Saturday, August 31, 2024

விஸ்வவாணி: அறிவிப்பாளருக்கு சிறப்பு கடித உறை

 இந்திய அஞ்சல் துறை ஆச்சார்யா ஆர்ஆர்கே மூர்த்தி அவர்களுக்கு சிறப்பு  அஞ்சல் உறை வெளியிட்டு கௌரவித்துள்ளது.


புகழ்பெற்ற வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆளுமை ஆச்சார்யா ஆர்ஆர்கே மூர்த்தியின் பாரம்பரியத்தை கௌரவிக்கும் சிறப்பு அஞ்சல் உறையை இந்தியா போஸ்ட் 2022இல் வெளியிட்டது.  ரேடியோ பெட்டியைக் கவனம் செலுத்தும் வகையில் ஒரு தனித்துவமான ரத்துசெய்தல் (Cancellation) அஞ்சல் உறையில் இடம்பெற்றுள்ளது, இதன் மூலம் மூர்த்தியின் போதனைகள் எண்ணற்ற நேயர்களைச்  சென்றடைந்தது.


பிப்ரவரி 29, 1928 இல், ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தபுரம் கிராமத்தில் பிறந்த ஆச்சார்யா ஆர்.ஆர்.கே மூர்த்தி, ஒரு திறமையான பேச்சாளர், எழுத்தாளர், போதகர் மற்றும் பாடல் இசையமைப்பாளர் ஆவார்.  விஸ்வ வாணி என்று அழைக்கப்படும் டிரான்ஸ் வேர்ல்ட் ரேடியோ மூலம் 25 ஆண்டுகால பைபிள் கற்பித்ததற்காக அவர் பெரும் புகழ் பெற்றார்.  மூர்த்தியின் ஈடுபாடும், நுண்ணறிவும் நிறைந்த பிரசங்கங்கள் அனைத்து மதத்தினரையும் சேர்ந்த நேயர்களிடம் எதிரொலித்தது, அவருக்கு மிகுந்த மரியாதையையும் பாராட்டையும் பெற்றுத் தந்தது.



அவரது வானொலிப் பணிகளைத் தாண்டி, மூர்த்தியின் பங்களிப்பு இலக்கியம் மற்றும் இசைக்கும்  நீடித்தது.  அவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார் மற்றும் ஏராளமான பாடல்களையும் இயற்றினார், ஆன்மீக மற்றும் கலாச்சார நிலப்பரப்பில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார்.  அவரது மாதாந்திர ஆன்மீக இதழான "ஸ்பந்தனா" அவரது செல்வாக்கை மேலும் உறுதிப்படுத்தியது மற்றும் அர்ப்பணிப்புள்ள வாசகர்களுடன் அவரை இணைத்தது.


வானொலி ஒலிபரப்பு, கல்வி மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றில் ஆச்சார்யா ஆர்ஆர்கே மூர்த்தியின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்கு இந்திய அஞ்சல் துறை மூலம் வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் உறை பொருத்தமான அஞ்சலியாகும்.  இது அவரது நீடித்த மரபு மற்றும் எண்ணற்றவர்களின்  வாழ்வில் அவர் ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தை நினைவூட்டுகிறது.


#

Friday, August 23, 2024

சென்னையின் AIR BAND ஒலிபரப்புகள்

 


சென்னையின் வானொலிகளை ஆவணப்படுத்தும் நோக்கில் நடந்த சென்னைத் தினத்தின் மூன்றாவது நாள் கருத்தரங்கில் அண்ணா எஃப்.எம், ஞானவாணி, எம்.ஓ.பி எஃப்.எம், லொயோலா எஃப்.எம், முத்துச்சரம், தென்றல் எஃப்.எம் மட்டுமல்லாமல், சென்னையின் வான் வெளியில் ஒலிபரப்பாகிக் கொண்டு இருக்கின்னற ஒலி அலைகளையும் ஆவணப்படுத்தும் விதமாக ஹாம் வானொலி மற்றும் AIR BAND ஒலிபரப்புகளைப் பற்றியும் விவாதித்த அற்புத நிகழ்ச்சி எனலாம் இதை.

நம்மில் எத்தனைப் பேர் 124.45 MHzல் ஒலிபரப்பாகிவரும் AIR BAND தகவல் தொடர்பினைக் கேட்டிருப்போம். ஒவ்வொரு நாள் காலையும் மாலையும் மெரினா கடற்கரை மேலே வட்டமிடும் விமானங்களில் இருந்து, சென்னை விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளும் இந்த அலைவரிசை Dxers மத்தியில் புகழ்பெற்றது. அடுத்த முறை, மெரினா கடற்கரைக்கோ அல்லது  St.Thomas Mountக்கு செல்லும் போது மற்றக்காமல் உங்களிடம் உள்ள AIR BANDகளை எடுக்கக்கூடிய XHDATA D-808 போன்ற வானொலிப் பெட்டியை எடுத்துச்செல்ல மறவாதீர்கள்!

இந்த நிகழ்வின் முத்தாய்ப்பாக முனைவர்.சுரேஷின் உரை அமைந்தது எனலாம். Culture, Cultural தொடங்கி Stuart Hallல் கொண்டு வந்து வானொலியை இணைத்தது மிகச்சிறப்பு. வானொலியின் பிரதியை (text) முன் வைத்து செய்த இவரின் முனைவர் பட்ட ஆய்வு சர்வதேச வானொலிகளுக்கு ஒரு மணிமகுடம் எனலாம்.
























Tuesday, August 20, 2024

திகட்டத் திகட்ட வானொலித் தகவல்கள்

 தனியார் பண்பலை வானொலிகள் தொடர்பாகத் திகட்டத் திகட்டத் தகவல்களை அள்ளித்தெளித்தனர் இரண்டாம் ஆண்டு முதுகலை இதழியல் மாணவர்கள்!

"சென்னையின் வானொலிகள்" எனும் கருத்தரங்க வரிசையில் இன்று இரண்டாம் நாளில், "சென்னையின் தனியார் வானொலிகள்" குறித்து ஒன்பது மாணவர்கள் மிகவும் சிறப்பாகத் தங்களின் பார்வையை வைத்தனர்.























Saturday, August 17, 2024

சென்னையில் இத்தனை வானொலிகளா?



சென்னையின் வானொலிகளுக்காக இந்தக் கருத்தரங்கத் தொடர்!

சென்னை தினத்தையொட்டி! மாணவர்களால், மாணவர்களுக்காக... சென்னையின் அரசு வானொலிகளின் கருத்தரங்கு வெற்றிகரமாக கடந்த வாரம்  நிறைவடைந்ததைத்  தொடர்ந்து, தற்பொழுது சென்னையின் தனியார் பண்பலை வானொலிகள், சமுதாய வானொலிகள் குறித்தக் கருத்தரங்கு.  அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!

#

Friday, August 16, 2024

ஏ.வி.எம்மின் வானொலிப் பெட்டிகள்

 


எத்தனையெத்தனை வானொலிப் பெட்டிகள்!

ஏ.வி.எம் பாரம்பரிய அருங்காட்சியகத்தினை சமீபத்தில் சென்று காண்பதற்கான வாய்ப்பினை The Hindu - Made of Chennaiயின் வழியாக ஏற்பாடு செய்திருந்தனர். ரூ.200 மதிப்புள்ள நுழைவுச்சீட்டினை நமக்காக அவர்கள் எடுத்தார்கள்!

சென்னை தினத்தினையொட்டி இந்த நிகழ்ச்சியை திரிபுரசுந்தரி செவ்வேல் ஏற்பாடு செய்திருந்தார்கள். திரைப்படத் துறை சார்ந்த பொருட்கள் மத்தியில் பல்வேறு வகையான வானொலிப் பெட்டிகளைப் பார்த்து மகிழ்ந்தேன் எனலாம். ஒவ்வொரு வானொலிப் பெட்டியைப் பற்றியும் விஸ்வ பாரதியிடம் கூறிக்கூறி அகம் மகிழ்ந்தேன். அவற்றில் ஒரு சில...உங்கள் பார்வைக்காக...
































#