Sunday, December 27, 2009

சர்வதேச அரங்கில் வானொலி


 இந்தியா: அகில இந்திய வானொலி – எழுபது ஆண்டுகளை அகில இந்திய வானொலியின் வெளிநாட்டு சேவை கொண்டாடி வருகிறது. 1 அக்டோபர் 1939ல் ஆப்கானிஸ்தானுக்காக பாஸ்டு மொழியில் தனது சேவையைத் தொடங்கியது. தற்பொழுது 27 மொழிகளல் ஒலிபரப்பி வருகிறது.

 ஸ்வீடன்: ரேடியோ ஸ்வீடன் – ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை புதிய வடிவில் நிகழ்ச்சி நிரல் பட்டியலை இனி அனுப்பாது. அது மட்டுமல்லாமல் இனி நேயர்கள் அனுப்பும் நிகழ்ச்சி தர அட்டவணைக்கு வண்ண அட்டைகளையும் அனுப்புவதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது வண்ண அட்டை சேகரிப்பாளர்களுக்கு ஒரு வருத்தமான செய்திதான்.

 மலேசியா: ரேடியோ டிவி மலேசியா – உலகின் பெரும்பாலான வானொலிகள் டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு மாறிவரும் காலத்தில் மலேசிய வானொலியும் அடுத்த கட்ட ஒலிபரப்புக்கு தயார் ஆகிவிட்டது. டி.ஆர்.எம். தொழில்நுட்பத்தினை சிற்றலை ஒலிபரப்பிற்கும், டி.ஏ.பி. தொழில்நுட்பத்தினை பண்பலை ஒலிபரப்பிற்கு மாற்றாக செயல்படுத்தப் போவதாக அதன் இயக்குனர் கூறியுள்ளார். (அலோக்கேஷ் குப்தா, புது தில்லி)

 இந்தியா: பி.பி.சி. உலக சேவை – டெல்லி, மும்பை, லக்னோ, ஜலந்தர் மற்றும் கான்பூரில் உள்ள அகில இந்திய வானொலிகளோடு இணைந்து பி.பி.சி. உலக சேவை டிரஸ்ட் 156 வாரங்களுக்கான ஹிந்தி நாடகத்தினைத் தயாரித்துள்ளது. கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து இது ஒலிபரப்பாகி வருகிறது. ஆண் பெண் சமுத்துவத்தினை மையக்கருவாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த நாடகம்.

2 comments:

raafi said...

உங்களுடைய செய்திகள் எங்களைப் போன்ற மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் உள்ளது.

Unknown said...

அன்பு நண்பருக்கு

டிஆர் எம் ரேடியோ பற்றி விளக்க முடியுமா ? தற்போது இந்தியாவில் ஏதாவது ஒலிபரப்பு எடுத்துக்கொண்டுள்ளதா என விளக்குங்களென்.