Sunday, June 19, 2011

All India Radio, Vishakapatinam


Want to see some more pictures of AIR and Gyanvani Vishakapatinam, then click here

Monday, May 09, 2011

லண்டனில் புதிதாக ‘ஐ.எல்.சி. தமிழ்’ வானொலி


இலங்கைத் தமிழர்களால் லண்டனில் புதிதாக 'ஐ.எல்.சி. தமிழ்' என்ற பெயரில் வானொலியைத் தொடங்கியுள்ளனர். இது தற்பொழுது 558 கிலோ ஹெர்ட்ஸ் மத்திய அலைவரிசையில் ஒலிபரப்பி வருகிறது. இப்பொழுது இந்திய நேயர்களும் இவர்களின் நிகழ்ச்சியை 24 மணி நேரமும் இணையத்தினில் கேட்கும் வசதியினை ஏற்படுத்தியுள்ளனர். முகவரி: www.ilctamil.co.uk (மின்னக்கல் செல்வராஜ்)

ரேடியோ மரியாவில் தமிழ்


கத்தோலிக்க ஒலிபரப்பு நிறுவனம் 'ரேடியோ மரியா' என்ற பெயரில் தற்பொழுது 54 நாடுகளில் தனது சேவையைச் செய்து வருகிறது. விரைவில் இது புதிதாக 65 மொழிகளில் தனது சேவையைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதில் தமிழும் நிச்சயம் இடம்பெறலாம் என நோக்கர்கள் கருதுகிறார்கள். (மின்னக்கல் செல்வராஜ்)

வெரித்தாஸ் தமிழ்பணியின் புதிய இணைய முகவரி

வெரித்தாஸ் தமிழ்பணியின் புதிய இணைய முகவரி: www.rveritas-asia.org/tamil நமது வெரித்தாஸ் வானொலியும் தனது நேயர்களுக்கு QSL வண்ண அட்டையை தனது நேயர்களுக்கு அனுப்பி வருகிறது. ஆனால் அதற்கு நீங்கள் வான் அஞ்சலில் கடிதம் எழுத வேண்டும்.

Mr. Alex Movilla,

Technical Engineer,

Audience Research,

P.O. Box: 2642,

Quezon City,

Manial 1166,

Philipines.

Email: rvaprogram@rveritas-asia.org

(Fr. Jerom, RVA Tamil)

Sunday, April 24, 2011

வானொலிகள் அனுப்பியவை

எமக்கு வந்தவை

 பல்கேரியா: ரேடியோ பல்கேரியா - புதிய நிகழ்ச்சிநிரல் பட்டியல்.
 இந்தியா: பீபா வானொலி – 2011 நாள்காட்டி மற்றும் புதிய நிகழ்ச்சிநிரல் பட்டியல்.
 தைவான்: ரேடியோ தைவான் இண்டர்நேசனல் – நியூஸ் லெட்டர் மற்றும் நிகழ்ச்சிநிரல் பட்டியல்.
 ஜெர்மனி: ரெய்ன் மெய்ன் ரேடியோ கிளப் – செயின்ட் ஹெலினா வானொலிக்கான சிறப்பு வண்ண அட்டைகள்.
 அமெரிக்கா: ரேடியோ ப்பீரீ ஆசியா – ஆர்.எப்.ஏ-வின் 14வது ஆண்டு சிறப்பு வண்ண அட்டை, 2011 மாதாந்திர நாள்காட்டி, 2011 வருடத்திற்கான டைரி.
 நெதர்லாந்த்: ரேடியோ நெதர்லாந்த் - புதிய நிகழ்ச்சிநிரல் பட்டியல், புதிய வடிவிலான ஸ்டிக்கர், 2011 ஸ்டிக்கர் நாள்காட்டி, வண்ண அட்டை.
 இந்தியா: அகில இந்திய வானொலி - உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஒலிபரப்புகளின் நிகழ்ச்சிநிரல் பட்டியல்.
 சீனா: சைனா ரேடியோ இண்டர்நேசனல் – சுவற்றில் மாட்டக் கூடிய ஐந்து வகையான பட்டுத்துணியிலான வரைபடங்கள். 2011 வருடத்திற்கான வாழ்த்து அட்டை மற்றும் நாள்காட்டி, சலார் மக்களை மையப்படுத்திய வண்ண அட்டை.
 ஜெர்மனி: வாய்ஸ் ஆப் ஜெர்மனி - 2011ஆம் ஆண்டிற்கான வாழ்த்து அட்டை, புதிய நிகழ்ச்சிநிரல் பட்டியல் மற்றும் மாதாந்திர நாள்காட்டி.
 கொரியா: கொரியன் புராட்காஸ்டிங் கார்பரேசன் - புதிய நிகழ்ச்சிநிரல் பட்டியல், மேசையில் வைக்கக்கூடிய நாள்காட்டி மற்றும் புதிய ஸ்டிக்கர்.
 வத்திகான்: ரேடியோ வத்திகான் – மாதாந்திர வத்திகான் வானொலி செய்தி இதழ்.
 பிலிப்பைன்ஸ்: ரேடியோ வெரித்தாஸ் ஆசியா - 2011 வருடத்திறகான அட்டை வடிவிலான நாள்காட்டி.
 வியட்னாம்: வாய்ஸ் ஆப் வியட்நாம் - புதிய நிகழ்ச்சிநிரல் மற்றம் அலைவரிசைப் பட்டியல், வியட்நாம் தபால்தலைகள்.

Sunday, April 17, 2011

வானொலி பதில்

 ச்சைபோ கே.கே. 939பி மாடல் எண் கொண்ட வானொலிப் பெட்டி குறித்து சிறிது விளக்கம் தரவும்? – என். பழனிசாமி, கோவை -28 (ADXC 2172).

சைனாவில் இருந்து சமீப காலமாக ஏராளமான தொழில்நுட்பக்கருவிகள் இறக்குமதியான வண்ணம் உள்ளன. அவற்றில் வானொலிப் பெட்டிகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இன்று தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் சீன வானொலிப்பெட்டிகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. விலையும் மிகக்குறைவாக உள்ளது. ஆனால் எண்ணிலடங்கா மாடல்கள் கிடைத்தாலும் அவை சிற்றலை நேயர்களின் தேவையினை பூர்த்தி செய்யவில்லை.
கிடைக்கின்றவற்றில் எது நல்ல தரத்துடன் அனைத்து வசதிகளுடன் உள்ளது என்று பார்க்கும் பொழுது இந்த ச்சைபோ கே.கே. 939பி மாடல் எண் கொண்ட வானொலிப் பெட்டி ஓரளவுக்கு நேயர்களின் தேவையைப் பூர்த்தி செய்கிறது எனலாம். விலையும் அனைவரும் வாங்கும் விதத்தில் உள்ளது. இதில் 13 மீட்டர் முதல் 60 மீட்டர் வரையான அலைவரிசைகளில் ஒலிபரப்பும் வானொலிகளைக் கேட்கலாம். மேலும் கையடக்கமானதாக உள்ளதால் நம் பயணத்தின் போது எளிதாக எடுத்துச்செல்லக்கூடியதாக உள்ளது. டிஸ்பிளேவில் லைட் உள்ளதால் இரவு நேரங்களிலும் வானொலிகளைத் தேடிப்பிடிக்க உதவியாக உள்ளது.
உணர்திறனும் அதிகமாக உள்ளதால் அனைத்து வானொலிகளையும் எளிதாக பிடிக்கமுடிகிறது. தமிழகதின் அனைத்து பகுதிகளிலும் எளிதாகக் கிடைக்கிறது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கிடைத்தது போன்று தற்பொழுது கிடைப்பதில்லை. ஆனாலும் தேடிப்பிடிக்கலாம். விலை ரூ. 250 முதல் ரூ. 350ற்குள் இந்த ச்சைபோ கே.கே. 939பி மாடல் வானொலிப் பெட்டியை வாங்கலாம்.

Monday, April 11, 2011

வானொலி உலகம்

 நேபாள அரசானது 77 வானொலி மற்றும் தொலைகாட்சிகளுக்கு வழங்கிய உரிமையை ரத்து செய்துள்ளது.

 இந்தியாவின் முதல் பேசும் இணைய வானொலியை ரிலையன்ஸ் நிறுவனம் "பிக் நெட் ரேடியோ’ என்ற பெயரில் துவங்கியுள்ளது. மூன்றாம் தலைமுறை கைப்பேசிகளில் இந்த சேவையை உபயோகிக்கலாம்
 நோர்வே தனது இரண்டு மத்திய அலைவரிசை வானொலிகளை நிறுத்திவிட்டது
 கொல்லத்தில் உள்ள பிசப் பென்சிகர் மருத்துவ மனையில் இந்தியாவின் முதல் “மருத்துவமனை சமுதாய வானொலி” தொடங்கப்பட்டுள்ளது.
 பி.பி.சி. உலக சேவை ஆப்கானிஸ்தானில் உள்ள நேயர்களுக்கு இலவசமாக வானொலிப் பெட்டியை வழங்கிவருகிறது.
 ஹாங்காங் அரசு மூன்று டி.ஏ.பி வானொலிகளை துவங்க அனுமதி வழங்கியுள்ளது.
 இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர் காமினி விஜயவர்தனா தொடர்ந்து 33 மணி நேரம் வானொலியில் நேரடியாக பேசி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
 குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் அகில இந்திய வானொலி 1000 கிலோ வாட் சக்தி கொண்ட இரண்டு மத்திய அலை டி.ஆர்.எம் ஒலிபரப்பிகளை நிறுவிவருகிறது.
 ஜெர்மன் வானொலியானது வங்க தேசத்தில் பண்பலையில் தனது சேவையைத் தொடங்கியுள்ளது.
 பல்கேரிய வானொலி தனது அனைத்து டி.ஆர்.எம். ஒலிபரப்பு சேவைகளையும் நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது.
 பங்களாதேஷின் அரசு வானொலியானது ஜப்பான் வானொலியோடு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் ஜப்பானிய தொழில்நுட்பத்தினை அது விரைவில் பெற உள்ளது.
 ஜெர்மன் வானொலி தான் இந்தியாவிற்காக செய்து வரும் ஹிந்தி மற்றும் வாங்காள மொழி சிற்றலை சேவைகளை நிறுத்திவிடுவது குறித்து ஆலோசித்து வருகிறது.
 ஆத்மீக யாத்திரை வானொலி தான் தற்பொழுது மிக அதிக ஆசிய மொழிகளில் ஒலிபரப்பும் வானொலியாக இருந்து வருகிறது. ஒலிபரப்பும் மொழிகளின் எண்ணிக்கை 110 ஆகும்.
 உங்களின் கைப்பேசியிலேயே தற்பொழுது வாய்ஸ் ஆப் ரஷ்யாவை கேட்க வசதியினை செய்துள்ளனர். முகவரி: www..english.ruvr.ru/cell  இலங்கை அரசானது சட்டவிரோதமாக மதம் சார்ந்து செயல்பட்ட வானொலிகளைத் தடை செய்துள்ளது.
– மின்னக்கல் செல்வராஜ் (ADXC 2080)