Saturday, January 18, 2014

கலைமகளாக மாறிய ஃஜவோ ஜியாங்


கலைமகளாக மாறிய ஃஜவோ ஜியாங்-குக்கு சென்னையில் பாராட்டு விழா பதிவு செய்த நாள் - ஜனவரி 17, 2014

சீன வானொலி நிலையம் தமிழ் ஒலிபரப்பு சேவையின் தலைவரான கலைமகள் என்கிற ஃஜவோ ஜியாங் (ZHAO JIANG) என்பவருக்கு சென்னையில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது.
கலைமகளின் தமிழ்ச் சேவையைப் பாராட்டி சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் இந்த பாராட்டு விழா நடைபெற்றது. இந்தப் பாராட்டு விழாவில் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
27,000 சொற்கள் கொண்ட சீன தமிழ் அகராதி என்று நூலை வெளியிட்டுள்ள கலைமகள், தமிழ் மேல் உள்ள பற்றாலும், தமிழர்களின் பண்பாட்டின் மேல் கொண்ட ஈடுபாடு காரணமாகவும் தமது பெயரைக் கலைமகள் என்று மாற்றிக் கொண்டுள்ளதாகக் கூறினார்.
சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்புச் சேவை மூலமாக இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஒருங்கிணைப்பு நிகழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 1963ம் ஆண்டு சீன வானொலியில் தமிழ் ஒலிபரப்பு சேவை தொடங்கப்பட்டது. இந்த வானொலி சேவை கடந்த ஆண்டு பொன் விழாவைக் கொண்டாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
SOURCE: PUTHIYA THALAIMURAI

No comments: