Saturday, March 31, 2012

தமிழகத்தில் வானொலி பெட்டி குறைந்தது .

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை .தொலைகாட்சி பெட்டி அதிகரித்தது .வானொலி பெட்டி குறைந்தது .தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் தொலைகாட்சி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 47 % அதிகரித்துள்ளது .அதே நேரம் வீடுகளில் உள்ள வானொலிப் பெட்டி கணிசமாக குறைந்துள்ளது .அதன்படி ,தற்போது  87 % பேர் வீடுகளில் தொலைகாட்சி பெட்டி உள்ளது.2001 ஆம் ஆண்டு 39.5 சதவீதமாக இருந்தது .அதேபோன்று தற்போது 22.7 % பேர் வீடுகளில் மட்டும் வானொலி பெட்டி உள்ளது .இது கடந்த 2001 ஆம் ஆண்டு 43.5 சதவீதமாக இருந்தது (தினகரன் 28.03.2012 Via எடப்பாடி க.சி .சிவராஜ்)


Thursday, March 29, 2012

இலங்கை வானொலி - சினிமா சங்கீதம்

அந்த நாளில் எப்பொழுது வானொலியைத் திருப்பினாலும் கர்நாடக சங்கீதமே வரும். இந்நிலையில் இலங்கையின் வானொலி தினமும் 15 நிமிடத்திற்கு சினிமா சங்கீதம் ஒலிபரப்பத் தொடங்கியது. அவ்வளவுதான்.. எல்லோருமே இலங்கை வானொலி கேட்க ஆரம்பித்தார்கள். இதைப் பற்றி அந்த நாளில் வெளி வந்த பிரசித்தி பெற்ற ஷங்கர்ஸ் வீக்லியில் ஓர் அருமையான கார்ட்டூன் வெளியாகியது.
அந்தக் கார்ட்டூன்: மேடையில் ராமாயணம் நடந்து கொண்டிருக்கிறது. அரங்கில் அழகான பெண்கள் (இலங்கை வானொலி) கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு ஏதோ ஒரு பானம் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். சபையினர் அனைவரும் ராமாயணத்தை ரசிக்காமல் இந்தப் பெண்களையே பார்த்து ரசிக்கிறார்கள்.(தினமணி,  First Published : 06 Feb 2011 ) 

வானொலி உரிம ஏலத்தில் ரூ.1,500 கோடி வருவாய் எதிர்பார்ப்பு

 மத்திய அரசு, எப்.எம். ரேடியோ 3வது பிரிவு ஏலத்தில் ரூ.1500 கோடி வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் கூடுதலாக பல நகரங்களில் தனியார் வானொலி சேவை விரிவுபடுத்தப்படுத்துவதற்கான உரிமம் வழங்கும் இந்த ஏலத்தை மார்ச் மாதத்திற்குள் நடத்த முடியுமா என்பது சந்தேகமே என்று மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இதன் மூலமாக இந்தியாவில் தனியார் எப்.எம். ரேடியோ சானல்கள் சுமார் 1 லட்சம் மக்களை சென்றடையும் என்றும், மொத்தம் 227 நகரங்களில் எப்.எம். சானல்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (தினமணி, புதுடெல்லி, மார்ச் 20, 2012)

Monday, March 26, 2012

பசிபிக் பெருங்கடலில் ஒரு வானொலி


மைக்ரோனேசியா: மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள 600 தீவுகூட்டங்களே மைக்ரோனேசியா. த கிராஸ் ரேடியோ இங்குள்ள Pohnpei ண் எனும் இடத்தில் இருந்து சிற்றலையில் ஒலிபரப்பாகி வருகிறது. இவர்களது வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு கடிதம் எழுதும் நேயர்களுக்கு தற்பொழுது வண்ண அட்டைகள் அனுப்பட்டு வருகிறது. ஆங்கிலத்தில் ஒலிபரப்பாகும் இவர்களது நிகழ்ச்சிகளைஇந்திய நேரம் அதிகாலை 4.20 மணிக்கு (2250 உலக நேரம்) ஆங்கிலத்தில் 4755 அலைஎண்கள் 90 மீட்டரில் ஒலிபரப்பாகிறது.
தொடர்பு கொள்ள இவர்களது முகவரி:

Pacific Missionary Aviation, Radio Station,
P.O. Box 517,
Pohnpei, FM 96941,
Federated States of Micronesia,
Tel: 691-320-1122 / 2496,
Email: radio@pmapacific.org
Web: http://www.pmapacific.org
(Babul Gupta)

Saturday, March 24, 2012

இராஜேஸ்வரி சண்முகம் பற்றி விஜயராம் A. கண்ணன்


இலங்கை வானொலியின் குயில் ராஜேஸ்வரி சண்முகம்


முன்னொரு காலத்தில் ராமேஸ்வரம் தீவில் ஒரு வழமை இருந்தது. மணமகள் மறுவீடு செல்லும் போது சீர்வரிசையில் அஞ்சரைப் பெட்டி இருக்குமொ இல்லையோ கண்டிப்பாக ஒரு பிலிப்ஸ் வானொலிப் பெட்டி இருக்கும். அதனை அந்த மணமகளும் மிகச் சிரத்தையோட வானொலிப் பெட்டியில் ஒலிக்கின்ற குரலை தன் தாய் தந்தையின் குரலாகவே பாவிக்க ஆரம்பித்து விடுவாள். இவ்வாறான பந்தம் இன்று தீவில் இல்லை. வானொலி பெட்டிக்கு பதிலாக பெரிய அளிவலான தொலைக்காட்சி பெட்டிகளை சீர்வரிசையில் சேர்த்து விடுகின்றார்கள்.

சமீபத்தில் தீவில் சென்றபோது தனுஸ்கோடி சென்றிருந்தென். இலங்கை வானொலியின் வர்த்தக ஒளிபரப்பு நிறுத்தப்பட்டு 5 ஆண்டுகள் ஆகின்றன. ஆயினும் தனுஸ்கோடி மக்களுக்கு இலங்கை இருந்து கடல் கடந்து வரும் சக்தி பண்பலையும், தென்றல் பண்பலையையும் கேட்பதை கவனித்தேன்.
தனுஸ்கோடி மக்களுக்கு என்று உள்ள ஒரெ ஊடகம் வானொலிப் பெட்டிகள் மட்டுமெ. அவர்கள் செய்திகள் கேட்பதற்கு தமிழ்நாடு வானொலிகளையும், பொழுதுபோக்கிற்கு இலங்கை வானொலியையுமும் நாடுகிறனர். முன்பு வானொலி கேட்பது போல் இன்று இலங்கை வானொலிகள் இல்லை எனவும், மிகுந்த இறைச்சலாக இருப்பதாகவும், ஆனால் வானொலி கேட்கும் பழக்கத்தை மாற்ற முடியவில்லை என்று தெரிவித்தார் ஒரு தனுஸ்கோடிவாசி என்னிடம்.

