Monday, February 12, 2024

அகில இந்திய வானொலிக்கு ஒரு மணி மகுடம்!



பன்முகப் பார்வையில் அகில இந்திய வானொலி புத்தகம் வெளியிட முடிவானதும், அதில் எழுத வேண்டியவர்களின் பெயர் பட்டியலைத் தயாரித்தோம். சொன்னால் நம்பமாட்டீர்கள், 128 பேர் வந்தார்கள்.

யாரையும் விட்டுவிடக்கூடாது என்று அனைவரிடமும் தொடர்ந்து கட்டுரையைக் கேட்டு வந்தோம். அப்படிக் கேட்டவர்களில் ஒரு சிலர் உடனடியாகக் கொடுத்தனர். இன்னும் ஒரு சிலர் எழுதியும் கொடுக்க முடியாமல் போனது.

அப்படியானவர்களுக்காகவே தொகுதி-2 வெளியிடவும் திட்டமிட்டுள்ளோம். யாரேனும் எழுத விரும்பினாலும் எம்மைத் தொடர்பு கொள்ளலாம்.

இதோ 44 முக்கியக் கட்டுரைகளுடன் நூல் நாளை சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறையில் வெளியிடப்பட உள்ளது. கட்டுரை தலைப்பு மற்றும் எழுதியவர்களின் விபரங்கள்...








2 comments:

UK Sharma said...

வானொலி வரலாற்றுப் பயணத்தில் உங்கள் இடைவிடா முயற்சியில் மற்றொரு எல்லைக்கல் தாண்டியிருக்கிறீர்கள். தலைப்புகளைப் பார்க்கும்போது அகில இந்திய வானொலியின் பலதிறப்பட்ட அம்ஸங்களும் நன்கு அலசப்பட்டுள்ளது தெரிகிறது.
இதழ் வெளியீடு வெகு விமரிசையாக சிறப்பொடு நடைபெற எல்லாம் வல்ல பரம்பொருளின் ஆசியுடன் நல்வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்பின்
எஸ். எஸ். உமாகாந்தன்
குறிப்பு: உடல் நலம் இடங்கொடுக்காததால் நேரில் கலந்துகொள்ள முடியவில்லை.

சிவகுமார் பொன்னுசாமி said...

உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

எத்தனையோ சிரமங்களை எதிர்கொண்டாலும் இன்முகத்துடன் தொடர்ந்து பணிகளை செய்து வருகிறீர்கள்.

மிக்க மகிழ்ச்சி.

என்றும் அன்புடன்...
சிவகுமார் பொன்னுசாமி,
வடக்கு சுள்ளிபாளையம்.