Monday, September 24, 2007

பிபிசி தமிழோசையில் தமிழ் சினிமா

தமிழ்த் திரையுலகின் வரலாறு குறித்த நெடுந்தொடரை பிபிசி தமிழோசை வானொலி ஒலிபரப்பவுள்ளது.30 பகுதிகளாக இந்தத் தொடர் வெளியாகும். நெஞ்சம் மறப்பதில்லை என்ற பெயரில் ஒலிபரப்பாக உள்ள இந்தத் தொடர் தமிழ் சினிமா, திரை நடத்திரங்கள், திரைப்படவியல் வரலாற்று ஆய்வாளர்கள், கலைஞர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் குறித்த சுவையான பக்கங்களை திரும்பிப் பார்க்கவுள்ளது.வரும் 23ம் தேதி முதல் இதனை பிபிசி தமிழோசை வானொலியிலும், பிபிசி தமிழ் இணையத் தளத்திலும் (http://www.bbctamil.com/) கேட்கலாம்.முன்னாள் தமிழோசை செய்தியாளரும் பிரபல ஒளி-ஒலி ஊடக நிருபருமான சம்பத் குமார் இது குறித்து கூறுகையில்,வரும் அக்டோபர் மாதம் தமிழ் திரையுலகம் தனது 75 ஆண்டை கொண்டாட உள்ளது. இத்தனை ஆண்டுகளிலும் பல்வேறு திறமையாளர்களை அது அடையாளம் காட்டியுள்ளது. அவர்கள் மூலம் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளது.இந்த நெடிய வரலாற்றில் தமிழ் திரையுலகை வளர்த்த, நிலை நிறுத்திய பழம்பெரும் இயக்குநர்கள், பிரபல தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள், திறமை வாய்ந்த இசையமைப்பாளர்கள், பாடகர்கள், நகைச்சுவை நடிகர்கள் என திரைத்துறை ஜாம்பவான்களை இந்தத் தொடர் நினைவுகூறும்.இவர்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும் தமிழர்களுக்கு தெரிவிக்கவே இந்த நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்ச்சியை வடிவமைத்துள்ளோம் என்றார்.பிபிசி தமிழோசையின் தலைவர் திருமலை மணிவண்ணன் கூறுகையில், தமிழ் திரையுலக இசை குறித்து 2004-05ம் ஆண்டில் பிபிசி வானொலி ஒளிபரப்பிய தொடர் பெறும் வெற்றி பெற்றது. அதன் மூலம் மாபெரும் தமிழ்த் திரையுலகம் குறித்த தகவல்களுக்கு மக்களிடையே உள்ள ஆர்வத்தை புரிந்து கொள்ள முடிந்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்த புதிய தொடரை ஆரம்பிக்கவுள்ளோம்.இந்த இனிய தொடரை கேட்டு மகிழ நேயர்களை அன்புடன் அழைக்கிறேன் என்றார்.

No comments: