்பை மீறி இத்தகைய சம்பவம் நடந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது இது குறித்து டெல்லியைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி கூறும்போது, "இன்று காலை 3 மணிக்கு, அங்கித் குமார் மற்றும் இன்னொரு போலீஸார் ஆகியோர் குடிபோதையில் காரில் வந்து, பூட்டி இருந்த நுழைவு வாயில் கதவை உடைத்து முன்னேறிய நிலையில், அவர்களை தீவிரவாதிகள் என நினைத்து பாதுகாப்பு பணியில் இருந்த நாகாலாந்து போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். http://m.tamil.thehindu.com/india/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7392147.ece |
எப்.எம். வானொலி ஏலத்தில் சன் குழுமத்தை அனுமதிக்கக் கோரி வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
பண்பலை வானொலி (எப்.எம்) நிலையங்களுக்கான ஏலத்தில் பங்கேற்க சன் குழுமத்தை அனுமதிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இது குறித்த விவரம்: பண்பலை வானொலி நிலையங்களை நடத்துவதற்கான அனுமதியை மத்திய அரசு ஏலம் மூலம் ஒதுக்குகிறது. இந்நிலையில், இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், தங்களது விண்ணப்பங்களை மத்திய செய்தி, ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தன. http://www.dinamani.com/india/2015/07/21/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/article2932717.ece |
Wednesday, July 15, 2015
ஒலி 96.8இன் பாமாவுக்கு அமைச்சர் சண்முகம் இரங்கல்
மீடியாகார்ப் ஒலி 96.8இன் மூத்த தயாரிப்பாளர் பாமா பாலகிருஷ்ணன் காலமானது குறித்து அமைச்சர் சண்முகம் வருத்தம் தெரிவித்திருக்கிறார். நீ சூன் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அமைச்சர் சண்முகம், தமது வட்டாரத்தில் திருமதி பாமா குடியிருந்ததை ஃபேஸ்புக் பதிவில் சுட்டினார்.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் அமரர் திரு லீ குவான் இயூவிற்காக நீ சூனில் அமைக்கப்பட்டிருந்த சமூக அஞ்சலித்தளத்தில் திருமதி பாமாவைச் சந்தித்ததாக திரு சண்முகம் கூறினார். திரு லீயைப் பற்றி திருமதி பாமா மிக உருக்கமாய் உரையாற்றியதாக அவர் சொன்னார். துடிப்பும் வசீகரமும் நிறைந்த திருமதி பாமாவின் குரல் ஒலி 96.8இன் நேயர்களுக்குப் பல நேரங்களில் ஆறுதலாய் அமைந்திருந்ததாகக் கூறினார் திரு சண்முகம்.
இந்தியச் சமூகத்தில் பிரபலமாகத் திகழ்ந்த திருமதி பாமா, சமூகப் பணிகளுக்கு ஆதரவாளராக இருந்ததையும் வானொலி வழியே பலருக்கு அறிவுரைகளும் ஆலோசனைகளும் கூறியதையும் அவர் சுட்டினார். பாமாவின் மென்மையான இயல்பே பலரையும் ஈர்த்தது. பாமாவின் மறைவு, வானலைகளில் மட்டுமல்லாமல் பலரின் மனங்களிலும் வெற்றிடத்தை ஏற்படுத்தியிருப்பதாக நெகிழ்ந்தார் திரு. சண்முகம்.
திருமதி பாமா பாலகிருஷ்ணனின் இறுதிச்சடங்கு இன்று மண்டாய் தகனச்சாலையில் நடைபெறும்.
Source: http://seithi.mediacorp.sg/
Subscribe to:
Posts (Atom)