
ரேடியோ டபாங்கா: சூடானில் இருந்து செயல்பட்டுவரும் வானொலி ரேடியோ டபாங்கா. இந்த வானொலியும் சமீப காலமாக நேயர்களுக்கு வண்ண அட்டைகளை அனுப்பத் தொடங்கியுள்ளது. ஒரு சில நாடுகளின் வண்ண அட்டைகள் முக்கியமானதாக கருதப்படும். அதற்கு காரணம் அந்த நாடுகளில் சிற்றலை ஒலிபரப்பு இல்லாமல் இருக்கும். அப்படியே இருந்தாலும் அது மிக குறைந்த சக்தியில் இருக்கும். அப்படிப்பட்ட வானொலி தான் இந்த ரேடியோ டபாங்க. ஒரு சில சிற்றலை நேயர்களுக்கு இதன் முகவரிக் கூட தெரியாது. இவர்களது நிகழ்ச்சிகளை தினமும் இந்திய நேரம் இரவு 9 மணிக்கு (1530 UTC) ஆங்கிலத்தில் 13730 kHz அலைஎண்கள் 22 மீட்டரில் கேட்கலாம். தொடர்பு கொள்ள இவர்களது முகவரி: http://www.radiodabanga.org/contact என்ற இணைய முகவரியில் உங்கள் கடிதத்தினை அனுப்பினால் உங்களுக்கு பதில் அனுப்புகின்றனர். (Babul Gupta).
No comments:
Post a Comment