Showing posts with label பொன்விழா கருத்தரங்கு. Show all posts
Showing posts with label பொன்விழா கருத்தரங்கு. Show all posts

Monday, August 05, 2013

சீன வானொலி பொன்விழா கருத்தரங்கிற்கு வருகை தந்த விருந்தினர்கள்

பொன்விழா கருத்தரங்கிற்கு வருகை தந்த தமிழ் நண்பர்கள்

உலகளவில் சீன வானொலி தமிழ்ச் சேவையின் செல்வாக்கு எனும் கருத்தரங்கு ஆக்ஸ்ட் 3ஆம் நாள் சீனாவிலுள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்றது. தமிழ்ப் பிரிவின் மூத்தவர்கள், பெய்ஜிங்கிலுள்ள தமிழ் மொழி ஆய்வாளர்கள், இந்தியச் செய்தி ஊடகங்களின் செய்தியாளர்கள், சீனாவுக்கான இந்தியா மற்றும் சிங்கப்பூர் தூதரகங்களின் அலுவலர்கள், நேயர் பிரதிநிதிகள் உள்ளிட்ட சுமார் 60 பேர் அதில் கலந்து கொண்டனர்.

Friday, August 02, 2013

சீன வானொலி பொன்விழா கருத்தரங்கு

சீன வானொலி தமிழ்ப் பிரிவின் பொன்விழாவை முன்னிட்டு, உலகளவில் சீன வானொலி தமிழ்ச் சேவையின் செல்வாக்கு எனும் கருத்தரங்கு பெய்ஜிங்கிலுள்ள இந்திய தூதரகத்தில் ஆகஸ்ட் 3ஆம் நாள் நடைபெறும். இக்கருத்தரங்கில் சீனாவுக்கான இந்தியா, இலங்கை மற்றும் சிங்கபூர் தூதாண்மை அலுவலர்களும் இந்திய நேயர்களும், சீனச் சமூக மற்றும் அறிவியல் கழகத்தின் நிபுணர்களும், தமிழ்ப் பிரிவின் மூத்தப் பணியாளர்களும் அழைப்பின் நேரில் கலந்து கொள்வார்கள்.
இக்கருத்தரங்கு பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஆகஸ்ட் 5ஆம் நாள் முதல் வழங்கத் துவங்குவோம். கேட்கத் தவறாதீர்கள்..
இதனிடையில் tamil.cri.cn எனும் இணையத்தளத்தைப் பயன்படுத்தி தொடர்புடைய சிறப்பு கொண்டாட்ட நிலைமையை அறிந்து கொள்ளுங்கள்.