Monday, May 28, 2012

நாடுகடந்த தமிழீழ அரசின் வானொலியை சிறிலங்காவில் தடுக்க முடியாது – அனுச பல்பிட்ட

நாடுகடந்த தமிழீழ அரசினால் அண்மையில் தொடங்கப்பட்ட சிற்றலை வானொலி ஒலிபரப்பை சிறிலங்காவில் கேட்காமல் தடுக்க முடியாது என்று சிறிலங்காவின் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் அனுச பல்பிட்ட தெரிவித்துள்ளார்.

“நாடு கடந்த தமிழீழ அரசினால் நடத்தப்படும் சிற்றலை வானொலி ஒலிபரப்பு சமிக்ஞைகளை தடுப்பதற்கான கருவிகள் எம்மிடம் இல்லை.

ஆனால் சிறிலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் அதைச் செய்ய முடியும்.

சிறிலங்காவில் சிற்றலை ஒலிபரப்புக்கு சிறிலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மட்டுமே அனுமதி பெற்றுள்ளது.

அவர்களுக்கு மட்டும் தான் இந்த ஒலிபரப்பைத் தடுக்கும் வசதி உள்ளது“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அதேவேளை இதுகுறித்து சிறிலங்கா ஒலிபரப்பக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க கருத்து வெளியிட மறுப்புத் தெரிவித்துள்ளார்.

நாதம் வானொலிச் சேவை என்ற பெயரில் கடந்த 18ம் நாள் தொடக்கம் நாடு கடந்த தமிழீழ அரசு, அரைமணி நேர வானொலி ஒலிபரப்பை நடத்தி வருகிறது.

இந்தியா, சிறிலங்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இதனை செவிமடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 தகவல் உதவி: http://www.puthinapp...?20120528106281

No comments: