Showing posts with label சர்வதேச வானொலி. Show all posts
Showing posts with label சர்வதேச வானொலி. Show all posts

Thursday, December 15, 2016

உலக அளவில் பெரிதும் பயன்படும் மக்கள் தொடர்பு ஊடகம் ஹாம்!


அமெச்சூர் ரேடியோ - ஹாம்

இணையம், இணைய உரையாடல் , வலைப்பதிவு, செல் பேசி, குறுஞ்செய்தி என்று இன்று ஒருவர் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் , கதைக்கவும் பல ஊடக வசதிகள் இன்று வந்து விட்டது இதனால் பல பழைய தொலைதொடர்பு ஊடங்கள் , அதன் பொழுது போக்கு அம்சங்கள் பற்றி அதிகம் தெரியாமல் போய்விட்டது.

அப்படிப்பட்ட ஒரு பழைய ஆனால் இன்றும் உலக அளவில் பெரிதும் பயன்படும் மக்கள் தொடர்பு ஊடகம் தான் ஹாம் எனப்படும் தொழில்முறை அல்லாத வானொலி பயன்பாட்டாளர்கள்(ameture radiography) .100 ஆண்டு காலப்பாரம்பரியம் கொண்டது இந்த ஹாம் வானொலி. இந்தியாவிலும் வெகு சொற்ப அளவில் ஹாம்கள் இருக்கிறார்கள். ஹாம் என்பது ஜாம் என்பதில் இருந்துவந்ததாக சொல்கிறார்கள் காரணம் அக்காலத்தில் இவர்கள் வானொலீ அலைவரிசையை அதிகம் ஆக்ரமித்தார்களாம்!

ஹாம் (ham):

வழக்கமாக கம்பி இல்லா தந்தி /வானொலி இவற்றை ராணுவம், தீ அணைப்பு , காவல் துறை, மருத்துவ ஊர்திகள், ஆகியவை பயன்படுத்தும் மேலும் குறைந்த அலை நீளம், பண்பலை போன்றவற்றில் அகில இந்திய வானொலி, சூரியன் எப்.எம் போன்ற வணிக வானொலிகள் ஒலிப்பரப்பும். இவை போக இருக்கும் அலைவரிசையில்(1.8 mhz to 275 ghz)26 பேண்ட்கள் ஒதுக்கி அமெச்சூர் ரேடியோவிற்கு இடம் தந்துள்ளார்கள் அவர்கள் தான் ஹாம் எனப்படுவார்கள்.

இதனைப்பயன்படுத்த மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு துறையிடம் இருந்து ஒரு தனியார் அமெச்சூர் வானொலி இயக்குனர் என்பதற்கான தேர்வுகள் எழுதி அனுமதி வாங்க வேண்டும். அப்போது தான் இயக்க முடியும். அந்த தேர்வுகள் எழுத ஒருவர் இந்தியராகவும், 18 வயது ஆனவராகவும் இருந்தால் போதும் கல்வி அறிவு இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் கல்விஅறிவு இல்லை எனில் தேர்வில் தேற முடியாது.

தேர்வில்,

*அடிப்படை மின்னனுவியல் ,
*மோர்ஸ் கோட் எனப்படும் தந்தி சுருக்க குறியீடுகள் அனுப்புதல் பெறுதல்

ஆகியவற்றில் தேர்வெழுத வேண்டும்.தேர்வுக்கு கட்டணம் உண்டு. சென்னையில் இதற்கான மத்திய அரசு அலுவலகம் பெருங்குடியில் உள்ளது, அமெச்சூர் ரேடியோ சங்கம் அடையாரில் உள்ளது.

தேர்ச்சி பெற்றுஅனுமதி சீட்டுக்கிடைத்ததும் நாமே சொந்தமாக உபகரணங்களை வாங்கி ஒரு கம்பி இல்லா வானொலி நிலையம் ஆரம்பித்து இயக்கலாம், அதன் மூலம் பக்கத்து ஊர், நாடு என நம் விருப்பம் போல பேசி மகிழலாம். பேசுவதற்கு போய் தேர்வு,அது இதுவென இத்தனை கஷ்டப்படனுமா என யாஹூ, கூகிள் சாட் லாம் வந்த பிறகு தோன்றும் ஆனாலும் இது ஒரு வித்தியாசமான பொழுது போக்கு.