நேற்று மாலை பிரபல இலங்கை வானொலி அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் காலமானார் என்ற தகவலை இலங்கை வலைத்தளங்களில் வாசித்தவுடனெயெ அவருடன் பணியாற்றிய ஜெயசீலன் ஐயாவிடம்  கைபேசி வாயிலாக தெரிவித்தேன். மேலும் விரிவாக படிக்க சொடுக்கவும் 

Rameswaram Rafi

கலையகத்தில் இராஜேஸ்வரி சண்முகம்

இலங்கை வானொலி கலையகத்தில் கடந்த வாரம் செய்திவாசிக்கும் தருனத்தில் சிவராசா தக்கீசன் அவர்களால் எடுக்கப்பட்ட பிரத்தியோகப் புகைப்படம்.

ஜெ ஒன்லைன் வானொலியின் கண்ணீர் அஞ்சலி


மறைந்தாலும் மறையாத மதுரக்குரல் ராஜேஸ்வரி சண்முகம்

- கலாபூசணம் புன்னியாமீன்
“ ஈராயிரமாண்டு இலக்கிய வரலாறு கொண்ட நம் தமிழ் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் எப்படியெல்லாம் புதிய நரம்புகளுக்கு ரத்தம் பாய்சுகின்றதென்பதைத் திளைத்துத் திளைத்து - சுவைத்துச் சுவைத்து - மகிழ்ந்து மகிழ்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து புல்லரிக்கும் உச்சரிப்பில் நீங்கள் சொல்லெடுத்துச் சொன்னபோது நாம் மீண்டும் ஒரு கல்லூரி மாணவனாய்க் கற்கத் தொடங்கினேன். எந்திர உலகத்திற்குத் தமிழைக் கொண்டு சேர்த்த மந்திரநிகழ்ச்சி உங்கள் பொதிகைத் தென்றல். காலங் காலமாய்த் தமிழ்க்காத்த கவிஞர் பரம்பரையின் கடைக்குட்டி என்ற முறையில் உங்களுக்கு நான் நாத்தழுதழுக்க நன்றிசொல்கின்றேன். 

வீசும் திசைகளை வைத்தே காற்றுக்குப் பெயரிட்டான் தமிழன்

வடக்கே இருந்து வருவது வாடைக்காற்று.
மேற்கே இருந்து வருவது கோடைக்காற்று
கிழக்கே இருந்து வருவது கொண்டல்காற்று
தெற்கே இருந்து வருவது தென்றல் காற்று

எங்களுக்குத் தெற்கேயிருந்து வீசுகின்ற நீங்கள் தென்றலாகத் தான் இருக்க முடியும்! இது அர்த்தமுள்ள தென்றல், ஆனந்தத் தென்றல். பருவம் கடந்துவீசும் பைந்தமிழ் தென்றல்...'' கவிஞர் வைரமுத்து இராஜேஸ்வரி சண்முகமவர்களுக்கு சென்னையிலிருந்து அனுப்பியிருந்த மடலின் சில வாசகங்கள் அவை. 

இவைமட்டுமல்ல கவிஞர் வாலி, ஏ.வீ.எ. சரவணன், எஸ். ஏ. சந்திரசேகரன், எஸ்.பி. முத்துராமன், இசையமைப்பாளர் அரவிந், முத்துலிங்கம், பழனிபாரதி, அறிவுமதி, அறிஞர்களான கலாநிதி கைலாசபதி, கலாநிதி சிவதம்பி, டாக்டர் நந்தி, வி.வி. வைரமுத்து, கலையரசு சொர்ணலிங்கம், எஸ். டி. சிவநாயகம்... இவர்கள் போல இன்னும் நூற்றுக்கணக்கான கலைஞர்கள், அறிவாளர்களின் புகழ் மாலைகள் ஏராளம். இலட்சக்கணக்கான, மில்லியன் கணக்கான தமிழ் பேசும் உலக நேயர் நெஞ்சங்களில் நீங்காத இடத்தைப் பெற்றுக்கொண்ட மதுரக்குரல் ராஜேஸ்வரி தமிழ் வானொலி வரலாற்றில் காலத்தால் அழிக்க முடியாத ஒரு சகாப்த்தித்தின் உரிமையாளி.

மதுரக்குரல் இராஜேஸ்வரி சண்முகத்தைப் பற்றி எழுதுவதானால்... ஒரு புத்தகமல்ல பல புத்தகங்களே எழுதலாம். இருப்பினும் ஒருசில தகவல்களை மட்டும் இங்கே தர விளைகின்றேன். 

அம்மா அண்ணாமலையம்மாள், அப்பா- பிச்சாண்டிபிள்ளை ஆகியோரின் மூத்த மகளாக 1938.03.16ம் திகதி கொழும்பில் விவேகானந்த மேட்டில்; பிறந்த இவர் இரண்டு சகோதரர்கள் இரண்டு சகோதரிகளுடன் கூடப்பிறந்தவராவார். ஸ்ரீகதிரேசன் வீதி, புனித மரியாள் வித்தியாலயத்தில் ஆங்கிலமொழி மூலம் கல்விகற்றுப் பிறகு நெல் வீதி அரசினர் மத்திய மகா வித்தியாலயத்தில் தனது கல்வியைத் தொடர்ந்தார். 

படிக்கும் போது நடித்த “கண்ணகி" நாடகத்தை பார்த்த வானொலி நாடகத்தயாரிப்பாளர் “சானா" இவரை வானொலி நாடகங்களில் நடிக்க அழைத்தார். தனது 14வது வயதிலே 1952இல் வானொலிக் கலைஞராக அறிமுகமான இவர் நடித்த வானொலி நாடகம் என்.எஸ்.எம். ராமையா எழுதிய 'விடிவெள்ளி’. ஆமாம் அன்று விடிவெள்ளியாகவே திகழ்ந்தார். 

நூற்றுக்கணக்கான வானொலி நாடகங்களில் மதுரக்குரல் ஒலித்த அதே நேரத்தில் மேடை நாடகங்களிலும் நடிப்புத்திறன் மிளிர்ந்தது. அவற்றுள் பிரபல்யம் பெற்ற இவருக்குப் புகழ் சேர்த்துத்தந்த சில நாடகங்களையாவது ஞாபகப்படுத்தல் வேண்டும். ஸ்புட்னிக் சுருட்டு, வாடகை வீடு, திரு. சி. சண்முகம் எழுதிய பல மேடைநாடகங்கள், ஹாரேராம் நரே கோபால், நெஞ்சில் நிறைந்தவள், லண்டன் கந்தையா, ஸ்ரீமான் கைலாசம், தேரோட்டி மகன், குந்திதேவி பாத்திரம் கண்ணகி, வீருத்தின் பரிசு. முருகையனின் - விடிவை நோக்கி... போன்றமேடைநாடகங்களில் பல்வேறு பாத்திரங்களில் முத்திரை பதித்துப் புகழ்சேர்த்தவர். சிலம்பின் ஒலி, வளவனின் பதியூர்ராணி...என, வானொலி நாடகங்களால் தனது குரல் வளத்துக்கு உரம் சேர்த்தவர். வானொலி நாடகத்திலே முதலில் குரல் பதித்து, நாடகத்துறையையும் ஒலிபரப்புத்துறையையும் தனித்துவமாக மிளிரச் செய்த பெருமை இராஜேஸ்வரி அவர்களுக்கு உண்டென்றால் அது மிகை அல்ல.

