A Free Press Matters: VOA@80
சர்வதேச வானொலி நேயர்களுக்கு டிசம்பர் மாதம் எப்பொழுதுமே கொண்டாட்டமான மாதம். நேயர்களும் அனைத்து வானொலிகளுக்கும் கிருஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை அனுப்புவர். அதே போல அந்த வானொலி நிலையங்களும் தனது நேயர்களுக்கு வாழ்த்து மடல்கள், நாள்காட்டிகள், டைரிகள், Year End Gifts என பல நினைவுப் பரிசுகளை அனுப்பிவைக்கும்.
சிற்றலை வானொலிகளின் எண்ணிக்கை சமீப காலமாக குறைந்த பிறகு இந்த மாதிரியான நினைவுப் பரிசுகளும் குறைந்துவிட்டன.
நீண்ட இடைவெளிக்கு பிறகு, இன்று பல்கலைக்கழக முகவரிக்கு அமெரிக்காவின் பொதுத் துறை வானொலியான "வாய்ஸ் அஃப் அமெரிக்கா" வானொலியின் 2022ஆம் வருடத்திற்கான மிக அழகான மாதாந்திர நாள்காட்டியை அனுப்பியிருந்தனர்.
இந்த நாள்காட்டியின் சிறப்புகளில் ஒன்று வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா ஒலிபரப்பி வரும் 47 மொழிகளின் ஒலிபரப்பாளர்களை ஆவணப்படுத்தியது. பழைய மொழிப்பிரிவின் புகைப்படங்களையும் இதில் வெளியிட்டுள்ளார்கள்.
இந்த ஆண்டு VOA தனது 80ஆவது ஆண்டினைக் கொண்டாடுகிறது. 1 பிப்ரவரி 1942ல் இந்த வானொலி தொடங்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் தமிழ் மொழி ஒலிபரப்பினையும் இது செய்தது. நிலவில் மனிதன் இறங்கியதை வாஷிங்டன்னில் இருந்து நேரலையில் அன்று அறிவிப்பு செய்த திரு.நல்லதம்பி அவர்களை மறக்கவும் முடியுமா?
வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவைத் தொடர்பு கொள்ள
To request a VOA calendar or information about VOA programming or frequencies: audiencemail [ at ] voanews.com
Voice of America
Public Relations
330 Independence Ave., S.W.
Washington, D.C. 20237
Phone: 1 (202) 203-4959
E-mail: askvoa@voanews.com
Web: www.voanews.com, www.insidevoa.com
FB: voiceofamerica, insidevoa
Twitter: @voanews, @insidevoa
Insta: voanews, insidevoa