Monday, January 23, 2012

மஹாபலிபுரம் ஹாம் சந்திப்பு 2012



மஹா  மீட்: 2012 பிப்ரவரி மாதம் என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது மஹாபலிபுரம் ஹாம் சந்திப்பு தான். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை, எந்த ஒரு சந்திப்பும் நுழைவுக்கட்டணமும் வசூலிக்காமல் நடப்பதில்லை, ஆனால் இந்த ஒரு சந்திப்பு மட்டுமே எந்த ஒரு நுழைவுக்கட்டணமும் வசூலிக்காமல் நடந்துவருகிறது. திரு. விட்டல் அவர்களின் முன் முயற்சியில் கடந்த பத்து ஆண்டுகளாக இந்த சந்திப்பானது மஹாபலிபுரத்தினில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான சந்திப்பு வரும் 11 பிப்ரவரி 2012 அன்று மஹாபலிபுரம் பஸ் நிலையம் எதிரில் உள்ள ஹோட்டல் மஹாப்ஸ்ஸில் நடைபெற உள்ளது. மேலதிக விபரங்களுக்கு +919444283695, +919791034652    

Saturday, January 14, 2012

உன்னதத் திருவிழா பொங்கல் !

தமிழினப் பகைவர்கள் திருந்தட்டும் 
தமிழர்கள் வாழ்வில் வசந்தம் வரட்டும் 

உலகின் முதல் மொழிக்காரனின்
உன்னதத் திருவிழா பொங்கல் !

உழைப்பைப் போற்றும் பொன்னாள்
உயர்ந்த ஆதவனைப் போற்றும் நன்னாள் 

உழுது நீர் பாய்ச்சி நாத்து நட்டு 
உரம் போட்டு களை எடுத்து 

வளர்த்து அறுத்து அடித்து அரைத்து 
வளமான அரிசியில் வெல்லம் இட்டு 

இனிதே படைக்கும் இனிக்கும் பொங்கல் போல 
இனிமை பிறக்கட்டும் தமிழர் வாழ்வில் 

கொலை வெறிப் பாடல் மோகம் ஒழியட்டும் 
அன்பின் நெறியில் அகிலம் திரளட்டும் 

மதுவின் மீதான மயக்கம் தெளியட்டும் 
மதியைப் பயன்படுத்தி மனிதனாக மாறட்டும் 

தொலைக் காட்சித் தொடர்களின் வக்கிரம் ஒழியட்டும் 
தொலைக் காட்சிகள் நல்லதை மட்டும் ஒளிப்பரப்பட்டும் 

வார இதழ்களின் ஆபாசம் அடியோடு அழியட்டும் 
வாசகர்களைப் பண்படுத்தும் படைப்புகள் வரட்டும் 

பெண்ணடிமைத்தனத்தை ஆண்களே வெறுக்கட்டும் 
பெண்களின் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கட்டும் 

தனித் தமிழ் ஈழம் வெகு விரைவில் மலரட்டும் 
தவிக்கும் ஈழத்தமிழர் வாழ்வு சிறக்கட்டும்

மைய அரசின் மாற்றான் தாய்ப் போக்கு மாறட்டும் 
மடத் தனமான வெளியுறவுக் கொள்கை ஒழியட்டும் 

கேரள அரசியல்வாதிகளின் பித்தலாட்டமான 
கேவலமான அரசியல் முடிவுக்கு வரட்டும் 

புதிய அணை என்ற வேதாளம் அழியட்டும் 
பழைய அணையில் நீரின் உயரம் உயரட்டும் 

கர்நாடகத்தின் கஞ்சத் தனம் காணாமல் போகட்டும் 
காவிரியில் தண்ணீர் கரைப் புரண்டு ஓடட்டும் 

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றாகட்டும் 
எங்கோ ஓடி ஒளிந்தார் தமிழ்ப்பகை என்றாகட்டும் 
-- 
நன்றி
கவிஞர் இரா .இரவி 

Wednesday, December 21, 2011

பம்பர் பரிசாக ATS 909X


பி.சி.ஜி மீடியா தற்பொழுது ‘மீடியா நெட்வொர்க் பிளஸ்’ எனும் தலைப்பினில் மாதம் ஒரு நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கிவருகிறது. இந்த நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் எழுதும் நேயர்களுக்கு வானொலிப் பெட்டிகளைப் பரிசளித்து வருகிறது. பம்பர் பரிசாக ‘சாங்கியன் 909எக்ஸ்’ வழங்க உள்ளது. இந்த மாதம் இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வி “வானொலி என்றால் உங்கள் பார்வையில் என்ன?” விடைகளை ஆங்கிலத்தில் நீங்கள் அனுப்ப வேண்டிய மின்அஞ்சல் ats909X@gmail.com. இந்த நிகழ்ச்சி தற்சமயம் இணையத்தில் ஒலிபரப்பாகி வருகிறது. இதில் ஏராளமான பழைய டி.எக்ஸ் நிகழ்ச்சிகளையும் பதிவேற்றம் செய்து வருகின்றனர். நிகழ்ச்சியைக் கேட்கhttp://medianetworkplus.wordpress.com எனும் வலைப்பூவை பார்க்கலாம்.

Wednesday, December 14, 2011

இலங்கை வானொலி புத்தளத்தினில்


புத்தளம் 1125: இலங்கை வானொலி புத்தளத்தினில் அமைத்துள்ள மத்திய அலை ஒலிபரப்பிகளை பற்றிய விபரங்கள் சமீபத்தில் இணையத்தினில் வெளியிடப்பட்டது. அந்த விபரங்கள் இதோ Frequency: 1125 KHz Rated Out Put: 50KW Transmitter: “NAUTEL” – ND 50, Solid state Transmitter Coverage Area: South India Detail of Antenna: 2 base –grounded guyed masts of galvanized steel, complete with shunt feed skirt and tuning series TML Azimath Pattern: 350 Degrees Directional, 8 .0 dBi gain. (Alokesh Gupta, VU3BSE, New Delhi)

Wednesday, December 07, 2011

இலங்கை வானொலி நேயர் மன்றம்


நாம் தமிழகத்தில் மட்டுமே இலங்கை வானொலியைக் கேட்கக் கூடிய நேயர்கள் உள்ளனர் என்று நினைக்கிறோம். ஆனால் வட இந்தியாவில் இந்த வானொலிக்கு ஏராளமான வானொலி மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு மன்றம் சமீபத்தில் இலங்கை வானொலியின் சேவையைப் பாராட்டு தெரிவித்து பத்திரிகைளுக்கு செய்தி அனுப்பின. அவை இலங்கையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களிலும் இடம்பெறத் தவறவில்லை. அந்த செய்தியினை இந்தத் தொடுப்பினில் படிக்கலாம் http://www.news.lk/home/5371-radio-ceylon-fan-clubsin-india-appreciate-unique-sri-lankan-programmes (Alokesh Gupta, VU3BSE, New Delhi)

Wednesday, November 30, 2011

இலங்கை மீனவர்களுக்காக புதிதாக ‘சாயுரா எப்.எம்’


மீனவர்களுக்கான எப்.எம்: இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் இலங்கை மீனவர்களுக்காக புதிதாக ‘சாயுரா எப்.எம்’ என்ற பெயரில் ஒரு வானொலியைத் தொடங்கியுள்ளது. இது தினமும் அதிகாலை நான்கு மணி முதல் தனது சேவையைச் செய்யது வருகிறது என மீன் வளத்துறை அமைச்சகத்தின் செயலாளர் நாயகம் நந்தனா ராஜபக்ஷா தெரிவித்துள்ளார்.
(Sunday observer)