Monday, February 21, 2011

திஸ் இஸ் லண்டன் காலிங்!

ஞாயிறு கொண்டாட்டம்

சென்ற நூற்றாண்டில் நம்மை ஆண்ட பிரிட்டிஷார் சில மாதம் பிரயாணித்து இந்தியா வருவார்கள். அவர்கள் எப்போதும் தங்களது தாய்நாட்டைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியுமே நினைத்துக்கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு சிறிதளவு மகிழ்ச்சியாவது ஏற்படுத்த வேண்டுமென இங்கிலாந்து வானொலி நிலையத்தார் ஓர் ஏற்பாடு செய்தார்கள். லண்டனில் உள்ள பார்லிமென்டுக்கு மேலே இருக்கும் பிக் பென் (ஆண்ஞ் ஆங்ய்) கடிகாரம் இரவு ஒன்பது மணிக்கு அடிப்பதை வானொலி மூலம் ஒலிபரப்பினார்கள். 

வானொலியில் எம். கே. தியாகராஜ பாகவதரின் கச்சேரி நடந்துகொண்டிருக்கும். ஹோட்டல்கள் முன்பு உள்ள ஒலிபெருக்கி மூலம் எல்லோரும் கச்சேரி கேட்பார்கள்.

அப்போது ரிகார்டிங் கிடையாது. ஸ்டுடியோவிலிருந்து நேரடியாக ஒலிபரப்புவார்கள். சரியாக ஒன்பது மணிக்கு முடிய வேண்டிய கச்சேரி சற்று நீண்டு போயிருக்கும். உடனே கச்சேரியை நிறுத்தி விட்டு, "திஸ் இஸ் லண்டன் காலிங்.. தி நியூஸ் ஃப்ரம் த பி.பி.சி. ஃபாலோஸ் இமிடியட்லி..' என ஒரு காத்திரமான குரலில் இங்கிலீஸ்காரர் நியூஸ் படிக்க ஆரம்பிப்பார். 

1 comment:

Unknown said...

ஒரு ரெண்டு மூணு நாள் சைட் பக்கம் வரலை, மொத்தமா இடுகைகளை கொடுத்து விட்டிங்க. நல்லதகவல் தான் சார்.