1952.12.26ம் திகதி முதல் வானொலிக்கலைஞராக கலைத் துறையில் பாதம்பதித்த இராஜேஸ்வரி 1969 இல் பகுதிநேர அறிவிப்பாளராகவும், 1971இல் மாதர், சிறுவர் பகுதித்தயாரிப்பாளராகவும், முதல் தரம் 1994இல் மீ.உயர் அறிவிப்பாளராகவும் படிப்படியாக உயர்ந்தார்.

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக்கணவர் திருவாளர் சண்முகம் நாடறிந்த ஒரு நல்ல, சிறந்த நாடகாசிரியர், இவர் எழுதிய வானொலித் தொடர்கள் ஏராளம், விளையாட்டுத்துறை விமர்சனம் செய்வதிலும் அவர் வல்லவர். அவர் எழுதிப்புகழ்பெற்ற வரனொலி நாடகங்கள் சில, துணிவிடு தூது, லண்டன் கந்தையா, புழுகர் பொன்னையா, ஊருக்குழைந்தவன், நெஞ்சில் நிறைந்தவள், இரவில் கேட்டகுரல் அதேபோல மேடையில் புகழ்பெற்றவை, ஸ்புட்னிக் சுருட்டு, ஸ்ரீமான் கைலாசம், வாடகைவீடு, நீதியின் நிழல், ஹரோராம், நரேகோபால், நெஞ்சில் நிறைந்தவை இப்படி இன்னும் பல... கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் அரச அதிகாரியாக இருந்து கலைபணி ஆற்றிய திரு. சண்முகம், இராஜேஸ்வரி அவர்களின் முன்னேற்றத்துக்குத் துணை நின்றவர். 

இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் - மூத்தவள் பெண். பெயர் வசந்தி சண்முகம் தற்போது திருமதி வசந்திகுமார் அன்னையைப் போலவே சிறுவயது முதல் வானொலியும், மேடையிலும் பங்களிப்பு வழங்கிய இவர் பட்டதாரியாகி இலங்கை வானொலியில் இசைப்பகுதியில் தயாரிப்பாளராக பணியாற்றினார். திருமணமுடித்து இரண்டு ஆண்மக்களோடு பாரதத்தில் வாழ்கின்றார். ஆண் மகன் இருவர். எஸ். சந்திரமோகன் பாடகர், புகைப்படக் கலைஞர், எஸ் சந்திரசேகரன் தனியார் வானொலியில் ஒலிபரப்புத் துறையில் பணியாற்றுகிறார். 

இராஜேஸ்வரி சண்முகம் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளோ பல. அவற்றுள் சில பின்வருமாறு, இசைச்சித்திரம், முத்துவிதானம், பூவும்பொட்டும், மங்கையர் மஞ்சரி, சிறுவர் நிகழ்ச்சிகள், பொதிகைத் தென்றல், வீட்டுக்கு வீடு, இசையும் கதையும், வானொலி மலர், ஒலிமஞ்சரி... என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

பேட்டி நிகழ்ச்சிகளை வானொலியில் நடத்தும்போது இவரின்; மதுரக்குரலாலும், மொழிவளத்தாலும் தமிழ் புதுக்கலை தட்டி விடும். தென்னகத்தில் புகழ்பூத்த எத்தனையோ கலைஞர்களை இவர் வானொலியூடாகப் பேட்டிகண்டுள்ளார். அவர்களுள் சிலர் வருமாறு, எஸ் பி. பாலசுப்பரமனியம், இளையராஜா, சங்கர் கணேஷ், கல்யாணிமேனன், எம்.எல். வசந்தகுமாரி, கே. ஜே; யேசுதாஸ், ஜமுனாராணி, கங்கை அமரன், கவிஞர் பூங்குயில், ஜிக்கி, மலேசியா வாசுதேவன், ரீ.எம். சௌந்தரராஜன், சூலமங்கலம் ராஜலஷ்மி, ஆர்.எஸ். மனோகர், எஸ் ஜானகி, வி.கே. ராமசாமி, எஸ்பி. சைலஜா, அசோகன், வாணி ஜெயராம், குட்டிபத்மின, எஸ் பி. முத்துராமன், எஸ்.வி. சேகர், கமலாஹஸன், மனோரமா, பி. சுசீலா, வைரமத்து, வாலி, ஸ்ரீகாந்த, ஜென்சி, ஜொலி ஏப்ரஹாம், சீர்காழி சிவசிதம்பரம், மகாகவிபாரதியின் பேத்தி சகுந்தலா…..

ஐம்பதாண்டு கலைப்பணியினூடாக இவர் பெற்ற கௌரவங்கள், பட்டங்கள், விருதுகள் ஏராளம் அவற்றுள் சில வருமாறு:

* 1994இல் சிறந்த அறிவிப்பாளருக்கான ஜனாதிபதி விருது.
போட்டியின்றி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுத் தெரிவானமை குறிப்பிடத்தக்கது.

* 1995 இல் (ஜெயலலிதா விருது) டாக்டர் புரட்சித்தலைவி விருது.

* பிரான்ஸ் நாட்டுக்கு அழைக்கப்பட்ட இவர் பரிஸ் கலையமுதம் சார்பாக பரிஸ், டென்மார்க், சுவிஸ், நோர்வே, ஜெர்மனி, லண்டன் போன்ற இடங்களில் கௌரவமளிக்கப்பட்டார்

* காலாசார அமைச்சின் மூலம் முன்னால் அமைச்சர் செ. இராசதுரை அவர்களினால் மொழிவாளர் செல்வி பட்டமளிக்கப்பட்டது.

* சுவாமி விபுலாநந்தரின் நூற்றாண்டுப் பெருவிழாவினை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மேதகு ஜே. ஆர். ஜயவர்தனா அவர்களினால் வாகீசகலாபமணி பட்டமளிக்கப்பட்டது.

* அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களினால் 'தொடர்பியல் வித்தகர்' பட்டமளிக்கப்பட்டது.

* பேராசிரியர் டாக்டர் இரா. நாகு தமிழ்துறைத்தலைவர் - மாநிலக் கல்லூரி சென்னை பேராசிரியர் அருட்திரு. சி. மணிவண்ணன் தேர்வு ஆணையாளர் தூயவளனார் கல்லூரி திருச்சி ஆகிய தமிழறிஞர்கள் இயக்குனர் இளசை சுதந்திரம் அவர்களினால் எட்டயபுரம் தென்பொரி தமிழ்சங்கம், 'வானொலிக்குயில்' பட்டம் வழங்கி கௌரவித்தது.

* அம்பாறை மாவட்டத்து மருதமுனை, அட்டாளைச்சேனை, கல்முனை, சாய்ந்தமருது போன்ற இடங்களில் பாராட்டும் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டமை. சாய்நதமருது கலைக்குரல் 'வான்மகள்' விருது வழங்கி கௌரவித்தது.

* இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன பவளவிழாவில் 50வருட கால சேவை பாராட்டு.

* சிந்தனை வட்டம் 'நாளைய சந்ததியின் இன்றைய சக்தி' பேராதனை பல்கலைக்கழகத்தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.தில்லை நாதன், கலாநிதி துரை மனோகரன், கம்பவாரி ஜெயராஜா போன்றோர் முன்னிலையில் 'மதுரக்குரல்' பட்டம் வழங்கி கௌரவித்தமை.

பட்டங்கள் பல பெற்றாலும், பெருமைகள் பல சேர்ந்தாலும், பாராட்டுக்களை அள்ளிக் குவித்தாலும் - ஒரு சில கலைஞர்களைப் போல இவர் இறுதிவரை தடம் மாறிவிடவில்லை. அன்று போலவே மார்ச் 23, 2012 இல் மரணிக்கும் வரை குணவதியாகவே இருந்து வந்தார்.

ஆம் பல படிப்பினைகளை எமது இளைய தலைமுறைக்குத்தந்த இவர் மறைந்தாலும் இவரது மதுரக்குரல் நிச்சியமாக காலத்தால் அழியாது எம் இதயங்களில் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
 (http://www.ilankainet.com & http://thesamnet.co.uk)

விடைபெற்றார் இராஜேஸ் அக்கா

வணக்கம் கூறி விடைபெறுவது 
இராஜேஸ்வரி சண்முகம் என்று 
கணீரென்று காற்றலையில் நிறைவுசெய்வாயே 
இன்று-
உலகத்தைவிட்டு விடைபெற்றும் 
உன் வாழ்கையை நிறைவு செய்தும் 
வானலையில் கரைந்து விட்டாயே அக்கா!
எழுபதுகளில் நீ புகழின் உச்சத்தில் இருந்தபோது 
நான் வானொலிக்குள் வந்தேன்.
உன்னோடு சேர்ந்து பணிபுரிந்தபோது ஏற்பட்ட 
உற்சாகத்திற்கும் புத்துணர்ச்சிக்கும் அளவே இல்லை அக்கா..
ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் என்னுடன் எல்லோரும் அன்புதான் 
ஆனால் உனது அன்பு அளப்பெரியது..
வானொலி அறிவிப்போடு மட்டுமல்லாமல் 
நாடகம், இலக்கியம் என்றெல்லாம் நீ 
நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி பல லட்ச 
நேயர்கள் நெஞ்சில் நின்று....
நீங்காத இடத்தைப் பெற்றீர்...
'பிரியா பாட்டி' என்ற தலைப்பில் 
வரிவரியாய் நான் எழுதித்தர...
பிரதி சனி தோறும் பிரமாதமாய் நடித்து 
நேரடி ஒலிபரப்பு செய்த ஒருத்தி என்றால் 
அது நீதான் என்பேன்....
உகந்தைமலை முருகன் பக்திப்பாடல்...
இலங்கையில் முதல் வெளிவந்த தனிக்கோவில் பாடல் 
நான் இசையமைத்து பாடியபோது...
கோவில் வரலாற்றையும், பாடல்பற்றிய குறிப்பாக 
உனது ஈரடி கவிகொண்டு உன் கம்பீரக் குரலினால் 
முன்னுரையும், முடிவுரையும் முன்னின்று தந்தாயே..அக்கா 
கோவிலூர் என்று சொல்லி கொள்ளை ஆசையுடன் அழைப்பாய்
நீவி வகுடெடுத்து நெற்றியில் போட்டுவைத்து 
ஆடம்பரமில்லாமல் அழகாக நீ இருப்பாய்...
எண்ணிப்பார்க்கின்றேன் இதயம் கனக்கிறது..
சொல்லில் அடங்காத துயரம் வருகிறது...
உன் குரலில், உன் குணத்தில், உன் அன்பில் 
நான் கரைந்தவன்...
இன்று உன் இழப்பில் நான் என்னையே மறந்தவன்...
அக்கா உன் ஆத்மா சாந்தி அடையட்டும்...
ஓம்.சாந்தி.
(http://www.koviloor.com/2012/03/blog-post_23.html)

குயில் ஓய்ந்தாலும் அதன் குரல் எம்முள் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும் (சிறப்புத் தொகுப்பு)

மார்ச்சு 16 1940 தொடக்கம் மார்ச் 23 2012 வரை வாழ்நாள் காலத்தைக்கொண்ட இராஜேஸ்வரி சண்முகம், இலங்கையில் புகழ்பெற்ற வானொலி அறிவிப்பாளரும் நாடகக் கலைஞரும் ஆவார். 

1950 களில் இலங்கை வானொலியில் சானா சண்முகநாதன் நாடகத் தயாரிப்பாளராக இருந்தபொழுது வானொலி நாடகங்களில் நடிப்பதற்காக இவர் வானொலித்துறைக்கு வந்து தொடர்ந்து நீண்ட காலமாக நடித்தவர். 

ஆரம்பத்தில் தற்காலிக அறிவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் தமிழ் வர்த்தக சேவையில் நிரந்தர அறிவிப்பாளராக நியமிக்கப்பட்டார். 

வாழ்க்கை வரலாறு - அம்மா அண்ணாமலையம்மாள், அப்பா பிச்சாண்டிபிள்ளை ஆகியோரின் மூத்த மகள். இரண்டு சகோதரர்கள் இரண்டு சகோதரிகள். கொழும்பில் விவேகானந்த மேட்டில் பிறந்தவர். ஸ்ரீகதிரேசன் வீதி, புனித மரியாள் பாடசாலையில் முதலில் படித்தார். பிறகு நெல் வீதி அரசினர் மத்திய மகா வித்தியாலயத்திற்கு படிக்கும் போது நடித்த "கண்ணகி" நாடகத்தை பார்த்த வானொலி நாடகத்தயாரிப்பாளர் "சானா" இவரை வானொலி நாடகங்களில் நடிக்க அழைத்தார். 

கலைக்குடும்பம் - இவரது கணவரான சி. சண்முகமும் இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக இருந்ததோடு வர்த்தக சேவையில் ஒலிபரப்பான ஏராளமான தனி நாடகங்கள், தொடர் நாடகங்கள் என்பனவற்றையும் மேடை நாடகங்களையும் எழுதியவர். இவர்களது பிள்ளைகளான சந்திரமோகன், சந்திரகாந்தன் இருவருமே வானொலி அறிவிப்பாளர்களாக சமகாலத்தில் இருந்தவர்கள். மகள் வசந்தி வானொலி மேடை நாடகங்களில் நடித்தவர். 

வானொலி நிகழ்ச்சிகள் - சானா சண்முகநாதன் காலத்திலிருந்து பி.விக்னேஸ்வரன் காலம் வரை வானொலி நாடகங்களில் நடித்தவர். இவர் நடித்த முதல் வானொலி நாடகம் என். எஸ். எம். இராமையாவின் "விடிவெள்ளி" என்பதாகும். வானொலியில் ´பொதிகைத் தென்றல்´ என்ற இலக்கியச் சுவையுள்ள நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியவர். 