ஹாம் ரேடியோவில் இரண்டு விதமாக பேசுவார்கள், சாதாரணமாக பேசுவது போல பேசுது (radiophony), மற்றது மோர்ஸ் கோட் கொண்டு பேசுவது. மோர்ஸ் கோடில் எளிதாக இருப்பதற்காக Q code என்ற ஒன்றையும் சேர்த்து பேசுவார்கள். இதன் மூலம் பல வார்த்தைகளை சுருக்கி சொல்லலாம். இது ஒரு வழி தொடர்பு முறை ஒருவர் பேசியதும் தான் அடுத்தவர் பேச முடியும் எனவே பேசியதும் "ஓவர்" என்று சொல்லி பேசுவதை முடிக்க வேண்டும். பல எதிர்பாராத இயற்கை இடர்ப்பாடுகளின் போது தகவல் தொடர்பு சாதனங்கள் சேதம் அடைந்து விடும் அப்போது ஹாம் ரேடியோக்களை தகவல் தொடர்புக்கு அரசு பயன்படுத்திக்கொள்ளும்.

இது அல்லாமல் சிட்டிசன் பேண்ட் என்ற வானொலியும் உண்டு அதற்கு என ஒரு குறிப்பிட்ட எல்லையில் பயன்படுத்த வேண்டும் , அதற்கு தேர்வெல்லாம் எழுத வேண்டாம் ஆனால் வருடத்திற்கு ஒரு கட்டணம் செலுத்த வேண்டும். அவற்றை தான் கால் டாக்சி போன்ற சேவைகள் பயன்படுத்துகின்றன.

மோர்ஸ் கோட்:

இதனைக்கண்டு பிடித்து நடைமுறைக்கு கொண்டு வந்தவர் சாமுவேல் மோர்ஸ் என்பவர். அவர் பெயராலேயே அழைக்கப்படுக்கிறது.மோர்ஸ் கோட் என்பது புள்ளிகளும் , சிறு கோடுகளும் அடுத்து அடுத்து போட்டு எழுதுவது. ஒரு புள்ளியை "டிட் "(DIT)என்றும் கோட்டை "டாஹ்"(DASH) உச்சரிக்கும் போது சொல்ல வேண்டும். கீழே மோர்ஸ் கோட் கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் கூட பழகலாம்! பழகி பாருங்க புடிச்சா ஹாம் தேர்வு எழுதுங்க இல்லைனா சும்மா தெரிஞ்சு வைத்துக்கொள்ளுங்கள்!

Letter Morse
A di-dah
B dah-di-di-dit
C dah-di-dah-dit
D dah-di-dit
E dit
F di-di-dah-dit
G dah-dah-dit
H di-di-di-dit
I di-dit
J di-dah-dah-dah
K dah-di-dah
L di-dah-di-dit
M dah-dah


N dah-dit
O dah-dah-dah
P di-dah-dah-dit
Q dah-dah-di-dah
R di-dah-dit
S di-di-dit
T dah
U di-di-dah
V di-di-di-dah
W di-dah-dah
X dah-di-di-dah
Y dah-di-dah-dah
Z dah-dah-di-dit


சில Q code கள்:

QRA What is the name of your station? The name of my station is ___.
QRB How far are you from my station? I am ____ km from you station
QRD Where are you bound and where are you coming from? I am bound ___ from ___.


சொல்வதற்கு இதில் நிறைய இருக்கிறது , அனைத்தையும் இங்கு சொல்வது சாத்தியம் இல்லை.இதற்கு என சில புத்தகங்கள் கிடைக்கின்றன , ராஜேஷ் வர்மா என்பவர் எழுதிய "a hand book of ameture radio" என் ற புத்தகம் எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கும். ஹிக்கின் பாதம்ஸ்,  ஸ்டார்  மார்க் போன்ற கடைகளில் கிடைக்கலாம்! வாங்கி படித்து பாருங்கள்.

சில இணையதள முகவரிகள்:

1)http://www.ac6v.com/

2)http://www.hello-radio.org/whatis.html#five

நன்றி - http://vovalpaarvai.blogspot.in/

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தொழில்நுட்பத்தில் ரேடியோ


நவீன தொழில்நுட்பத்தில் ‘ஹாம் ரேடியோ’!


இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தொழில்நுட்பத்தில் ரேடியோ, டிவி, டெலிபோன், செல்போன் என்று பல்வேறு பரிணாம வளர்ச்சிகள் இருந்தாலும், இவை அனைத்திலும் தனித்துவம் பெற்ற ஒரு விஞ்ஞான படைப்பு உண்டென்றால் அது நிச்சயம் ஹாம் ரேடியோவாகத்தான் இருக்கும். ஹாம் ரேடியோவைப் பற்றிய ஒரு சமீபத்திய நிகழ்வை சொன்னால் சட்டென உங்கள் நினைவுக்கு வரும்.

2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி அதிகாலை இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமி அலை, வழியில் இருந்த அந்தமான் தீவை அடியோடு நாசம் செய்தது. செல்போன், ரேடியோ சேவை, சேட்டிலைட் தகவல் தொடர்பு எல்லாம் பணால் ஆனது. அந்த நேரத்தில் கை கொடுத்தது ஹாம் ரேடியோ மட்டும்தான். ஆம், அந்தமானில் ஒரே ஒரு நபர் பயன்படுத்திக் கொண்டிருந்த ஹாம் ரேடியோவின் உதவியதால்தான் அங்கு சுனாமி தாக்கியதும், அதைத் தொடர்ந்து இந்தியாவின் ஆந்திரா, தமிழகம், கேரளா மாநிலங்களை சுனாமி அலைகள் அடுத்தடுத்து புரட்டிப் போட்டதும் தெரியவந்தது. அன்று ஹாம் ரேடியோ என்ற ஒரு சேவை இருந்திருக்காவிட்டால், அந்தமானில் நிகழ்ந்தது பலருக்கும் மிகமிக தாமதமாகவே தெரியவந்திருக்கும்.

ஹாம் ரேடியோ என்பதற்கு பெரிய அர்த்தம் எதுவும் இல்லை. ஒலியை அளவிடும் ஹெர்ட்ஸ், நிலவில் கால் வைத்த ஆம்ஸ்ட்ராங் மற்றும் ரேடியோவைக் கண்டுபிடித்த மார்கோனி ஆகிய மூன்று பெயர்களின் முதல் எழுத்தை சுட்டு, ஹாம் ரேடியோ என்று குறிப்பிடப்படுகிறது. இன்றைக்கும் இந்த ஹாம் ரேடியோவின் தலைமையகம் வாஷிங்டனில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் இந்த ஹாம் ரேடியோவுக்கும் நிறைய உறுப்பினர்கள் உள்ளனர். சச்சின், முன்னாள் பிரதமர் ராஜீவ், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி ஆகியோர் ஹாம் ரேடியோ விஐபிகளில் குறிப்பிடத்தகுந்த சிலர். இந்த ரேடியோ உதவியால் உலகம் முழுவதும் உள்ள ஹாம் ரேடியோ உறுப்பினர்களுடன் எந்தவித கட்டணமும் இல்லாமல் எளிதில் பேசிக் கொள்ளமுடியும்.

பேஸ்புக், வாட்ஸ் அப் என்று இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் இருந்தாலும், உலகம் முழுவதும் உள்ள இந்த ஹாம் ரேடியோ உறுப்பினர்கள், தங்கள் பகுதிகளின் புதிய கண்டு பிடிப்புகள், நூதன சம்பவங்கள் என்று பல விஷயங்களை பகிர்ந்து கொள்வதால், இன்றைக்கும் இந்த ஹாம் ரேடியோ பயன்பாடு சுறுசுறுப்பாகத்தான் உள்ளது. ஆனாலும், ஹாம் ரேடியோவைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாமல், அதன் கடுமையான விதிமுறைகள் கேட் போட்டு விடுகின்றன.

தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் ஹாம் ரேடியோ பயிற்சி வகுப்புகள் வாரம்தோறும் நடத்தப்படுகிறது. இந்தியாவில் அமெச்சூர் ரேடியோ சங்கத்தினரால் ஹாம் ரேடியோ உறுப்பினர்கள் ஆவதற்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் இருந்து ஹாம் ரேடியோ தேர்வுக்கு இரண்டு விதமான தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைவரும் இந்த ஹாம் ரேடியோவில் உறுப்பினர் ஆகலாம். ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் திறன் இருந்தால் போதும், எளிதாக ஹாம் ரேடியோ உறுப்பினர் ஆகலாம். நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தகுந்தார் போல், இப்போதைய ஹாம் ரேடியோ தொழில்நுட்பம் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டு, இயக்கப்படுகிறது. ஆனால் இன்டர்நெட் தொழில்நுட்பம் இருந்தால் மட்டுமே இந்த டிஜிட்டல் தொழில் நுட்பம் வெற்றிகரமாக செயல்படும். மற்றபடி, டிஜிட்டல் இல்லாமல் சாதாரணமாகவும் இயங்க முடியும்.

இதுகுறித்து மானாமதுரையைச் சேர்ந்த ஹாம் ரேடியோ எக்ஸ்பர்ட் துரைராஜ் கூறும்போது, “நான் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி. 1975ம் ஆண்டு முதல் ஹாம் ரேடியோ உறுப்பினராக உள்ளேன். இந்த ரேடியோவைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், இது ஆபத்து காலங்களில் காத்து ரட்சிக்கும் ஒரு ரட்சகன் என்றே சொல்ல வேண்டும். உலகில் பல பகுதிகளில் பேரழிவுகள் ஏற்படும்போதெல்லாம் ஹாம் ரேடியோ மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு, மிகப் பெரிய அளவில் மீட்பு பணிகள் நடைபெற்றுள்ளன. இதை இப்போது கொஞ்சம் அப்டேட் செய்துள்ளோம். ஒலியை டிஜிட்டல் முறையில் மாற்றியுள்ளோம். இந்தத் தொழில்நுட்பத்தில் நாம் பேசுவது தெளிவாக இருக்கும். செல்போனில் ஆண்ட்ராய்டு தொழில்நுட்ப வசதி இருந்தால், இதை கம்ப்யூட்டருடன் இணைத்து எக்கோ லிங்க் எனப்படும் சாப்ட்வேர் மூலம் ஆண்டெனா இல்லாமலே பேச முடியும்.

மதுரை மற்றும் மானாமதுரையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, மதுரையில் வைத்து பயிற்சி கொடுத்து, அவர்களை ஹாம் ரேடியோவின் உறுப்பினராக்குகிறேன். இதில் உறுப்பினர் ஆவதற்கு வயர்லெஸ் பிளானிங் கோட் என்ற அமைப்பு மூலமாக தேர்வு நடத்தப்பட்டு, தேசிய மற்றும் மாநில அரசுகள் மூலம் உரிமம் வழங்கப்படுகிறது.

ஹாம் ரேடியோவைப்பற்றி இளைய தலைமுறையினர் பலருக்கும் தெரியவில்லை. ஹாம் ரேடியோ மூலம் தன்னலமற்ற சேவைகள் செய்யலாம். இப்போதைய சந்தையில் 7ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை ஹாம் ரேடியோ கிடைக்கிறது. சாதாரண ஹாம் ரேடியோ மூலம் பேசும்போது இரைச்சல் சத்தம் அதிகமாக இருக்கும், டிஜிட்டல் தொழில்நட்பத்தில் சப்தம் மிகவும் தெளிவாக இருக்கும். தொழில் நுட்ப கல்லூரிகளில் கூட ஹாம் ரேடியோ பற்றி கற்றுக் கொடுப்பது இல்லை. இது மிகவும் வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயம். ஹாம் ரேடியாவைப் பற்றி கற்றுக் கொள்வதும், அதை கற்றுக் கொடுப்பதும் பெருமைக்குரிய விஷயம். அடுத்தத் தலைமுறையினரும் கற்றுக் கொள்ள வேண்டிய அரிய கலை இதுவாகும்” என்றார்.

உங்கள் மனதில் ஒரு முறை 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனாமி ஏற்படுத்திய பாதிப்புகளை ரீவைன்ட் செய்து பாருங்கள்... ஹாம் ரேடியோ செய்த சேவையும், அதைக் கற்றுக் கொள்ள வேண்டிய ஆர்வமும் தன்னாலேயே ஏற்பட்டுவிடும்...

நன்றி- ஜன்னல் சார்பாக சாய் ஷிவானி

Monday, July 15, 2013

சர்வதேச வானொலியின் பழைய இதழ்கள்


சர்வதேச வானொலியின் பழைய இதழ்களின் அட்டைபடத்தினை கீழ்கண்ட தொடுப்பில் காணலாம். (நன்றி: பொள்ளாச்சி நசன்)
http://pollachinasan.com/ebook18/18250/18250.htm

Saturday, September 15, 2012

க்யூ.ஆர் குறியீட்டில் சர்வதேச வானொலி

அறிவிப்பு: உங்களிடம் க்யூ.ஆர் குறியீட்டினை ஸ்கேன் செய்யும் வசதி கொண்ட மொபைல் இருந்தால், அருகில் உள்ள படத்தினை ஸ்கேன் செய்து இனி சர்வதேச வானொலியைப் படிக்கலாம். –ஆசிரியர்

Thursday, March 17, 2011

டி.எக்ஸ் போட்டி - 2011

நமது ஆர்டிக் சர்வதேச வானொலி நேயர்கள் மன்றம் தொடங்கப்பட்டு 13 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி நமது சர்வதேச வானொலி மாத இதழ் உலகம் தழுவிய டி.எக்ஸ் போட்டி ஒன்றினை கடந்த இரண்டு ஆண்டுகளைப் போன்று இந்த ஆண்டும் அறிவித்துள்ளோம்.

கடந்த ஆண்டுகளில் சிறந்த வரவேற்பினை பெற்ற இந்த போட்டி இந்த ஆண்டிலும் அதை விட நல்ல வரவேற்பினைப் பெரும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். இந்த ஆண்டும் பல வானொலி நிலையங்கள் பரிசுகளை அள்ளி வழங்க சம்மதித்துள்ளனர். குறிப்பாக சீன வானொலி, ஜெர்மன் வானொலி, ரேடியோ ஃப்ரீ ஆசியா, ரேடியோ தைவான் இண்டர்நேசனல் மற்றும் நமது அகில இந்திய வானொலி ஆகியவை போட்டியில் வெல்பவருக்கான பரிசுகளை வழங்க உள்ளன.

World Radio TV Handbook (WRTH) எனும் புத்தகம் இந்த ஆண்டும் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. உலகின் முதன்மையான வானொலி புத்தகங்களை கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக பதிப்பித்துவரும் WRTH நமது போட்டியை ஊக்குவிப்பது நமக்கெல்லாம் பெருமையே. 650 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் இந்திய விலை ரூ. 1800 ஆகும்.

போட்டிக்கான விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31 மார்ச் 2011.
போட்டிக்கான கேள்விகளை www.dxquiz.wordpress.com எனும் முகவரியில் காணலாம்.

Thursday, October 29, 2009

சர்வதேச வானொலி - அக்டோபர் & நவம்பர் 2009



சர்வதேச வானொலி இதழ்கள் வெளிவந்துவிட்டது. அக்டோபர் இதழ் மிகவும் தாமதமாகவே வெளிவந்துள்ளது. காரணம் தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் நினைவாக அந்த இதழைத் தயாரித்து உள்ளோம். நவம்பர் இதழ் வளமையான இதழாக மலர்ந்துள்ளது. இதழ் தேவைப்படுவோர் பக்கவாட்டில் உள்ள முகவரியைத் தொடர்பு கொள்ளவும். தனி இதழ் ரூ.10/-

Wednesday, April 08, 2009

தமிழ் சிற்றலை வானொலிகள்


சர்வதேச அளவில் ஒலிபரப்பாகிவரும் தமிழ் சிற்றலை வானொலிகளின் புதிய அலைவரிசைப்பட்டியல்

புத்தக தேவைக்கு 98413 66086. ஆண்டு சந்தா ரூ. 100/-

Tuesday, April 07, 2009

சர்வதேச வானொலி ஏப்ரல் 2009


வழக்கமான பகுதிகளுடன் இந்த மாத இதழ் வெளிவந்துவிட்டது. அமெரிக்காவில் புதிதாக அறிமுகமாகியுள்ள "டை-வேவ்" டி.ஆர்.எம் வானொலி பெட்டி பற்றிய விபரங்களுடன், சர்வதேச அளவில் ஒலிபரப்பாகிவரும் தமிழ் சிற்றலை வானொலிகளின் புதிய அலைவரிசைப்பட்டியலுடன், அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றிய விரிவான கட்டுரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது.

புத்தக தேவைக்கு 98413 66086. ஆண்டு சந்தா ரூ. 100/-

Monday, April 06, 2009

சர்வதேச வானொலி மார்ச் 2009


மிகுந்த தாமத்தில் மார்ச் இதழ் தற்பொழுது வெளிவந்துவிட்டது. இந்த இதழ் வளமையான இதழ் போன்று இல்லாமல் சற்றே மாறுபட்டு வெளிவந்துள்ளது. சூரியப் புள்ளிகள் (Sunspot) எப்படி சிற்றலை ஒலிபரப்பினை பாதிப்படையச் செய்கிறது என்பதனை விரிவாக விளக்கியுள்ளார் திரு. வி. பாலசுப்ரமனியம். அவரைத் தொடர்பு கொள்ள 99520 67358. புத்தக தேவைக்கு 98413 66086. ஆண்டு சந்தா ரூ. 100/-

Friday, March 13, 2009

சர்வதேச வானொலி - ஜனவரி 2009 (மாத இதழ்)


முத்திரை நேயர் - விஜயராம் அ. கண்ணன்
இலங்கை வானொலி இளம் அறிவிப்பாளர் ராதிகா கலைமணி செவ்வி -கன்னியாகுமரி சகாதேவன் விஜயகுமார்
ஏற்காடு ஹாம் சந்திப்பு என பல பகுதிகளுடன் வெளி வந்த இதழை நீங்களும் படிக்க வேண்டாமா...
ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே.
சந்தாவை பண விடையாக (எம்.ஒ) அனுப்ப வேண்டிய முகவரி

தங்க. ஜெய்சக்திவேல்,
# 59, அன்னை சத்யா நகர்,
அரும்பாக்கம்,
சென்னை - 600106,
பேச : 98413 66086.

Wednesday, November 05, 2008

சர்வதேச வானொலி செப்டம்பர் - அக்டோபர் 2008

வெளிவந்து விட்டது இந்த மாத சர்வதேச வானொலி இதழ்.

இந்த இதழில்...

  • இலங்கை வானொலி சிவராஜா தக்கீசன் சிறப்பு செவ்வி
  • ஆண்டு விழா போட்டி முடிவுகள்
  • அலைகளுக்கென்ன வேலி
  • ரேடியோ பிராஹா - ஒரு கண்ணோட்டம்
  • தமிழ் சிற்றலை வானொலிகளின் புதிய அலைவரிசை பட்டியல்

என பல்வேறு புதியத் தகவல்களுடன் வெளிவந்துவிட்டது.
இதழின் ஆண்டு சந்தா ரூ. 100/-
தொடர்புகளுக்கு: 98413 66086
வாங்குவதற்கு முன் பார்க்க வேண்டாமா?!
படிக்க ஆர்வமுள்ளவர்கள், சொடுக்கவும் கீழ்கண்ட தொடுப்பினை
http://vaanoliulagam.googlepages.com/Oct2k8F.pdf

Saturday, May 24, 2008

அகில இந்திய வானொலிக்கு சர்வதேச பரிசு

ஈரானில் நடைபெற்ற 9-வது சர்வதேச வானொலி விழாவில் அகில இந்திய வானொலியின் நிகழ்ச்சிக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.அகில இந்திய வானொலியின் ஒரிசா சம்பல்பூர் ஒலிபரப்பு நிலையம் தயாரித்த 'ஜனிபா, ஆமே கமா கரிபா' (உலகளாவிய சிந்தனையும், உள்ளூர் செயல்பாடும்) என்ற சிறுவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரானில் நடந்த சர்வதேச வானொலி விழாவில் ஒலிபரப்பப்பட்டது. பத்மலோசன்தாஸ் என்ற நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஒரிய மொழியில் இந்த நிகழ்ச்சியை தயாரித்திருந்தார்.வானிலை மாற்றங்கள், நாட்டின் வளங்களை பாதுகாத்தல் போன்ற விஷயங்களை தனது இரண்டு குழந்தைகளுக்கு ஒரு தாய் தாலாட்டாக போதிப்பது போன்று இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு விழாவில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் சிறந்த நிகழ்ச்சிகளுக்கான முதல் பரிசையும் தட்டிச் சென்றது.இதையொட்டி தயாரிப்பாளர் பத்மலோசன் தாஸுக்கு 2000 யூரோ ரொக்கப்பரிசும், தங்க விக்கிரகமும் பரிசளிக்கப்பட்டது. கடந்த 2007ல் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக ஈரான் வானொலி நடத்திய போட்டியிலும் சிறந்த நிகழ்ச்சிக்கான முதல் பரிசையும் தாஸ் வென்றது குறிப்பிடத்தக்கது. (Thanks to Thatstamil.oneindia.in)

