Source: India Radio Bulletin - January 2008சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Tuesday, January 22, 2008
Friday, January 18, 2008
ஹலோ எப். எம் மற்றும் சூரியன் எப்.எம் திருச்சியில் தொடங்கப்பட்டது.
ஹலோ எப். எம் தனது முறையான ஒலிபரப்பினை கடந்த 14 ஜனவரியிலும், சூரியன் எப்.எம் கடந்த 15 ஜனவரியிலும் தொடங்கியுள்ளன. ஹலோ எப். எம்மின் இயக்குனர் இது பற்றி கூறும் பொழுது, “திருச்சி எங்களுக்கு ஒரு சவாலான நகர், காரணம் இங்கு ஏற்கனவே இலங்கை வானொலியின் பண்பலை ஒலிபரப்பினை ஏராலமான நேயர்கள் கேட்டு வருகிறார்கள்” என்றார். சூரியன் எப்.எம்மும் தனது பங்கிற்கு பல புதுமையான நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப உள்ளன.Monday, December 31, 2007
வேரித்தாஸ் தமிழ்பணி நேயர் சந்திப்பு - 2008
நேயர் மன்றத் தலைவர்கள் சந்திப்பு கூட்டம் வரும் 5 ஜனவரி 2008 காலை 10 மணியளவில் சென்னை சாந்தோம் கலைத்தொடர்பு நிலையத்தில் திரு. டென்னிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. சர்வதேச வானொலிகளைக் கேட்கும் அனைத்து நேயர் மன்றத் தலைவர்களும் இதில் கலந்து கொள்ள வேண்டி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வழித்தட வரைபடம்: http://wikimapia.org/#lat=13.038927&lon=80.266113&z=17&l=0&m=s&v=2
சென்னையில் நடைபெற்ற பைப்ஸ் கேம்ப்
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பைப்ஸ் கேம்-பில் (Pipes Camp) வண்ணை ராஜாவுடன் நான். நடுவில் பாலாஜி. நன்றி: சீனிவாசன் http://coolsrini.blogspot.com/2007/12/my-visit-to-pipescamp.html
Friday, December 28, 2007
பழமையான கிராம்போன்கள்
பாண்டிச்சேரியில் இரண்டு புதிய பண்பலை வானொலிகள்
கடந்த வாரத்தில் பாண்டிச்சேரியில் இரண்டு புதிய பண்பலை வானொலிகள் தொடங்கப்பட்டுள்ளது. ரிலயன்ஸ் குழுமத்தின் பிக் எப்.எம் தனது 41-ஆவது நிலையத்தை இங்கு தொடங்கியுள்ளது. அதே போன்று தினத் தந்தி குழுமத்தின் ஹலோ எப்.எம்-மும் தனது ஆறாவது நிலையத்தை இங்கு தொடங்கியுள்ளது. தற்சமயம் பாண்டிச்சேரியில் சூரியன் உட்பட மூன்று தனியார் பண்பலை வானொலிகள் செயல்பட்டு வருகின்றன. - தகவல்: சர்வதேச வானொலி மாத இதழ்.
Thursday, December 20, 2007
பிபிசி உலக சேவைக்கு வயது 75
பிபிசியின் உலக சேவை, சிறப்பு நிகழ்சிகளுடன் 19-12-2007 அன்று தனது 75 ஆவது பிறந்த நாளை கொண்டாடியது.இதே நாளில் 1932 ஆம் ஆண்டில் உலக சேவையானது எம்பையர் சர்வீஸ் என்று அப்போது அழைக்கப்பட்ட பெயரில் லண்டனில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்துக்கும் தனது முதல் ஒலிபரப்பை செய்தது.
தற்போது உலக சேவை 33 மொழிகளில் ஒலிபரப்பை மேற்கொண்டு வருகிறது.
இச்சேவையை வாராந்திரம் 18 கோடி மக்கள் கேட்கின்றனர்.
இதனையொட்டி கல்வியாளர்கள் மற்றும் இதழியல் நோக்கர்களின் கருத்துக்களை கீழ்கண்ட தொடுப்புப் பக்கத்தில். http://www.bbc.co.uk/tamil/highlights/story/
2007/12/071214_75thanniversary.shtml
நன்றி: பிபிசி தமிழோசை
Subscribe to:
Posts (Atom)