மேடை நாடகங்கள் - சானாவின் நெறியாள்கையில் "அசட்டு வேலைக்காரன்", முருகையனின் ":விடியலை நோக்கி", சுஹேர் ஹமீட்டின் நெறியாள்கையில் "தேரோட்டி மகன்", சி. சண்முகத்தின் "ஸ்புட்னிக் சுருட்டு". 

மறைவு - இராஜேசுவரி சண்முகம் யாழ்ப்பாணம் சென்று கொழும்பு திரும்புவதற்காக புறப்பட்ட வேளையில், மாரடைப்பு ஏற்பட்டு யாழ்ப்பாண வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு காலமானார். (http://www.adaderana.lk/tamil/news.php?nid=23980)

நினைவலைகளில் சிரேஸ்ட வானொலி அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம்


இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் மறைவு!

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த வானொலி அறிவிப்பாளர் வானொலிக்குயில் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் இன்று காலமாகிவிட்டார். தமிழ் வானொலிகளின் வரலாற்றில் தனக்கென தனியிடம் பதித்துள்ள ராஜேஸ்வரி சண்முகம் யாழ்ப்பாணத்தில் இன்று காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர். ராஜேஸ்வரி சண்முகம் உலகப் புகழ் பெற்ற தமிழ்ப் பெண் அறிவிப்பாளர்களில் முன்னணியில் திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. (உலகத் தமிழர்.காம் 24/04)


@@@@@@

வானொலிக் குயில் இராஜேஸ்வரி சண்முகம் காலமானார்

வானொலிக் குயில் என்று செல்லமாய் அனைவராலும் அறியப்பட்ட திருமதி இராஜேஸ்வரி சண்முகம் இன்று காலமாகிவிட்டார். இலங்கை வானொலி வரலாற்றில் தனக்கென தனியிடம் பதித்துள்ள அன்னார் யாழ்ப்பாணத்தில் இன்று காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர்.  (அதரெண.காம் 24/03)

@@@@@@

வானொலிக் குயில் இராஜேஸ்வரி சண்முகம் காலமானார்!

வானொலிக் குயில் என்று செல்லமாய் அனைவராலும் அறியப்பட்ட திருமதி இராஜேஸ்வரி சண்முகம் இன்று காலமாகிவிட்டார்.
இலங்கை வானொலி வரலாற்றில் தனக்கென தனியிடம் பதித்துள்ள அன்னார் யாழ்ப்பாணத்தில் இன்று காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர். (படலை.காம் 24/03)

@@@@@@

இலங்கை வானொலி அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் மரணம்

பிரபல அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் காலமானார்!இலங்கை வானொலியின் பிரபல அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் இன்று காலமானார். (தமிழ்வெளி.காம் 24/03)

@@@@@@

புங்குடுதீவைப்  புகுந்த இடமாகக் கொண்ட சிரேஸ்ட வானொலி அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் காலமானார்

வானொலிக்குயில் என்று செல்லமாக அழைக்கப்படும், பிரபல வானொலி அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் இன்று காலமானார்
தமிழ் வானொலி வரலாற்றில் இராஜேஸ்வரி சண்முகம் என்கிற இந்தப் பெயர் காலத்தால் அழிக்க முடியாத ஒரு வரலாறு. இராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் இலங்கை வானொலியில் 35வருடங்களுக்கு மேலாக பணியாற்றினார்.
கொழும்பை பிறப்பிடமாக கொண்ட இராஜேஸ்வரி சண்முகம் இலங்கை வானொலியில் ஒலிபரப்பான நாடகங்களில் யாழ்ப்பாண பேச்சு வழக்கில் பேசி பாராட்டை பெற்றவராவார். சிறந்த செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் திகழ்ந்த இராஜேஸ்வரி சண்முகம் இன்றைய இளையதலைமுறை ஒலிபரப்பாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார்.
அன்னாரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. (புங்குடுதீவு.காம் 24/03)

@@@@@@

சிரேஸ்ட வானொலி அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் காலமானார்

வானொலிக்குயில் என்று செல்லமாக அழைக்கப்படும், பிரபல வானொலி அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் இன்று காலமானார்
தமிழ் வானொலி வரலாற்றில் இராஜேஸ்வரி சண்முகம் என்கிற இந்தப் பெயர் காலத்தால் அழிக்க முடியாத ஒரு வரலாறு. இராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் இலங்கை வானொலியில் 35வருடங்களுக்கு மேலாக பணியாற்றினார்.
கொழும்பை பிறப்பிடமாக கொண்ட இராஜேஸ்வரி சண்முகம் இலங்கை வானொலியில் ஒலிபரப்பான நாடகங்களில் யாழ்ப்பாண பேச்சு வழக்கில் பேசி பாராட்டை பெற்றவராவார். சிறந்த செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் திகழ்ந்த இராஜேஸ்வரி சண்முகம் இன்றைய இளையதலைமுறை ஒலிபரப்பாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார்.
அன்னாரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது.
இரண்டாம் இணைப்பு:
யாழ்ப்பாணத்தில் வைத்து மாரடைப்பால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் காலை நேர நிகழ்ச்சியான பொங்கும் பூம்புனல் உட்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை திறம்பட வழங்கியதில், ராஜேஸ்வரி சண்முகம் பிரபல்யம் பெற்று விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்துக்கு சென்று கொழும்பு திரும்புவதற்காக புறப்பட்ட வேளையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு காலமானார். அவரின் பூதவுடல் தற்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. (வாகீசம்.காம் 24/03)

@@@@@@

வானொலிக் குயிலின் குரல் ஓய்ந்தது

வானொலிக்குயில் என்று செல்லமாக அழைக்கப்படும்,  பிரபல வானொலி அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் நேற்று (24.03.2012) வெள்ளிக்கிழமை தனது 72ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
கொழும்பை பிறப்பிடமாக கொண்ட இவர் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்து கொழும்பு திரும்புவதற்காக புறப்பட்ட வேளையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே காலமாகியுள்ளார்.
தமிழ் வானொலி வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த இராஜேஸ்வரி சண்முகம் இலங்கை வானொலி சேவையில் 35வருடங்களுக்கு மேலாக பணியாற்றியுள்ளார்.
அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் இலங்கை வானொலியில் ஒலிபரப்பான நாடகங்களில் யாழ்ப்பாண பேச்சு வழக்கில் பேசி பலரது பாராட்டையும் பெற்றதுடன், சிறந்த செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் கடமையாற்றி இளைய தலைமுறை ஒலிபரப்பாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். (Jaffnatoday.com 24/03)

Friday, March 23, 2012

இலங்கை வானொலி அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் மரணம்


பிரபல அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் காலமானார்!


இலங்கை வானொலியின் பிரபல அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் இன்று காலமானார். ‘வானொலிக் குயில்’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் இலங்கைவானொலியில் 35வருடங்களுக்கு மேலாக பணியாற்றினார்.
கொழும்பை பிறப்பிடமாக கொண்ட ராஜேஸ்வரி சண்முகம் இலங்கை வானொலியில் ஒலிப்பரப்பான நாடகங்களில் யாழ்ப்பாண பேச்சு வழக்கில் பேசி பாராட்டை பெற்றவராவார்.  சிறந்த செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் திகழ்ந்த ராஜேஸ்வரி சண்முகம் இன்றைய இளையதலைமுறை ஒலிபரப்பாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார். (தினக்கதிர் 23/03)

@@@@@@

பிரபல அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் காலமானார்


பிரபல வானொலி அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் (Rajeshwari Shanmugam)  இன்று காலமானார். சுகயீனமுற்று யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வானொலிக்குயில் இன்று மாலை குரலடைத்திருக்கிறது. வானொலித்துறையில் நீண்டகால அனுபவமுள்ள ராஜேஸ்வரி சண்முகத்தின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும்.

"வானொலிக் குயில்" என்று செல்லமாய் எல்லோராலும் அழைக்கப்படும் ராஜேஷ்வரி சண்முகம் அவர்களின் இறுதிக் கிரியைகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும். (தமிழ் மிரர் 23/03)

@@@@@@

சிரேஸ்ட அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் காலமானார் 

வானொலிக்குயில் என்று செல்லமாக அழைக்கப்படும்,  பிரபல வானொலி அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் (Rajeshwari Shanmugam)  இன்று காலமானார்
தமிழ் வானொலி வரலாற்றில் ராஜேஸ்வரி சண்முகம் என்கிற இந்தப் பெயர் காலத்தால் அழிக்க முடியாத ஒரு வரலாறு.
தமிழ் நாட்டில் தூத்துக்குடியில் பிறந்த இவர், சிறு வயதிலேயே இலங்கைக்கு வந்து வாழத் தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
(தமிழ்வின்.காம் 23/03)



அவரது குரலினைக் கேட்க இங்கு சொடுக்கவும்

Monday, March 19, 2012

கடலில் பயணிக்கும் கப்பல்களுக்காக ஒரு வானொலி


கனடா: உலகெங்கும் கடலில் பயணிக்கும் கப்பல்களுக்காக டைம் சிக்னல் வானொலிகள் (Time Signal Station) செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் குறைந்த சக்தியில் ஒலிபரப்பி வருவதால் நாம் கேட்பது சிரமம். ஆனாலும் ஒரு சில சமயங்களில் தெளிவான வானிலையின் போது இந்த வானொலிகளைக் கேட்கலாம். கனடாவில் இருந்து 24 மணிநேரமும் ஒலிபரப்பி வரும் இஏம CHU Canada தற்பொழுது இந்தியாவில் இரவு நேரங்களில் கிடைத்து வருகிறது. இவர்களது சிக்னலானது இந்திய நேரம் இரவு 8.50 மணிக்கு (1450 UTC)
ஆங்கிலத்தில் 3330 அலைஎண்கள் 90 மீட்டரில் ஒலிபரப்பாகிறது. தொடர்பு கொள்ள இவர்களது முகவரி:

CHU Canada, Time Signal Station, Institute for National Measurement
Standards,
National Research Council of Canada (NRC-INMS),
1200, Montreal Road, Bldg M-36,
Ottawa, Ontario, K1A OR6,
Canada.
Email: radio.chu@nrc-cnrc.gc.ca
Web: www.inms-ienm.nrccnrc.gc.ca
(Babul Gupta)

சீன வானொலியில் எனது கேள்விகான பதில்.

பாளையங்கோட்டை தங்க.ஜெய்சக்திவேல், சீனாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்.
கலைமகள்----க்ளீட்டஸ், நீங்கள் சரியாக பதிலளிக்க முடியுமா?
க்ளீட்டஸ்----சீனாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் கண்டிப்பாக பெய்ஜிங்கில் தான் அமைந்துள்ளது இல்லையா, கலைமகள்?
கலைமகள்----ஆமாம். பெய்ஜிங் பல்கலைக்கழகம், சிங்ஹுவா பல்கலைக்கழகம் ஆகியவை பெய்ஜிங்கில் அமைந்துள்ளன. ஆனால், சீனாவில் நான்கு பல்கலைக்கழகங்கள் மிகவும் புகழ்பெற்று விளங்குகின்றன. மேற்கூறிய இரண்டு பல்கலைக்கழகங்களைத் தவிர, தியன்சின் மாநகரிலுள்ள நான்கேய் பல்கலைக்கழகம், ஷாங்காய் மாநகரிலுள்ள புஃதான் பல்கலைக்கழகம் ஆகியவை மற்ற இரண்டு புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் ஆகும்.
க்ளீட்டஸ்----அப்படியா!இந்த நான்கு புகழ்பெற்ற சீனப் பல்கலைக்கழங்களை நாம் அறிமுகப்படுத்தலாம்.
கலைமகள்----சரி, முதலில், பெய்ஜிங் பல்கலைக்கழகம் பற்றி நீங்கள் சொல்லுங்கள். உலகில் மிகவும் புகழ்பெற்ற இந்தப் பல்கலைக்கழகத்தைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.
க்ளீட்டஸ்----நிச்சயமாக! பெய்ஜிங் பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்டுள்ளேன். அதன் வளாகத்திலுள்ள அழகான ஏரி, இந்தப் பல்கலைக்கழகத்தின் இயற்கை வண்ணத்தைக் கூட்டுகிறது. 1898ம் ஆண்டில் பெய்ஜிங் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. சீனாவின் புதிய பண்பாட்டு இயக்கத்தின் மையமாகவும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முன்பு நடவடிக்கை நடத்திய தளமாகவும் இது உள்ளது.
கலைமகள்----நீங்கள் சொன்னது சரிதான். வெளிநாட்டுத் திறப்பு மற்றும் சீர்திருத்தத்துக்குப் பிறகு, பெய்ஜிங் பல்கலைக்கழகம் முன்னெப்பொழுதும் கண்டிராத வளர்ச்சிக் காலத்தில் நுழைந்தது. இப்பொழுது, 47 சீன அறிவியலகத்தின் உறுப்பினர்கள், 15 நாட்டு முக்கிய ஆராய்ச்சிக் கூடங்கள், 120 ஆய்வகங்கள் முதலியவற்றை பெய்ஜிங் பல்கலைக்கழகம் கொண்டு விளங்குகிறது.
க்ளீட்டஸ்----பெரிய அளவிலான திறமைசாலிகள் பலர் இந்தப் பல்கலைக்கழகத்தில் இருந்தனர்!உலகளவில் பெய்ஜிங் பல்கலைக்கழகம், சீனாவின் மிகவும் புகழ்பெற்ற பல்கலைக்கழகமாக கருதப்படுகிறது.
கலைமகள்----ஆமாம். பெய்ஜிங் பல்கலைக்கழகம் மட்டுமல்லாமல், 1911ம் ஆண்டில் நிறுவப்பட்ட சிங்ஹுவா பல்கலைக்கழகமும் மிகவும் புகழ்பெற்றது ஆகும். துவக்கக்காலத்தில், மேலை நாட்டுப் பண்பாட்டின் பாதிப்பு அதிகமாக இருந்த போதிலும், சீனாவின் தலைசிறந்த பண்பாட்டை ஆராய்வதில் இந்தப் பல்கலைக்கழகம் கவனம் செலுத்தியது. சீனாவின் பாரம்பரிய பண்பாட்டு ஆய்வகத்தின் புகழ்பெற்ற நான்கு பேராசிரியர்களை பிரதிநிதிகளாக கொண்ட நிபுணர்கள், சிங்ஹுவா பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தினர்.
க்ளீட்டஸ்----கலைமகள், சிங்ஹுவா பல்கலைக்கழகம், பொறியியல் தொழில் நுட்ப திறமைசாலிகளை முக்கியமாக பயிற்றுவிக்கும் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இருக்கிறது. அல்லவா?
கலைமகள்----ஆமாம். பொறியியல், இப்பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டுக் கல்வியியலாகும்.
க்ளீட்டஸ்----சீனாவின் ஏவுகணைத்தந்தை என்று அழைக்கப்பட்ட அறிவியலாளர் சின் சியேசன், சீனாவின் முதலாவது செயற்கைகோளை ஆராய்ந்தவர் சாவ் ச்சியுசாங், சீனாவின் ஏவூர்திக்கு வித்திட்டவர் லியாங் சாவ்பாங் முதலியோர், சிங்ஹுவா பல்கலைக்கழகத்தின் படித்தபட்டதாரிகளாவர்.
கலைமகள்----ஆமாம். க்ளீட்டஸ், சிங்ஹுவா பல்கலைக்கழகம் பற்றி நீங்கள் நன்றாக அறிந்திருக்கின்றீர்கள்!
க்ளீட்டஸ்----நிச்சயமாக. பெய்ஜிங் பல்கலைக்கழகமும், சிங்ஹுவா பல்கலைக்கழகமும் மிகவும் புகழ்பெற்றவையே. கலைமகள்----சரி, சற்று முன், சீனாவில் நான்கு பல்கலைக்கழங்கள் புகழ்பெற்று விளங்குவதாகக் குறிப்பிட்டேன். பெய்ஜிங் பல்கலைக்கழகம் மற்றும் சிங்ஹுவா பல்கலைக்கழகத்தைப் பற்றி, நீங்கள் நன்றாக அறிந்துகொண்டீர்கள். இனி, இதர இரண்டு புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களைப் பற்றிக் கூறுகின்றோம்.
க்ளீட்டஸ்----சொல்லலாம். சீனாவின் முன்னாள் தலைமையமைச்சர் சூ என்லாய் படித்துப் பட்டம் பெற்றதால், நான்கேய் பல்கலைக்கழகம் புகழ்பெற்றது. அதன் பட்டதாரிகள் வெளிநாடுகளில் வெகுவாக வரவேற்கப்படுகின்றனர்.
கலைமகள்----ஆமாம். 1919ம் ஆண்டு, சீனாவின் சமகால புகழ்பெற்ற நாட்டுப்பற்று கல்வியலாளர் சாங் போலிங்கும், யேன் சியுவும் நான்கேய் பல்கலைக்கழகத்தை நிறுவினர். மானிடப் பண்பாட்டியல், இயற்கையியல், தொழில் நுட்ப அறிவியல், நிர்வாகம், மருத்துவம், கலை உள்ளிட்ட பல துறைகள் இங்கு உள்ளன. குறிப்பாக, புகழ்பெற்ற கணிதவியலாளர் சென் சிங்சான் முதலிய அறிவியலாளர்களைக் கொண்டிருந்ததால், இப்பல்கலைக்கழகத்தின் கணிதவியல் துறை சர்வதேச அளவில் புகழ்பெற்றது.
க்ளீட்டஸ்----அதேவேளை சியன்சின் என்னும் துறைமுக நகரத்தில் அமைந்துள்ளதால், நான்கேய் பல்கலைக்கழகம், திறப்பு மற்றும் புத்தாக்க கல்வியல் தனிச்சிறப்பியல்களைக் கொண்டுள்ளது. உண்மையில் புகழ்பெற்ற சகமாணவர்களால், ஒரு பல்கலைக்கழகத்தின் புகழ் பெரிய அளவில் விரிவாக்கப்படலாம்.
கலைமகள்----ஆமாம். க்ளீட்டஸ், ஷாங்காய் மாநகரிலுள்ள பூஃதான் பல்கலைக்கழகம் பற்றி அறிமுகப்படுத்திக் கூறுகின்றேன். பூஃதான் என்றால், சீன மொழியில் மறுமலர்ச்சி என்று பொருளாகும்.
க்ளீட்டஸ்----நல்ல பெயர் தான். பூஃதான் பல்கலைக்கழகம், அறிவியல் துறையை முக்கியமாகக் கொண்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அது இருப்பதாகக் கருதுகின்றேன். அதற்கு காரணம், கடந்த நூற்றாண்டின் 80வது ஆண்டுகளில் இந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியல் துறையின் மாணவர்கள் பலர் வெளிநாட்டுக்குச் சென்று பாடம் கற்றுக்கொண்டனர் என்பதைக் கேட்டறிந்தேன்.
கலைமகள்----ஆமாம். உயிரினவியல், கணிணி, இயல்பியல் ஆகிய துறைகள், பூஃதான் பல்கலைக்கழகத்தின் தனிச்சிறப்பான துறைகளாகும். க்ளீட்டஸ், தங்க.ஜெய்சக்திவேல் இடம் இருந்து இன்னும் மற்றொரு கேள்வி உண்டு.
க்ளீட்டஸ்----சொல்லுங்கள். பல்கலைக்கழகம் பற்றிய கேள்வி இருக்கிறதா?
கலைமகள்----ஆமாம். இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் படிப்பு படிக்க, சீனாவில் எந்தக் கல்வி நிறுவனம் புகழ்பெற்றது என்று அவர் கேட்டார்.
க்ளீட்டஸ்----இந்தக் கேள்விக்கு நான் பதிலளிக்கலாம். சீனப் பரவல் மற்றும் செய்தி ஊடகப் பல்கலைக்கழகம், சரி தானே?
கலைமகள்----ஆமாம். ஆனால், பெய்ஜிங் பல்கலைக்கழம், சீன மக்கள் பல்கலைக்கழகம், பூஃதான் பல்கலைக்கழகம் முதலிய பல்கலைக்கழகங்களிலும் இதழியல் துறை சிறப்பாக உள்ளது.
க்ளீட்டஸ்----அப்படியா! இதழியல் அல்லது மக்கள் தொடர்பியலில் விருப்பம் கொண்டால், இந்த பல்கலைக்கழங்களுக்குச் சென்று படிக்கலாம்.
கலைமகள்----நல்ல முன்மொழிவு. கடைசியாக, சீனாவின் தேசிய செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்தி நிறுவனம் எப்பொழுது துவங்கப்பட்டது என்பதற்கு பதிலளிக்கலாமா?
க்ளீட்டஸ்----இது பற்றிய சரியான விடை எனக்குத் தெரியாது, நீங்கள் சொல்லுங்கள்.
கலைமகள்----சரி. சின்ஹுவா செய்தி நிறுவனம் 1931ம் ஆண்டின் நவம்பர் திங்கள் சியாங்சீ மாநிலத்தில் நிறுவப்பட்டது. சீனப்புரட்சியின் வெற்றிக்கு ஆற்றிய பங்கை அலட்சியம் செய்யக்கூடாது.
க்ளீட்டஸ்----கலைமகள், இன்றைய நிகழ்ச்சி மூலம், சீனாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை பற்றியும் தொடர்புடைய இயல்களை பற்றியும் நன்றாக புரிந்துகொண்டுள்ளேன்.
கலைமகள்----தங்க.ஜெய்சக்திவேல் நல்ல கேள்விகளை வழங்கியதற்கு மிக்க நன்றி. தமிழ்ப்பிரிவின் நேயர் தொடர்பு குழு விரைவில் உங்களுக்கு சிறப்பான அன்பளிப்பு அனுப்பும்.
க்ளீட்டஸ்----சரி. நேயர்களே இத்துடன், இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நிறைவடைகிறது. சீனா, சீன வானொலி, தமிழ்ப்பிரிவு முதலியவை பற்றி மேலதிகமாக அறிந்துகொள்ள விரும்பினால், மின்னஞ்சல், கடிதம், மற்றும் தொலைபேசி மூலம் எங்களுக்கு தெரிவியுங்கள். (ஒலிபரப்பான நாள் 13 பிப்ரவரி 2012)

Monday, March 12, 2012

அற்புத வானொலி


தைவான் / எகிப்து வானொலிகளின் புதிய வண்ண அட்டைகள்



தைவான் / எகிப்து : இது தவிர எகிப்தின் தேசிய வானொலியான ரேடியோ கெய்ரோ தற்பொழுது தனது நேயர்களுக்கு புதிய வண்ண அட்டையை அனுப்பி வருகிறது. தைவான் தேசிய வானொலியான ரேடியோ தைவான் இன்டர்நேசனல் இரண்டு புதிய டி.வி.டி-க்களை அனுப்பி வருகிறது.

Saturday, March 10, 2012

சந்தைக்கு புதுசு




ச்வா



வானொலிப் பெட்டிகள் பல்வற்றை பார்த்த உங்களுக்கு இது புதிதாக இருக்கும். ஆனாலும், 
இன்று மொபைலில் வானொலிகள் கேட்க முடிவதால், இது ஆச்சரியமாக இருக்காது.
ஆனாலும் பேனாவில் எழுதிக்கொண்டே பாட்டு கேட்பதில் ஒரு சுகம் நிச்சயம் இருக்கும்.
செய்தியாளர்கள் இதனை ஒலிப்பதிவு கருவியாகவும் பயன்படுத்தலாம். பதிவு செய்த செய்தியைக் கேட்டுக் கொண்டே அதனை எழுத்தாக்கம் செய்யலாம். விலை மற்றும் மேலதிக விபரங்களுக்கு 
INQUIRE NOW
Multifunction Radio with Pen, Waterproof Function, Easy to Carry 

FOB Price:  Get Product Price 
 

Monday, March 05, 2012

இந்தியப் பெருங்கடலில் ஒரு வானொலி


டியாகோ கார்சியா: இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு நேர் கீழாக அமைந்துள்ள ஒரு சிறு தீவு தான் டியாகோ கார்சியா. அமெரிக்க படை வீரர்கள் தங்கியுள்ள இந்த தீவினுல் செல்வது அவ்வளவு எளிதள்ள. ஆனால் அவர்கள் ஒலிபரப்பும் வானொலியான AFRTS-சை நேயர்கள் கேட்கலாம். கேட்பதோடு மட்டும் நின்றுவிடாமல் நீங்கள் அவர்களுக்கு கடிதம் எழுதினால் அதற்கு பதிலும் வண்ண அட்டை வடிவில் உங்களுக்கு அனுப்புகின்றனர். தற்பொழுது
இவர்களது நிகழ்ச்சிகளை தினமும் இந்திய நேரம் மாலை 6 மணி முதல் (1230 உலக நேரம்) ஆங்கிலத்தில் 12759 kHz USB அலைஎண்கள் 22 மீட்டரில்
கேட்கலாம். தொடர்பு கொள்ள இவர்களது முகவரி:
American Forces Radio and Television Service (AFRTS),
NMC Det AFRTS-DMC,
23755 Z St., Bldg. 2730,
Riverside, CA 92518-2017,
USA.
Email: qsl@dodmedia.osd.mil
டியாகோ கார்சியா தவிர இவர்களது நிகழ்ச்சிகள் Barrigada(Guam), Keflavik(Iceland), Pearl Harbour(Hawaii), Key West(Florida) and Peurtorica ஆகிய இடங்களில் இருந்தும் ஒலிபரப்பாகி வருகிறது. (Babul Gupta, Rajeesh Ramachandran).

Saturday, March 03, 2012

80 வயதை எட்டும் பிபிசி உலக சேவையின் புகைப்படத் தொகுப்பு

பிபிசி உலக சேவை வானொலியானது பிபிசியின் சாம்ராஜ்ஜிய சேவையாக 1932ஆம் ஆண்டு ஆரம்பித்திருந்தது. அந்தக் காலத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருந்த சிற்றலை ஒலிபரப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொலைதூரப் பிரதேசங்களுக்கு இந்த வானொலி ஒலிபரப்பப்பட்டது. இந்த வானொலியில் வரும் செய்திகள் சிறப்பாகவோ சுவாரஸ்யமாகவோ இருக்காது என்று பிபிசியின் அந்நாளைய தலைமை இயக்குநர் ஜான் ரீத் கணித்திருந்தாலும், அக்கணிப்பு பொய்யாகிப்போய் லண்டனின் பிராட்காஸ்டிங் ஹவுஸில் இருந்து ஒலிபரப்பபட்ட இந்த வானொலிக்கு நல்ல வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்தன. பிபிசி உலக சேவையின் வரலாற்றினை பறை சாற்றும் மேலதிக 9 அறியப் புகைப்படங்களை கிழ்கண்ட தொடுப்பில் காணலாம்.


பிபிசி உலக சேவை பற்றி தமிழோசையின் முன்னாள் தயாரிப்பாளர்கள்

பிபிசி தமிழோசை எண்பது வயதை எட்டும் இத்தருணத்தில் தமிழோசையின் முன்னாள் ஆசிரியர்களான மஹாதேவன், சம்பத்குமார் மற்றும் மூத்த தயாரிப்பாளரான ஆனந்தி ஆகியோர் பிபிசி உலக சேவையில் பணியாற்றிய தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர். அவர்களின் குரலை கீழ்கண்ட தொடுப்பில் கேட்கலாம்.