Thursday, May 22, 2008

சர்வதேச வானொலி 16 மே - 15 ஜூன் 2008

நமது சர்வதேச வானொலியின் 16 மே - 15 ஜூன் 2008 இதழ் தயாராகிவிட்டது விரைவில் இது உங்கள் கரங்களை வந்தடையும். இந்த இதழில் நடிகர் மற்றும் அமெச்சூர் வானொலி ஒலிபரப்பாளார் சாருகாசன் சிறப்புப் பேட்டி இடம் பெற்றுள்ளது. மாத இதழின் ஆண்டு சந்தா: 100/- தொடர்புகளுக்கு: தங்க. ஜெய்சக்திவேல், 59, அன்னை சத்யா நகர், அரும்பாக்கம், சென்னை - 600 106, பேச: 98413 66086. மின் அஞ்சல்:

Thursday, May 08, 2008

சர்வதேச வானொலி இதழின் வெளியீட்டு விழா

கரிசல் மண்ணில் பூத்த புது மலர்கள்

திருநெல்வேலியைச் சேர்ந்த கரிசல் திரைப்படச் சங்கத்தின் சார்பாக பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கான விருது வழங்கும் விழா, சர்வதேச வானொலி என்ற இதழின் வெளியீட்டு விழா ஆகியவை, 25.4.2008 அன்று அண்மையில் தமிழகத்தின் திருநெல்வேலி மாநகரில் சிறப்பாக நடைபெற்றது.சங்கத்தின் தலைவர் அருண் கதாதரனும், துணைத் தலைவரும் தினேஷம் இணைந்து பம்பரமாகச் சுழன்று நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள் என்பதை நெல்லை மண்ணை மிதித்ததுமே புரிந்து போனது.நகரில் ஆங்காங்கே கரிசல் திரைப்படச் சங்கம் உங்களை வரவேற்கிறது என்று பாசத்துடன் அழைக்கும் துணி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஹலோ, சூரியன் ஆகிய பண்பலை எஃ.எம். வானொலிகளில் இந்த நிகழ்ச்சியைப் பற்றிய செய்திகளை இரு நாட்களுக்குத் தொடர்ந்து அவ்வப்போது ஒலிபரப்பினார்கள். விழாவில் பங்கேற்ற முக்கிய விருந்தினர்கள், விருது பெற்றவர்களின் பேட்டிகளும் அவ்வப்போது ஒலியேறியது.அனைத்துலக மூத்த தமிழ் ஒலிபரப்பாளர் எனும் பெருமையைப் பெற்றவரும், லண்டனில் உள்ள ஐபிசி வானொலியின் மூலம் உலகெங்கும் உள்ள தமிழர்களுடன் தன் குரலால் ஒன்றிக் கலந்தவருமான அப்துல் ஜபார்தான் நிகழ்ச்சியின் விஐபி.திரைப்படச் சங்கத்தின் நிகழ்ச்சிக்கு மாவட்ட அறிவியல் மையம் கைகொடுத்து உதவியது ஓர் ஆச்சரியம். இதற்கான விளக்கத்தை பின்னர் நிகழ்ச்சியில் பேசுகையில் தெரிவித்தார் மாவட்ட அறிவியல் அதிகாரி கோபாலகிருஷ்ணன். திரைப்பட இயக்குநர் மாரிமுத்து, நிழல் திருநாவுக்கரசு, பத்திரிகையாளரும் குறும்பட இயக்குநருமான அருள் எழிலன், சர்வதேச வானொலி இதழின் ஆசிரியர் ஜெயசக்திவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். (Thanks to tamil.Sify.com)

Friday, May 02, 2008

சர்வதேச வானொலி இதழ் வெளியீட்டு விழா

கடந்த 23-04-08 வெள்ளிகிழமை அன்று திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் சர்வதேச வானொலியின் இதழ் வெளியீட்டு விழா உலகின் மூத்த அறிவிப்பாளரான அப்துல் ஜபார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கரிசல் திரைப்பட இயக்கம் தொடங்கப்பட்டதோடு சிறந்த பத்திரிகைக்கான விருதினை இலங்கையின் 'வீரகேசரி' வார இதழும், சிறந்த பத்திரிகையாளர் விருதுனை மலேசியா 'மக்கள் ஓசை'-யும் பெற்றது.