Thursday, March 25, 2010

வானொலி அல்லது ரேடியோ

வானொலி அல்லது ரேடியோ (Radio) என்பது ஒரு குறிப்பிட்ட அதிவெண்களைக் கொண்ட மின்காந்த அலைகளின் வழி தொடர்பு கொள்ளும் ஒரு கம்பியில்லாத் தொலைத்தொடர்பு ஊடகமாகும். மின்காந்த அலைகளின் வழி செய்திகளையும் அறிவுப்புகளையும், பாட்டு உரையாடல் முதலியவற்றின் ஒலியலைகளை ஏற்றி இப்படி வான் வழியே வெலுத்தி ஆங்காங்கே மக்கள் பெறுமாறு இத் தொழில் நுட்பம் தொடங்கியதால் இதனை வானொலி (அ) ரேடியோ என்பர். இம்மின்காந்த அலைகள் கண்களால் காணக்கூடிய ஒளியைக் காட்டிலும் குறைவான அதிர்வெண்ணைக் கொன்ட மின்காந்த அலைகளைக் கொண்டு இயங்குகிறது.

தொழில் நுட்பம்
ஒலி அலைகளுடன் மின்காந்த அலைகளைக் கலந்து வானொலி நிலையங்களில், மிக உயரமான கோபுரங்களில் அமைந்துள்ள ட்ரான்ஸ்மிட்டர்கள் மூலம் வான்வெளியில் மின்காந்த அலைகளாக ஒலிபரப்பப்படுகின்றது.

இப்படி ஒலிபரப்பப்பட்ட மின்காந்த அலைகளை பயனர்கள் தங்களிடம் உள்ள ரிசீவர் எனப்படும், வானொலிப் பெட்டியின் மூலம் கேட்டு மகிழ்கிறார்கள். இந்த ரிசீவர் ரேடியோ (அ) ட்ராசிஸ்டர் ரேடியோ என அழைக்கப்படுகின்றது.

ரிசீவர் இயங்கும் முறையானது, வானொலி நிலையங்களில் ஒலிபரப்பப்பட்ட மின் காந்த அலைகளை உள்வாங்கி, அதனூடே கலந்திருக்கும், ஒலி அலைகளை மட்டும் பிரித்தெடுத்து லவுட் ஸ்பீக்க்ரில்(Loud Speaker) ஒலிக்கும் வகையில் ரேடியோக்கள்.

Source: http://ta.wikipedia.org/wiki/வானொலி

No comments: